BREAKING NEWS
Search

Exclusive: திப்பு சுல்தானாக நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Exclusive: திப்பு சுல்தானாக நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

rajini-kheny

சோக் கெனியை நினைவிருக்கலாம். தொழிலதிபர், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர். இப்போது திரைப்படத் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

கன்னடத்தில் அர்ஜூனை வைத்து பிரசாத் என்ற அருமையான வெற்றிப் படம் தந்தார். இப்போது நானே பாரி நீனு என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.

இவரது அடுத்த படம்… இந்தியத் திரையுலகின் கனவுப் படமாக மாறும் வாய்ப்பு அதிகம்.

மாவீரன் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் மிகப் பெரிய முயற்சியில் இறங்கியுள்ளார். திப்பு சுல்தானாக நடிக்கப் போகிறவர்.. வேறு யார்.. நம்ம தலைவர் ரஜினிதான்!

இந்தப் படம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியிடம் பேசியிருக்கிறார் அசோக் கெனி. ஆனால் அப்போது ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால், விஷயத்தை தள்ளிப் போட்டுவிட்டார்.

இப்போது ரஜினியை வைத்து அந்தப் படத்தை எடுக்கும் முயற்சியில் உள்ளார்.

இதுகுறித்து அசோக் கூறுகையில், “திப்பு சுல்தானின் பெருமைகளில் பல இன்னும் உலகறியாதது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிடங்டனுக்கு கப்பல்களைப் பரிசாகத் தந்த பெருமைக்குரியவன் திப்பு சுல்தான். இந்தக் காட்சியில் ரஜினி நடித்து, அது உலகெங்கும் திரையிடப்பட்டால் திப்புவுக்கும் அவன் ஆண்ட இந்த மண்ணுக்கும் எத்தனைப் பெருமை சேரும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பரவசமாக உள்ளது.

இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் ரஜினியைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன். ராஜமவுலி மாதிரி ஒரு படைப்பாளி இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமையும் என்ற நம்பிக்கையுடன் படத்தின் முன் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளேன்,” என்றார்.

வாரே வா… நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதே… நல்லபடியாக நடக்கட்டும்!

என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “Exclusive: திப்பு சுல்தானாக நடிக்கப் போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

  1. Anandh

    நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறதே…
    இது கண்டிப்பா நடக்கணும்

  2. anbudan ravi

    வேண்டாம் திப்பு சுல்தான்….. ஆங்கிலேய ஆட்சிக்கி எதிர்ப்பு போன்ற சில சிறப்புகள் இருந்தாலும், ஆந்திரா மற்றும் கேரளாவில் திப்பு சுல்தானின் எதிர்ப்பாளர்கள் அதிகம். முக்கியமாக மத மாற்றத்திற்காக திப்பு செய்த காரியங்கள் மிகவும் கொடுமை. ஆயிரக்கணக்கானவர்களை கை கால்களை வெட்டி கண்களை குருடுகலாக்கிய கொடுமைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

    சுருக்கமாக சொன்னால், படத்துக்கு எதிராக சில மத குழுக்கள் படத்திற்கு எதிராக கிளம்ப கூடும்……தயவு செய்து திப்பு சுல்தான் கதையில் தலைவர் நடிக்க வேண்டாம்.

    அன்புடன் ரவி.

  3. Rajagopalan

    This news came before Rana itself…
    But i dont think so it will work out.
    Also Endhiran 2 in pipeline.
    As of now lets enjoy only BALI…KABALI…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *