BREAKING NEWS
Search

எந்த சாதிக்காரனும் வேணாம்… இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க! – இது லிங்காவில் தலைவர் பஞ்ச்

எந்த சாதிக்காரனும் வேணாம்… இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க! – இது லிங்காவில் தலைவர் பஞ்ச்

rajini new getuo

ஞ்ச் வசனங்கள் இல்லாமல் தலைவர் ரஜினி படமா..  லிங்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசுவதா வரும் பஞ்ச் வசனம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் படங்களில் அவர் ஸ்டைலாகப் பேசும் ஒவ்வொரு வசனமும் முத்திரைப் பதித்தன. பதினாறு வயதினிலேயில் இதெப்டி இருக்கு… தொடங்கி, பாட்ஷாவில் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, முத்துவில் ‘கிடைக்கிறது கிடைக்காம இருக்காது’, அருணாச்சலத்தில் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’, படையப்பாவில் ‘என்வழி தனி வழி’, சிவாஜியில், ‘ச்சும்மா அதிருதுல்ல…’ – இப்படி ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சிறப்பு வசனம் இடம்பெறுவது வழக்கமானது.

எந்திரனில் இல்லை

எந்திரன் படத்தில் மட்டும் அதிரடி பஞ்ச் வசனங்கள் ஏதும் இல்லை. ஆனால் அடுத்து வந்த கோச்சடையானில் அனைத்து வசனங்களுமே முத்திரை வசனங்களாக அமைந்தன.

லிங்கா படத்தை ஆரம்பித்த போது, இந்தப் படத்தில் அரசியல் வசனங்களோ, முத்திரை வசனங்களோ இல்லாமல் இயல்பாக எடுக்கலாம் என்று முடிவு செய்ததாகக் கூறப்பட்டது.  ஆனால் இப்போது படம் முழுக்க அதிரடி பஞ்ச் வசனங்கள் இடம் பெறுகின்றனவாம்.

இப்படத்தில் இரு வேடங்களில் வருகிறார். இதில் ஒரு ரஜினி மக்களுக்காக அணை ஒன்றை கட்ட பாடுபடும் பாத்திரத்தில் வருகிறார். அவர் பேசும் ஒரு பஞ்ச் வசனம் இது..

‘எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க’!

இதெப்டி இருக்கு!

-என்வழி




8 thoughts on “எந்த சாதிக்காரனும் வேணாம்… இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க! – இது லிங்காவில் தலைவர் பஞ்ச்

  1. Elango

    \\எனக்கு எந்த சாதிக்காரரும் வேண்டாம். இந்தியனா இருக்கிறவன் மட்டும் என்கூட வாங்க’!

    ஒரு இந்தியனா நீங்க நாட்டுக்கு நல்லது செய்ய வாருங்கள் ஐயா!
    இன்றைய சூழலில் நிச்சயமாக அரசியலில் உங்களால் பிரகாசிக்க முடியாது!

    படங்களில் மட்டும் வீர வசனம் பேசி விட்டு ..மக்களின் நம்பிக்கையிலா தன்மைக்கும் ஆளாகி இருகின்றீர்!

    விரைவில் ஒரு நல்ல முடிவை எடுங்கள்!

    பகிரங்க மாக உங்கள் மீது இளைஞர்களின்… ஏன்… ரசிகர்களின் ஆதங்கம் இனைய தளங்களில் பிரகாசிக்க தொடங்கி இருப்பதை நீங்கள் இன்னும் அறிய வில்லையா?

  2. srikanth1974

    ஒரு வாசகம் சொன்னாலும்
    திரு வாசகமாக சொல்லிட்டீங்க
    அசத்துங்க தலைவா’

  3. srikanth1974

    தொடர்ந்து எங்கள் தலைவரை குற்றம் சொல்லி விமர்சித்து வரும் நண்பர்
    திரு.இளங்கோ அவர்களுக்கு என் வருத்தத்தையும்,வேதனையையும்,தெரிவிக்கின்றேன்.என்போன்ற ரசிகர்களை மென்மேலும் புண்படுத்த வேண்டாம் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன். நண்பா’இது கண்டனமோ,சண்டையோ அல்ல
    எனது பணிவான வேண்டுகோள் மட்டுமே என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்
    ப.ஸ்ரீகாந்த்.

  4. Moorthy

    படங்களில் மட்டும் வீர வசனம் பேசி விட்டு ..மக்களின் நம்பிக்கையிலா தன்மைக்கும் ஆளாகி இருகின்றீர்!

    விரைவில் ஒரு நல்ல முடிவை எடுங்கள்!

  5. Elango

    \\தொடர்ந்து எங்கள் தலைவரை குற்றம் சொல்லி விமர்சித்து வரும் நண்பர்
    திரு.இளங்கோ அவர்களுக்கு என் வருத்தத்தையும்,வேதனையையும்,தெரிவிக்கின்றேன்

    அன்பு நண்பா ….ரஜினியின் தீவிரமான ரசிகன் என்பதால் மட்டும் தான் ரஜினியின் உண்மையான நிலையை எடுத்து உரைகின்றேன் …அவரை பொது மக்கள் பேசுவதை கேட்டு இங்கே பதிவு செய்து வருகிறேன்! அவரை என்றுமே நான் ஒரு நல்ல மனிதராக மதிப்பவன் என்ற உண்மை என் கருத்துகளை நன்கு படுபவர்களுக்கு மட்டுமே புரியும்!

    ஆனால் கண்களை கைகளால் மறைத்து கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்ற முட்டாள் ரசிகர்களை போல் ..இல்லாமல் ஒரு ஆக்கபுர்வமான ரசிகனாக இருக்க விரும்புகிறேன்!

    அவர் இதே நிலையில் தொடர்ந்தால் அவரின் வாழ்கை வரலாறு ஒரு களங்கமாகவே அமையும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை!

    அவரின் மீது கொண்ட அதீத அன்பினால் உண்மையை எடுத்து சொல்கிறேன்! அது வெறும் பொழுது போக்கிற்காக ரஜினியை ரசிக்கும் பேர்களுக்கு இது புரியாது என்பதை வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்!

    தவறு உங்களுடியது தானே தவிர …என்னுடைய ஆக்கபுர்வமான கருத்துகளில் அல்ல!

    நன்றி!

  6. Elango

    ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தியை வினோ அவர்களுக்கு உகந்த ஒரு வலைதளம் வெளி இட்டுஇருபதை அவர் இன்னும் படிக்க விலையா 😉

  7. srikanth1974

    நண்பர் திரு.இளங்கோ அவர்களுக்கு வணக்கம்’

    கண்ணியத்தோடு தங்களது நிலைப்பாட்டை விளக்கி எனக்கு பதில் எழுதியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .நண்பா’
    தங்களுக்காக மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்.
    இது கண்டனமோ சண்டையோ அல்ல எனது பணிவான வேண்டுகோள் மட்டுமே என்பதைத் தெரிவிக்கிறேன். நன்றி.
    அன்புடன்
    ப.ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *