BREAKING NEWS
Search

காலத்தை வென்ற தோற்றம்.. நட்பு!

காலத்தை வென்ற தோற்றம்.. நட்பு!

 thalaivar-amitabh

ங்கே நீங்கள் பார்ப்பது எந்திரன் மற்றும் கோச்சடையான் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சாதனையாளர் அமிதாப் பச்சனும் பங்கேற்ற காட்சி.

இந்த இரு விழாக்களுக்கும் இடைவெளி 4 ஆண்டுகள். 2010-ல் எந்திரன் இசை வெளியீடு மும்பையில் நடந்தது. இதே அமிதாப்தான் சிறப்பு விருந்தினர். மனசார, இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார்.. நிஜ சூப்பர் ஸ்டார் என் சகோதரர் ரஜினி’ என்று வாழ்த்தினார்.

நான்காண்டுகள்.. எத்தனையோ மாற்றங்கள், நிகழ்வுகள் கடந்து சென்றுவிட்டன. இந்த இரு உண்மையான நண்பர்களின் தோற்றம், நட்பு அப்படியே நிலைக்கிறது. மீண்டும் 2014-ல் கோச்சடையானுக்காக அதே மும்பையில் மேடையேறினர். எந்திரன் நிகழ்ச்சியின் போது பார்த்ததுபோலத்தான் இருவரும் தோன்றினர். முன்னைவிட இன்னும் ஆழமான நட்பை, அன்பின் வெளிப்பாட்டைப் பார்க்க முடிந்தது.

கோச்சடையான் திரைப்படம் இந்திய சினிமா சரித்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வு என்று வர்ணித்த அமிதாப், இந்தப் படம் திரையரங்குகளை ஆளும் என்று நச்சென்று வாழ்த்தினார்.

சாதனையாளர்கள், நல்ல இதயங்களின் வாழ்த்துகளுக்கு உள்ள சக்தி மகத்தானது!

என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “காலத்தை வென்ற தோற்றம்.. நட்பு!

  1. Rajagopalan

    Please upload details about Kochadaiyaan games…It is already a very big hit in Android Market…

    Also last week Kumkumam has got a special photo of our thalaivar…School Photo…
    Please upload that too…Nobody will beleive its Rajini. Amazing photo…

    Its a humble request…

  2. srikanth1974

    நல்ல நண்பர்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம்.
    நம் அன்புத் தலைவருக்கு இந்த பாக்கியம் எப்போதும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *