BREAKING NEWS
Search

விவசாயி, ஸ்பேஸ்வாய்ஸ், டெக்ஸோன்… என்வழியின் புதிய இணையதளங்கள்!

வணக்கம் நண்பர்களே…

அதிகம் சொல்ல விரும்பவில்லை…

“இனிவரும் நாட்களில் மேலும் சில முயற்சிகளை முன்னெடுக்கும் திட்டமுள்ளது. அது நிச்சயம் மூடத்தனத்தை வேரறுக்கவும், அறிவைப் பெருக்கும் வகையிலும் இருக்கும் என்பதை மட்டும் இந்த நாளில் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்…” – இது சில வாரங்களுக்கு முன்பு என்வழி 6-ம் ஆண்டின் தொடக்கத்தையொட்டி எழுதிய கட்டுரையின் சில வரிகள்.

அதன் முதல் முயற்சியாக, நான்கு இணையதளங்களை இந்த தீபாவளி முதல் தொடங்குகிறது என்வழி.

இவை வழக்கமான தளங்கள் அல்ல. தமிழில் முதல் முழுமையான விவசாய தளமாக www.vivasayi.in-ஐ தொடங்கியுள்ளோம். தினசரி இந்தத் தளத்தில் வேளாண் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். செய்திகளைத் தாண்டிய சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது. அதனை அவ்வப்போது தளத்தில் தெரிவிக்கிறோம்.

விண்வெளி பற்றிய செய்திகளுக்காகவே பிரத்தியேகமாக www.spacevoice.net என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். இதுவும் தமிழில் ஒரு முதல் முயற்சி என நம்புகிறேன்.

தொழில்நுட்ப செய்திகளுக்கு நிறைய தளங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் சில வலைகள் உள்ளன. முழுமையான தொழில்நுட்ப செய்தித் தளமாக www.teqzone.com என ஆங்கிலத்திலும், www.tamil.teqzone.com என தமிழிலும் தொடங்கியுள்ளோம்.

என்வழியுடன் இணைந்த தளங்களாக இவை செயல்படும். இனி வரும் நாட்களில் இணையப் பக்கங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான சாம்பிள்தான் இப்போது நீங்கள் காணும் நமது புதிய தளங்களின் வடிவமைப்பு.

உங்களின் ஆலோசனைகளுக்கும் படைப்புகளுக்கு நிச்சயம் இடம் உண்டு.

எப்போதும்போல, உங்கள் ஆதரவு தொடரும் என நம்புகிறேன்.

நல்ல விஷயங்களுக்கு தலைவரின் மானசீக ஆசிகள் எப்போதும் உண்டு என்ற தெம்புடனும்… அன்புடனும்…

வினோ
ஆசிரியர்
www.envazhi.com

புதிய தளங்களின் இணைப்புகள்…

www.vivasayi.in

www.spacevoice.net

www.teqzone.com

www.tamil.teqzone.com
31 thoughts on “விவசாயி, ஸ்பேஸ்வாய்ஸ், டெக்ஸோன்… என்வழியின் புதிய இணையதளங்கள்!

 1. murugan

  வாழ்த்துக்கள் வினோ !!!
  உங்கள் முயற்சிக்கு தலைவரின் ரசிகர்களாகிய எங்கள் ஆதரவு என்றென்றும் உண்டு !!!
  வாழ்க வளமுடன் !!!

 2. mani

  விண்வெளி பற்றி அறிய நான் எப்போதும் மிக ஆவலாக இருப்பேன்

  அது பற்றிய செய்தி எங்கேனும் இருந்தால் தேடி தேடி படிப்பேன்.

  விண்வெளி செய்திகளை படிக்கும் போது நான் தனி உலகத்தில்

  இருப்பதை போல் உணர்வேன்

  இப்போது தமிழில் இதெற்கென்றே ஒரு தளம். என்ன இனிப்பான செய்தி.

  நன்றி நன்றி.

 3. srikanth

  வானம்,உமக்கு.பூமியும்,உமக்கு.அன்புத் தலைவரின்,ஆசியும் உமக்கு.என்றும்,எங்களின் வாழ்த்தும்,ஆதரவும்,உமக்கே,உமக்கு.ரொம்ப சந்தோஷம்,வினோ சார்.

 4. மிஸ்டர் பாவலன்

  புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  ‘என் கருத்து’ ஊரில இருக்காரா தெரியலை.
  அவர் இந்த வலையில எதுவும் எழுதிப் படிச்சு
  ரொம்ப நாள் ஆச்சு.

  குமரன், கணேஷ் ஷங்கர், கிருஷ்ணா, என் கருத்து
  பதில்களை நான் ரெகுலராகப் படிப்பதுண்டு.
  பல கருத்து வேறுபாடு இருந்தாலும் தினகரின்
  விவாதத் திறனையும் பாராட்டி இருக்கிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 5. mannai senthil

  வாழ்த்துகள் .. வளர்க! நாங்கள் உங்களுடன் !

 6. கணேசன் நா

  வாழ்த்துக்கள் வினோ சார்.

  என்றும் என்றென்றும் என்வழி-யுடன்

  -கணேசன் நா

 7. Santhappan

  நல்லதொரு முயற்சி…!! வாழ்த்துகிறோம்…

  சமூக வலைத்தளங்களில், பதிவுகளை, செய்திகளை பகிரும்வண்ணம் தளங்களை வடிவமைக்க வேண்டுகிறோம். ஒவ்வொரு பதிவிற்க்கு கீழும், மேலும் தளங்களை பகிருவதற்க்கான இணைப்புகளை வழங்கினால், அதிக பயனாளர்களை சென்றடையலாம்…

  பேஸ்புக் போன்றவற்றில் தனித்தனி பக்கம் தொடங்கி, சரியான முறையில் இணைப்புகளை வழங்கவேண்டும்.. உதாரணம், விகடன் குழுமம். இன்றைய நிலையில் விகடன் குழுமம் மட்டுமே சரியான அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறது…

 8. endhiraa

  சூப்பர் வினோ ஜி !! வாழ்த்துக்கள் !! ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் !! புதிய தளங்களின் links எல்லாம் என்வழியின் தளத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் இதை படிக்காதவர்களுக்கு தெரிந்து கொள்ள easy ஆக இருக்கும் என்பது என்னுடைய சிறிய ஒரு வேண்டுகோள் !

 9. மு. செந்தில் குமார்

  உங்கள் அனைத்து முயற்சியும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 10. குமரன்

  மென்மேலும் வளர, செழிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 11. குமரன்

  பாலாற்றில் நீர்ப்பெருக்கு என்பது மகிழ்ச்சியான செய்தி.

  பாலாறு உற்பத்தியாவது கர்நாடகா மாநிலம் நந்தி துர்க்கம் (nandi Hills ) என்ற மலையில்.

  கர்நாடகத்தில் 93 கிமீ தூரமும், ஆந்திர மாநிலத்தில் 33 கிமீ தூரமும், தமிழ்நாட்டில் 222 கிமீ ஓடி கடலில் கலக்கும் இடம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் “கடலூர்” என்ற ஊர் ஆகும். (தெற்கே இருக்கும் கடலூர் மாவட்டத் தலைநகரான கடலூர் வேறு, அது துறைமுக நகரமும் கூட.) இந்தக் கடலூர் மாமல்லபுரத்துக்கும், மரக்கானத்துக்கும் இடையில் உள்ளது. இது வெகு அழகான கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது.

  கர்நாடகத்தில் பாஸ்தமங்கலம், ராமசாகர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

  ஆந்திரத்தில் பாயும் 33 கிமீ தூரத்தில் புல்லூர் உள்ளிட்ட 32 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
  தற்போது குப்பம் என்ற இடத்துக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது.

  நாமும் நம் பங்குக்கு, தமிழ் நாட்டில் பாலாறு நுழைந்த வுடன் வாணியம் பாடியிலும், ஆம்பூரிலும் தோல் பதப் படுத்திய சாய ரசாயனக் கழிவுகளைக் கலந்து பாலாற்றை குற்றுயிரும் கொலையுயிருமாக ஆக்கி விட்டோம். 1990 களில் பொது நல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் பயனாக கடந்த பத்தாண்டுகளில் மாசு சற்றே குறைந்து உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இல்லாவிட்டால் வாணியம்பாடி ஆம்பூர் தோல் ஏற்றுமதித் தொழிலதிபர்கள் இத்தனை நேரம் ஆற்றைக் கொன்று விட்டிருப்பார்கள்.

  தமிழ் நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உற்பத்தியாகும் செய்யாறு எனப்படும் சேயாறு (சங்க காலப் பெயர்) பாலாற்றில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் என்ற இடத்தில் கலக்கிறது.

  பாலாறு உற்பத்தி, அதன் வரலாறு, 1892 ஆண்டு ஒப்பந்தம், பாலாற்றின் நீர்ப்படுகைகள் குறித்து மிக விரிவான அருமையான ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான செய்திப்படம் இந்தத் தொடரில் உள்ளது. அன்பர்கள் நிச்சயம் பார்த்துப் பயனடைய வேண்டும்.

  பாலாற்றாங்கரை வாழ் மக்களின் நேர்காணல்களுடன் ஆதாரபூர்வமான செய்திப்படம் இது.

  கிராமத்து மக்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் எதார்த்தமாக எகனாமிக்ஸ் பேசுகின்றது என்பது கவித்துவமாக வெளிப்பட்டிருக்கும் படம் இது.

  தோல்தொழிலின் மாசுக் கழிவுகள், மணற்கொள்ளை, சாராய ஆலைகளின் கொள்ளை – கழிவுகள், பாட்டில் தண்ணீர் கம்பெனிகளின் கொள்ளை – ஆலைக் கழிவுகள் என்று தமிழ் நாட்டில் பாயும் 222 கிமீ தூரம் முழுவதும் பயணம் செய்கிறது இந்தப் படம்.

  My Name is Palaru by RR SRINIVASAN
  http://www.youtube.com/watch?v=mxksl0VgBOY
  http://www.youtube.com/watch?v=u39fvV4kE9I&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=8NnBtZYfT2o&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=bjwBz28a8CQ&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=hnwh_T1TqnQ&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=New6mqU1c1E&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=Fc54zocaCtI&feature=relmfu
  http://www.youtube.com/watch?v=4KfzEafe8UQ&feature=relmfu

 12. seeni1967

  பங்கு சந்தைக்கு ஒரு வெப்சைட் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் யோசியுங்களேன் ப்ளீஸ்

 13. kabilan

  தினகர் சார் சூப்பர் சார் “மலிவான செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், மக்களுக்கு தேவை என்ன என்பதை அறிந்து கொடுக்கும் மாமனிதர் வினோவுக்கு நன்றிகள் பல”
  வினோ அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 14. தினகர்

  “பாலாறு உற்பத்தியாவது கர்நாடகா மாநிலம் நந்தி துர்க்கம் (nandi Hills ) என்ற மலையில்.” – தென் பெண்ணை அல்லவா அது. எனது பூகோள அறிவில் தடுமாற்றம்?

 15. soundar

  நல்ல விஷயங்களுக்கு தலைவரின் மானசீக ஆசிகள் எப்போதும் உண்டு என்ற தெம்புடனும்… அன்புடனும்…
  வினோ
  ஆசிரியர்
  —————————-
  I like that final touch with thalaivar photo…vinoji…
  As a follower of thalaivar, we are with you…

  Anbudan
  soundar

 16. enkaruthu

  வாழ்த்துக்கள் வினோ சார்.அதுவும் விவசாயி தளம் மற்றவர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

 17. குமரன்

  தினகர்

  பாலாறு, தென்பெண்ணை இரண்டுமே நந்தி துர்க்கத்தில்தான் துவங்குகின்றன. ஒன்று கிழக்கே நோக்கி இறங்கி வந்து பாலாறாக ஓடுகிறது, மற்றது மேற்கே இறங்கி சுற்றி வந்து தென்பெண்ணையாக ஓடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *