BREAKING NEWS
Search

ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்!

ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்!

billa

லைவர் ரஜினி படத் தலைப்புகளை பிற நடிகர்களின் படங்களுக்குப் பயன்படுத்தும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் அஜீத்தும், தனுஷும்தான்.

தொடர் தோல்விகளில் துவண்டுகிடந்த இருவருக்குமே ரஜினியின் படத் தலைப்புகள் புது திருப்புமுனையைத் தந்தன.

அஜீத்துக்கு தலைப்பு மட்டுமல்ல, படத்தின் கதையும் ரஜினி அனுமதியுடன் கிடைத்தது. படம் ஆரம்பித்ததிலிருந்து வெளியான வரை ரஜினியின் கண்பார்வையில் நடந்தது எல்லாமே. விழுந்து கிடந்த அஜீத்தை எழுப்பி நிற்க வைக்க ரஜினியே செய்த முயற்சி அது. அந்த பில்லாதான் அஜீத்தின் மார்க்கெட்டை திருப்பிப் போட்டது எனலாம்.

பொல்லாதவன் படத்துக்கு முன் தொடர்ச்சியாக 5 ப்ளாப் கொடுத்திருந்தார் தனுஷ். பொல்லாதவன் வெற்றிக்குப் பிறகு தனுஷுக்கு ஏறுமுகம்தான். அதன் பிறகு அவரே படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனது படங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

அஜீத் மீண்டும் பில்லா பெயரை வைத்து இரண்டாவது பாகம் எடுத்தார்.

ஒரு நல்ல தலைப்பை யோசிக்கக் கூட முடியாமல் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள், அடுத்தடுத்து ரஜினி தலைப்புகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகவே வைத்துக் கொண்டனர்.

விஷால், நான் சிகப்பு மனிதன், பாயும் புலி போன்ற தலைப்புகளைப் பிடித்துக் கொண்டார். சுந்தர் சி, முரட்டுக்காளை, தீ போன்ற தலைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார். இரண்டுமே ஓடவில்லை. ராகவா லாரன்ஸ் தன் பங்குக்கு ராஜாதி ராஜா தலைப்பை எடுத்துக் கெடுத்தார்.

pollathavan(7)

ஆர்பி சவுத்திரி மகன் ஜீவா போக்கிரிராஜா தலைப்பைக் கைப்பற்றிக் கொண்டார். அனைத்துமே ரஜினியின் அனுமதியுடன் நடப்பதாகத்தான் கூறுகிறார்கள்.

அடுத்து மூன்று முகம், ஜானி, காளி போன்ற படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்துவதில் பெரும் போட்டி நடக்கிறது.

இந்த நிலையில்தான், தனது அடுத்த படத்துக்கு தங்க மகன் என்ற ரஜினியின் இன்னொரு ப்ளாக்பஸ்டர் தலைப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் தனுஷ். இவர்தான் ரஜினி படத் தலைப்புகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டவர். ரஜினி மருமகன் என்ற கூடுதல் உரிமை அவருக்கிருக்கலாம்.

ஆனால் சோகம் என்ன தெரியுமா…

இப்போது இணைய தளத்தில் மேற்கண்ட படத் தலைப்புகளைத் தட்டித் தேடினால், ரஜினி படம் எதுவும் வருவதில்லை. முரட்டுக்காளை என்றால் சுந்தர் சியும், பில்லா என்றால் அஜீத்தும், பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்றால் தனுஷும், பாயும் புலி என்றால் விஷால் படங்களும்தான் வருகின்றன. நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது!

அட, இலவச என்சைக்ளோபீடியாவான விக்கிபீடியாவில் தேடிப் பாருங்கள்… ரஜினி பில்லா அல்லது பில்லா 1980 என அடித்தால்தான் ரஜினி படம் வருகிறது. பொதுவாக பில்லா என்று அடித்துப் பாருங்கள், முகம் முழுக்க கண்ணாடியும் கோட்டுமாக அஜீத் படங்கள் வரிசை கட்டி நின்று கடுப்பேற்றுகின்றன.
maappillai
இப்படியே, ஆளுக்கு நான்கு ரஜினி படத் தலைப்புகளைக் கைப்பற்றினால், இணையத்தில் பழைய ரஜினி படங்கள் மெல்ல மெல்ல காணாமல் போகிற வாய்ப்பிருக்கிறது. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.. ரஜினி தன் 40 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில், எந்த பழைய படத் தலைப்பையும் பயன்படுத்தியதில்லை!

ஒரு ரஜினி ரசிகன் அல்லது எண்பதுகளிலிருந்து படம் பார்த்து ரசிகனுக்குத் தெரியும் இவை அனைத்துக்கும் மூலம் ரஜினியின் படத் தலைப்புகள் என்பது. ஆனால் இன்றைக்கு புதிதாய் இணையத்தில் நுழையும் இளைஞர்களுக்கு, இந்தப் பெயர்களில் வெளிவந்து சாதனைப் படைத்த ரஜினி படங்கள் அறிமுகமாகாமலே போகும் வாய்ப்பு அதிகம். இது ஒருவிதத்தில் திரைவரலாற்றைத் திரிக்கும் வேலை. சும்மாவே ரஜினி பற்றி கண்டபடி உளறிக் கொட்டுபவர்களுக்கு வசதியான ஒன்றும்கூட. யார் கண்டது… அஜீத் நடித்த பில்லாதான் ஒரிஜினல் என்று மார்தட்டும் அரைவேக்காட்டுக் கூட்டம் ஒன்று வந்தாலும் ஆச்சர்யமில்லை!!

இதற்காக இந்த நடிகர்களை நாம் குறை சொல்லவில்லை. யார் பெயரை அல்லது யார் படத் தலைப்பை உபயோகித்தால் தங்களுக்கு எளிதில் பெரும் விளம்பரம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து அவர்கள் ரஜினி படத் தலைப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். ரஜினியோ தனது இணையற்ற பெருந்தன்மையால் விட்டுக் கொடுக்கிறார். அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களை பெரும் தொகை கொடுத்துச் சரி கட்டிவிடுகிறார்கள்.

ஆனால் இதில் நிஜமான நஷ்டம் யாருக்கு? ரஜினியின் புகழுக்குதான். எல்லாம் இணையமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் சத்தமில்லாத ஒரு இருட்டடிப்பு வேலை இது.

இதற்கு நிச்சயம் ஒரு முடிவு கட்ட வேண்டும். தன் படத் தலைப்புகளைப் பயன்படுத்துவதை ரஜினியும் அந்தப் படத் தயாரிப்பாளரும் அனுமதிக்கக் கூடாது. அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அல்லது, இந்தத் தலைப்புகளின் முன்னும் பின்னும் ஏதாவது ஒரு பெயரைப் போட்டுக் கொண்டு வேண்டுமானால் பயன்படுத்தச் சொல்ல வேண்டும், திருவிளையாடல் ஆரம்பம் மாதிரி.

இனி இணையத்தில் இந்த மாதிரி கொடுமைதான்...

இனி இணையத்தில் இந்த மாதிரி கொடுமைதான்…

செய்வார்களா? ரஜினி என்ற திரையுலக நல்லவர், இன்றைக்கு இவர்கள் பெரிதாக பீத்திக் கொள்ளும் சர்வதேச மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர், தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்தவர் மீது உண்மையான மரியாதையிருந்தால் இதை இன்றைய நடிகர்கள் நிச்சயம் செய்வார்கள். நிஜத்திலும் நடிப்பவர்கள்? ம்ஹூம்!!

வினோ
என்வழி
29 thoughts on “ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்!

 1. இனியவன்

  அண்ணா நான் seo பண்ணட்டா….. இன்னும் கடை ஆரம்பிக்கல…… நான் பண்ணட்டா… கூகுளே maarum

 2. Jeyaseelan

  Romba irritating ah irukku sir…. Venumne panranga nu nallave theriyuthu… Analum thalaivar yen allow panrar… Thalaivarukku theriyama kooda irukkalam… Atha theriya paduthunga sir….

 3. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய நண்பர்களே :

  ரஜினி படங்களின் தலைப்புகளை வாண்டுகள் பயன்படுத்துவது
  தவறு! அஜீத் நடித்த ‘பில்லா’ படம் ரீமேக் படம் என்பதால் பெயர்
  ஓகே! ஆனால் – பொல்லாதவன், தங்கமகன், மூன்று முகம்,
  முரட்டுக்காளை போன்ர படங்கள் தவறானவை.. ரஜினி படங்களின்
  பெயர்களை பிற நடிகர்களுக்கு கொடுக்க வேண்டாம்..

  அதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்
  போட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்?! ரஜினி படங்களின்
  தலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி?!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. Sheshank

  Simply Super! I don’t think people really thought about this side effect. But what you mention is totally true. Hope fans realize this and cherish his titles instead of distorting it!

 5. ரஜினி பக்தன் விஸ்வநாதன்

  உண்மை நண்பா. சூடு சொரணை இருந்தால் தமிழ் சினிமாவில் இனி மேல் எவனும் , நம் இறைவன் ரஜினி அவர்கள் படத்தலைப்பை பயன் படுத்த கூடாது. சுய சிந்தனை வேண்டும்.

 6. mike

  “அதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்
  போட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்?! ரஜினி படங்களின்
  தலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி?!”

  நண்பருக்கு தெரியாதது இல்ல, ஓடற குதிரையில் தான் பணம் கட்டுவார்கள்.

 7. sundar

  நீங்கள் சொல்வது மிகவும் சரி. என்னை போல் ரஜினியை தெய்வமாக நினைக்கும் எல்லோருக்கும் இது மன வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைய ஜீரணிக்க முடியவில்லை.

 8. Manga madayan

  “இப்போது இணைய தளத்தில் மேற்கண்ட படத் தலைப்புகளைத் தட்டித் தேடினால், ரஜினி படம் எதுவும் வருவதில்லை. முரட்டுக்காளை என்றால் சுந்தர் சியும், பில்லா என்றால் அஜீத்தும், பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்றால் தனுஷும், பாயும் புலி என்றால் விஷால் படங்களும்தான் வருகின்றன. நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது!”

  100% right getting pissed off due to this.. vennaigal dont know to name a a movie.

 9. srikanth1974

  இந்த பிரச்சனை தீர ஒரே வழி
  இனிமே வரக்கூடிய வேறு நடிகர்களின்
  படங்களுக்கு நம் தலைவரின் படப் பெயரை
  தலைவரின் அனுமதியோடு வைத்தாலும்,
  அந்த நடிகரின் படத்தை ரஜினி ரசிகர்களாகிய
  நாங்கள் கண்டிப்பாக புறக்கணிப்போம்.
  என்று தமிழகம் முழுக்க அந்தந்த
  மாவட்ட தலைமை ரஜினி நற்பணி மன்றங்கள்
  வாயிலாக ஓர் எச்சரிக்கை விடுத்தால் இதற்கு
  ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

  அன்புடன்
  ஸ்ரீகாந்த்.ப

 10. srikanth1974

  திரு.கமல்ஹாசன்.அவர்கள் நடித்த மிகப் பெரிய வெற்றிப் படங்களான
  காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் அபாடக்கர் போன்ற
  பெயர்களிலும், படங்கள் வெளிவந்திருக்கின்றது.முன்பு கமல் ஸ்ரீதேவி
  நடித்த ‘குரு’ பின்னர் மணிரத்னம் அவர்கள் இயக்கி அபிஷேக் பச்சன்
  ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த குரு இவை எல்லாவற்றுக்கும்மேலாக
  கமல்&ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் அப்பாடா எவ்வளவு
  படங்கள் என்னைக் கேட்டால் கமல் ரஜினி இரண்டு பேரின் ரசிகர்களுமே
  இணைந்து ஓர் எச்சரிக்கை விடுத்தால் இன்னும் பலமான எதிர்ப்பாக இருக்கும்.

  என்றும் உங்கள் அன்பு சகோதரன்
  ஸ்ரீகாந்த்.ப

 11. குமரன்

  ///அதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்
  போட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்?! ரஜினி படங்களின்
  தலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி?!”///

  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே (கமலின்) உடம்பை ரணகளமாக்கிடுவீங்களே !!!

  யாருய்யா வருவாங்க? ஒருவேளை விஸ்வரூபம்னு பேரை யாராவது பயன்படுத்துவாங்களோ? இலவசமா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்?

  கமலே த்ரிஷ்யத்தை ரீமேக் செய்து பிழைப்பை ஓட்டும் நிலையில் இருக்கிறார் இதில் அவர் தலைப்பை யார் கேட்பார்?

 12. enkaruthu

  தலைவர் உண்மையாலுமே நல்ல உள்ளம் படைத்த நல்லவர்.நண்பர்களே இவர் யாரையாவது அவர் மனம் புண்படும்படி பேசிய மற்றும் அவருக்கு துரோகம் பண்ணிய நபரை பற்றி தவறாக பேசிய வரலாறு உண்டா..அதுதான் நமது தலைவர்.ஆனால் நமக்கு பிரச்சினையும் அதுதான்.

 13. Ram

  MGR மற்றும் நம் தலைவர் படங்கள் பெயரை திரும்ப யார் உபயோகித்தாலும் அவர் திரைப்பட துறையில் செய்த சாதனைகள் மாற போவதில்லை. ஒருவருடைய உண்மையான புகழ் அவர் படங்கள் பெயரை உபயோகிக்கும் மூலம் தான் ஊருக்கு தெரியும். சில அரைகுறை சினிமா விமசர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பில்லா மற்றும் பொல்லாதவன் போன்ற படங்கள் தலைவர் படங்கள் என்று ஊருக்கே தெரியும். சினிமா இல்லாமல் மற்ற துறைகளில் இன்னும் ராஜா ராஜா சோழன் , காமராஜர் போன்றோரின் நின்று கொண்டு தான் இருக்கிறது. அதே போல் நம் தலைவரின் புகழ் என்றுமே நம் தலைவரை போல் மங்காது.

 14. enkaruthu

  நல்லா சொன்னிர்கள் குமரன் அவர்களே.இதில் பாவலன்அவர்கள் தலைவருக்கு come back படமாக எந்திரன் 2இருக்கும் என்று வாழ்த்து வேறு.உலக நாயகன் என்று போற்றும் உங்கள் தலைவர் கமல் அவர்கள் உலக அளவில் பெற்ற விருதுகள் எத்தனை.ஒன்றும் இல்லை.ஆனால் உலக நாயகன் என்று சொல்லும்பொழுது வெட்கமே இல்லாமல் சிரிக்கிறார்.எங்கள்நல்ல தலைவர் இன்று உலகமே உற்றுநோக்கும் நதி நீர் இணைப்பை அன்றே பறைசாற்றிய மற்றும் உண்மையான உண்ணாவிரதம் என்னவென்று (உண்மையாலுமே கடவுளை வேண்டி ஒரு இம்மியளவு கூட பாத்ரூம் போகிறேன் என்று உணவு சாப்பிட போகாமல் ) பறைசாற்றிய அந்த உண்ணாவிரத்தை பார்த்து கமல் அவர்கள் இது ஒரு அரசியலாக தெரிகிறது என்றார்.இன்று கலையை தவிர எனக்கு வேறு ஒரு அரசியல் தெரியாது என்று சொன்ன கமல் நடிகர் சங்க தேர்தலில் பண்ணுவது மட்டும் என்ன ஜனநாயகமா அல்லது காவலிதணமா

 15. raja

  வினோ இந்த பதிவை எந்த மாதிரியான மனநிலையில் எழுதினார் என்று புரியவில்லை.. ரஜினி ரசிகனாக அவரின் புகழ் காலம் கடந்து நிலைக்க வண்டும் என்ற ாசையில் எழுதியிருக்கலாம்.. ஆனால் யதார்த்தம் வேறு. எம்ஜஇயார் கூட அவரின் படங்களால் இன்று புகழை இழக்காமல் இல்லை அவரின் படங்களை இன்றைய தலைமுறையால் விரும்பபடுவதும் இல்லை.. ஆனால் அவர் என்றென்றும்ஹீரோவாக பார்க்கபடுவதற்கு காரணம் வேறு. ரஜஇனி அந்த வாய்ப்பை அவராகவே தவறவிட்டு விட்டார். ரஜினியை project செய்ய ெந்த ியக்கமும் இல்லை ஏன் சினிமா துறையே அவரை அடுத்த தலைமுறையில் மறந்து விட அல்லது நினைவு கூறாமல் இருந்து விட வாய்பு அதிகம்..

 16. மிஸ்டர் பாவலன்

  //அந்த உண்ணாவிரத்தை பார்த்து கமல் அவர்கள் இது ஒரு அரசியலாக தெரிகிறது என்றார்.///

  நண்பர் என் கருத்து அவர்களே.. காவிரி நீர் குறித்து நடந்த சென்னை
  உண்ணாவிரதம் நிகழ்ச்சியில் ரஜினியுடன், அவர் நண்பர் விஜயகுமார்
  முழுநாள் உண்ணாவிரதம் இருந்தார். இத்துடன் பலஅரசியல் தலைவர்களும்
  மேடையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். ரஜினிக்கு வாழ்த்து சொல்ல
  கமல் ஹாசன் வந்திருந்தார். மேடையில் பல அரசியில் தலைவர்களை
  பார்த்தவர் பின் செய்தியாளர்களை சந்தித்த போது “எனது நண்பர் ரஜினி
  அரசியலுக்கு வருவது போல் இருக்கிறது. இது அவர் அரசியல் மேடை
  போல் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்” என சுருக்கமாக
  வாழ்த்தி விட்டு சென்றார். ரஜினியின் உண்ணாவிரதத்தை உலக நாயகன்
  கமல் எந்த வகையிலும் விமர்சிக்க வில்லை. கமல் மட்டும் அல்ல, மேடையில்
  உள்ள அரசியல் தலைவர்களை பார்த்து பலரும் ரஜினி அரசியலில் களம்
  இறங்கப் போகிறாரா என சந்தேகப் பட்டனர். இதனால் உலகநாயகனை
  மட்டும் குறை சொல்ல வேண்டாம். நன்றி!!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 17. மிஸ்டர் பாவலன்

  //உங்கள் தலைவர் கமல் அவர்கள் உலக அளவில் பெற்ற விருதுகள் எத்தனை.//

  நண்பர் என்கருத்து அவர்களே.. இது வரை கமல் ஹாசன் உலக அளவில்
  ஆஸ்கார் போன்ற விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் இது ஒரு
  குறை அல்ல. அவரது நடிப்பு ‘உலக அளவில்’ இருக்கிறது வரலாற்று உண்மை.
  மேலும் கமல் ஹாசன் புகழ், பாராட்டு இவற்றை விரும்பாதவர், மிகவும்
  அடக்கமானவர், தன்னைப் பற்றி தானே பாராட்டிக் கொள்ளாதவர், மிகவும்
  பண்பு மிக்கவர். தசாவதாரம் படத்தில் “உலக நாயகனே” என்ற வைரமுத்து
  பாடல் தான் அவருக்கு அந்த டைட்டில் கொடுத்து இப்போது அந்த
  பட்டப் பெயர் கமலுக்கு நிலைத்து விட்டது. கவிப் பேரரசு அல்லவா!!

  தசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் கமல் ஹாசன் மிக சிறப்பாக
  செய்து வெளிநாட்டு நடிகர்களை வியக்க வைத்தார். இதைப் பாராட்ட
  எனக்கு வார்த்தை இல்லை !

  உடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்
  உள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்
  முகங்களை உரித்து மனங்களை படித்து
  பேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி
  பிராய்டையும் புரிந்து கொண்டாய்
  விரல்களுக்குள்ளே விருச்சங்கள் தூங்கும்
  உன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்
  நெருப்பினில் கிடந்து நெடுந் தவம் சிறந்து
  நீயெனும் நிலை கடந்தாய்…
  இப்போது நிருபணம் ஆகிவிட்டாய்..

  உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
  உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
  உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
  உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

  உலக நாயகனே… உலக நாயகனே…
  கண்டங்கள் கண்டு வியக்கும்…
  இனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 18. enkaruthu

  திரு ராஜ் அவர்களே எங்கள் தலைவரின் புகழை அரசியலுக்கு வந்துதான் நிலை நிறுத்த அந்த நல்லவருக்கு தேவை இல்லை.அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் நாளை சங்கதிகள் ஐயோ இந்த நல்லவர் வந்திருக்கலாமே என்று ஏங்கிக்கொண்டு பார்ப்பார்.ஏனென்றால் எங்கள் தலைவர் போல் நல்ல மனிதரை இனி யாரும் பார்க்க போவதில்லை..

 19. Rajadurai

  மிஸ்டர் பாவலர்….உலகநாயகன் என்று பட்டம் தெனாலி படத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர்…. தசாவதாரம் படத்தில் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பட்டத்தை பயன்படுத்தினார்கள்.
  காவேரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்தில்
  கமல் மட்டுமே அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அவர் வார்த்தைகளில் இருந்த பொறாமை நன்றாக தெரியும்.

 20. Siva

  தனுஷின் ‘தங்கமகன்’… டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ்!

 21. Kumar

  மாவீரன்- ராம் சரண்
  பாயும் புலி- விஷால்
  நான் சிவப்பு மனிதன் – விஷால்
  தீ – சுந்தர் C
  முரட்டுகாளை- சுந்தர் C

 22. இந்திரன்

  ஒரு குடும்பம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு கமல் உதாரணம் .குடும்பம் இப்படி தான் இருப்பதற்கு ரஜினி உதாரணம்

 23. enkaruthu

  சூப்பர் இந்திரன்.நம் தமிழகத்தில் ஒரு பெண்ணை ரஜினியோடு அனுப்புவீர்களா கமலோடு அனுப்புவீர்களா என்று கேட்டால் அது என் கலியுக நல்லவராம் தலைவரோடுதான் அனுப்புவார்கள்.என்ன கௌதமி அவர்களின் பெற்றோர்கள் இதற்க்கு விதி விளக்கு போல.நான் இந்த கெளதமியை தன கணவரோடு 2003 வருசம் ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும்பொழுது தன கணவரை ஒரு கேவலமான புழுவை போல் பார்த்து நடந்தது என் நினைவில் இருக்கு.இன்று கமல் கிடைத்தவுடன் என்னமோ தன கற்பையே கமலுக்கு கொடுததுபோலும் சரிகா என்னமோ இவளுக்கு பின்னாடி வந்தது போலும் அலட்டி கொள்கிறார்.

 24. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே.. உலகநாயகனை பற்றியே எழுதி வருபவர்கள் ஸ்ருதிஹாசன்
  பற்றியும் எழுதலாம்.. சில விஷயங்களில் கமலஹாசனையே மிஞ்சி
  விடும் போல இவர்! “கௌதமியுடன் கமல் இணைந்து வாழ்வது பற்றி
  உங்கள் கருத்து என்ன?” என ஸ்ருதியிடம் கேட்டார்கள் ஒரு பேட்டியில்..
  சட்டென பதில் சொன்னார் ஸ்ருதி.. “அதில் என்ன தவறு? கௌதமி
  பார்க்க மிக அழகாகத் தானே உள்ளார்?” என்ன ஒரு ஞானம்? என்ன ஒரு
  பொறுப்பு..

  “மகள் தந்தைக்கு ஆற்றும்உதவி இவள்தந்தை
  என்னோற்றான் கொல்எனும் சொல்”

  தெளிவுரை: மகள் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு,
  `இவள் தந்தை இவளை மகளாய்ப் பெற என்ன தவம் செய்தானோ’
  என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 25. இந்திரன்

  ஸுரிதிஹாசன் ,தலைவர
  ் மகளின் கால் தூசி பெறமாட்டாள் ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *