BREAKING NEWS
Search

ரஜினி – லதா… ஒரு உதாரணத் தம்பதியின் 31-வது திருமண நாள் இன்று!

ரஜினி – லதா… ஒரு உதாரணத் தம்பதியின் 31-வது திருமண நாள் இன்று!

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல், முதலில் தெரிவிக்கும் என்வழியில், அதிகம் இடம்பெறாதது .. தலைவரின் திருமண நாள் குறித்த பதிவுகள் மட்டுமே (அறுபதாம் கல்யாண செய்திகள் தனி!).

காரணம், திருமண நாள் என்பது ரஜினி – லதா என்ற தம்பதியரின் மிகத் தனிப்பட்ட விஷயம். அதைப் பொதுவில் பேச / எழுத முற்படும்போது, ஏதோ ஒரு வகையில், எழுதுகிற நானோ கருத்து எழுதும் வாசகர்களோ தெரியாத எதையாவது எழுதி அந்த தம்பதியருக்கு மிகச் சிறிய அளவில் கூட தர்மசங்கடத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்பதே.

இன்னொன்று, திருமணம், குடும்ப வாழ்க்கை போன்றவற்றை தலைவர் மிகவும் பர்சனலாகவே வைத்திருப்பவர். உங்கள் அனைவருக்குமே தெரியும், தனது திருமணத்துக்கு அவர் என்ன நிபந்தனையோடு நிருபர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்பது!

மிக நெருக்கமான நண்பர்கள், சில சொந்தங்களை மட்டும் வைத்து திருப்பதியில் அவர் லதா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

ஏன் இப்படி? என்று கேட்டதற்கு… “இது சம்திங் பர்சனல். கடவுளின் சந்நிதானத்தில் ஆத்மார்த்தமாக நடக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கு மேல் இதைப் பேச வேண்டாமே” என்றாராம்!

இந்த ஆண்டு மட்டும் எழுதக் காரணம் ஒன்று உண்டு. அது வெளிப்படையாக மீடியாவில் தெரிந்ததாலும், குடும்பம் என்ற அமைப்பின் மீதான மரியாதையை இளம் தலைமுறையினருக்கு இன்னும் அதிகப்படுத்த உதவும் என்பதற்காகவும் மட்டுமே, இந்த நினைவூட்டல்.

முன்பே எழுதியது போல, தமிழகத்தில் மிகவும் உதாரண தம்பதிகள் என்றால் அது ரஜினி – லதா தான். இல்லறம் காணும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த இருவரும்தான் சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும். ரசிகர்களுக்கு ரஜினி தலைவர் என்றால்… லதா ரஜினி ‘தலைவி’.

பெற்ற தாய்க்குப் பின் ஒரு ஆண் மகனுக்காக எதையும் செய்யும் அன்பின் உருவம் என்றால், மனைவி மட்டும்தான்.

ரஜினி உடல்நலமின்றி இருந்த அந்த 6 மாதங்கள்… அதைவிட  சோதனையான நாட்கள் ஒரு மனைவிக்கு இருக்க முடியாது. அந்த காலகட்டத்தில் குடும்பத்தை கவனித்துக் கொண்டு, நாடெங்கிலுமிருந்து தன் மீது வந்து விழுந்த கேள்விக் கணைகளை மிகப் பக்குவமாக விலக்கி, கணவரை உடனிருந்து கவனித்து, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குப் போய், அங்கு குவிந்த ரசிகர்களுக்கு பொறுமையாய் பதிலளித்து…. அத்தனை சோதனைகளையும் வெற்றிகரமாக சமாளித்து கணவரை மீண்டும் பழைய தெம்போடு தாய் மண்ணை மிதிக்க வைத்த பெரும் மனத்திடமிக்க மங்கை  திருமதி லதா அவர்கள்.

அவரது நிலையிலிருந்து ஒரு சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தால்தான் அவரது Braveness புரியும்!

ஒரு தமிழ்ப் பெண்ணுக்கே உரிய இயல்போடு தன் கணவர் ரஜினியை மீட்டு வந்த லதா அவர்கள், ரஜினி மீண்டும் பூரண நலத்துடன் வந்ததற்காக, தன் கூந்தலை இறைவனுக்கு நன்றிக் காணிக்கையாக தந்து மகிழ்ந்தவர். அதன் பிறகு அவரைப் பார்க்க நேரும் போதெல்லாம், எனக்குத் தெரிந்த பெண்மணிகள், தாய்மார்கள் “எத்தனை ஆத்மார்த்தமான அன்பு இந்தம்மாவுக்கு…” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ரஜினி -லதா இருவரையும் பார்க்கும் போதெல்லாம், நம் குடும்பத்தில் மிக நெருக்கமான உறவுகளின் அந்நியோன்னியத்தைப் பார்ப்பது போன்ற நிறைவும் மகிழ்வும்தான் பலருக்கும். பல ரசிகர்கள் இதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தாய், தந்தை, அண்ணன், தம்பி ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நேசத்தை வார்த்தையால் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா என்ன!

சில வாரங்களுக்கு முன், என்வழியில் வெளியாகியிருந்த லதா ரஜினியின் புகைப்படத்தைப் பார்த்த ஒரு தாய், தன் மகளிடம் சொன்ன வார்த்தை இது… ஒரு சொல் கூட மிகையில்லாதது: “சினிமா பாக்கணும்னா ரஜினி படம் பாருங்க. வாழ்க்கையில் நல்ல பேரோட குடும்பம் நடத்தணும்னா இந்த லதாம்மாவை பாருங்க… இந்த ரெண்டு பேரையும் மனசுல வெச்சிக்கங்க. குடும்பம் நல்லா இருக்கும்!”

இதற்கு மேல் வேறென்ன சொல்ல…

தலைவர் ரஜினிக்கும் – லதா அம்மாவுக்கும் அனைத்து ரசிகர்களின் சார்பில் இனிய திருமண நாள் வாழ்த்துகள். இந்த வாழ்த்துகள் என்றும் உங்களின் பக்கத் துணையாய் நிற்கும்!

-என்வழி & நண்பர்கள்
11 thoughts on “ரஜினி – லதா… ஒரு உதாரணத் தம்பதியின் 31-வது திருமண நாள் இன்று!

 1. BALA KRISHNAN

  தலைவர் ரஜினிக்கும் – லதா அம்மாவுக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

 2. Simple Fan of Superstar!

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா

 3. குமரன்

  ஆத்மார்த்தமான பதிவு. தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

  /// பெற்ற தாய்க்குப் பின் ஒரு ஆண் மகனுக்காக எதையும் செய்யும் அன்பின் உருவம் என்றால், மனைவி மட்டும்தான். ///

  எத்தனை அருமையான கருத்து. புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிமை.

  ///“சினிமா பாக்கணும்னா ரஜினி படம் பாருங்க. வாழ்க்கையில் நல்ல பேரோட குடும்பம் நடத்தணும்னா இந்த லதாம்மாவை பாருங்க… இந்த ரெண்டு பேரையும் மனசுல வெச்சிக்கங்க. குடும்பம் நல்லா இருக்கும்!”///

  எத்தனை யதார்த்தமான வெளிப்பாடு. ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கி எளிமையாகப் புரியவைக்கும் தாய்.

 4. கணேசன் நா

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா

 5. jhony

  எங்கள் அதிசியபிரவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

 6. venkatesan, nigeria

  இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தலைவா

 7. kumaran

  இன்று போல் பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து எல்லோருக்கும் எடுத்துகாட்டாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

 8. M Senthil

  இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தலைவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *