BREAKING NEWS
Search

லிங்காவுக்கு அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகள்

லிங்காவுக்கு அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகள்

B2j8YwjCEAAVBcW.jpg large

சூப்பர் ஸ்டார் ஜினியின் லிங்கா படத்தை அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகளில் திரையிடப் போவதாக படத்தை வெளி்யிடும் க்ளாஸிக் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

லிங்கா படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது இந்த நிறுவனம்.

இந்தப் படத்தை ஐமேக்ஸ் மற்றம் டால்பி அட்மோஸ் திரைகளிலும் வெளியிடப் போவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வட அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகளில் லிங்காவின் தமிழ்ப் பதிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக க்ளாஸிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை எந்த தமிழ்ப் படமும் அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் இந்திப் பதிப்புகளும் வெளியாகவுள்ளன.

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் பட வரிசையில் ரஜினியின் எந்திரனும் சிவாஜியும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-என்வழி




4 thoughts on “லிங்காவுக்கு அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகள்

  1. kumaran

    TRAILER , மற்றும் சாங் டீசெர் பற்றிய உங்கள் விமர்சனம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  2. V Ranganathan

    இதில் புதிதாக ஆச்சர்ய பட ஒன்றுமே இல்லை, தலைவரை பொறுத்த வரை எல்லாவற்றிலும் முதல், முதல் முதல்தான். தலைவரின் ரசிகன் என்ற சிறகில் மேலும் ஒரு இறகு சேர்ந்திருகிறது நமக்கு.

  3. குமரன்

    அண்மைக் காலமாக பெருமளவில் இந்தியர்கள், தமிழர்கள் உலகெங்கும், குறிப்பாக அமெரிக்காவில் குடியமர்ந்து வருவதால் 1000 திரையரங்கு என்ற இலக்கை விரைவில் எட்டிவிடக்கூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *