BREAKING NEWS
Search

Exclusive 2: இதோ லிங்காவின் பெரும் சாதனை… ரூ 165 கோடிக்கு ஈராஸ் வாங்கியது… இந்தியாவில் இந்த விலைக்கு விற்கப்பட்ட முதல் படம்!

Exclusive: இதோ லிங்காவின் பெரும் சாதனை… ரூ 165 கோடிக்கு ஈராஸ் வாங்கியது… இந்தியாவில் இந்த விலைக்கு விற்கப்பட்ட முதல் படம்!

10369116_617029438419056_2269902981544403656_n

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கும் லிங்கா படத்தை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ் நிறுவனம்.

தலைவர் ரஜினியின் ஒவ்வொரு படமும் இந்திய சினிமாவின் சாதனையாகத் திகழ்கின்றன.

பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என அனைத்துமே இந்திய சினிமாவை உலக அளவுக்கு எடுத்துச் சென்றன.

இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் மக்களைக் கவர்ந்ததிலும், வசூல் சாதனையிலும் தன்னிகரில்லாதவை. எவரும் கற்பனை செய்யக்கூட முடியாத சாதனைகளைப் படைத்தவை. தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் வர்த்தகத்தில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவை.

வெறும் கார்ட்டூன் படம் என்று கிண்டலடிக்கப்பட்ட கோச்சடையான் வசூலித்த தொகை ரூ 211 கோடி என்றால், ரஜினியின் வீச்சு என்னவென்று புரிந்திருக்கும்.

இப்போது பழைய சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் விதத்தில் லிங்காவின் விற்பனை அமைந்துள்ளது. இந்தப் படத்தின் உரிமையை ரூ 165 கோடி கொடுத்துப் பெற்றுள்ளது ஈராஸ் நிறுவனம்.

இந்திய சினிமா வரலாற்றில் எந்தப் படமும் இந்த விலைக்கு விற்கப்பட்டதில்லை.

இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம் என்ற முதலிடத்தில் உள்ள எந்திரன் கூட, அதன் தயாரிப்பாளர்களால் சொந்தமாக வெளியிடப்பட்டது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் மட்டுமே மற்றவர்களால் வெளியிடப்பட்டது. ஆமீர்கான், ஷாரூக்கான் படங்களின் நிலையும் இதேதான்.

முதல்முறையாக இந்தியப் படம் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அளவு அரங்குகளில் வெளியிட ஈராஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடுகளில் லிங்காவை வெளியிடும் உரிமை ஈராஸின் கூட்டாளியான அய்ங்கரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

-என்வழி எக்ஸ்க்ளூசிவ்




12 thoughts on “Exclusive 2: இதோ லிங்காவின் பெரும் சாதனை… ரூ 165 கோடிக்கு ஈராஸ் வாங்கியது… இந்தியாவில் இந்த விலைக்கு விற்கப்பட்ட முதல் படம்!

  1. Elango

    இது ரஜினி வீட்டுக்கு …நாட்டுக்கு 🙁 ?????
    எல்லோரும் …குறிப்பாக இளைஞர்கள் …வெறும் நடிகர்களின் பின்னால் போவதை விட்டுவிட்டு …இனிமேல் அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முற்படுங்கள்! தமிழகத்தில் இதுவரை அமையாத அற்புதமான சூழ்நிலை அமைந்துள்ளது …மாற்றத்தை கொண்டு வாருங்கள்!

    தமிழக மக்கள் மற்ற மாநிலங்களை போல மாற்றம் கண்டு இனியாவது …முனேற்ற பாதையில் செல்லட்டும்!

  2. ramesh

    இது தான் தலைவர் சாதனை பட்டியல் ஆரம்பம்………கணக்கு காட்டியர்வர்கள் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்கள்….உங்கள் பட மொத்த வசூல் …தலைவரின் முதல் நாள் வசூல்……….இது தான் டா தலைவர் சாதனை…………ரஜினி என் உயிர்………………என் கடவுள்………………என் அம்மா அப்பா பிறகு என் தலைவர்……….

  3. குமரன்

    அடடா….

    ரிலீசுக்கு முன்னாலேயே 165 கோடி வசூலா!

    இப்படியே போனா, எப்படிப்பா தனது அடுத்த பட வெளியீட்டில் விஜய் கும்பல் பொய் சொல்லறது?

  4. மிஸ்டர் பாவலன்

    இளங்கோ கேள்வி: //இது ரஜினி வீட்டுக்கு …நாட்டுக்கு 🙁 ?????///

    இளங்கோ அவர்களே.. இது அரசியல் இணைய தளம் அல்ல.. ரஜினி
    ரசிகர்கள் அவருக்கு எழுப்பியுள்ள இணைய தளம்.. இதில் ரஜினி படங்களுக்கு
    தான் focus ! அதனால் “ரஜினி நாட்டுக்கு என்ன செய்தார், இந்தப் படத்தால்
    நாட்டுக்கு என்ன நன்மை?” இது போன்ற கேள்விகள் இங்கே அனாவசியம்!
    விருப்பம் இருந்தால் இங்கே படியுங்கள்..விருப்பம் இல்லை என்றால்
    விட்டு விடுங்கள்! ரஜினியோ அவர் ரசிகர்களோ அரசியலுக்கு கேப்டன்
    போல வர வேண்டும் என எந்த நிர்பந்தமும் இல்லை.. நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  5. purush

    பொதுவாக ரஜினி ரசிகர்களுக்கு இருக்கும் meaturity மற்ற ரசிகர்களுக்கு இல்லை. இது என் கறுத்து.

  6. sbsrinivasan

    இளைஞர்கள் சினிமாகாரன் பின்னால் போவதை நிறுத்துகிறானே அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *