BREAKING NEWS
Search

‘கிரான்ட் பிராண்ட் ரஜினி’: பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

‘கிரான்ட் பிராண்ட் ரஜினி’: பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

ஜினி எனும் பெயரை சத்தமின்றி பெரிய அளவில் வியாபாரமாக்கி வருகிறார்கள், வர்த்தக உலகில்.

இந்தியாவின் மிகப் பெரிய பிராண்ட் எதுவென்று மேனேஜ்மென்டில் உள்ள யாரைக் கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒருவரது பெயரை உச்சரிப்பார்கள்… அது சூப்பர் ஸ்டார் அல்லது ரஜினி!

வர்த்தக உலகில் முக்கியமான மந்திரம்… பிராண்ட். அதை உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல.

ஒரு நல்ல பிராண்ட் எப்போது மார்க்கெட்டில் அழியாப் புகழ், நம்பகத் தன்மையுடன் நிலைக்கும்?

நேர்மை, நீடித்த பயணம், நிலைத்தன்மை… இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!

சினிமா உலகில் அப்படி ஒரு பிராண்ட் ஆக இன்றைக்குத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனை விளக்கும் வகையில் கிரான்ட் பிராண்ட் ரஜினி எனும் பெயரில் ஒரு புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதனை எழுதியிருப்பவர்கள் பிசி பாலசுப்பிரமணியம் மற்றும் ராம் என் ராமகிருஷ்ணன் ஆகியோர். ரஜினி என்ற கலைஞர் எப்படி இந்தியாவின் இணையற்ற பிரான்ட் ஆகத் திகழ்கிறார் என்பதை அவரது சினிமா வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

இவர்களில் பிசி பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மையப்படுத்தி பஞ்ச் தந்திரம் எனும் பெயரில் புத்தகம் வெளியிட்டு புகழ்பெற்றவர். மாட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொருவர் ராம் என் ராமகிருஷ்ணன் ஒரு ஆடிட்டர்.

இந்தப் புத்தகம் தள்ளுபடி விலையில் ரூ 105-க்கு கிடைக்கிறது!




9 thoughts on “‘கிரான்ட் பிராண்ட் ரஜினி’: பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

  1. srikanth

    வினோ.சார்;இந்த புத்தகம் ,கிடைக்குமிடம் அதன் முகவரி எனக்கு வேண்டும்.தயவு செயிது கூறமுடியுமா?

  2. RAJAN

    ப்ளிப்கர்ட்.கம

    இந்த புத்தகம் ,கிடைக்குமிடம் அதன் முகவரி எனக்கு வேண்டும்.தயவு செயிது கூறமுடியுமா?

  3. veera

    புத்தம் புதிய புத்தகமே உன்னை தொடர்ந்து படிக்கும் ரசிகன் நான் …
    உன் வாழ்க்கை பாடம் படித்து படித்து வாழ்ந்து வரும் ரசிகன் நான்…

  4. sakthi

    Vino sir
    Oru small help!
    Actually nan eppovume vijayai namma thalaivar kuda compare panrathai arave verupavan.
    Ippo sila arivalikaluku thelivaga karanam solla vendi irupathal
    Kojan details thevai.
    Keralavil enthiran recordasai thuppakki beat pannuma?
    First day collection enthiran first day vida athikamnu solranka but it may be reasonable becoz they have relised more screens then than enthiran.
    However i want to know the fact!
    Thank you vino anna!
    Situsillu@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *