BREAKING NEWS
Search

‘தமிழ் ரசிகர்கள் உணர்வை மதித்து இலங்கை பயணத்தை ரத்து செய்கிறேன்’ – பாடகர் ஹரிஹரன்!

‘தமிழ் ரசிகர்கள் உணர்வை மதித்து இலங்கை பயணத்தை ரத்து செய்கிறேன்’ – பாடகர் ஹரிஹரன்!

மிழ் ரசிகர்கள் மற்றும் உணர்வாளர்கள் எதிர்ப்பை கருத்தில் கொண்டு கொழும்பில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் பிரபல பாடகர் ஹரிஹரன்.

இலங்கைக்கு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இன்று சனிக்கிழமை பாடகர் ஹரிகரன் செல்வதாக இருந்தார்.

இதனை அறிந்ததும் உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்களிடமிருந்தும், தமிழகத்தில் இருந்தும் பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.

கொட்டும் மழையிலும் அவரது மும்பை வீட்டை தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டு, தமிழர்களுக்குப் பிடித்த பாடகரான ஹரிஹரன், தமிழர் விரோத நாட்டுக்கு பாடச் செல்லக் கூடாது என்று கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து ஹரிஹரன் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உலகம் முழுவதும் அமைதியையும், அன்பையும் பரப்பி வருகிறது எனது இசை. இதில், ஏதாவது ஒரு விதத்தில் எனது ரசிகர்கள் மனது பாதிக்கப்படுமானால் அந்த இசையின் நோக்கத்துக்கே இழப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான் எனது இலங்கை பயணத்தை ரத்து செய்துவிட்டேன்,’ என்று கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்




One thought on “‘தமிழ் ரசிகர்கள் உணர்வை மதித்து இலங்கை பயணத்தை ரத்து செய்கிறேன்’ – பாடகர் ஹரிஹரன்!

  1. Amdan

    இசை நிகழ்ச்சிக்காக இலங்ைகக்கு வருைக தரவிருந்த பாடகர் ஹரிஹரன் இறுதி ேநரத்தில் தனது பயணத்ைத இரத்து செய்து விட்டார்.இதற்கு யார் யாரெல்லாம் காரணம் என்பது குறித்து அலசுவது அல்ல எனது ேநாக்கம்,மாறாக கலைஞர்களையும் தைட செய்யும் சில நபர்கள் இதன் மூலம் என்ன பலாபலனை பெற்றுவிடப்போகிறார்கள் என்பது ெதரியவில்லை. இலங்ைகயில் பலரையும் மகிழ்வித்து அதன் மூலம் புகழையும் பணத்ைதயும் பெற்றுவிடவா ஹரிஹரனின் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது? இல்லை வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்ெகன ஒரு ெதாைக நிதி சேகரிப்புக்ேக இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் உணர்வாளர்களுக்கு மதிப்பு ெகாடுத்து இரசிகர்களின் மனம் ேநாகாமலிருக்க நான் நிகழ்ச்சியை இரத்து செய்து விட்ேடன் என்கின்றார் ஹரிஹரன். ஒரு மக்கள் கூட்டம் சிகிச்சைக்காக பெறவிருந்த பணம் கிைடக்காமல் செய்து விட்ட இவருக்கு அவர்களின் உணர்வுகளும் புரியாமல் போனது அதிசயம். ரோஜா படத்தில் தமிழா தமிழா என்ற பாடலின் மூலம் பிரபலம் பெற்றார் ஹரிஹரன். சினிமாவுக்காக அவர் பாடிய முதல் பாடலும் அது தான். ஒரு பக்கம் தமிழர்கள் வேண்டாம் என்கிறார்கள் மறுபக்கம் அவருக்காக காத்திருக்கிறார்கள் . ஆனால் பணம் வாங்கும் முன்பு இைத ஹரிஹரன் யோசித்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் உணர்வாளர்களே இலங்ைகயின் உண்மை நிலைமையை அறியாது அங்கிருந்து கைதக்காதீர்கள், கலைஞர்கள் வரக்கூடாது ,ரஜினி ,கமல், விஜய், அஜித் இவர்கள் யாரும் வரக்கூடாது ஆனால் அவர்கள் நடித்த திரைப்படங்கள் வரலாம் காரணம் உங்களுக்கு வசூல் தானே வேண்டும் ,அதாவது இங்குள்ள தமிழர்களின் பணம் வேண்டும் ஆனால் இங்குள்ள தமிழர்களுக்ேகா மக்களுக்ேகா உங்கள் கலைஞர்கள் மூலம் கிைடக்கும் பணம் வரக்கூடாது இது தான் உங்கள் தமிழ் உணர்வா? இந்தியாவில் தயாராகும் தமிழ்த்திரைப்படங்களையும் இலங்ைகயில் திரையிடக்கூடாது என கூறும் எந்த தமிழ் உணர்வாளர்களாவது இருக்கிறார்களா? தமிழ் உணர்வு என்றால் என்ன என்று யாராவது விளக்குவார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *