BREAKING NEWS
Search

இவர் யாரென்று தெரிகிறதா?

இவர் யாரென்று தெரிகிறதா?

rajini

ன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ள படம் இது.

கபாலியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கெட்டப் இதுதான் என்ற தலைப்போடு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது. தன் வேடத்தை தானே செல்ஃபியாக ரஜினி எடுப்பது போன்ற காட்சி இது.

இது கபாலி கெட்டப்பா.. இதுதான் கபாலி ஃபர்ஸ்ட் லுக்கா… இதில் இருப்பவர் ரஜினிதானா? என்ற கேள்விகளோடு ரசிகர்கள் வலைத் தளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் பகிர்ந்து வருகின்றனர் இந்தப் படத்தை.

இது ரஜினிதானா என்ற சந்தேகக் கேள்விக்குக் காரணம், அவரது மீசை. இப்போதுள்ள தோற்றத்தில் ரஜினிக்கு மீசை இந்த மாதிரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர் படத்தின் இயக்குநர் ரஞ்சித்.. இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ!

-என்வழி




One thought on “இவர் யாரென்று தெரிகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *