சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது!! – ஈராஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது!! – ஈராஸ் அறிவிப்பு

lingaa2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் லிங்காவை வாங்கியுள்ள ஈராஸ் நிறுவனம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

லிங்காவை ஈராஸ் ரூ 165 கோடிக்கு வாங்கியதை முதல்முறையாக அறிவித்தது என்வழிதான் என்பது நினைவிருக்கும். சனிக்கிழமை இரவே இந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். அறிக்கை வந்தது திங்கள் மாலைதான்!

அறிக்கையில், ‘லிங்கா’ படத்தின் அனைத்து உலக விநியோக உரிமைகளையும் தாம் வாங்கியுள்ளதையும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தாமே படத்தை வெளியிடப் போவதையும் ஈராஸ் குறிப்பிட்டுள்ளது. மூன்று மொழிகளிலும் இசை வெளியீடு உரிமைகளையும் ஈராஸ் நிறுவனமே பெற்று இருக்கிறது.

இசை வெளியீடு

‘லிங்கா’ படத்தின் தமிழ், தெலுங்கு இசை வெளியீட்டு விழா வருகிற 16–தேதி சென்னையில் நடக்கிறது.

இந்த விழாவில் திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

சுனில் லுல்லா

இதுகுறித்து ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் எங்கள் நிறுவனம் பெருமைகொள்கிறது. எந்திரன் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்து வெளியாகும் மிகச்சிறந்த நேரடி பொழுதுபோக்கு திரைப்படமாக இது அமையும்.

ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் இந்த படத்துக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,” என்றார்.

10339715_305034813035788_4461762915088770126_n

ராக்லைன் வெங்கடேஷ்

‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, “லிங்கா’ படத்தினை வெளியிட உலகின் முன்னணி ஸ்டூடியோக்களில் ஒன்றான ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஈராஸ் நிறுவனம் உலகளாவிய நிறுவனம் என்பதால் இத்திரைப்படம் உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மை மக்களை சென்றடையும்,” என்றார்.

-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *