BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாருடன் ரசிகர்கள்… பரவச தருணங்கள் புகைப்படங்களாய்!

சூப்பர் ஸ்டாருடன் ரசிகர்கள்… பரவச தருணங்கள் புகைப்படங்களாய்!

Nam-thalaivar-rajini-2

சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்பது ரசிகர்களின் வாழ்நாள் கனவு. அது புகைப்படமாக வந்துவிட்டால் அதைவிட பரவசம் அவர்களுக்கு வேறொன்றும் இல்லை.

லிங்கா படம் கடந்த மே மாதம் தொடங்கியது. வசனக் காட்சி பகுதிகள் முடிந்து, இன்னும் இரு பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மட்டும் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 6 மாத காலப் படப்பிடிப்பு.

ரசிகர்கள் பலருக்கும் நினைவிருக்கலாம்.. இந்தப் படத்துக்கு சூப்பர் ஸ்டார் வெறுமனே 30 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்துள்ளார் என சிலர் எழுதினர். ரஜினியின் உடல்நிலை காரணமாக அவர் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க மாட்டார் என்றார்கள்.

ஆனால் அவரோ அனைத்து செய்திகளையும் பொய்யாக்கும் வகையில், 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பில் பங்கேற்றார். ரிஸ்க்கான சண்டைக் காட்சிகளில் மாற்று ஆள் உதவியின்றி அவரே நடித்துக் கொடுத்தார்.

இந்த படப்பிடிப்பு நடந்த நாட்களில் முடிந்தவரை அவர் ரசிகர்களைச் சந்தித்தார். அப்படி சந்திக்க முடியாத நாட்களில் ரசிகர்கள் அவருக்காகக் காத்திருந்தனர்.

அதுவும் எப்படி… சென்னை, கோவை, நெல்லை, திருச்சி, பெங்களூர் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஷிமோகா சென்ற ரசிகர்கள் ரஜினியைப் பார்க்க 5 நாட்கள் வரை காத்திருந்தார்கள். விஷயம் கேள்விப்பட்டு, அனைவரையும் ரஜினி வரச் சொல்ல, அந்த சந்திப்பு நிகழ்வே ஒரு திருவிழா மாதிரி அமைந்தது.

அதன் பிறகு பல ரசிகர்கள் அவர் ஹைதராபாதில் இருந்தாலும் சரி, கர்நாடகத்தில் இருந்தாலும் சரி, தேடிப் போய் தவமிருந்து அவரை தரிசிப்பது இன்னும் தொடர்கிறது.

அப்படி நடந்த சந்திப்புகளின் சில பதிவுகள் இங்கே…

-என்வழி




3 thoughts on “சூப்பர் ஸ்டாருடன் ரசிகர்கள்… பரவச தருணங்கள் புகைப்படங்களாய்!

  1. குமரன்

    ஒரே நாளில் லிங்கா படத்து டப்பிங் முழுவதும் பேசி முடித்து விட்டாராமே! அவரது டயலாக் டெலிவரி வேகம் என்றால் டப்பிங் அதை விடவும் வேகம்!!

  2. gopinath

    rajini sir ah oru muraiyavadhu en life la parkanum.ht ena seiyanum nu therila.avarai parkanum na

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *