BREAKING NEWS
Search

கோச்சடையான் வெளியீடு… திரையரங்குகளில் திருவிழா கோலம்… உற்சாகக் கொண்டாட்டங்கள்!

கோச்சடையான் வெளியீடு… திரையரங்குதோறும் திருவிழா கோலம்… உற்சாகக் கொண்டாட்டங்கள்!

உலகில் எந்த நடிகருக்காவது இந்த சிறப்பு உண்டா..? - ஒசூர் பாலாஜி அரங்கில்...

உலகில் எந்த நடிகருக்காவது இந்த சிறப்பு உண்டா..? – ஒசூர் பாலாஜி அரங்கில்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் வெளியாகிறது என்றால்… முன்பு தமிழகத்தில்தான் அது திருவிழா மாதிரி இருந்தது. ஆனால் இப்போது உலகம் முழுக்கவே அந்தப் பரபரப்பும் உற்சாகவும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

‘தலைவர் படம்… முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்… நமக்கெல்லாம் இன்னிக்குதான் தீபாவளி என்பது,’ போன்ற வார்த்தைகளை இப்போது தமிழகம் தாண்டி பல இடங்களிலும் பார்க்க முடிகிறது.

இன்று தலைவர் படங்களைக் கொண்டாடுவதில், அவரது தீவிர ரசிகர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த மத்திய தர வயதுக்காரர்களைவிட, பதின்ம வயது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதை உணர முடிகிறது.

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கோச்சடையான் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தினர் ரஜினி ரசிகர்கள்.

கோச்சடையானுக்காக இமய மலையில் உள்ள பாபா குகைக்கே போய் தியானம் செய்தனர் அவரது முரட்டு பக்தர்கள் என்பது நினைவிருக்கலாம்.

நெல்லை உவரியிலிருந்து ஒரு புனித தீபச்சுடரை சென்னை வரை எடுத்துவந்து நேற்று மாலை உதயம் திரையரங்க வாசலில் லதா ரஜினியிடம் தந்தனர் ரசிகர்கள்.

காசி தியேட்டர் முன்...

காசி தியேட்டர் முன்…

இன்னும் ஒரு குழு, கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டம் என்ற பெயரில் நான்கு நாட்கள் பல மாவட்டங்களில் ஓடி மக்களுக்கு இயற்கை வளங்களைக் காக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்தது.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, படம் வெளியாகும் இன்று அத்தனை திரையரங்குகளும் ரஜினியின் கட் அவுட், தோரணங்கள், பேனர்களால் ஜொலிக்கின்றன.

சிறப்புப் பூஜை.. .நெல்லை

சிறப்புப் பூஜை.. .நெல்லை

எந்தத் திரையரங்குக்குப் போனாலும், அங்கு ஒரு திருவிழா களைகட்டியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ரஜினி என்ற மாபெரும் கலைஞனுக்கு மக்கள் அனைவருமே ரசிகர்கள்தான் என்பதை உணர்த்தும் நிகழ்வாக கோச்சடையான் வெளியீடு அமைந்துள்ளது.

-என்வழி ஸ்பெஷல்




4 thoughts on “கோச்சடையான் வெளியீடு… திரையரங்குகளில் திருவிழா கோலம்… உற்சாகக் கொண்டாட்டங்கள்!

  1. Rajagopalan

    Seen the movie at 7 AM in Mayajal…
    Movie is good…Initial thought was whether the movie will be to much cartoon like stuff…
    But the movie is gr8…All can enjoy…
    Within Short Span of Time & budget, Kochadayan team had done the job neatly…
    Simple story… easy to understand… awesome dialogues to the core…… great war sequences… Good imagination from Soundarya.. particularly the war sequences…
    In the climax Thodarum Displayed… May be Rana in the offering based on the response to this movie…
    Good Family movie…
    But dont expect like Avatar….For Indian standards its really a great attempt & the whole team had passed successfuly…
    Hats off… Andavan epodhume thalaivan pakkam…

  2. Rajagopalan

    When thalaivar says Parthaya Engal Natin Radha Gaja Thuradha Padadhigalai in his magical voice, we are getting goose bumps…

    Thalaiva Edhu unnal Matume seya mudiyum…

  3. srikanth1974

    தலைவர் படமென்றால் அதுத் திருவிழா மட்டுமல்ல
    பெருவிழாவும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *