BREAKING NEWS
Search

அந்நிய முதலீட்டால் சின்ன பாதிப்புதானாம்… சொல்கிறார் பொருளாதார ஜோசியர் ரங்கராஜன்!

அந்நிய முதலீட்டால் சின்ன பாதிப்புதானாம்… சொல்கிறார் பொருளாதார ஜோசியர் ரங்கராஜன்!

டெல்லி: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நமது வணிகர்களுக்கு ரொம்ப சின்ன பாதிப்பு மட்டும்தான் ஏற்படும் என பிரதமரின் பொருளாதார ‘ஜோசியர் குழு’வின் தலைவர் சி.ரங்கராஜன் கூறியிருக்கிறார்.

நடப்பைப் புரிந்து, நிஜத்தை துல்லியமாக சொல்வதுதான் பொருளியல். பொருளியல் நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு அந்தத் திறன் இருந்தாக வேண்டும்.

ஆனால் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களாக இருப்பவர்கள் பரம்பரை ஜோசியக்காரர்கள் போல, வெறும் அனுமானங்களை மட்டுமே சொல்லி வருகின்றனர்.

‘போன ஆண்டு பணவீக்கம் குறைவாக இருந்தது. அதனால் இந்த ஆண்டு கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்த வருஷம் மீண்டும் குறையும்..’ என்று போகிற போக்கில் அடித்து விட்டவர்.. வேறு யாருமல்ல, இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் என்ற பெரும் பதவியில் உள்ள ஜோசியக்காரர் ரங்கராஜன்தான். பொருளியலில் பிஎச்டி பட்டம் பெற்றவர். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக வேறு இருந்தவர்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்துக்கு வடிவம் அமைத்துக் கொடுத்ததில் இவருக்கும் முக்கியப் பங்குண்டு.

இப்போது தனது திட்டத்துக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறார் இந்த பேப்பர் புலி பாருங்கள்…

“சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதால் சிறு வணிகர்களுக்கு மிகச் சிறிய பாதிப்பே ஏற்படும். அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் அமைக்கப்படும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் பெரு நகரங்களில் மட்டுமே இயங்கும். இதனால் சிறு ஊர்களில் இருக்கும் வர்த்தகர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

அமெரிக்காவில் கூட, சிறு வியாபாரிகளின் தொழில் மறைந்து போய் விடவில்லை. சிறு வணிகர்களின் கடைகள் அமைந்துள்ள இடம்தான் அவர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். பெரிய நிறுவனங்களின் அருகில் செயல்படும்போது சிறு வணிகர்கள் மேலும் தீவிரமாகச் செயல்படுவர்.

இப்போதுகூட இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை ஏதுமில்லை. ஆனால் அன்னிய நேரடி முதலீடு எனும்போது வர்த்தகத் தொழிலின் உரிமையாளர்கள் மாறுகின்றனர் என்பதில் மட்டும்தான் வித்தியாசம்.

அன்னிய நேரடி முதலீட்டுடன் தொடங்கும் பெரு வர்த்தக நிறுவனங்கள், சீனாவிலிருந்து விலை குறைவான பொருள்களை இந்திய சந்தையில் குவிக்கும். இதனால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது (கடவுளே கடவுளே.. இந்த நாட்டை இந்த மாதிரி கிழவர்களிடமிருந்து காப்பாத்துப்பா!). இப்போது கூட, சீனாவிலிருந்து பல பொருள்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் உள்ளூர் தொழில் பாதிக்கவில்லையே!”

-என்வழி செய்திகள்




2 thoughts on “அந்நிய முதலீட்டால் சின்ன பாதிப்புதானாம்… சொல்கிறார் பொருளாதார ஜோசியர் ரங்கராஜன்!

  1. saravanan

    இதைத்தான் கடைசியில் கருணாநிதியும் சொல்லப்போகிறார். ஆனால் என்வழியில் செய்தி வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *