BREAKING NEWS
Search

கூடங்குளம் போராட்டம்… வாசக நண்பர்களின் கருத்துகளும் சில விளக்கங்களும்!

கூடங்குளம் போராட்டம்… வாசக நண்பர்களின் கருத்துகளும் சில விளக்கங்களும்! -கேள்வி பதில் பகுதி -29

ண்பர்களே,

இங்கே கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தி மற்றும் கட்டுரைகள் தொடர்பாக நமது நண்பர்கள் சிலர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, ஆசிரியர் என்ற முறையில் நான் அளித்த பதில்களைத் தொகுத்திருக்கிறேன். இவற்றில் சிலவற்றை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கக் கூடும்… இருந்தாலும் சில நண்பர்கள் மின்னஞ்சலில் தெரிவித்திருந்த கருத்துக்களையும் இதில் சேர்த்துள்ளேன்.

இதை வாக்குவாதமாக அல்லாமல், எண்ணப் பரிமாற்றமாகவே எடுத்துக் கொள்ளலாம். நன்றி.

கருத்து -1

த்திய அமைச்சர் நாராயணசாமி இந்த நடவடிக்கைகள் போதாது, இன்னும் கடுமையாக நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று நேற்றைய பெட்டியில் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளுக்கு உதயகுமாரே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். ஆக மத்திய அரசின் அழுத்தம் இந்த விஷயத்தில் மாநில அரசை ரொம்பவே பாதித்துள்ளது. ஆனால் ஒன்று, போராட்டக்காரர்கள் இரண்டு தவறு செய்திருக்கிறார்கள். ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, இரண்டு – அணு உலைக்கு மிக அருகாமையில் செல்ல முயன்றது. அவர்கள் இந்த இரண்டையும் தவிர்த்திருக்க வேண்டும். நம் நாட்டின் பிரதமரே இவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து நிதி வருகிறது என்று சொன்ன பிறகு, இதற்கு ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகிறது. இதையும் அவர்கள் இல்லை என்று நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார்கள்.

-கிருஷ்ணா

ந்த விஷயத்தில் பிரதமர் கொஞ்சமும் பொறுப்பின்றி வாய்க்கு வந்ததை உளறினார். நாராயணசாமியையும் மிஞ்சினார் என்பதுதானே உண்மை. பிரதமர் சொன்ன குற்றச்சாட்டுக்கு இன்று வரை ஒரு சின்ன ஆதாரமாவது கொடுக்க முடிந்ததா? பிரதமரே குற்றம்சாட்டிய பிறகும் சட்டம் சும்மாதானே இருந்தது. காரணம் உதயகுமார் மீதும், இந்தப் போராட்டம் மீதும் மத்திய மாநில அரசுகள் சுசாமி தினமலங்கள் சொல்லும் புகார்கள் அத்தனையும் பொய்யானவை என்பதுதான்!

உதயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா!


கருத்து 2

துதான் உதய குமாரின் அற வழி போராட்டமா? அதையும் கொஞ்சம் சிந்தியுங்கள்…

-செந்தில்பாபு

தயகுமாரும் போராட்டக்காரர்களுமா கல்லெடுத்து வீசினார்கள்…? துப்பாக்கி சூடு நடத்தினார்கள்…? அப்பாவிகளை கடலுக்குள் தள்ளி கண்ணீர்புகை குண்டடித்தார்கள்?

உதயகுமார் போராட்டம் அறவழியில்தானே அமைந்தது. கொட்டும் பனி, நடுங்கும் குளிரில் இரவெல்லாம் அமைதியாக கடல்மணலில் காத்திருந்தார்களே… அந்த அறவழியின் கனம் தாங்காமல் அவர்கள் மீது வன்முறையை கொடூரமாக ஏவியது அரசுதானே… தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எப்போதும் ஏறுக்கு மாறாகவே யோசிக்கிறார்கள்? மக்களை விட அணுஉலைக்காக வெளிநாட்டுக்காரனிடம் வாங்கிய கமிஷன் பெரிதாகப் போய்விட்டதே… கடந்த இரண்டு நாட்களும் நடந்தது உங்களுக்கு தெரியவில்லையா… வேற்றுக்கிரகத்திலா இருந்தீர்கள்?!

கருத்து -2

ன்னிக்கவும்… நான் இங்குதான் இருந்தேன். அனால் அற வழி போராட்டம் என்பது இது அல்ல என்பதை தான் நான் சொல்ல வருகிறேன்… எந்த அற வழி போராட்டத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது ? குழந்தைகளையும் பெண்களையும் கொண்டு வந்து நிறுத்தியதை நீங்கள் நியாயப்படுத்த பார்த்தாலும் எனக்கு அது ஏற்ப்புடையது அல்ல.

-செந்தில்பாபு

வேற்றுக் கிரகத்தில் இருந்தீர்களா என்று உங்களைக் கேட்டது இதற்காகத்தான். அங்கே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட பெருமை முழுக்க போலீசுக்கே. இந்தப் போராட்டத்தைக் கலைக்க தவறான தகவல்கள், மிரட்டல்களைப் பிரயோகித்து அந்த மக்களை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்து, அது முடியாத நிலையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மெத்தப் படித்து, அரசு வேலையில் கையும் பையும் நிறையும் அளவுக்கு சம்பாதிக்கும் இவர்களே பக்குவமாக நடந்து கொள்ளாத நிலையில், தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்க போராடும் அந்த மக்கள் என்னதான் செய்ய வேண்டும். மறு கன்னத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறீர்களா?

இந்தப் போராட்டம் கண்ணுக்கு மறைவாக நடக்கவில்லை செந்தில். அங்கே நமக்கென்று ஒரு செய்தியாளர் இருக்கிறார். போதுமான புகைப்பட ஆதாரங்களைத் தந்திருக்கிறார். வன்முறையை முதலில் முன்னெடுத்தவர்கள் போலீசார்தான். இன்னொன்று, அவர்கள் எப்படியெல்லாம் ஒரு வன்முறையை உருவாக்குவார்கள் என்பதை 1996-ல் திருவல்லிக்கேணி பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்திலிருந்து நேரில் பார்த்த அனுபவம் நமக்குண்டு!

கருத்து – 3

டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி இந்த கூடங்குளம் போராட்டத்தை நடத்தி வரும் உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று அறிவுரை செய்து வருகிறார். Times Now Channel-ன் News hour show-விலும் சுவாமி இதே கருத்தை சொன்னார். வெளிநாட்டு உதவியுடன் இந்த போராட்டம் நடந்து வருவாதான பிரதமர் கருத்தையும் டாக்டர் சுவாமி சுட்டிக் காட்டினார். நேற்று போராட்டம் நடந்த போது, உதயகுமார் ஓட்டம் எடுத்ததாக தினமலர் நாளேடு தகவல் வெளியிட்டிருந்தது!

-மிஸ்டர் பாவலன்

ரு பேச்சுக்காகக் கூட இப்போதைய சுப்பிரமணிய சாமி, தினமலர் போன்றவர்களுக்கு ஆதரவாக கருத்து எழுதாதீர்கள் ‘மிஸ்டர் பாவலன்’. இவர்களை ஆதரிப்பது ஒரு சக மனிதனாக நமக்குத்தான் அவமானம். நச்சுகளின் பிறப்பிடம், பிளாக்மெயிலின் உச்சம், தமிழகத்தின் இன்றைய சாபக்கேடுகளில் முதன்மையானவை இந்த இரண்டும்!

இன்றைய நிகழ்வுகளைப் பார்த்தபின், தினமலர் எத்தனை கேடுகெட்ட பொய்யைப் பரப்பி வருகிறது என்பது உங்களுப் புரிந்திருக்கும். பத்திரிகையாளர்கள் யாரும் தினமலரை விமர்சிக்கமாட்டார்கள். எனக்கு அப்படி எதுவும் இல்லை. தவறை யார் செய்தாலும் தவறுதான்!

டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்களுக்கு சுசாமியின் யோக்கியதை நன்கு தெரியும். ஆனால் வெற்றுப் பரபரப்பும்  டிஆர்பியும்தான் அவர்கள் ஒரே இலக்கு. இதுவே வடக்கில் எங்காவது நடந்திருந்தால், அவர்கள் மக்கள் பக்கம் நின்று பரபரப்பாக செய்தி படிப்பார்கள். தமிழகத்தை வட இந்திய சேனல்கள் அத்தனையும் ஏதோ பாகிஸ்தான் மாதிரிதானே பார்க்கின்றன!


கருத்து 3

போராட்டக் களத்தில் பெண்களும் குழந்தைகளும் எதற்கு… இது ஒருவிதமான மிரட்டல்தானே?

-ராஜேஷ் வி

வீட்டில் வேலையாள் வைத்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் அளவு வசதி படைத்த மக்கள் அல்ல அந்த மீனவர்கள். குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு தங்கள் வேலைகளைக் கவனிக்கும் உழைப்பாளிகள். ஒட்டு மொத்த குடும்பமே போராட்டக் களத்தில் இருக்கும்போது, குழந்தைகள் மட்டும் எங்கே போவார்கள்?

ஒரு ஆலகால விஷத்தினும் கொடிய ஒன்றிற்காக சொந்த மக்களையே நசுக்கி அழிக்கிறோமே என்ற உணர்வின்றி செயல்படும் போலீசை, அவர்களின் செயல்களைப் பார்த்துக் கொண்டு கள்ளமவுனம் சாதிக்கும் மாநில அரசையே நீங்கள் குற்றம் சாட்ட வேண்டும்.  நியாயமாக அரசு செய்ய வேண்டிய வேலையை கிராம மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.


கருத்து -4

ஜெவின் நடவடிக்கை சரியே , உதயகுமாரை முதலிலேயே கைது செய்திருக்கவேண்டும்.

//அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அவர்களை பலிகடா ஆக்கியதுதான் மிச்சம். சிறுவர் சிறுமியை கொண்டு யாரவது போராட்டம் நடத்துவார்களா?//

மின்சாரம் வேண்டும்…ஆனால் கூடங்குளத்தில் வேண்டாம். வினோவின் ஒருதலை பட்சமான இதுபோன்ற கட்டுரைகள் வெறுப்பை உண்டாக்குகிறது. நீங்கள் எழுதவேண்டியது உதயகுமாரை போன்றவர்களை கண்டித்துதான்!

பல மாதங்களாக பொறுத்த பிறகுதான் இப்படியோரு போலீஸ் நடவடிக்கை. எடுத்த விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம் நடவடிக்கை தவறு இல்லை.

-சோழன்

ங்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். காரணம் பாதிக்கப் போவது நீங்கள் அல்ல. நாம் நேரடியாக பாதிக்காத வரை, எதைப் பற்றியும் அக்கறை கொள்ளமாட்டோம். அதுபற்றி தொடர்ந்து பேசினால் வெறுப்பு வந்துவிடும்.

ஒருகாலத்தில் பட்டாசுகளில் கூட ஆட்டம் பாம் வெடிக்கணும் என்ற ஆர்வம் நிறைந்த பருவத்தில் அணு குண்டுகள் – சண்டைகள் மீது ஆர்வம் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அணு உலைகள் மனித இனத்தின் சாபக்கேடு என்பது புரிந்திருக்கிறது பலருக்கும். நம்மைப் பொறுத்தவரை, கூடங்குளம் என்றல்ல… எங்குமே அணு உலை வேண்டாம் என்பதே நிலைப்பாடு. இன்னொரு முக்கிய விஷயம்… அணுஉலைகள் மின்சாரம் தயாரிப்பதில் தோற்றுப் போனவை.

1984-ம் ஆண்டிலிருந்து இயங்கும் கல்பாக்கம் அணு உலைகளின் மொத்த மின் உற்பத்தித் திறனே வெறும் 440 மெகாவாட்ஸ். ஆனால் அதைக்கூட முழுசாக உற்பத்தி பண்ண முடியவில்லை. இன்றுவரை முதல் அணு உலையில் 120 மெகா வாட்டும், இரண்டாம் அணு உலையில் 80 மெகாவாட்டும்தான் உற்பத்தி செய்கிறார்கள். மின்னிழப்பு போக, நிகரமாக கிடைக்கும் மின்சாரம் வெறும் 150 மெகாவாட்தான். இது இன்று RTI மூலம் பெறப்பட்ட தகவல். சென்னை நகர மின்தேவையே 300 மெகாவாட்டுக்கு மேல் என்பது உங்களுக்கு தெரியுமா?

அணுஉலைகள் நிறுவப்படுவதன் பின்னணி வேறு. கேவலம் ஒரு பட்டாசுத் தொழிற்சாலையை பாதுகாப்பாக நடத்தத் துப்பில்லாத இந்த நாட்டுக்கு, அதிகபட்ச ஆபத்தான அணுஉலை ஒரு கேடா? 28 ஆண்டுகளாக கல்பாக்கம் அணு உலை பரப்பி வரும் எலும்பு புற்றுநோயைக் காட்டி போராட்டம் நடத்தியபோது அந்த உலை வாயைத் திறக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆமாம்… அரிய வகை புற்றுநோயான BONE CANCER-காரணமாக அணுஉலை தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளது. இதுபோன்ற கொடிய கதிரியக்கத் தாக்க நோய்களால் கல்பாக்கம் பகுதியில் இறந்தவர்கள் எண்ணிக்கை பல நூறுக்கும் மேல். சந்தேகமிருந்தால் சென்னை பொது மருத்துவமனை மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக நின்று அடுத்த தலைமுறைகள் வாழப் போராடும் உதயகுமாரை, இடிந்த கரை மக்களை சொகுசாக உட்கார்ந்து கொண்டு ‘எவன் செத்தாலும் என் வீட்டில் விளக்கெரியணும்’ என்ற நினைப்பு கொண்டவர்கள் கண்டிக்கவே செய்வார்கள். கூடங்குளத்தின் ‘பலன்’ இன்னும் சில ஆண்டுகளில் பல்லிளிக்கும்போது, அதன் பாதிப்பு தெரியாத இடத்தில் ஓடிப் போய் பதுங்கிக் கொண்டிருப்பார்கள் உங்களைப் போன்றவர்கள்.

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் அணுக் கதிர் பாதிப்பு…

கருத்து -5

யற்கையின் இருப்பு குறைந்து கொண்டே செல்லும் இந்த நேரத்தில் அணுமின்சாரம்தானே ஒரே வழி… ஏன் அதை போராட்டக்காரர்கள் புரிந்து கொள்வதில்லை?

-தனபால்

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் ஆதிமூலம் நீர். அந்த வளம் தமிழ்நாட்டில் குறைந்திருக்கலாம். ஆனால் மற்ற அனைத்து மாநிலங்களிலும் உபரியாகத்தான் நீர் கிடைக்கிறது. மகாநதியிலும் கோதாவரியிலும் ஆண்டுக்கு எத்தனை ட்ரில்லியன் கன அடி நீர் வீணாகிறது தெரியுமா? ஏன் சொல்கிறேன் என்றால், நதி நீர் இணைப்புக்கு முதன்முதலில் தேர்வான நதிகள் இவைதான். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக அந்தத் திட்டத்தை கிடப்பில் வைத்திருக்கிறார்கள். இது ஒன்றை மட்டும் சரியாக நிறைவேற்றி, தென்னக நதிகளுடன் கலக்க வைத்தாலே கூடங்குளத்தில் உற்பத்தி செய்வதைப் போல 20 மடங்கு அதிக மின் உற்பத்தியும், பல லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதியும் பெறும்.

ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இது ஒரு சாம்பிள்தான். இதைப் போல பல மாற்று வழிகளில் அபரிமிதமான மின் உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது. மோடியைப் பிடிக்கிறதோ இல்லையோ… அவரது அரசு மின்சார உற்பத்தியில் செய்திருக்கும் சாதனை ஒவ்வொரு மாநில அரசுக்கும் பாடம்.

ஆனால் வெளிநாடுகளின் நிர்பந்தத்துக்கு பணிந்து கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதம் காட்டுகிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கேற்ப தாளம்போடுகிறது ஜெயலலிதாவின் அரசும்!

கருத்து -6

ருணாநிதி மட்டும் யோக்கியமா.. அவரும் இந்த விஷயத்தில் மக்கள் விரோதமாகத்தானே நடந்து கொள்கிறார்? ஆனால் அதுபற்றி நீங்கள் எழுதவே இல்லையே!

-அயூப்

ம்… திமுக தலைவர் கருணாநிதி மட்டுமல்ல, அவர் ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கண்ணை மூடிக் கொண்டு அவரை ஆதரிக்கும் திக தலைவர் வீரமணி உள்ளிட்டோரும் மக்கள் விரோதிகளே. இதில் மாற்றுக் கருத்தில்லை.

காங்கிரஸ் தலைமையிலான அரசில் பங்கில்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் கூடங்குளம் போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பார் கருணாநிதி!

கருத்து -7

தயகுமார் மீது தவறு இருந்தால், ஒரு நிமிடம் கூட இந்த போராட்டக் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாது. அழித்து நசுக்கியிருப்பார்கள் என்பதை, யோசிக்கத் தெரிந்த அனைவருமே உணரவேண்டாமா!//

-இது அன்னா ஹசாரே, கேஜ்ரிவால் போன்றோருக்கும் பொருந்தும் தானே….central govt tried by all means to create a bad impression on Anna team…..why didn’t it crush them yet if Anna team has done anything wrong?

-குமார்

ஸாரே, கேஜ்ரிவால் போன்றோர் மீது இதுபோன்ற வன்முறை ஏவப்பட்டிருந்தால், அந்த இயக்கம் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஊழல் எதிர்ப்பை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் அதன் பின்னணியில் உள்ள ஹஸாரே குழுவின் அரசியலும், ஊழலும்தான் அவர்களை இன்று களத்திலிருந்தே விரட்டியிருக்கிறது. ஆனால் அணுஉலைக்கெதிரான போரில் களத்தில் இருப்பது ஏழை மக்கள், மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தையும் சந்ததியையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள்.

அணுஉலைப் போராட்டம் வாழ்க்கைப் பிரச்சினை… உண்மையிருக்கிறது. ஹஸாரே குழுவின் ஊழல் ஒழிப்பில் அரசியல் மட்டுமே இருக்கிறது.. உண்மை இல்லை. அதுதான் பிரச்சினை!

 

முத்திரைக் கருத்து

ண்பர் குமரனின் இரு கருத்துக்களை இந்தப் பரிமாற்றத்தின் முத்திரைப் பகுதியாக இங்கே தருகிறோம்.

/// ஒன்று – பெண்களையும் குழந்தைகளையும் அங்கு அழைத்து வந்தது, ///

நல்ல வேளை போராட்டக்காரர்களே அழைத்து வரப்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டு எழ வில்லை!

போராட்டத்தின் நோக்கம் பிறிதொரு நாளில் நிகழக் கூடிய உயிர்ப் பலியையும், உடல் உபாதைகளையும் தவிர்ப்பது ஆகும். அப்படி மீறி நிகழும்போது பெண்களும் குழந்தைகளும் கூட பாதிக்கப்படுவார்கள் என்பதுதானே உண்மை.

இதென்ன பண்டைய காலத்துப் பாரத முறைப்படியான போரா? பெண்களும் குழந்தைகளும் பாதிக்காமல் போர் புரியும் நெறி இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது, அதனால்தான் இந்தியா அடிமைப் பட்டது.

போராட்டத்தின் நோக்கம் உயிர்ப் பழியைத் தடுப்பதும், உடல் உபாதைகளைத் தடுப்பதும் என்னும்போது பாதிப்புக்கு ஆளாகக் கூடிய போராட்டம் நடக்கும் கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். அவர்கள் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் அற்றவர்கள் என்பதை இதுவே உறுதியாகச் சாட்சி கூறும் அல்லவா?

///அணு உலையை ஆரம்பத்திலேயே எதிர்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்கவே வந்திருக்காதே. ///

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து இந்தியாவும் ரஷியாவும் அணு மின் சக்தி உற்பத்திக்கான கூட்டணி குறித்துப் பேசி வந்தன.

ராஜீவ் காந்தி ரஷியாவுடனான கூடங்குளம் திட்டத்துக்கான உடன்பாட்டை 1988 -இல் செய்தார். அப்போது தமிழ்நாட்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி என்று நினைக்கிறேன்.

ஆரம்பத்திலேயே அதுவும் சட்ட மன்றத்திலேயே – 1989 இல் – இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் எதிர்த்தன. அப்போது திமுக ஆட்சி.

தொடர்ந்து எதிர்ப்பு இருந்துதான் வந்திருக்கிறது. இப்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

//புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்./// (செந்தில்குமார்)

அவர்களும் உச்சநீதி மன்றம் வரை பார்த்தாகி விட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்கள் பக்கம் இல்லை. தீர்ப்பு அப்படித்தான் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

ஆயிரக் கணக்கான கோடிகளின் மீது இருக்கும் பிரமிப்பு ஆயிரக்கணக்கான உயிர்களின் மீது இருப்பதில்லை!! இது வேதனையான உண்மை. இதனால்தான் ஈழத்து உயிர் இழப்பை விட கட்சி அபிமானம் பலருக்கு முக்கியமாகி விட்டது.

அரசு போலீஸ் மூலம் செய்யும் வன்முறை மக்களை தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.

இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குறித்த பிரகடனத்தில் எடுத்த எடுப்பிலேயே பின்வருமாறு அறிவிக்கிறது:

Whereas recognition of the inherent dignity and of the equal and inalienable rights of all members of the human family is the foundation of freedom, justice and peace in the world,

Whereas disregard and contempt for human rights have resulted in barbarous acts which have outraged the conscience of mankind, and the advent of a world in which human beings shall enjoy freedom of speech and belief and freedom from fear and want has been proclaimed as the highest aspiration of the common people,

Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law.

அதாவது மனித உரிமை மீறல்களால்தான் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடந்து அவற்றால் மனிதகுலத்தின் மனச்சாட்சி கண்மூடித்தனமாகச் சிதைக்கப் படுகிறது.

மனிதன் தனது இறுதி வாய்ப்பாக அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராகக் கிளர்ந்து (ஆயுதம், வன்முறை ஆகியவை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை) எழாமல் இருக்க வேண்டுமானால் மனித உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும்.

இதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வு அமைதியானதாக இருக்கிறது. வன்முறையால் தீர்வு தேடும் நிலைக்கு மக்களை அரசு தள்ளக் கூடாது என்கிறோம்.

-வினோ
என்வழி ஸ்பெஷல்
21 thoughts on “கூடங்குளம் போராட்டம்… வாசக நண்பர்களின் கருத்துகளும் சில விளக்கங்களும்!

 1. anbudan ravi

  எனது எண்ணம் இப்போதைக்கி இதுதான்…..விரைவில் உதயகுமார் அவர்கள் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பார்…அடுத்து கூட்டணி மற்றும் பேரம் ஆகியவை வெகு ஜோராக நடக்கும்…தவறு ஒன்றும் இல்லை…. ஆனால் கூடங்குளம் மறக்கப்பட்டுவிடும். வாழ்த்துக்கள்.

  அன்புடன் ரவி.

 2. குமரன்

  வினோ,

  நீங்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் அற்பணிப்பு உணர்வோடு, ஈடுபாட்டோடு இருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

  இந்தப் பிரசினை என்றில்லை எந்த விஷயத்தையுமே மனிதாபிமானத்தோடு அணுகினால் கிடைக்கும் விளைவு அபரிமிதமான மகிழ்ச்சியையும், அசைக்க முடியாத நிம்மதியையும், அமைதியையும் கொடுக்கும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிந்து கொண்டால் அதுதான் நல்ல அரசாக அமையும். அதற்கு நம் மக்கள் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே தயார் செய்து கொள்ளவேண்டும். மனிதாபிமானம் இல்லாத மக்கள் தேர்ந்தெடுப்பவர்கள் மட்டும் மனிதாபிமானத்தோடு இருந்து விடுவார்களா என்ன?

  “இதை வாக்குவாதமாக அல்லாமல், எண்ணப் பரிமாற்றமாகவே எடுத்துக் கொள்ளலாம்” ….
  என்று சொல்லி இருப்பது முத்தாய்ப்பான கருத்து. என்வழியில் பொதுவாகவே நாம் பரிமாறி வரும் கருத்துக்களை அனைவருமே எல்லா விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் அவா. நிச்சயம் நம் அன்பர்கள் இதை ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

  நிற்க,

  சுப்பிரமணியம் சுவாமியும் தினமலரும் இந்த நாட்டுக்கு சேவை செய்தவர்களே, செய்பவர்களே. ஒவ்வொருவராலும் ஒரு நன்மை ஒரு தீமை உண்டு. தினமலர் பிளாக் மெயில் செய்வதாக எனக்குத் தோன்றவில்லை. சுவாமி மீது அவரது விமரிசகர்கள் சிலர் மட்டுமே அப்படி ஒரு குற்றச்சாட்டை மறைமுகமாக (நேரடியாக அல்ல) வைக்கிறார்கள். சுவாமி எத்தனையோ ஊழல்களைப் பகிரங்கமாக்கி இருக்கிறார். ஜெயா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மூல காரணம் அவரே. 1991 -96 இல் ஜெயாவின் ஊழலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயா ஆட்சிக்காலத்திலேயே தன்னிடம் உள்ள வெறும் லெட்டர் பேட் கட்சியை வைத்தே நடத்தியவர். எமேர்ஜென்சிக்காலத்தில் அவரது தைரியம் மிக்க நடவடிக்கைகள் அனைவரும் அறிந்ததே. தினமலர் நிறுவனர் ராமசுப்பு அவர்கள் கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். தற்போதைய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் ஆராய்ச்சிகள் நமது மொழியின், பாரம்பரியத்தின் தொன்மைக்கு ஆதார பூர்வமான சான்றுகளை வழங்கியுள்ளன. அவர்கள் தற்போது சில பிரசினைகளில் எடுக்கும் நிலைப்பாடு படிக்காததால் அவர்கள் சாபக்கேடு ஆகிவிடமுடியாதல்லவா? ஜன நாயகத்தில் பலவிதமான சிந்தனை உடையவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
  ________________

  என் பதிலில் ஒரு வார்த்தை சேர்க்க மறந்துவிட்டேன். அது இப்போதைய தினமலர், சுசாமி! எம்ஜிஆர் கால தினமலரை நான் இப்போதும் குற்றம் சொல்லவில்லை.

  -வினோ

 3. குமரன்

  என்வழியில் பொதுவாகவே நாம் கருத்துப் பரிமாறி வரும் பொது மேற்கூறிய வழிமுறையை அனைவருமே எல்லா விஷயத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் அவா. நிச்சயம் நம் அன்பர்கள் இதை ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

  என்று படிக்கவும், பிழைக்குப் பொறுத்தருள்க.

 4. குமரன்

  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ராஜீவ் காந்தி எடுத்த எந்த நடவடிக்கையும் பெரும் பிரசினைகளைத்தான் விளைவித்திருக்கின்றன.

  போபார்ஸ் பீரங்கி வாங்கியது.
  கூடங்குளம் உடன்படிக்கை போட்டது.
  இந்தியா-இலக்கை ஒப்பந்தம் போட்டது.

  (இல்லாளாக சோனியாவைத் தேர்ந்தெடுத்தது – என்று நான் சொல்லவில்லை!)

 5. senthilbabu

  மன்னிக்கவும்… நான் இங்குதான் இருந்தேன். அனால் அற வழி போராட்டம் என்பது இது அல்ல என்பதை தான் நான் சொல்ல வருகிறேன்… எந்த அற வழி போராட்டத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது ? குழந்தைகளையும் பெண்களையும் கொண்டு வந்து நிறுத்தியதை நீங்கள் நியாயப்படுத்த பார்த்தாலும் எனக்கு அது ஏற்ப்புடையது அல்ல.
  ______________________

  வேற்றுக் கிரகத்தில் இருந்தீர்களா என்று உங்களைக் கேட்டது இதற்காகத்தான். அங்கே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட பெருமை முழுக்க போலீசுக்கே. இந்தப் போராட்டத்தைக் கலைக்க தவறான தகவல்கள், மிரட்டல்களைப் பிரயோகித்து அந்த உழைக்கும் வர்க்கத்தை மிரட்டிப் பணிய வைக்கப் பார்த்து, அது முடியாத நிலையில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மெத்தப் படித்து, அரசு வேலையில் கையும் பையும் நிறையும் அளவுக்கு சம்பாதிக்கும் இவர்களே பக்குவமாக நடந்து கொள்ளாத நிலையில், தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்க போராடும் அந்த மக்கள் என்னதான் செய்ய வேண்டும். மறு கன்னத்தைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? இந்தப் போராட்டம் கண்ணுக்கு மறைவாக நடக்கவில்லை செந்தில்.

  அங்கே நமக்கென்று ஒரு செய்தியாளர் இருக்கிறார். போதுமான புகைப்பட ஆதாரங்களைத் தந்திருக்கிறார். வன்முறையை முதலில் முன்னெடுத்தவர்கள் போலீசார்தான். இன்னொன்று, அவர்கள் எப்படியெல்லாம் ஒரு வன்முறையை உருவாக்குவார்கள் என்பதை 1996 பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்திலிருந்து நேரில் பார்த்த அனுபவம் நமக்குண்டு!

  -வினோ

 6. தினகர்

  இங்கே கருத்து கூறியவர்களில் குமரன் தவிர, அனைவருமே அரசு செயலை நியாயப்படுத்தியும், போராட்டக்காரர்களை குற்றவாளிகளாகவும் பார்ப்பது தெரிகிறது.

  இவர்களில் எத்தனை பேருக்கு ‘ கிராமம்’ என்றால் என்ன?, அங்கே மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று கொஞ்சமாவது தெரியுமா?

  அவசரம் என்றால் ஊர் கோயில், சர்ச்களில் மணி அடிப்பார்கள், நண்டு சிண்டு உட்பட ஊரே திரண்டுவிடும். இது தான் கிராமம். என்னமோ போர்க்களத்திற்கு குழந்தைகளை கூட்ட்டிட்டு போனது மாதிரி பேசும் மேதாவிகளுக்கு இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்கள் பற்றி எள்ளளவும் தெரியாதது வருத்தமான விஷயம்.

 7. குமரன்

  அன்பர் செந்தில்பாபு அவர்களே

  ஒரு உதாரணமாகக் கடந்த ஒரு வாரத்தில் இந்தப் போராட்டத்தில் போராட்டக் காரர்கள் எந்த பஸ்சுக்குத் தீ வைத்தார்கள்? எந்த போலீஸ் நிலையத்துக்குத் தீ வைத்தார்கள்? உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் நிலையத்தையே தீ வைத்துக் கொளுத்தியவர்களில் எவர் மீது பெயர் குறிப்பிட்டு வழக்குப் பதியப்பட்டது? எவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளானார்கள்? சட்டம் சாதாரண/ ஏழை மக்கள் என்றால் அவர்களை வெறுமே மணல் வாரித்தூர்ரியதர்காக வன்முறையாளர் என்று பட்டம் கட்டிவிடும் என்றால் சட்டத்தை யார் மதிப்பார்கள்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கூட ஒரு எஸ். சியும் ஒரு கான்ஸ்டபிளும் கொல்லப் பட்டனர். இங்கே அடித்தும் பயந்து கடலுக்குள்தானே ஓடினர்?

  வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை மாறத்தானே ஜனநாயகம், அரசியல் நிர்ணயச்சட்டம் உள்ளிட்ட ஏனைய சட்டங்கள், அரசு, ஐ.பி.எஸ். ஐ.எ.எஸ் எல்லாம்?

  நாட்டின் கடைசி நிலையிலும் விளிம்பு நிலையிலும் உள்ளவனும், அன்டில்லா போன்ற பல அடுக்குப் பல நட்சத்திர அரண்மனை கட்டும் அளவுக்கு பணம் பெருத்த அம்பானிகளும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் வகை செய்வது அரசின் முழு முதற் கடமை அல்லவா? அதற்குத்தானே ஜன நாயகமும், சட்டங்களும்?

 8. palPalani

  திரு உதயகுமார் அவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 2010 ஜப்பான் அணு உலை வெடிப்புக்கு பிறகு, அவருக்கு மக்கள் ஆதவு பெருகியது.

  ஞானி போன்ற எழுத்தாளர்கள், வைகோ போன்ற சில அரசியல்வாதிகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுதியும், சிறு/பெரும் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

  ரஷ்யாவின் அணு உலை என்பதற்காகவே கம்யுனிஸ்டுகள் இதை ஆதரிப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. Except கேரளா.

  இன்னும் நடிகர்கள் ஆதவு தெரிவிக்கவில்லை என்பதற்காக இது தவறான போராட்டம் கிடையாது.

 9. Manoharan

  உலகில் வேறு எந்த இடத்திலும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அணு மின் நிலையம் இல்லை என்று ஒரு செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன். இது உண்மையா…?
  ___________
  உண்மைதான்.
  -Vino

 10. மு. செந்தில் குமார்

  இந்த கட்டுரை அணு உலை சார்ந்த பல்வேறு விஷயங்களை பல்வேறு கோணத்தில் பலருடைய சந்தேகங்களுக்கு தெளிவான பதிலாக அமைந்ததோடல்லாமல் வாசகர்களுக்கு இது சார்ந்த நல்ல புரிதலை ஏற்படுத்தும்படியாக வந்திருக்கிறது.

  போரட்டகரர்கள்
  //புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்./// (செந்தில்குமார்)

  என்ற பொருளில் பதிவு செய்ததுபோல் – விளக்கம் அளித்துள்ளீர்கள்.

  அரசு
  /புத்தி சாதுர்யத்தால் செய்ய வேண்டியதை, இயலாமையால் வன்முறையால் செய்து இருக்கிறார்கள்./// (செந்தில்குமார்)

  என்ற பொருளில் பதிவு செய்திருந்தேன்.
  ——————————-
  இங்கே கருத்து கூறியவர்களில் குமரன் தவிர, அனைவருமே அரசு செயலை நியாயப்படுத்தியும், போராட்டக்காரர்களை குற்றவாளிகளாகவும் பார்ப்பது தெரிகிறது.-திரு.தினகர்

  => என்பதிவை படிக்க தவறி இருக்கலாம்.

 11. மு. செந்தில் குமார்

  “இதை வாக்குவாதமாக அல்லாமல், எண்ணப் பரிமாற்றமாகவே எடுத்துக் கொள்ளலாம்” ….

  நம் தளத்தில் பதிவுசெயபவர்களில் பல நண்பர்கள் மிக்க அறிவோடு இருக்கிறார்கள் என்பது அவர்கள் பதிவில் தெரிந்துகொள்ள முடிகிறது. இது என்னை போன்ற மற்றவர்களுக்கு புதிய செய்தியாக – அறிவாக – புதிய கோணத்திலான புரிந்துகொள்ளளாக அமையும்.

  ஒரு கட்டுரை வாசகரை பாதிக்கிரபொழுது / உணர்வு கொள்ள செய்கிறபொழுதுதான் தன் எண்ணத்தை பதிவு செய்ய முனைகிறார்

  உணர்வு இருக்கும்போது வாக்குவாதம் இருக்கும் / இருக்கத்தான் செய்யும் வாக்குவாதம் இருக்கும்பொது எண்ணம் பரிமாற்றப்படும்.

  பதிவுகளில் பயன் படுத்தப்படுகிற வார்த்தைகள் அவரவர் பக்குவத்தை பொறுத்துதான் அமையும்.

  உணர்வை – அறிவை பக்குவமான வார்த்தைகளில் பதிவுசெய்கிற நண்பர்கள் பலர் இத்தளத்தின் வாசகர்களாக இருப்பதால் பிறரின் பதிவும் இந்த பாதையை நோக்கியே மாறும் என்பது எனது நம்பிக்கை.

 12. குமரன்

  //// பதிவுகளில் பயன் படுத்தப்படுகிற வார்த்தைகள் அவரவர் பக்குவத்தை பொறுத்துதான் அமையும்.

  உணர்வை – அறிவை பக்குவமான வார்த்தைகளில் பதிவுசெய்கிற நண்பர்கள் பலர் இத்தளத்தின் வாசகர்களாக இருப்பதால் பிறரின் பதிவும் இந்த பாதையை நோக்கியே மாறும் என்பது எனது நம்பிக்கை.////

  வெகு அருமையாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறீர்கள். இதுவே தான் எனது கருத்தும் நம்பிக்கையும் கூட.

 13. senthilbabu

  The total number of fatalities, directly or indirectly, due to a Nuclear power plant meltdown, from 1960-2011, across the globe, is FIFTY plus.
  YES, 50 + IN ALL. AND THIS INCLUDES CHERNOBYL AND FUKUSHIMA.
  another information : In 1975 in Banqiao, Shimantan , China 2, 30, 000 peoples killed by hydro electric dam failure. shall we stop all our hydro projects? இது கதை அல்ல…
  see the following link.
  http://www.world-nuclear.org/info/inf06app.html
  அப்பாவி மக்களை மூளை சலவை செய்யும் கூட்டத்தின் நோக்கம் நிச்சயமாக அவர்கள் மீதான அக்கறை அல்ல…..
  ________________________

  விபத்துக்கள் இல்லாத உற்பத்தி முறை இல்லை. ஆனால் அந்த விபத்தின் பாதிப்பு தலைமுறை தலைமுறையாய் தொடர்வது அணுக் கதிர் வீச்சினால் மட்டுமே.

  என்னமோ நீங்கள் மட்டும்தான் புத்திசாலி போலவும், அணு உலையை எதிர்ப்பவர்கள் எல்லாம் அப்பாவிகள், மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்பதும் கண்டிக்கத்தக்க கருத்து. உங்களுக்கு உண்மை தெரியவில்லை என்பதற்காக, அனைவரையும் முட்டாள்களாக்க வேண்டாம். செர்னோபில் விபத்தில் இறந்தவர்கள் வெறும் 50 பேர் மட்டும்தானா.. இந்தக் கணக்கெல்லாம் எதில் வரும்?
  //About 200,000 people had to be permanently relocated after the disaster. IAEA reported in 2005 that 56 deaths could be linked directly to the accident immediately. Forty-seven of those were plant workers and nine were children who died of thyroid cancer. The report went on to estimate that up to 4,000 people may die from long-term diseases related to the accident. Those numbers are a subject of debate, however, as the Soviet Union did much to cover up the extent of the damage. The World Health Organization reported the actual number of deaths related to Chernobyl was about 9,000.//

  -வினோ

 14. senthilbabu

  திரு மனோகரன் அவர்களே , பிரான்ஸ் நாட்டில் ஏறக்குறைய 80 % மின்சாரம் அணு மின் நிலையம் மூலமாகதான் தயாரிக்கபடுகிறது …. மன்னிக்கவும் திரு வினோ அவர்களே

  see the following link ப்ளீஸ்
  http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_France
  ______________
  ரொம்ப நல்லது. அதே பிரான்ஸ்தான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு 24 அணு உலைகளை மூடியுள்ளது. புதிதாக எந்த அணு உலையையும் திறப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறது.

  -வினோ

 15. senthilbabu

  வினோ சார் நான் புத்திசாலி என்று ஒரு போதும் சொல்ல வில்லை. நான் சொன்னது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தான். இவ்வளவு பேசும் அனைவரும் ஏன் கல்பாக்கத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று தான் தெரியவில்லை.
  _____________
  ஏதாவது ஒரு புள்ளியில் நின்று பேசுங்கள். ஒரு கேள்வியை எழுப்புவதும் அதற்கு பதில் கிடைத்தபிறகு, வேறு எதையாவது கூறி, ‘இப்ப என்ன சொல்றீங்க’ என்று கேட்பதும் விதண்டாவாதம். ஒரு ஆதாரப் பிரச்சினையைக் கூட புரிந்து கொள்ள முடியாதா இத்தனை ‘அறிவாளி’யான உங்களால்? கல்பாக்கத்துக்கு எதிர்ப்பில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? போராட்டம் நடக்கவில்லை என்று உங்களால் கூற முடியுமா? இன்றுவரை, இந்த நிமிடம் வரை போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை அந்த உலையில் நடந்த மரணங்களுக்கே இப்போதுதான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது கல்பாக்கம் நிர்வாகம்.

  ம்ம்… அடுத்து என்ன… சீனாவில் சுரங்கங்கள் இடிந்து 100 பேர் இறந்துட்டாங்களே.. இதுக்கு என்ன பதில்னு கேக்கப் போறீங்களோ? கடவுளால கூட காப்பாத்த முடியாத கூட்டம்யா இதெல்லாம்!
  -வினோ

 16. senthilbabu

  மன்னிக்கவும் வினோ சார். என்னுடைய கேள்விகள் உங்களை irritate பண்ணுவதாக நான் உணர்கிறேன்… இந்த போராட்டத்தின் முடிவு என்ன என்பது எனக்கும் தெரியும் தங்களுக்கும் தெரியும். இதற்காக நாம் வாக்குவாதம் செய்வது சரியல்ல. இதுவும் கடந்து போகும்….நம்முடைய நட்பு தான் எனக்கு முக்கியம்.
  அன்புடன்
  செந்தில்பாபு
  ___________________

  விஷம் என்பதை எத்தனை அழகான வார்த்தைகளில் சொன்னாலும் அது தீங்கான ஒன்றுதானே. அப்படித்தான் அணுஉலைக்கு ஆதரவான வாதங்களும். எனது பதில்கள் உங்கள் மீதான தனிப்பட்ட கோபமல்ல. அந்தக் கேள்விகளில் தொனித்த அணுஉலை ஆதரவுக்கு எதிராக மட்டுமே.. நன்றி!

  -வினோ

 17. chenthil UK

  திரு Senthilbabu அவர்கள் வெறும் 50 பேர் தான் இறந்துள்ளதாக சொல்லிருகிரர்கள்… அனால் விபத்து பாதித்த இடத்தில புல் பூண்டு கூட இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு முளைக்காது… அது மட்டும் அல்ல அந்த இடத்தை… கதிர் இயக்கம் தடுக்கும் உடைகள் இல்லாமல் அந்த இடத்துக்கு மனிதர்களால் போக கூட முடியாது.. இதே இன்டர்நெட் நீங்கள் google செய்தால் அணுஉலைகளின் ஆபத்துகளை பற்றி எத்தனை கட்டுரைகள் உள்ளன… அணு உலைகளின் எதிர்ப்பு மக்களுக்கு பொய் சேருவதில்லை.. ஏனெனில் தினமலர் போன்ற பத்திரிகைகள் அதை வெளியிடுவதில்லை… அரசாங்கம் மக்கள் சார்பாக இருபதில்லை.. அது ஒரு Business மாதிரி ஆகிவிட்டது… கதிர் இயக்கத்தின் வீரியம் அந்த சுட்டறு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு… தள்ளி இருக்கும் மக்களுக்கு அது பற்றி தெரிய வாயிபில்லை… எப்படி இலங்கை பிரிச்சனையை அந்த ஊரு மக்களுக்கு தான் தினம் தினம் தூக்கத்தை கெடுக்குமோ… அது போல தான் கூடங்குளம் மக்களும் அதை சுத்தி இருபவர்களுக்கும்… மற்றவர்கள் அதை பற்றி விவாதத்தை மட்டுமே செய்ய முடியும்…அடுத்த தலைப்பு செய்தி வந்ததும் அதை பற்றி பேசுவோம்…

 18. R O S H A N

  சபாஷ் ஜி……சரியான பதிவு…..சரியான நேரத்தில்……இவ்ளோ தெளிவாக யாரும் இந்த விசயத்தில் பதில் அளிக்க முடியாது………உங்களுடைய ஒவ்வொரு கருத்திலும் உண்மையும் நேர்மையும்…..அதைவிட மனித இனத்திற்கு ஒரு சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்ற ஆதங்கமும் தெரிகிறது………

  எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது வினோ……..ஏன் யாரும் இந்த மக்களோட உணர்வ புரிஞ்சு பேசவே மாட்டேன்குறாங்க……….’தலை வலியும் திருகு வலியும் அவன் அவனுக்கு வந்தா தான் தெரியும்’…….இங்க இப்பிடி வாய் கிழிய பேசுறவங்கள போயி அணு உலை இருக்கற இடத்துக்கு குடும்பத்தோட இடம் பெயர சொல்லுங்க பாப்போம்……..எல்லாரும் கப் சிப்புன்னு உக்காந்துக்குவாங்க………..

  அட இத்தன பேரு எதிர்ப்பு தெரிவிக்குராங்களே……..அப்ப இதுல எதோ ஒரு பிரெச்சனை இருக்கு அது என்னனு ஆராய வேண்டாமா……..செரிங்க எதுவும் வேண்டாம்…..நீங்க எப்பிடி இவ்ளோ விஷயங்களோட பேசுறீங்க அணு உலைக்கு எதிராக……..ஒரு மாநில அரசு இந்த மக்களோட எவ்ளோ விஷயங்களோட பேசணும்……..உக்காந்து பேசி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவங்களோட ஐயங்கள போக்க வேண்டாமா……..அதுதான ஒரு நல்ல அரசுக்கு அழகு……..

  என்னை கேடீங்கன்னா ……நம்ம மக்களுக்கு சுத்தமா ஒற்றுமையே இல்ல……….அதுனால தான் எல்லாரும் நம்மள அடிக்கிறாங்க………ஸ்ரீலங்கா ல அடிக்கிறாங்க………உள்ளூர்ல அடிக்கிறாங்க……..எங்க தாங்க நாம போகறது………பக்கத்து மாநில மக்களை பாத்து நெறைய நாம கத்துக்கணும்…….

 19. palPalani

  @chenthil UK: சரியா சொன்னீங்க! அடுத்து ஒரு 3G அல்லது 4G -யோ வந்ததும் நம்ம மறந்துருவோம்!

  இப்போ மட்டும் திமுக ஆட்சியில இருந்திருந்தா, நம்ம அம்மா Mr. சு.சாமி அல்லது ஏதாவது ஒரு அறிவாளிய புடிச்சு இத நிருத்தியிருப்பாங்க… தலைவர் கலைஞர் ஆதரிக்கிர்றார் என்ற, சாதாரண ஒரு மொக்க மேட்டருக்கே சேது சமுத்திர திட்டத்தை நிருத்தினவங்க!

  தலைவர் கலைஞர் மட்டும் மத்திய ஆட்சியில கூட்டணியில இல்லாம இருந்திருந்தா, கூடங்குளம் தலைவருக்கு ஒரு அல்வா மேட்டர்… வடை போச்சே!

  இன்னொரு கோஷ்டி, ரஷ்யாவுல மழை பேஞ்சா, நம்மூர்ல கோடை பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டுருக்கேன்.. இப்பதான் நேர பாக்குறேன்!

  எப்போதும் ஒருமாதிரி இருக்குற ஒரே கட்சி, நம்ம காங்கிரஸ்தான்யா!! இப்போ மட்டும் மத்தியில பிஜேபி அல்லது வேற கட்சி ஆட்சில இருந்திருந்தா… அப்பவும் அவங்கபாட்டுக்கும் அவங்க வேலையத்தான் பார்ப்பானுக! அதாங்க கோஷ்டி சண்ட போடுறது! பாருங்க நம்ம ஆளுங்கள, கோஷ்டி சண்டையில அடுத்த லெவலுக்கு போயிட்டானுக!

  https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/523323_315158375248123_1983275193_n.jpg

 20. santhosh

  ஏன் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாத கூடங்குளத்தில் மட்டும் தன் பாதிப்பா அங்கு உள்ளவர்கள் மனிதர்கள் இல்லையா அவர்களுக்கு கதிர் வீச்சினால் பாதிப்பு ஏற்படாத ? இந்த உதயகுமாரை அங்கும் சென்று போராட சொல்லுங்கள் பின்னர் நமது இந்தியா கற்காலத்திற்கே செல்லட்டும். மின்சாரம் இல்லாமல் நமது புண்ணிய பூமி நாசமாய் போகட்டும்………!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *