BREAKING NEWS
Search

இன்று இந்தியில் வெளியாகிறது லிங்கா.. மும்பையில் 65 அரங்குகள்!

இன்று இந்தியில் வெளியாகிறது லிங்கா.. மும்பையில் 65 அரங்குகள்!

lingaahindi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தை இன்று இந்தியில் வெளியிடுகிறது ஈராஸ் நிறுவனம். ஆனால் பெரிய விளம்பரங்கள், புரமோஷனல் நிகழ்ச்சிகள் இல்லாமல் இந்தப் படம் வெளியாகிறது.

லிங்கா படத்தை தலைவர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் தமிழ், தெலுங்கில் மட்டுமே அன்றைக்கு வெளியிட்டனர். இந்தி வெளியீட்டை தள்ளி வைத்தனர்.

இன்று இந்திப் பதிப்பு வெளியாகிறது. ஆனால் இதற்காக பெரிய அளவில் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் எதுவுமே இல்லை.  ஏஆர் ரஹ்மான் இசையமைத்தும்  இந்திப் பதிப்புக்கு இசை வெளியீட்டு விழா கூட நடத்தப்படவில்லை. பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காகவே இப்படி படத்தை வெளியிடுவதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முன்பு தெரிவித்திருந்தார்.

தமிழ், தெலுங்கில் மூன்று மணி நேரம் ஓடிய இந்தப் படம், இந்தியில் இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவான படமாக ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. பாடல்கள் குறைக்கப்பட்டு, தேவையற்ற பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவும், தென் இந்தியாவின் முன்னணி நடிகை அனுஷ்காவும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

மும்பையில் மட்டும் 65 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. வட மாநிலங்களின் பிற பகுதிகளிலும் கணிசமான அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

லிங்கா இந்தி ட்ரைலர்:

-என்வழி




One thought on “இன்று இந்தியில் வெளியாகிறது லிங்கா.. மும்பையில் 65 அரங்குகள்!

  1. நாஞ்சில்மகன்

    இப்படியும் ஒரு ரஜினி ரசிகர்… பாவம்!

    கோவை: கோவை, பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 56. சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டிரிப் மூலம் மருந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், லிங்கா படம் ரிலீஸ் ஆகியுள்ளதை கேள்விப்பட்ட ராஜேந்திரன் எப்படியாவது ரஜினியின் லிங்காவை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தார். ஆனால், மருத்துவமனை கட்டுப்பாடுகள் அவரை கட்டிலேயே கட்டிப்போட்டன. சமயம் பார்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரன், லிங்கா படத்தை பார்க்க பகலில் சென்றால் மருத்துவமனை ஊழியர்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்து, இரவு காட்சியை பார்க்க திட்டமிட்டார். இதையடுத்து, நேற்று இரவு கையில் குத்தியிருந்த டிரிப் குழாய்களுடன் மருத்துவமனையில் இருந்து கோவை, எஸ்.பி.ஐ., ரோட்டில், லிங்கா படம் ஓடும் தியேட்டருக்கு சென்றார். 10 மணி காட்சிக்கான டிக்கட்டை எடுத்து, உள்ளே சென்றார். லிங்கா படத்தை ரசித்து பார்த்தார். படம் முடிந்து அனைவரும் வௌியில் சென்றனர். ராஜேந்திரன் மட்டும் இருக்கையிலேயே கிடந்தார். தியேட்டர் ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் இறந்து போனது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *