BREAKING NEWS
Search

விபச்சாரிகிட்டியே மாமூல் வாங்கி இருக்கியே… இதைவிட அசிங்கம் உண்டா- பெண் கவுன்சிலருக்கு முதல்வரின் சாட்டையடி!

விபச்சாரிகிட்டியே மாமூல் வாங்கி இருக்கியே… இதைவிட அசிங்கம் உண்டா- பெண் கவுன்சிலருக்கு முதல்வரின் சாட்டையடி!  

சில விஷயங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் நம்மை ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுவிடும்.

சமீபத்தில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா நடத்திய அதிரடி ‘ரெய்டு’ அப்படிப்பட்ட ஒன்றுதான்.

அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என பத்திரிகைகள் பக்கம் பக்கமா செய்திகளை வெளியிட்டுள்ளன.

அவற்றிலிருந்து சில பகுதிகள்…

சென்னை மாநகராட்சியின் அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள்.  வரலாறு காணாத வகையில் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்ததால் அதிர்ச்சியடைந்தார் முதல்வர் ஜெயலலிதா. வழக்கமாக அமைச்சர்கள், அவர்கள் பிஏக்கள்தான் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவார்கள். ஆனால் இங்கோ வால்கள் ரொம்பவே ஆடுவது புரிந்தது. வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் கூப்பிட்டு வைத்து அத்தனை பேரையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார் ஜெயலலிதா.

ஒவ்வொரு கவுன்சிலரும் செய்த தவறுகளை பட்டியல் போட்டு வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து ரெய்டு விட்டதால் அத்தனை பேரும் அரண்டு போய் விட்டனராம்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிட்டி தியாகராயர் அரங்கத்தில்தான் இந்த ரெய்டு கூட்டம் நடந்தது. கவுன்சிலர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். செல்போன், ஜெயா டிவி ரிப்போர்டர்கள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.

விவஸ்தையே இல்லையா…

சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுக்குக் கூட உள்ளே வர அனுமதியில்லை. நேரம் காலம் தெரியாமல், வழக்கம் போல ஜெயலலிதாவை வரவேற்று ஏகப்பட்ட பேனர்களைக் கட்டி வைத்து விட்டனர். ஜெயலலிதா வந்தபோது இவற்றைப் பார்த்து டென்ஷனாகி விட்டார்.

எது எதற்கெல்லாம் பேனர் வைப்பது என்ற விவஸ்தையே இல்லையா என்று திட்டித் தீர்த்த ஜெயலலிதா, திட்டுவதற்காக வந்துள்ளேன். இதைப் போய் வரவேற்கிறீர்களே என்று கோபத்துடன் கூறியபடி உள்ளே வந்தார்.

ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர். பின்னர் பேசத் தொடங்கிய ஜெயலலிதாவின் பேச்சில் அனல் தெறித்திருக்கிறது.

பீடை பீடை…

முந்தைய திமுக ஆட்சியின்போது மாநகராட்சியில் கொள்ளை அடித்த அந்தப் பீடைகள் எப்போது ஒழியும் என்று காத்திருந்த மக்கள் நமக்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்தப் பீடைகளை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒரு பிடி பிடிக்க பாதி கவுன்சிலர்களுக்கு வயிற்றைக் கலக்கி விட்டதாம்.

வீட்டுக்கு மின்இணைப்பு தருவதற்கும் கவுன்சிலர்களுக்கும் என்னைய்யா சம்பந்தம்? என்னைக் கேட்காமல் கனெக்ஷன் தரக்கூடாதுனு ஒரு மின்வாரிய அதிகாரியை மிரட்டி இருக்கீங்க. அந்த அதிகாரி மின்துறை அமைச்சரிடம் புகார் சொல்லி இருக்கிறார்.

பணப் பேய் புடிச்சிருச்சி…

அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் எனக்கு மாசம் இவ்வளவு மாமூல் தந்துடணும்னு டிமாண்ட் பண்றீங்க.

வீடு கட்டுவதற்காக ஜல்லி, மணல், செங்கல் கொட்டிட்டா போதும்… உடனே அந்த வீட்டுக்கு ஆளனுப்பி அடாவடி வசூல் பண்றீங்க.

கழிவுநீர் இணைப்புக்கும் ஹோட்டல் நடத்த அனுமதி வாங்குவதற்கும் வசூல் வேட்டை நடத்துறீங்க.

டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டிக்காரர்களிடமும் பணத்தைப் பிடுங்கிக்கிட்டு இருக்கீங்க.

ரோடு போடுற கான்ட்ராக்டர்கிட்ட கட்டாயம் கமிஷன் கட்டியாக வேண்டும்னு நீங்க ஆர்டர் போட்டதால், பல இடங்களில் வேலை நின்றுவிட்டது என்று அவர் பட்டியலை வாசிக்க, அத்தனை பேரும் திருடர்கள் மாதிரி விழித்திருக்கிறார்கள்.

64வது வார்டு கவுன்சிலர் சுந்தர் பெயரைக்  கூறி எழுந்திருக்கச் சொன்ன ஜெயலலிதா, குப்பை அள்ளுற தனியார் கம்பெனியிடம், குப்பை கிடந்தா கிடக்கட்டும். அதை நீ அள்ளாம இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, எனக்கு மாசம் 50 ஆயிரம் கொடுத்துடுனு மிரட்டியிருக்கீங்க. பணப் பேய் புடிச்சு ஆடியிருக்கீங்க…என்று கடுமையாக டோஸ் விட ஆடிப் போய் விட்டாராம் சுந்தர்.

போலி ரசீது கொடுத்து பார்க்கிங் கட்டணம்

அதேபோல 63வது வார்டு கவுன்சிலர் அலிகான் பஷீர் என்பவரை நிற்கச் சொன்ன ஜெயலலிதா, மாநகராட்சி பெயரையும் சின்னத்தையும் போட்டு போலியா ரசீது அடிச்சு பார்க்கிங் கட்டணத்தை வசூல் பண்ணிட்டு இருக்கீங்க.. கார்ப்பரேஷனுக்கு வர வேண்டிய வருமானத்தை வீட்டுக்கு சுருட்டிட்டுப் போயிருக்கீங்க.. என்று புகார் பட்டியலைப் படிக்க அவர் அமைதியாக  நின்றாராம்.

இவர் சசிகலாவுக்கு நெருக்கமானவராம். சசிகலாவுக்கு அடிக்கடி புதுப் படங்களின் டிவிடிகளைக் கொடுத்து நட்பைப் பெற்று இதன் மூலம் கவுன்சிலர் சீட்டை வாங்கியுள்ளாராம்.

மேலும், சென்னையில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக வென்ற நிலையில்,  திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியை இழந்ததற்கு, இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற ஜெ. அன்பழகனுடன் ரகசியமாக கூட்டுவைத்து அலிகான் பஷீர் செயல்பட்டதாக உளவுத்துறை அம்மாவிடம் அறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

விபச்சாரிகிட்ட மாமூல் வாங்கியிருக்கியே… அசிங்கமா இல்ல!

ஜெயலலிதா அடுத்து ரெய்டு கொடுத்த கவுன்சிலர்தான் இங்கு குறிப்பிடத்தக்கவர். அவரது பெயர் ராஜலட்சுமி. 173வது வார்டு கவுன்சிலர்.

அவரது பெயரைச் சொல்லி ஜெயலலிதா கூறியபோது, “இந்த அசிங்கத்தை எப்படி சொல்றதுன்னு தெரியல. பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கீங்க. அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிட்டு விபசாரம் நடத்துறதுக்கு சப்போர்ட்டா இருக்கீங்க. இதைவிட அசிங்கம் இந்த உலகத்துல எதுவும் இருக்காது,” என்று கடும் உஷ்ணப் பார்வை பார்த்தபடி ராஜலட்சுமியை கடுமையாக சாடினார். இதைக் கேட்டு ராஜலட்சுமி ஆடிப் போய் அமைதியாக நின்றார்.

கவுன்சிலர்களிலேயே  அதிக அளவிலான புகார்கள் 114வது வார்டு கவுன்சிலர் முகம்மது அலி ஜின்னா மீதுதான் வாசிக்கப்பட்டதாம். சகல மோசடிகள், முறைகேடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளாராம். இவர் வேறுயாருமல்ல, 2009 லோக்சபா தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மகனும் தப்பவில்லை

இதேபோல  மாதவரம் 27வது வார்டு உறுப்பினர் கண்ணதாசன் மீதும் புகார் வாசித்தார் ஜெயலலிதா. இவர் அமைச்சர் மூர்த்தியின் மகன் ஆவார்.

ஃபிராடு குப்பம்மா

ஜெயலலிதா அடுத்த பிடித்த நபர்தான் சுவாரஸ்யமானவர். 93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க,  அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.

ஓவர் ஆக்ட் பண்ணாதே…

அடுத்து 38வது வார்டு சந்தானத்தைப் பிடித்து  கடுமையாக திட்டியுள்ளார் ஜெயலலிதா. அதைக்கேட்டு பயந்து போன சந்தானம்,தனது இரு கைகளால் கன்னத்தில் புத்தி போட்டுக் கொண்டு, புத்தி வந்துருச்சும்மா என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, கோபமாகிப் போன ஜெயலலிதா, ஓவர் ஆக்டிங் கொடுக்காதே என்று அதட்டலாக கூறினார்.

தொடர்ந்து ஜெயலலிதா மொத்தமாக அத்தனை பேரையும் எச்சரிக்கும் வகையில் பேசியபோது,

பெண் கவுன்சிலர்களின் கணவர், மகன்கள், சகோதரர்களின் தலையீடுகள் பற்றியும் எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவர்களின் அத்துமீறல் அதிகமாகி வருகிறது. அவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடுமையான நடவடிக்கையை நான் எடுப்பேன்.

எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட கைப்பற்ற முடியாத சென்னை மாநகராட்சியை நாம் கைப்பற்றி இருக்கிறோம். ஆனால், உங்களுடைய அடாவடியால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறீர்கள். 2014-ல் அல்லது அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எந்த மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டார்களோ அவர்களே உங்களின் அடாவடியால் நம்மை இந்தத் தேர்தலில் வீழ்த்தி விடுவார்கள். ஜூலை 31-க்குள் நீங்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்துக் கட்டிவிடுவேன்.

சட்டப்படி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு சிறப்பு அதிகாரியை வைத்து ஆறு மாதம் மாநகராட்சியை நடத்துவேன். அதன் பிறகு தேர்தல் நடத்தும்போது நல்லவர்களுக்கு மட்டுமே ஸீட் கொடுப்பேன் என்று தெளிவான எச்சரிக்கையைக் கொடுத்து விட்டு கிளம்பிச் சென்றாராம் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 169 கவுன்சிலர்களில் 100க்கும் மேற்பட்டோர் திட்டு வாங்கியுள்ளனர்.

‘அம்மா’விடம் திட்டு வாங்கி விட்டுச் சென்ற அத்தனை கவுன்சிலர்களும் உளவுத்துறை போலீஸார் மீது கடும் காட்டத்துடன் இருக்கிறார்களாம்.

ஆனால் முதல்வரப் இப்படி கேவலமாகத் திட்டிவிட்டாரே, திருந்திடலாம் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லையாம்.

“நாங்கள் மட்டுமா மோசமாக இருக்கிறோம்,  எங்களிடம் பங்கு வாங்கிய எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களையும் நாங்கள் பட்டியல் போட்டுத் தரத் தயார். அவர்களையும் கூப்பிட்டு அம்மா ரெய்டு விடட்டும்”, என்கிற ரேஞ்சுக்குப் பேசுகிறார்களாம்.

முதல்வருக்கும் இது புரிந்திருப்பதால், தடாலடியாக மாநகராட்சியைக் கலைக்கும் மூடில்தான் இருக்கிறாராம்.

முதலில் அதைச் செய்யுங்கள் முதல்வரே… இவர்கள் திருந்தவேமாட்டார்கள்!

-என்வழி செய்திகள்




18 thoughts on “விபச்சாரிகிட்டியே மாமூல் வாங்கி இருக்கியே… இதைவிட அசிங்கம் உண்டா- பெண் கவுன்சிலருக்கு முதல்வரின் சாட்டையடி!

  1. குமரன்

    ///93-வது வார்டு குப்பம்மா யாரு, எழுந்திரி என்று அவர் சொல்ல, குப்பம்மா எழுந்துள்ளார். அவரைக் கோபத்துன் பார்த்த ஜெயலலிதா, உன் கணவர் வேலாயுதம்தானே கவுன்சிலர். ஆனா, நீ கவுன்சிலரா ஆக்ட் பண்றியா என்று கோபத்துடன் கேட்க, அப்போதுதான் அத்தனை பேருக்கும் தெரிந்தது, குப்பம்மா உண்மையிலேயே கவுன்சிலரே இல்லை என்று.////

    !!!!!!

    எந்திரன்: மே…. மே….

  2. மு. செந்தில் குமார்

    மனமார பாராட்டுகிறேன்.

  3. Vadivelan

    அம்மாவின் இந்த சாட்டை சுழற்றும் வைபவம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும் பாராட்டுக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு

  4. kabilan

    வினோ அண்ணா,சைதை துரைசாமி என்ன செய்து கொண்டு இருக்கிறார் ?நல்லவர் என்று பெயர் எடுத்தவர் ஆயிற்றே ?

  5. Kannan

    ஜெ – வின் நடவடிக்கையை பாராட்டி ஒரு கட்டுரை..அதுவும் நம் தளத்தில்…நன்றாக இருக்கிறது….கவுன்சிலரை போல் எம்.எல் களையும் ஒரு பிடி பிடித்தல் நன்றாக இருக்கும்…செய்வாரா முதல்வர்

  6. பஹ்ரைன்பாபா

    @ ஜெ – வின் நடவடிக்கையை பாராட்டி ஒரு கட்டுரை..அதுவும் நம் தளத்தில்…நன்றாக இருக்கிறது….”

    ஒரு நேர்மையான அணுகுமுறை இருப்பவரால்தான்.. ஒருவரை நல்லது செய்தால் பாராட்டவும்.. தவறு செய்தால் விமர்சிக்கவும் முடியும்.. எனக்கு தெரிந்து வினோ அவர்களின் கட்டுரைகளில் பல கட்டுரைகள் நேர்மையாகத்தான் இருந்திருக்கின்றன.. இல்லை என்றால் தன்னை மிகக்கேவலமாக விமர்சிப்பவரின் கருத்துக்களை அனுமதிக்க மாட்டார்.. நன்றி

  7. தினகர்

    கவுன்சிலர்கள் அடாவடியை ஒடுக்க மாநகராட்சியை கலைத்து விடலாம். எம்.எல்.ஏக்கள், மா.செ.க்களின் ஆட்டத்தை ஒடுக்க ஆட்சியையும், கட்சியையும் கலைத்து விடலாமா?

    இந்த நடவடிக்கை முதல்வரின் தைரியத்தை காட்டுவதாக இருந்தாலும், யதார்த்தை பிரதிபலிக்கவில்லை.. சீட் கொடுக்கும் போதே ஜாதகம் பார்ப்பதற்கு பதில், பேக் கிரவுண்ட் செக் பண்ணியிருக்கலாமே?

    ஒட்டு மொத்தமாக மாநகராட்சியை கலைப்பதற்கு பதிலாகஅடாவடி பண்ணும் சிலரை பதவி நீக்கம் செய்து, அந்த வார்டுகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தி மக்கள் மனதை வெல்லலாமே. . இவரது புதிய வேட்பாளார் தேர்வு குறித்து மக்களின் பல்ஸ் பார்க்கவும் உதவியாக இருக்குமே.

  8. anbudan ravi

    அடக்கேவலம் பிடித்த நாய்களே…ரத்தம் குடிக்கும் ஓநாய்களே…பண வெறி பிடித்த பதருகளே என்று திட்ட தோன்றுகிறது….ஆனால் முடியவில்லை…தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் உருவாக இவர்களைப்போன்றோர்தான் காரணமாக இருப்பார்கள்.

    அன்புடன் ரவி.

  9. தினகர்

    ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்பவர்களுக்கு இங்கே பதில் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தால் இப்படிப்பட்ட கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள், மா.செ க்கள் இருப்பார்களா? மாட்டார்களா?. அவர்களை எப்படி சல்லடை போட்டு விலக்கி வைப்பது- இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தான், தனக்கு அரசியலில் வெல்லக்கூடிய சக்தி இருந்தும் அமைதியாக இருக்கிறார். இதே சாக்கடை அரசியலை தொடர்ந்து செய்வதில் அவருக்கு உடன்பாடும் இல்லை. இதை எப்படி சரி செய்வது என்ற தெளிவான வழிமுறைகளும் புலப்படவில்லை (சுற்றி இருப்பவர்களும் பழைய சிந்தனையுடன் இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்).. அதனால் தான் ‘ ஆண்ட்வன்’ காட்டிய வழி என்றிருக்கிறார். ஆண்டவன் காட்டும் வழி என்ன என்று பார்ப்போம்..

  10. குமரன்

    அருள்செல்வன்

    குறும்படத்தின் டிரெயிலர் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. BGM அருமை. வாழ்த்துக்கள்.

  11. சுதந்திரன்

    உளவுத்துறை போலிசாரின் வேலை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆட்சியில் இருப்பவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது தானே தவிர, ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று நோட்டம் விடுவது அல்லவே…

    — சுதந்திரன்

  12. Manoharan

    ஒரு மாநகராட்சியை கலைத்தால் போதும் மற்றவர்கள் ஒடுங்கிவிடுவார்கள்.

  13. Ganesh Shankar

    கண்டிப்பாக,முதல்வர் மனதில் இருக்கும் எண்ணம் நன்றாக வெளியில் தெரிகிறது.நம்பலாம்,நம்பிக்கை வைக்கலாம் என்ற எண்ணத்தை விதைக்கிறது.
    எந்த கட்சியிலும் இந்த அளவுக்கு ஒழுக்கம் இல்லாமல் இருப்பவரை ரெய்டு விடுவார்களா மொத்தமாக என்று பார்த்தல் மிக மிக சொற்பம் தான்.ஏன் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்னாள் இதே கட்சி கூட இப்படி இருந்தது இல்லை.
    இப்போது முதல்வரிடம் அழ பெரிய மாற்றத்தை காண முடிகிறது.இது நாட்டுக்கு நல்லது தான்.
    அதுவும் தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளில் எதாவது ஒரு கட்சிக்கு இருக்கிறதா என்று என்ன கூட தோன்றாது.
    கட்சி இருக்காது,அவனிடம் இருந்து நாமளும் வாங்கி கொண்டு அனுமதிக்கலாம் என்று தான் கட்சி தலைவர் நினைப்பார்கள்.

  14. venkt

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் ஹீ ……………….. ஹீ ……………………..தலைவி எவ்வழியோ அடிமைகளும் அவ்வழியே

  15. Sanjeev

    பாராட்டுக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *