BREAKING NEWS
Search

இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!!

இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!!

450px-India_population_increase

டெல்லி: இந்தியாவில் விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 21 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்கள் தொகையில், விவசாயிகள் எண்ணிக்கை மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, பாராளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

1.3.2011 நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும். 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர்.

நகர்புற மக்கள் தொகையில் அதிகம் பேர் (97.5 சதவீதம்) டெல்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர்.

விவசாயிகள் எண்ணிக்கை இந்த 10 ஆண்டுகளில் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்கள் தொகை மற்றும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

-என்வழி செய்திகள்




One thought on “இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!!

  1. குமரன்

    காலப் போக்கில் பழைய இயந்திரங்களை உடைத்துத் திருதான் உயிர் வாழவேண்டுமா?

    ” ‘மழை’ என்று தாளில் எழுதிப் பிழிந்தால் தண்ணீர் வராது” என்று ஸ்ரீ ராமகிருஷ்ணப் பரமஹம்சர் சொன்னது உண்மை என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ?

    ஆறுகள் வறண்டு பாலைவனமாகவும், விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறினால், எத்தைத் தின்றால் பசி ஆறும்?

    விவசாயிக்கு போதிய வருமானம் தரும் படி வழிவகுத்த சமுதாயம்தான் பிழைக்கும் என்பதை மக்கள் எப்போது உணர்வார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *