BREAKING NEWS
Search

திருமதி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்!

திருமதி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி, இளம் தலைமுறைக்கு உதாரண குடும்பத் தலைவியாய் திகழும் லதா ரஜினிக்கு இன்று பிறந்த நாள்.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் லதா.

ஸ்டெல்லா மாரீஸில் எம்ஏ வரை படித்தவர் லதா. கல்லூரியில் படிக்கும்போது தலைவருடன் காதலாகி அவரையே கணவராக ஏற்று,  சிறந்த குடும்பத் தலைவியாகத் திகழ்பவர்.

சினிமாவில் ஒரு பின்னணிப் பாடகியாக தன் கேரியரை ஆரம்பித்தார் லதா ரஜினி.  ஆனால் அவர் பாடிய முதல் பாடல் ரஜினி படத்தில் அல்ல… கமலின் டிக்டிக்டிக் படத்தில், இளையராஜா இசையில் ‘நேற்று இந்த நேரம்…’ எனும் அட்டகாசமான பாடலுடன் தொடங்கினார். அடுத்து அன்புள்ள ரஜினிகாந்தில் கேட்பவரை உருக வைக்கும் ‘கடவுள் உள்ளமே…’ இவரது குரல்தான்.

அதன் பிறகு, பாடுவதை நிறுத்திவிட்ட லதா, கவனத்தை முழுக்க குடும்பத்தைக் கவனிப்பதிலும், ஆஷ்ரம் பள்ளியின் கல்விப் பணிகளிலும் செலுத்த ஆரம்பித்தார்.

இருந்தாலும் அவ்வப்போது மாணவர்களுக்காக தனி ஆல்பங்கள் பாடினார். மாணவர்களிடம் கடவுள் பக்தி, நல்லொழுக்கம், தமிழ் உணர்வை ஊட்டும் பாடல்கள் அவை.

ஆஷ்ரம் பள்ளியின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் இந்த பாடல்களை மாணவர்கள் பாடுவதைக் காணலாம். ரஜினியின் திரையுலக வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் 1999-ல் ரஜினி 25 எனும் ஆல்பத்தையும் உருவாக்கினார்.

இடையில் வள்ளி படத்தில் ‘குக்கூ…’, ‘டிங் டாங்…’ என இரு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தியிருந்தார் லதா ரஜினி (1993). அந்தப் பாடல்கள் அடைந்த வெற்றியால் பல வாய்ப்புகள் அவருக்கு வந்தும், அவற்றை நாசூக்காக மறுத்துவிட்டார். லதா ரஜினி திரையில் பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் இசைஞானிதான் இசை!

தலைவரின் மாவீரன், வள்ளி மற்றும் இப்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள ராணா படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவர் லதா ரஜினி!

“இந்த உலகில் கஷ்டப்படும் அத்தனை குழந்தைகளையும் அரவணைத்து அன்பு செலுத்த வேண்டும் என்பது என் ஆவல். இறைவன் அதற்கான சக்தியை எனக்குத் தரவேண்டும்,” என்பது லதா ரஜினியின் ஆசை. அந்த ஆசை நிறைவேறட்டும்!

இன்று பிறந்த நாள் காணும் திருமதி சூப்பர் ஸ்டாருக்கு ‘என்வழி’யின் வாழ்த்துகள்!

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “திருமதி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்!

  1. Manoharan

    நேற்று இந்த நேரம் ….
    ஆற்றங்கரை ஓரம் ….
    சூப்பர் பாடல் அது.
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்.

  2. K.ANBU PATRISON

    WISH YOU A HAPPY BIRTHDAY MAY GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS

    BY ANBU PATRISON(RAJINIKANTH FAN),MANAPPARAI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *