BREAKING NEWS
Search

ரஜினி என்ற ‘ஒரு மனிதரின் அன்புக்காக…’

‘ஒரு மனிதரின் அன்புக்காக…’ ரஜினி பற்றிய டாகுமென்டரி… வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது!

rajnikanth-main

வெனிஸ்: ஒரு மனிதரின் அன்புக்காக… இது சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி உருவாக்கப்பட்ட ஒரு ஆவண திரைப்படம்.

நெதர்லாண்ட்ஸைச் சேர்ந்த ரிங்கு கல்சி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ரஜினி ரசிகர்களைச் சந்தித்து, ரஜினியின் படங்கள் வெளியாகும்போது நிலவும் திருவிழா மனநிலை, கொண்டாட்டங்கள், அதன் பின்னணி, ரஜினி என்ற மனிதர் மீதான அன்புக்காக எதையும் செய்யத் தயங்காத ரசிக மனோபாவம் போன்றவற்றை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரது நண்பர் ஜோயோஜித் பால் இதனைத் தயாரித்துள்ளார்.

rinku

இந்தப் படம் பெருமைக்குரிய 72வது வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி பிற்பகல் மூன்று மணிக்குத் திரையிடப்பட்டது.

பார்வையாளர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மீது மக்கள் வைத்துள்ள அன்பையும், அவர் புகழையும் உலகுக்குச் சொல்லும் விதமாக For The Love Of A Man படம் அமைந்தது.

-என்வழி ஸ்பெஷல்




7 thoughts on “ரஜினி என்ற ‘ஒரு மனிதரின் அன்புக்காக…’

  1. saktheeswaran

    சூப்பர்

    இந்த படத்தை நாம் எப்போது எப்படி பார்க்க முடியும்

  2. Shankar

    உலகின் கடை கோடியில் மனிதர்கள் இருந்தால் அதில் ஒரு ரஜினி ரசிகன் இருப்பான். அது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மக்கள் செல்வாக்கு,.

  3. mohanraj

    தலைவர் ரஜினி என்றால் எங்களுக்கு உயிர் …. இத விட சொல்லுரதற்கு எவ்வலோவ்வோ விஷயம் இருக்கு … சொல்லிகிட்டே போகலாம் …..

    யாரை நாம follow பண்ணுறோமோ அவங்கள மாதிரிதான் நாமளும் இருப்போம் …. எங்க தலைவரோட fans கும் தலைவர் மாதிரி குணம் இருக்கு இது உண்மை …

    தலைவா நீங்கள் எப்போதும் நலமாக இருக்க வேண்டும் …….

    நீங்கள் அரசியல் என்றாலும் நாங்கள் உங்கள் வழியில் ……..

    நீங்கள் ஆன்மிகம் என்றாலும் நாங்கள் உங்கள் வழியில் ……..

    உத்தரவு விடுங்கள் தலைவா கார்த்திருகிறோம் ………

    என்றும் தலைவர் ரஜினி வழியில் ………..

    குருவே சரணம் ..

    மோகன்ராஜ் madurai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *