BREAKING NEWS
Search

‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்?

மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்?

lingaa-box-office-collection

சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தால் பல கோடி நஷ்டம் என்று கூறிக் கொண்டு, ஊரிலிருக்கும் விளங்காத அரசியல்வியாதிகளையெல்லாம் துணைக்கழைத்துக் கொண்டு ஒரு கும்பல் தொடர்ந்து பிரஸ் மீட் வைத்துக் கொண்டுள்ளதல்லவா…

இதற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா… இதோ, தெரிந்து கொள்ளுங்கள்.

படம் வெளியான 6-வது நாள் முதல் பிரஸ் மீட் நடந்தது தி நகரில். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்.. அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி என்னையும் என் நண்பர் ஒருவரையும்தான் இந்த கும்பல் அணுகியது. ‘மரியாதையாக ஓடிப் போயிடுங்க’ எனத் திட்டி அனுப்பியதோடு, அடுத்த சில நிமிடங்களில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடமும் இந்த விவரங்களைத் தெரிவித்தேன்.

அன்றைக்கு குறைவான அளவுதான் செய்தியாளர்கள் வந்திருந்தனர். ஆனாலும் ரூ 1 லட்சம் வரை செலவழித்துள்ளனர், லிங்காவுக்கு எதிரான பொய்ச் செய்தியைப் பரப்ப.

அடுத்து ஒரு பிரஸ் மீட். உண்ணாவிரதப் போராட்ட  அறிவிப்பு பிரஸ் மீட். அதற்கும் சில லட்சங்களை செலவழித்தனர்.

வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் இருந்தபோது, போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கவர் விநியோகம் கனஜோராக நடந்தது. சீமான், வேல் முருகன், மன்சூர் அலிகான் என கும்பல் திரண்டது… பல லட்சங்களை வாரி இறைத்தனர் இந்த ‘விநியோகஸ்தர்கள்.’

அடுத்து பிரஸ் க்ளப்பில் ஒரு பிரஸ் மீட். கிட்டத்தட்ட இந்த விநியோகஸ்தர்கள் கும்பல் எத்தனை பெரிய அயோக்கியத்தனத்தைச் செய்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய பிரஸ் மீட் அது. அதிலும் சில லட்சங்களை இறைத்தார்கள்.

இந்த பிரஸ் மீட்களுக்கு சிகரம் வைத்தது போல அமைந்தது நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு. அதுவரை வெளியில் நடந்த பிரஸ் மீட்டை, ராமானுஜம் என்கிற சினிமா பிஆர்ஓ மூலம் இந்த முறை கோலிவுட்டுக்குள்ளேயே நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மிகக் கடுமையான பல கேள்விகளை முன் வைத்தபோது, அதற்கு சரியான பதிலைச் சொல்ல விநியோகஸ்தர்கள் மட்டுமல்ல, இந்த ராமானுஜமும் தவித்தார். கோபப்பட்டார். திட்டினார்.

தியேட்டர்களில் ரூ 600 வரை டிக்கெட் விற்றார்கள், அதுவும் கவுன்ட்டர்களில் என்றபோது, அதற்கும் விநியோகஸ்தர்களுக்கும் சம்பந்தமில்லை என்றார் இவர்.

நான் விசாரித்த வரையில், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலையை நிர்ணயித்ததே விநியோகஸ்தர்கள்தான். டிக்கெட் விற்கப்பட்டது ரசிகர் மன்றம் மூலம் அல்ல.. டிக்கெட் கவுன்ட்டர்களில்தான். நானே பல டிக்கெட்டுகளை ரூ 400 ரூபாய் வரை கொடுத்து கவுன்ட்டரில் வாங்கினேன். ஆனால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் இவர். இருக்கட்டும்…

பிரஸ் மீட் முடிந்தது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் பிச்சை போராட்ட செய்திக் குறிப்புதான் வெளியானது.

பிரஸ் மீட்டின்போது என்ன நடந்தது.. கேட்கப்பட்ட கேள்விகள் என்ன.. அதற்கு பதில் சொல்ல முடியாமல் ‘அந்த சில விநியோகஸ்தர்கள்’ எப்படித் திணறினார்கள் என்பதை பலரும் எழுதவே இல்லை. செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு, இதே ராமானுஜம் அனுப்பிய ‘மெகா பிச்சை’ செய்திக் குறிப்பைத்தான் அத்தனை பேரும் வெளியிட்டிருந்தனர். வீடியோ எடுத்து வெளியிட்ட சிலரால்தான், அங்கு நடந்த அத்தனை உண்மைகளும் வெளியாகின!

லிங்கா நஷ்டம் என புலம்பிக் கொண்டே, லட்ச லட்சமாக செலவழித்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக விஷமப் பிரச்சாரம் செய்ய இவ்வளவு பணத்தைச் செலவழிப்பது ஏன்? இதன் பின்னணி என்ன?

லிங்காவில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே, லிங்காவுக்கும் அதன் நாயகனுக்கும் எதிராக இவர்கள் செய்யும் கேவலமான பிரச்சாரத்துக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ!

என்வழி
23 thoughts on “‘மெகா பிச்சைக்காரர்’களுக்கு ஏது இவ்வளவு பணம்?

 1. மிஸ்டர் பாவலன்

  திரு வினோ அவர்களே:

  இந்த சிங்காரவேலன் நபருக்கு ஆரம்பத்திலேயே வேந்தர் மூவீஸ்,
  ஈரோஸ் films சரியான பதில் கொடுத்திருந்தால் இவர் இந்த அளவிற்கு
  வளர்ந்திருக்க மாட்டார். இவரை ignore செய்து விடலாம், பதில் கொடுக்க
  வேண்டாம் என விட்டு விட்டது பல மக்களும் (நான் விசாரித்த வரையில்)
  லிங்கா தோல்விப்படம் என்று தான் நம்பி வருகிறார்கள்.

  ஐ படத்திற்கும் ஆரம்ப நாட்களில் வசூல், அதன் பின் வசூல் குறைந்து
  விட்டது – இருந்தாலும் ஐ படத்திற்கு இது போல் என பிரச்சினையும்
  வரவில்லை.

  ஒரு திட்டமிட்ட சதி நடப்பது மிகவும் உண்மை.

  உலகநாயகனின் படம் – உத்தம வில்லன் – விரைவில் வருகிறது. வெளியுடுபவர் சௌந்தர்யா பொறுப்பேற்றுள்ள ஈரோஸ் films . இது
  எனக்கும் கவலையாகவே உள்ளது. வேந்தர் மூவீஸ் வாங்கி உள்ளதா
  என்றும் தெரியவில்லை. உலகநாயகன் சிங்காரவேலனுக்கு திருச்சி
  தஞ்சாவூர் ஏரியாவை விற்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்!

  -== மிஸ்டர் பாவலன் ==-
  ___________

  இதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். முதலில் அவன் பேச ஆரம்பித்த போதே குரல்வளையை நெறிக்காமல் விட்டது நம் பக்க தவறுதான்.

  -என்வழி

 2. வில்லாளன்

  பொய்மை புயலாய் விசும் ஆனல்
  உண்மை ஒரு நாள் வெல்லும்
  போடா தலைவருக்கு கடவுள்
  இருக்கிறார்……….

  மறுபிறவி எடுத்து வந்தவர்……
  யாரும் அசைக்க முடியாது…….

 3. sakthi

  இதெல்லாம் பார்க்கும்போது அவரை அரசியல் உள்ளே வர விடமா நடக்கும் சதி போல் தோன்றவில்லை , இப்படி கடுப்பு அடிச்சே அவரை தான அரசியல் உள்ளே இழுத்து வர செய்யும் சதி போல் இருக்கு . ஆனா இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கெல்லாம் ரஜினி அவர்கள் அசையும் ஆள் இல்லை என்பது அவர்களுக்கு தெரியவில்லை .

 4. barath

  பிஜேபி தலைவரை corner செய்கிறதா? கொஞ்ச நாளாகவே பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. நண்பா எல்லாம் கொஞ்ச காலம் தான்!!

 5. Rajagopalan

  Jaya TV on their part spoiled
  Jaya Tvs didnt do proper publicity.
  For “I”, they are promoting , but for Linga, nothing.
  Also Vendhar Movies, Eros etc nobody is coming with any statements.
  But all fans are just putting comments in facebook, twitter…
  Rajini fans are not active like before . This has to be accepted….

  See all these Kosu fans… How they are promoting the kosu movie…

 6. Rajagopalan

  I dont know how many of you have read todays Dhina Malar..
  There is a article regarding the issues surrounding Lingaa.
  In that , they had put as , Rajini is not going to act in movies after Lingaa.
  After seing that, iam totally mood out…
  Please Thalaiva do something ….

 7. குமரன்

  பணம் கொடுத்தது ஜெயாதானே, எந்தத் தண்டனையும் கிடையாது. வரும் காலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட சட்டமன்றத் தேர்தலில் டிக்கட் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 8. murugan

  அன்புள்ள வினோ அவர்களுக்கு
  தலைவரின் கொடாது கோடி ரசிகர்களின் சார்பாக
  இந்த கொடுமையை இன்னும் எத்தனை நாள் தான் நாம் வாய் மூடி சகிப்பது?
  இந்த பேராசைக்கார பணப்பேய்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உண்டா?
  தலைவருக்கு ஒரு பிரச்சனையை என்று வரும்போது மட்டும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் தனது ஐம்புலன்களை அடக்கி ஆள்வது ஏன்? ( அது சரி – என்றைக்கு வாயை திறந்திருக்கிறார்கள் இன்று திறக்க )
  தமிழ் திரைப்படங்களை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இந்த உத்தமருக்கா இந்த நிலை ?
  இன்று நஷ்டம் என்று பொய்யுரைக்கும் இதே கூட்டம் கொள்ளை லாபம் ருசித்தபோது என்ன செய்தார்கள்? லாபத்தில் பங்கா கொடுத்தார்கள்?
  எதற்க்காக இந்த சதி ?
  இந்த கூட்டத்தை பார்த்தால் பணம் பறிக்க வந்தவர்களை போல் இல்லை
  இவர்களின் நோக்கம் என்ன ?
  தலைவா
  உங்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக பொறுமை காக்கிறோம்
  என்றென்றும் உங்கள் வழியில்
  கடினமாக இருந்தாலும் கடைபிடிக்கிறோம் உங்கள் பொறுமையை !!!

 9. kumaran

  சிங்காரவேலன் செய்கிற அசிங்கத்தை கடவுள் பார்த்துகொண்டு இருக்கிறார் ? மிகுந்த வேதனை .

 10. saranya

  hearing to unmai oru naal vellum song right now. idhuku mela ena solrathune enakunu therila. i hope u ppl can understand my mind as a fan

 11. saranya

  “லிங்கா” இந்த பேர சொல்றப்பவே எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா. அவர் பேரனோட பேர் இது. அவர் எவ்ளோ ஆசையா இந்த பேர வச்சிருப்பாரு. ச்சே. ஆனா twitter ல இருக்குற சில ரசிகர்கள் இருக்கிறார்களே. அவங்கள என்னனு சொல்றதுனே தெரில. எதுக்கு எப்டி ரியாக்ட் பண்றதுனே அவங்களுக்கு தெரிலன்னு தான் சொல்லணும். முதல இவங்கள மாத்தனும். ஏனா social media என்கிறது இப்போ ரொம்ப முக்கியமா இருக்கு.

 12. chozhan

  விநோஜி, ஊரறிந்த உண்மை படத்தில் யாருக்கும் நஷ்டமில்லை என்பது (ஒரு சில கடைநிலை விநியோகிஸ்தர்கள் தவிர) இதை திரும்ப திரும்ப எழுதி எதற்கு உங்களின் நேரத்தை வீனடிக்கவேண்டும் மேலும் எதையோ பார்த்து நாய் குலைக்கிறது என்று வைத்துகொள்ளவேண்டியதுதான்.

  தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை, ஈரோசுக்கு நஷ்டமில்லை வேந்தர் movies நஷ்டபடவில்லை distributor நஷ்டமடைய வாய்ப்பு உண்டு. எப்படி என்றால் தமிழ்நாட்டின் அனைத்து குடிமக்களும்(3 கோடி மக்கள் சினிமா பார்பவர்கள்) தொடர்ந்து 3 நாள் சென்று பார்த்தால் என்ன வருமானம் வருமோ அந்த அளவுக்கு படத்தை வாங்கினால் எப்படி லாபம் பார்க்க முடியும் 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு வாங்கினால் எப்படி. வினோ சொல்வது மாதிரி டிக்கெட் விலை என்ன என்பது உண்மையை எந்த திரைஅரங்கும் சொல்வது இல்லை. முதலில் தயாரிப்பாளர் நேரிடையாக வெளியிட்டு இருக்கவேண்டும் கண்டிப்பாக 200 கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கலாம். இந்த விசியத்தில் கண்டிப்பாக எதோ அரசியல் இருக்கிறது. ரஜினியை வேண்டாதவர்கள் செய்யும் வேலை இது. இந்த நேரத்தில் நன்றி உணர்வு இருந்தால்(ரஜினியை வைத்து பலர் சம்பாதித்து இருக்கிறார்கள்) அனைத்து திரை துறையும் சேர்ந்து போராடவேண்டும். சிபிஐ விசாரணை வைத்தாலும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது போல தெரியுது.

 13. arulnithyaj

  அண்ணா தயாரிப்பாளர் சங்கம் இதை வெளியிட்டு இருக்கிறார்களா? இது உண்மையா?

 14. anbudan ravi

  “இவர்கள் செய்யும் கேவலமான பிரச்சாரத்துக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ!”…..

  கண்டிப்பாக மரண தண்டனை கிடைக்க வேண்டுகிறேன்.

  அன்புடன் ரவி.

 15. rajan

  தலைவா உன் மௌனம் களைந்து விரதம் முடித்து விடு போதும் உன் பொறுமையின் எல்லை எடு கட்சி கோடியை எத்து கோட்டையில் அப்போது தன இந்த பிச்சை காரர் கூட்டம் வாயை மூடும் .சிங்கப்பூரில் இருந்து வந்து நீங்கள் சொன்னார்களே உங்களுக்கு பெருமை வரும்படி செய்வேன் என்றது நினைவிர்ருகிரத… வா வந்து எங்களை பெருமை பட வை …வா தலைவா
  2016 நமதாகட்டும் ………..

 16. saranya

  we have to somehow stop this “pichai poraatam”. avanga thalaivar veetuku porathuku munnadi neenga ellarum aen anga poga koodathu

 17. enkaruthu

  எனக்கு தலைவர் மேல்தான் கோபம் வருகிறது.அவர் ஏன் எதற்கும் விளக்கம் கொடுக்க மாட்டேன் என்கிறார்.என்னையா இது ஒரு 65000 ரசிகர் மன்றங்களை வைத்து கொண்டு இருக்கும் இவர் தனக்கு எதிராக அடக்கும் சதியை முறியடிக்க முடியவில்லை என்றல் சாதாரண மக்கள் எப்படி இந்த சமுதாயத்தில் போராடுவார்கள்.தலைவா எங்களை பொறுத்தவரை நீங்கள்தான் நல்ல மனிதர்.சும்மா எங்கள் நலன் பாக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் அவமான பட வேண்டும்.சும்மா ஒரு ரசிகர் மாநாட்டை அறிவித்துவிட்டு ஒரு முதல்வன் மாதிரியோ ரமணா மாதிரியோ அத்தனை எதிரிகளின் முகத்தை அந்த படத்தில் கிழி கிழி கிழித்து அரசியலுக்கு வாருங்கள்.என்னையா இது ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் இவ்வளவு சோதனையா.வேண்டாம் தலைவா இந்த வேதனை.வெறும் பயல்கள் தலைவா அவனுங்க .உங்களின் நல்ல மனதிற்காக நாங்கள் எங்களின் உயிரை தருவோம்.ஆணையிடுங்கள் நல்லவரே

 18. Mahesh

  லிங்கா விவகாரத்தில் களத்தில் இறங்கி போராட வேண்டும் . இவ்வளவு பிரச்சனைகள் நடந்தும் ரசிகர்கள் போராடாமல் இருப்பது சிங்காரவேலன் போன்ற நாய்களுக்கு ரஜினி மீதான பயம் போய்விட்டது . நானும் என் நண்பர்களும் போராட தயார் . அனைவரும் ஒன்றிணைக்க வேண்டும் . என்ன செய்யலாம் . தயவு செய்து வலைத்தளத்தில் மட்டும் பேசிவிட்டு போகாமல் களத்தில் இறங்கி போராட வேண்டும் . நாம் பற்ற வைத்துவிட்டால் போதும் ரசிகர்கள் பற்றிகொள்வார்கள். தொடக்கம்தான் அவசியம்.

  கீழே இருப்பது ஒரு பத்திரிக்கை கட்டுரை

  இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள் திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம் இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான், செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.

 19. yaseenjahafar

  முதலில் ஒரூ ஆல் இந்திய ரஜினி ரசிகர் மகாநாடு போல் நடத்தி கட்ட வேண்டும் அப்பொழுது தான் சரியாகா வரும் இதை எர்கனவே டைரக்டர் s . p .
  முத்து ராமன் அவர்கள் சொன்னார்கள் எல்ல ரசிகரும் உங்களை பார்க்க வேண்டும் என நினைக்கிறார்கள் அப்படி உள்ள பொழுது லிங்கா படம் முடிந்த உடன் ஒரூ ஏர்பாடு செய்ய வேண்டும் என்று அதை எப்பொழுது செய்ய போகிறார்கள் வயசு ஆகி கொண்டு இருக்கிறது இதை இப்டியெ விட்டால்
  பேசி கொண்டு தான் போவர்கள் சாதாரண கூட்டாமா வைத்து இருக்கிறார் ரஜினி அவர்கள் இந்த கருத்தை பரிசிலனை செய்யுங்கள்

 20. enkaruthu

  இன்று மாலை நெல்லையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் எங்கள் தெய்வம் வாழும் கோவில் முன்பு போராட்டம் நடத்தினால் தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் எல்லாம் போராட்டம் நடத்துவோம் என்று மாலை மலரில் கூறியுள்ளார்.அவருக்கு குறைந்தபட்சம் சென்னையில் இருக்கும் நம் பேஸ்புக் நண்பர்கள் மற்றும் சென்னை ரசிகர் மன்றங்களாவது ஆதரவு தரவேண்டும்.இது தலைவருக்கு எதிரான போராட்டம் அல்ல நல்லவருக்கும் சதி செய்பவர்களுக்கும் நடக்கும் போராட்டம் . இதை விட koodathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *