BREAKING NEWS
Search

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

pongal-gift

ன்று தமிழர் திருநாள். தமிழருக்கென்று தனி அடையாளமாகத் திகழும் தைப் புத்தாண்டின் முதல்நாள்.

தமிழர் தங்கள் வாழ்வில் அதிக நாட்கள் கொண்டாடும் திருவிழா இந்த பொங்கல் மட்டும்தான்!

ஆனால் அடையாளங்கள் வேக வேகமாக தொலைந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கவலையைவிட பிரதானமாக முன் நிற்பது தமிழர் விவசாயம் பாழ்பட்டுக் கிடப்பது.

இயற்கை மழையில் வஞ்சிக்கிறது… பக்கத்து மாநிலங்கள் நீரைத் தடுத்து வஞ்சிக்கின்றன… சொந்த மாநிலமோ அடிப்படை மின்சாரத்தைத் தரக்கூட வழியின்றி, உழவர்கள் 100 ரூபாய்க்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளி, உழவர் திருநாள் கொண்டாட வைக்கிறது!

இது அறுவடைத் திருநாள். ஆனால் நிஜம் என்ன தெரியுமா… ஒரு சில மாவட்டங்கள் அல்லது பகுதிகளைத் தவிர வேறெங்கும் அறுவடையே இல்லை!!

வாழ்த்து என்பது வாழ்க்கையில் இல்லாமல், வழக்கத்துக்காக மாறிவிட்டதே என்ற வருத்தம்தான் இந்த முறை கிராமங்களைப் பார்த்தபோது மேலோங்கி நிற்கிறது.

மிச்ச நாளில் உழவை தொழிலாகக் கொள்ள வேண்டும் என்ற பலரது கனவு கனவாகவே போய்விடுமோ!

-வினோ

ஆசிரியர்

என்வழி.காம்
6 thoughts on “அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

 1. kumaran

  அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துக்கள்.

 2. srikanth

  அனைத்து என் வழி இணையத்தள நண்பர்களுக்கும்,எனது
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  என்றும் அன்புடன்
  ப.ஸ்ரீகாந்த்.

 3. enkaruthu

  அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள். நண்பர்களே ஆடுவோமே பள்ளி பாடுவோமே இதுதான் உண்மையான தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுவோமே.

 4. தினகர்

  மின்சாரத்திற்காக அணை நீரை திறந்து விட்ட பாவம்; தாமிரபரணி தரணியில் நெல் விவசாயம் இல்லாமல் வானம் பார்த்த பூமியாகிவிட்ட அவலம்… .பல் தலைமுறைகள் கடந்து, மீண்டும் ஒரு பசுமை இல்லாத பொங்கல் …

  அருமை விவசாய சொந்தங்களே நம்பிக்கை இழக்காமல் கடமையை செய்வோம். பலனை ஆண்டவன் கொடுப்பார். ஒரு மகசூலை இழந்ததற்கு ஈடாக அடுத்த மகசூலில் அள்ளிக்கொடுக்க ஆண்டவன் அருள் புரிவாராக..

 5. குமரன்

  அன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

  மழை இல்லை, மழை இல்லாததால் ஏரிப்பாசனம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீரும் குறைகின்றது. மின்சாரம் சரிவர இல்லாமல் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் தடைகள். இவைபோக நகரங்களுக்கு அருகாமையில் (பெரு நகரங்களுக்குத் தொலைவில் இருக்கும் நிலங்கள் கூட) உள்ள நிலங்கள் வணிகப் பயன்பாட்டுக்கு – அதாவது தொழில் சாலைகளுக்கும், வீட்டுமனைகள் என்ற பெயரில் “speculative” நோக்கத்துடன் “முதலீடு” (investment) முடக்கப் படுகின்றன.

  ஆற்று மணலைச் சுரண்டி விற்கும் கூட்டமும், அவர்களிடம் லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் அரசியல், அதிகார வர்க்கம் கொழிக்கின்றன. ஆறுகளை மாசுபடுத்தி தொழில் செய்து ஆறுகளையே கொல்லும் சாயப்பட்டறை அதிபர்கள் அரசு ஆவன செய்யவேண்டும் என்று போராட்டமே நடத்தும் அளவுக்குத் தரம் தாழ்ந்த சமுதாயம். நொய்யல் செத்துவிட்டது. பவானியும், அமராவதியும், சிறுவாணியும் சிறுகச் சிறுகச் சாகின்றன. பாலாறு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கிறது. “வைகை கடலில் கலக்காத நதி” என்று சொல்லும் அளவுக்கு மக்கள் வைகை கடலில் கலக்கும் இடத்தையே மறந்து விட்டனர்! “வை கை” என்று நகைச் சுவை வேறு!

  மலைப் புறம்போக்கில் ஆக்கிரமித்து வீடு கட்டி பட்டாவும் கேட்கிறார்கள், அரசியல்வாதிகளும் அவர்களது ஓட்டுக்காக அவர்களிடம் பல் இளிக்கிறார்கள்.

  காலப் போக்கில் அறுவடைக்கு நிலங்கள் இருப்பது ஆண்டவன் – இல்லை, “ஆள்பவர்” – விட்ட வழி! (இந்த இடத்தில் “ஆண்டவன்” என்பதை “இதற்கு முன்னால் ஆட்சி செய்தவன்” என்ற பொருளிலும் படிக்கலாம்!!

  இந்த லட்சணத்தில் “எப்படியாவது பொங்கல் திருநாளைப் புத்தாண்டு என்று புரட்டி விட்டால், அறுவடையை மொத்தமாக மறந்து விடலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில்” காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு கலைஞரும் அவரது டி.வியும் மட்டும் புத்தாண்டு என்று பிரச்சாரம் செய்கின்றனர். அவரது குடும்பத்து சன் டி.வி. கூட பொங்கல் மட்டும் கொண்டாடுகிறது !!

  கருணாநிதியைப் பொறுத்த மட்டில் “அறுவடை” என்பது – தேர்தலில் வாக்குக்களும், தேர்தலுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தால் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதும் மட்டுமே என்று ஆகிப் போன நிலை!

  மரங்களை அதிகம் நட்டு காடுகளைப் பெருக்கி, பாதுகாத்து, சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, மாற்றுப் பயிர்களையும், மாற்று மின்சக்தித் திறன்களையும் நாடி நாட்டை வளப் படுத்தும் சிந்தனையே இல்லாத அரசியல்வாதிகளிடம் நல்லதை எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.

 6. malar

  உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *