BREAKING NEWS
Search

லிங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை லாரன் இர்வின்!

லிங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் இர்வின்!

10301601_741338842554604_2692456572881486831_n

லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் – ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு தாய்நாடு திரும்பும் எஞ்ஜினியராக சூப்பர் ஸ்டார் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள்.

lingaa-lauren

கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்,” எனப் புகழ்ந்தார்.

அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் லாரன் இர்வின்.

லிங்கா படம் தனக்கு நிறைய இந்தியப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி




3 thoughts on “லிங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகை லாரன் இர்வின்!

  1. boopathi

    ஏன் நம்ப தலைவரை 2016 நடக்கும் தேர்தலில் பிஜேபி முதல் அமைச்சர் ராக தமிழ் நாட்டில் மோடி அவர்கள் அறிவிக்கலாமே ?

    என்ன வினோ நான் சொல்வது ரைட் தானே ?

    அன்புடன்
    பூபதி.க

  2. anbudan ravi

    குடுமி உள்ள சீமாட்டி அள்ளி முடியுரா….என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது…..கலக்குங்க தலைவா….

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *