BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாருக்காகக் காத்திருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

சூப்பர் ஸ்டாருக்காகக் காத்திருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

rajini-at-16-vayathinile94

சினிமா என்றல்ல… பல துறையிலும் புகழ் பெருமையைத் தேடி ஓடுபவர்களே அதிகம்.

மிகச் சிலர் மட்டுமே அவற்றைத் தேடி ஓடுவதில்லை. அரிதிலும் அரிதாய் ஓரிருவர் மட்டுமே தேடி வருவதையும் வேண்டாம் என்று சொல்வார்கள்.

இந்த நூற்றாண்டில் அப்படிப்பட்ட அரிய மனிதராகக் காட்சி தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி பெற்ற பெருமைகளைவிட, அவர் வேண்டாம் என்று மறுத்த பெருமைகளே அதிகம்.

இந்தியாவின் ஆஸ்கர் எனப்படும் ஐஃபா விருதினை இருமுறை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் ரஜினி.

அதேபோல, கோவாவில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவைத் துவக்கி வைக்குமாறு கடந்த ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பையும் அவர் அமைதியாக மறுத்துவிட்டார்.

ஆனால் இந்த ஆண்டும் அவர்கள் விடவில்லை. கோவா சர்வதேச திரைப்பட விழாவைத் துவங்கி வைக்க வேண்டும் என்று மீண்டும் ரஜினிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி துவங்குகிறது இந்த விழா. இது குறித்து விழா ஏற்பாட்டாளரான என்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆப் கோவாவின் துணை தலைவர் விஷ்ணு வாக் கூறுகையில், “இந்த ஆண்டும் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம். அவர் தரப்பில் இருந்து ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் இந்த விழாவை துவங்கி வைத்தால் அது இந்த விழாவுக்கே கௌரவம். இந்த மாத இறுதி வரை ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருப்போம்,” என்றார்.

இதெப்டி இருக்கு!

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “சூப்பர் ஸ்டாருக்காகக் காத்திருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

  1. kumaran

    தலைவருக்காக காத்திருப்பது தமிழகமும் தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *