BREAKING NEWS
Search

இனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம்! – சரத்குமார்

இனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம்! – சரத்குமார்

Lingaa-Movie-Superhit-Poster-800x562

னி எந்தப் படம் நஷ்டமடைந்தாலும் பணத்தை திருப்பிக் கேட்கக் கூடாது. இதற்காக தனி சட்டமே போடப் போகிறோம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

லிங்கா படம் மிகப் பெரிய ஓபனிங்குடன் ரிலீசானது. இந்தியாவில் எந்தப் படத்துக்கும் இந்த ஓபனிங் கிடைக்கவில்லை. முதல் நாள் மட்டுமே உலகெங்கிலும் ரூ 38 கோடியை வசூலாகக் குவித்தது லிங்கா.

தமிழகத்தில் மிகப் பெரிய வசூல் இந்தப் படத்துக்குக் கிடைத்தது. முதல் மூன்று நாட்களும் திரையிட்ட அத்தனை அரங்குகளில் பெரும் கூட்டம் திரண்டது. சராசரியாக ரூ 200 வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

இந்தப் படத்தை வாங்கி விநியோகித்த, திரையிட்ட அத்தனை பேரும் முதல் மூன்று நாட்களிலேயே போட்ட முதலுக்கு மேல் அள்ளினர். ஆனால் பொய்க் கணக்கு, மோசடியான டிசிஆர் காட்டி படத்துக்கு கூட்டமே இல்லை என பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

படம் வெளியான நான்காவது நாளிலிருந்து திட்டமிட்டு இந்தப் படத்தை ஓட விடாமல் செய்தனர். அடுத்தடுத்து பெரும் பணம் செலவழித்து லிங்காவுக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதனால், படத்தை ஒரு வாரம் கழித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்த பலரும் பார்க்காமலே விட்டனர். லேட்டாகப் பார்த்துவிட்டு, அட நல்ல படமா இருக்கே… இதை ஏன் இப்படி குறை சொன்னார்கள் என்று கேட்டனர் பொதுமக்கள்.

லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற மோசடி கும்பல் தொடர்ந்து நஷ்டம் வேண்டும் என்று பிச்சையெடுத்து வருகிறார்கள்.

இன்று இரவுக்குள் இந்தப் பிரச்சினை ஒரு முடிவை எட்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இனி எந்தக் காரணத்தைக் கொண்டும், ஒரு படம் நட்டமடைந்தால், அதற்கான இழப்பீட்டுத் தொகை என யாரும் கேட்டு வரக்கூடாது. இதனை ஒரு சட்டமாகவே நாங்கள் அமல்படுத்தப் போகிறோம். சினிமா என்பது ஒரு வர்த்தகம். அந்த வர்த்தகத்துக்கான குறைந்தபட்ச நியாயத்தைக் கூட கடைப்பிடிக்காமல் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது,” என்றார்.

-என்வழி
10 thoughts on “இனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம்! – சரத்குமார்

 1. manithan

  பொறுத்துக்கொண்டு இருக்கிறோம் வினோ சார் ,,,,,,,,,,

 2. sivashanmugam

  2 வாரத்தில் உண்மை வெளி வரும் தலைவர் மனசை கஷ்ட படுத்தினவன் முகமுடி கிளியும் …

 3. Murali

  Total failure of all power centers supporting our Superstar. This should have dawn on the distributors and other Rajini supporters soon after the fourth day drama created by the scoundral Singaravel. Nobody gave any fitting reply except K.S. Ravikumar and allowed the hooligans to succeed. Shame on all of us.

 4. Sk

  Why everything has to start from thalaivar ? Wat were these guys doing so long ?
  A set of people ganged up with backing of some idiots in kollywood and did everything to tarnish thalaivar image…40 years of hardwork guys…didn’t happen to him overnight
  People within the kollywood backyard have to learn some ethics and respect for their fellow actors and especially seniorS…
  Ithula @itisprashanth in Twitter has many followers and spreading fake news right from beginning with his reviews. I kept questioning him and he blocked me now

 5. anbudan ravi

  இந்த சட்டம் இதுவரை இல்லாமல் இருந்ததே கேலிக்கூத்து. இந்த சட்டத்தின் மூலம் சிங்காரவேலன் போன்ற தறுதலைகள் உள்ளே வராது என்று நம்புவோம்.

  அன்புடன் ரவி.

 6. kumaran

  விஜய் மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆகியிருக்கும்!

 7. saranya

  padam nashtam illa nu aen yaarume otthuka maatendraanga. even all thalaivar fans are spreading it as flop. 4th day ve avan vanthu ipdi prechaaram panraana thirumba first day mathiriye kootam ella edathulayum poyirukkanum. aen fans paaka koodatha. 4 varusham kazhichi ungalukku ellam usura koduthu padam nadichi kodutharu paarunga avara sollanum. panam kodukka otthuka poreengala thalaivar fans?

 8. saranya

  எப்படியோ ஒத்த சிங்காரவேலன் ரஜினி என்கிற சாம்ராஜ்யத்தையே அழிசிட்டான். ரொம்ப சந்தோசம். அதுக்கு ரஜினி பான்ஸ் ஒத்துபோனது ரொம்ப ரொம்ப சந்தோசம். ஜெயலலிதா சாதிக்க முடியாதத, ராமதாஸ் சாதிக்க முடியாதத சிங்காரவேலன் சாதிச்சிட்டான். சாதிக்க வச்சிடீங்க

 9. Anumandhu

  தலைவர் அவர்கள் எப்போதும் பொறுமையாக இருப்பது , மற்றவர்களுக்கு இலக்காரமாகி விட்டது…. பெருந்தன்மைக்கும் ,பதுங்குவதற்கும் வித்தியாசம் தெரியாமல் ஆகிவிட்டது … தலைவர் அவர்கள் கோடி கொடியாக பணத்தை சம்பாதித்து விட்டு அமைதியாகி விடுவார் என அநேகர் பத்திரிகைகளிலும், பல விவாதங்களிலும் அலசுகிறது வேதனையாக இருக்கிறது… இதற்கு முற்று புள்ளியும் முதல் புள்ளியும் தலைவரின் மவ்னம் கலைந்தால் மட்டுமே நடக்கும்… வேதனைகள் தொடர்வது வேதனையாக இருக்கிறது….

 10. robo

  Saryana grow up no one can no one is born to beat thalaivar u mind ur words already we blast u in twitter don’t frgt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *