BREAKING NEWS
Search

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்… நான்கு நாட்கள் நடக்கிறது!

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்.. நான்கு நாட்கள் நடக்கிறது!

10359095_318730171615514_5424854393016682998_o

ஜினியின் கோச்சடையான் படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்..

மே 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடக்கும் இந்த ஓட்டத்தில் ரஜினியின் ரசிகர்கள் திரளாகப் பங்கெடுத்துள்ளனர்.

1613898_318810308274167_3785591988550927488_n

புவியைக் காக்க மரங்களைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த தொடர் ஓட்டம் நடக்கிறது.

‘மரங்களை நடுவோம்.. இயற்கையைப் பராமரிப்போம்’ என்ற கோஷத்தை முழக்கியபடி இந்த ஓட்டத்தை முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள்.

10389671_319036481584883_8885810992436974325_n

கோச்சடையான் வரும் மே 23-ம் தேதி உலகெங்கும் 6000 அரங்குகளில் வெளியாகிறது. ஒரு பக்கம் சமூக விழிப்புணர்வு, இன்னொரு பக்கம் படத்துக்கான விளம்பரம் என்பதால், இந்த பசுமைத் தொடர் ஓட்டத்தை சீரியசாக நடத்துகிறது ஈராஸ் நிறுவனம்.

என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *