BREAKING NEWS
Search

அய்யா… ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்! – தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெத்தியடி பேச்சு

ஆம்… அரசியல் வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் வருகிறேன்! – ரஜினிகாந்த்


சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு ஆளுமைகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று தலைவர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் எம்ஜிஆரின் சிலையைத் திறந்து வைத்து ரஜினிகாந்த் பேசியது:

“ஜெயலலிதா இருக்கும்போது ஏன் வரவில்லை, பயமா? என்று கேட்டார்கள். மறுபடியும் மறுபடியும் 1996- பத்தி நான் சொல்ல விரும்பல. அவர் இருக்கும்போதே, அவருக்கு (ஜெயலலிதா) எதிராக குரல் கொடுத்த எனக்கு, இப்போது ஏன் வரப்போகிறது பயம்? இப்போது அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான். நல்ல தலைமைக்கு வெற்றிடம் இருக்கு.

சக்தி வாய்ந்த இரு தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. இந்தியாவிலேயே அவரைப் போல எந்தஒரு தலைவரும் ஒருகட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியாது. ஒருகட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார் ஜெயலலிதா.

அந்த பக்கம் மரியாதைக்குரிய தலைவர், என் நண்பர் கருணாநிதி. என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை கட்டி காப்பாற்றினார். 13 ஆண்டுகள் மிகுந்த திறமைசாலியான திமுக தலைவர் கருணாநிதியை ஆட்சிக்கே வரவிடாமல் தன் செல்வாக்கால், நல்லாட்சியால் மக்களை தன்பக்கம் வைத்திருந்தார் எம்ஜிஆர். திமுக தலைவர் கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. அவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார்.

தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்.

அய்யா… நம்ம பக்கம் ஆண்டவனே இருக்கிறான்… ஸாரி, இத்தோட நான் நிறுத்திக்கிறேன்… பேசனா நிறைய பேச வேண்டி வரும்,” என்றார்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *