BREAKING NEWS
Search

ஆரம்பத்தை விட அபத்தம் அதற்கெதிரான விமர்சனங்களைக் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ஆரம்பத்தை விட அபத்தம் அதை ஆதரிக்கும் ரசிகர்கள்! – கேள்வி பதில் 

ajith-arrambam-posters2

ரம்பம் படத்துக்கு ஏன் இத்தனை காட்டமான விமர்சனம்… அஜீத் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் ஏன்? ரஜினி படங்கள் மட்டும் யோக்கியமா? – இவையெல்லாம் எனக்கு வந்த சில கேள்விகள்.

ஆரம்பம் படத்துக்காக என்வழியில் நான் எழுதிய விமர்சனத்துக்கு எதிர்வினையாக வந்த நூற்றுக்கும் அதிகமான தரம்கெட்ட பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டுமே அனுமதித்திருந்தேன்.

இத்தகைய மட்டமான கருத்துகளுக்காக நான் கவலைப்படவில்லை. ஆனால் மக்களின் குறைந்தபட்ச ரசிப்புத் தன்மை கூட இல்லாத, ஆட்டுமந்தை மனநிலைதான் வருத்தப்பட வைத்தது.

எதற்கெடுத்தாலும் ரஜினியுடன் கண்ட நடிகர்களையும் ஒப்பிடும் இவர்களின் மனநிலையை என்னவென்பது?

ரஜினி ரசிகன் என்றால், ஒரு படம் எவ்வளவு குப்பையாக இருந்தாலும் விமர்சிக்கக் கூடாதா என்ன? அல்லது ரஜினி படங்களை யாரும் விமர்சிக்காமலே இருந்துவிடுகிறார்களா?

பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன் என எந்தப் படத்தையும் யாரும் விட்டுவைக்கவில்லையே.

ஏதோ அஜீத்தை நான் தனிப்பட்ட முறையில் தாக்கியதாகவும், அவர் வளர்ச்சியைப் (??!!) பொறுக்க முடியாமல் பொறாமையில் எழுதியதாகவும் ஒரு நூறு பேராவது இங்கே பின்னூட்டமிட்டிருந்தார்கள். எத்தனை அறிவீனம் இது?

இந்தத் தளத்தில் நான் மிகக் கோபமாக எழுதியது சூர்யா பற்றித்தான். அதுவும் உண்மை எதுவும் தெரியாமல் கண்மூடித்தனமாக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் அவர் தாக்கிப் பேசியதால். ஆனால் அதே சூர்யா அத்தனை பத்திரிகையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். உண்மை என்னவென்று சொல்லாமல் என்னை கோபப்படுத்தி சிலர் பேச வைத்ததால் அப்படி நடந்ததென்று விளக்கம் கூறினார். அதன் பிறகு சூர்யாவிடம் பகைமை பாராட்ட எனக்கென்ன இருக்கிறது!

அஜீத் பற்றி நான் எப்போதும் மதிப்புடனே எழுதி வந்திருக்கிறேன். ‘நானே அடுத்த சூப்பர் ஸ்டார், அப்படிச் சொன்னால் என்ன தப்பு.. எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன்’ என்றெல்லாம் ஆஞ்சநேயா சமயத்தில் அவர் பிரஸ் மீட் வைத்து கொக்கரித்து வந்தது நினைவைவிட்டு அகலாத போதும்!

கடந்த ஆண்டு அவர் பிறந்த நாளுக்கு நாம் எழுதிய கட்டுரைகூட அவரது சமீபத்திய மாறுதல்களை மனதில் கொண்டுதான்.

ஆனால் அவையெல்லாம் வேறு… அவற்றை நான் இப்போதும் மறுக்கவில்லை. ஆனால் அவர் படத்தைக் கொண்டாட அவரது தனிப்பட்ட குணங்கள் அளவுகோலல்ல. அப்படி நினைத்து அவர் படங்களைப் பார்ப்பது அவருக்கும் அவர் சினிமாவுக்கும் தோண்டப்படும் பெரிய குழி!

அஜீத்தை சிலமுறை சந்தித்துள்ளேன். நான்கைந்து முறை போட்டோ கூட எடுத்துக் கொண்டுள்ளேன். ஜீ படத்தின்போது சிறப்புப் பேட்டிகூட கொடுத்திருக்கிறார். ஒரு செய்தியாளர் என்ற முறையில் அவை நிகழ்ந்தன. இதையெல்லாம் மனதில் வைத்து அஜீத்தை மிகச் சிறந்த நடிகர், நல்ல படங்களைத் தந்திருக்கிறார் என பாராட்ட வேண்டும் என நினைக்கிறார்களா அஜீத் ரசிகர்கள்?

உண்மையில் அஜீத்தின் மட்டமான படங்களுக்குக் கூட நல்ல விமர்சனங்கள் வருவது இதன் அடிப்படையில்தான். ஒன்று விமர்சனம் எழுதுபவர் அஜீத் ரசிகராக இருப்பார்.. கூடவே அஜீத் படக் கம்பெனி அந்த மீடியாவுக்கு விளம்பரங்களை அள்ளி இறைத்திருக்கும். நமக்கு எந்த நடிகருடனும் இந்த கமிட்மென்டே கிடையாது (சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட!). பிறகேன் நான் தடவிக்கொடுத்து எழுத வேண்டும்?

பொதுவான சினிமா இலக்கணம் என்ன தெரியுமா? ஒரு படத்தை, அதில் எந்த மாதிரி சுவை மிகுந்திருந்தாலும் – அவலச் சுவையே இருந்தாலும் கூட – மறுமுறை பார்க்க வேண்டும் என்ற நினைப்பு ஒரு ரசிகனுக்கு தோன்ற வேண்டும். ஏதாவது ஒரு காரணத்துக்காகவாவது இன்னொருமுறை பார்க்கத் தூண்ட வேண்டும்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்… அஜீத்தின் ஏகன், அசல், பில்லா 2… இப்போது ஆர்ர்ர்ரம்பம்… இவற்றில் ஒன்றையாவது இன்னொரு முறை பார்க்கும் தைரியம் உங்களில் யாருக்காவது உண்டா?

பிறகேன் கொந்தளிக்கிறீர்கள்? மங்காத்தாவை நாம் மட்டமென திட்டவில்லையே… அதில் அஜீத்தைக் கொண்டாடத் தவறவுமில்லையே. தகுதியில்லாத ஒரு படத்தை, மட்டமான நடிப்பை ஆஹா ஓஹோ என்று புகழ்வதை எப்படி சகிக்க முடியும்?

தலைவா படத்தை கடுமையாக விமர்சித்தபோது ஜில்லென்றிருந்ததல்லவா அத்தனைபேருக்கும்… இப்போது தலைவாவுக்கு சற்றும் குறையாத ஆரம்பத்துக்கான விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள்!

இதையெல்லாம் விடக் கொடுமை, வரலட்சுமி என்ற நடிகை விஷாலின் படமான பாண்டிய நாடுதான் தீபாவளிப் படங்களில் முதலிடத்தில் உள்ளது என ட்விட்டரில் ஒரு கருத்துப் படத்தை வெளியிட்டார். அதற்கு அந்தப் பெண்ணை எத்தனை கீழ்த்தரமாக இந்த அஜீத் ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள் தெரியுமா? இப்படித் திட்ட இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது?

ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனுக்கு, சினிமா என்பது ஒளிப்பதிவாளர் வைக்கும் கோணங்கள், விதவிதமான வண்ண அமைப்புகள் (டோன்கள்) மட்டுமே என்ற நினைப்பு. அஜீத்தை வைத்து சினிமா எடுக்கக் கற்றுக் கொள்கிறார் அவர் என்ற நடுநிலையாளர்கள் விமர்சனத்தில் எள்ளளவும் மிகையில்லை.

எம்ஜிஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத் என்றெல்லாம் சிலர் எழுதுவது வேதனையைத் தருகிறது. எம்ஜிஆர் என்ன எடுத்த எடுப்பில் புரட்சித் தலைவர் ஆகிவிட்டவரா? அவர் படங்களுக்கு அவரே எல்லாமும்… எத்தனைப் பெரிய இயக்குநர் என்றாலும், அவர்களிடம் மக்களின் நாடித் துடிப்பறிந்த எம்ஜிஆர் உரிய நேரத்தில் தன் கருத்தைப் பதியவைக்கத் தவறியதில்லை. தனது இயல்பான நடிப்பால், சினிமா அறிவால் மக்களை ரசிக்க வைக்கும் படங்களாகத் தந்தார்.

எம்ஜிஆரைப் போலவே அத்தனை நுணுக்கங்களும் தெரிந்தவர், இயல்பான நடிகர் என்பதால்தான் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ரஜினி.

ரஜினி என்பவர் அத்தனை சுலபத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டவில்லை. ஒரு மாதத்தில் 24 படங்களில் நடித்தவர். ஒரே மாதிரி கோட் சூட் போட்டுக் கொண்டு நடை பழகி, அதை நடிப்பெனக் காட்டவில்லை. படத்துக்குப் படம் தன்னையும் தன் உடல் மொழியையும் வேறுபடுத்திக் காட்ட அவர் பட்ட பாடு, அவரை மருத்துவமனையில் படுக்க வைத்தது. தன் ஒவ்வொரு படத்துக்கும் அவர் மெனக்கெடுவதில் நூற்றில் ஒரு பங்குகூட, அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு அலையும் நடிகர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே. ரஜினியின் சாதனைகளைத் தொடுவதென்ன.. நினைத்துக்கூடப் பார்க்க முடியாது இப்போதுள்ள எந்த நடிகனாலும். இவர்கள் அத்தனை பேருமே ‘பச்சா’க்கள், தலைவருக்கு முன்.. அந்தத் தெளிவு நமக்கு ரொம்ப்பவே உள்ளது (இதோ இப்போதே 130 தியேட்டர்களில ஆரம்பம் தூக்கப்பட்டு வேறு படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூன்று தினங்களுக்கு முன் காசியில் அழகுராஜாவுக்கு பதில் போடப்பட்ட இந்த ஆரம்பம் படத்தின் இரவுக் காட்சிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 30.. ஆனால் நூறுகோடி வசூல் என்ற பீத்தலுக்கு குறைவில்லை!)

எனவே அஜீத் என்றில்லை.. வேறு எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை ரஜினியோடு ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ரஜினி மீது உங்களுக்கு விமர்சனம் இருந்தால் தாராளமாக எழுதிக் கொள்ளுங்கள். யார்தான் எழுதாமல் இருக்கிறார்கள்…!

அஜீத்தை விமர்சித்ததும் என்னை விஜய் ரசிகர் என திட்டிப் புலம்பியிருக்கிறது ஒரு கூட்டம். உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கப்பா… கடைசி மூச்சு உள்ளவரை ரஜினிக்கு மட்டுமே ரசிகனாக இருக்க முடியும், ஒரு உண்மையான ரஜினி ரசிகனால். நான் உண்மையான ரஜினி ரசிகன்!

அப்புறம் சிலர், இனி இந்த தளத்தையே பார்க்க மாட்டோம். இதுவே கடைசி பார்வை என்றும் எழுதியிருந்தார்கள். நல்லது.. உங்கள் பார்வையைப் பிடுங்கி இந்த தளத்தைப் படிக்க நான் அழைக்கவில்லை. அதற்கான தகிடுதத்தம் எதையும் நான் செய்யவும் இல்லை. என்வழியில் நான் எழுதுகிறேன். இந்தத் தளத்தைப் புரிந்த சிலரும் அவ்வப்போது எழுதுகிறார்கள்.. படிப்பதும் தொடராததும் உங்கள் விருப்பம்.

ரஜினி ரசிகர்களே… ரஜினிக்கு மட்டுமே ரசிகர்களாக இருங்கள். வேறு நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் படங்களுக்கு.. நல்ல படங்களுக்கு ரசிகர்களாக இருங்கள். ஆர்வக் கோளாறில் தோரணம் கட்டவும், முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் கிளம்பிவிடாதீர்கள். பிற நடிகர்களின் படங்கள் குறித்து நான் எழுதுவது இந்த மனநிலையில்தான். இதையெல்லாம் எழுதாமல் வெறுமனே வேடிக்கைப் பார்க்கவும் முடியாது.

என்வழியில் மற்ற நடிகர்கள் / படங்கள் பற்றி என்ன எழுதினாலும் அதை ரஜினியோடு தொடர்புபடுத்திக் கருத்திடுவதை நிறுத்துங்கள். இது ரஜினியின் கருத்தோ விமர்சனமோ இல்லை. வினோ என்ற பார்வையாளனின் சினிமா விமர்சனம். இதில் ரஜினி எங்கே வருகிறார்? இதே படத்தை ரஜினி பார்த்திருந்தாலும், அதை இந்த விமர்சனத்துக்கு அடுத்த செய்தியாகப் பதிவு செய்திருப்பேன். எனவே என்னைவிட உங்கள் ரசனை மேம்பட்டதாக இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே. அதற்காக இந்த விமர்சனமே தவறு என்று எழுதும் உரிமை யாருக்கும் இல்லை!

கோபமேதுமில்லாமல், நிதானமாகவே சொல்கிறேன், ஆரம்பம் படத்துக்கு இதைவிட சரியான விமர்சனம் இருக்க முடியாது, இதில் இப்போதும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

-வினோ
36 thoughts on “ஆரம்பத்தை விட அபத்தம் அதற்கெதிரான விமர்சனங்களைக் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்கள்!

 1. saktheeswaran

  கடைசி மூச்சு உள்ள வரை ரஜினி க்கு மட்டுமே ரசிகனாக இருக்க முடியும் ஒரு உண்மையான ரஜினி ரசிகனால்
  சிறப்பான பதிவு முற்றிலும் உண்மை

 2. deen_uk

  எதற்கும் வளைந்து கொடுக்காத குணம்,தவறு என்றால் தவறு தான்,நேர்மை,உண்மை,என்ன நல்ல படம் வந்தாலும் ஆதரவு இவை அனைத்தும் தலைவர் ரசிகனின் குணங்கள்.இவை அனைத்தும் உங்களுக்கு உள்ளது வினோ அண்ணா.தலைவரின் ஒவ்வொரு ரசிகனும் உங்களைப்போலவே,நான் உள்பட..வாழ்த்துக்கள்.உங்கள் தன்னலமற்ற சேவை தொடரட்டும்.இந்த தளத்திற்கு வேறு ரசிகர்கள் தேவை இல்லை.நாங்கள் போதும்..எங்கள் அதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

 3. seelan

  அஜித்தை ரஜினி கூட ஒப்பிட கூடாது ,ரஜினியை அஜித்கூட ஒப்பிடுங்க ,

 4. anbudan ravi

  வினோ அவர்களே, எனக்கு தெரிந்த பல ரஜினி ரசிகர்கள் அஜித் படத்தை முதல் நாளே பார்க்க துடிக்கின்றனர்…தலைவருக்கு இணையாக அஜித்தையும் தங்கள் மனதில் வைக்கதொடங்கிவிட்டனர். நான் மற்றும் எங்கள் சில நண்பர்கள் இந்த படம் பார்த்தோம்….முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி சரியில்லை…ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். படம் பார்த்த அனைத்து நண்பர்களின் கருத்தும் இதுதான். இரண்டாம் முறை பார்ப்பது கடினமே.

  உங்கள் மீது கடுமையான விமர்சனம் வரக்காரணம், தனி மனித தாக்குதல் காரணம் என்றுதான் நினைக்கிறேன். அனைத்து பத்திரிகைகளிலும் அஜித்தின் செய்திகள் வந்துகொண்டிரிக்கிறது……வீட்டின் வேலை செய்பவருக்கு வீடும், அன்பாக பழகும் விதமும் என்று ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி….

  ஆனாலும் நீங்கள் கூறியது போல, அஜித் இனி நல்ல கதை அம்சம் உள்ள படத்திலும் அவரது நடிப்பு திறமை வெளியே கொண்டு வரும் கதைகளில் நடித்தால்தான் இனி அவரது படங்கள் ஓடும்……இல்லையேல் விரைவில் ஓரங்கட்டபடுவார்…..என்பது மட்டும் உண்மை.

  அன்புடன் ரவி.

 5. muthu

  சூப்பர் வினோ அண்ணா,,………………..அண்ணா பெரிய ஜில்லா ரவுடி – அவருக்கு
  நினைவிருக்கும் சந்திரமுகியிடம் வாங்கிய அடி..!

  பில்லாவுக்கு வீரம் தான் அல்டிமேட் – அவருக்கு
  தெரியும் ஒரிஜினல் பில்லாவின் மார்க்கெட்..!

  எத்தனை முறை விஸ்வரூபம் எடுத்தாலும் -ரஜினியின்
  சிவாஜி வசூலுக்கு கீழே தான் எல்லாமே வரும்..!… எங்க தலைவன் தாண்டா மாஸ்…..

 6. RJINIFAN

  சூப்பர் வினோ….

  //உண்மையில் அஜீத்தின் மட்டமான படங்களுக்குக் கூட நல்ல விமர்சனங்கள் வருவது இதன் அடிப்படையில்தான். ஒன்று விமர்சனம் எழுதுபவர் அஜீத் ரசிகராக இருப்பார்.. கூடவே அஜீத் படக் கம்பெனி அந்த மீடியாவுக்கு விளம்பரங்களை அள்ளி இறைத்திருக்கும். நமக்கு எந்த நடிகருடனும் இந்த கமிட்மென்டே கிடையாது (சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட!). பிறகேன் நான் தடவிக்கொடுத்து எழுத வேண்டும்?//

  Proud of you!

 7. Mahendran

  வினோ,

  இணையத்தில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களைவிட அஜித்துக்கு அதிகம். விஜய் படமென்றால் கழுவி ஊற்றும் இவர்கள் அஜித் படத்தை எந்த குறையும் சொல்வதில்லை. ஆரம்பம் படம் போரடிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது என்பது உண்மைதான். ஆனால் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்! அதை ஏன் யாருமே பேசவில்லை என்று தெரியவில்லை. அப்படி என்ன உயர்ந்த படம் இது? உண்மையில் அஜித்தை விட விஜய் சிறந்த நடிகர் என்பது என் கருத்து.

 8. மிஸ்டர் பாவலன்

  இந்த விளக்கக் கட்டுரை தேவை இல்லாத பதிவு என்று தான் நான்
  நினைக்கிறேன். இருந்தாலும் அடைய வேண்டியவர்களுக்கு இந்த
  விளக்கம் சென்று அடைந்தால் நல்லது, நன்றி.

  விஸ்வரூபம் படத்திற்கு எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும்
  ‘ஆரம்பம்’ போல எதிர்வினைகள் – டிவெட்டெரிலொ, நம் வலையிலோ –
  பார்க்கவில்லை. காமெடியாக எடுத்துக் கொண்டோம்.

  “‘சிவாஜி’ படத்தில் ‘லாஜிக்’ இருக்கிறதா?” எனச் சிலர் கேட்ட போது
  “இதெற்கெல்லாம் பதில் போடனுமா?” என்று விட்டு விட்டேன்.

  கடைசியாக ஒன்று: “தலைவா” படத்தின் climax காட்சி முன்பு வந்த
  “சுந்தரபாண்டியன்” (2012) என்ற படத்தின் climax காட்சியின் ditto xerox ஆக
  உள்ளது. ஒரு முன்னணி நடிகர் இது போல தமிழ்ப் படங்களில்
  இருந்தே இப்படி copy அடிக்கனுமா எனத் தெரியலை!!

 9. kabilan.k

  எனக்கும் அஜித்தை பிடிக்கும்,அதனால் அவர் என்ன செய்தாலும் பார்ப்பவன் அல்ல.என்றுமே தலைவர் வெறியன் தான்.வினோ அண்ணா அருமை

 10. muthukumar

  கடைசி மூச்சு உள்ள வரை ரஜினி க்கு மட்டுமே ரசிகனாக இருக்க முடியும் ஒரு உண்மையான ரஜினி ரசிகனால்
  சிறப்பான பதிவு முற்றிலும் உண்மை.

 11. karthi

  I read so many books and papers, honest, I could see only in envazhi,particularly vino.
  that is why I daily see envazhi,though you are posting articles once in a while

 12. Sandy

  Seriyana reply…….

  Yara yarkuda compare pandringa…..oru Rajinidhan, thalaivarku aparam YEVANUME kedaiyadhu……

  Ajith biriyani panikudutharu…..ajith dress vangikudutharu….ajith tata kaatnaru..indha scenee velaikagadhu padam nalaillana ……biriyani pandra timela ulaganayagan kita acting kathukalam….illa thalaivar padam pakalam…rendume thala thapika help pannum….

  yenimel yaravadhu “ am not a ajith fan but I was a rajini fan till 1980 / till beginning of 2000 onlynu” solitu vandhinga …thalaivar soldra madhri seeeeviduvom….

  Hats off vino

 13. micson

  ரஜினி எந்த நடிகரோடும் ஒப்பிட முடியாத மகா நடிகர். ரஜினி எந்த தலைவர்களோடும் ஒப்பிட முடியாத தன்னிகரில்லா தலைவர் .சூப்பர் ஸ்டார் என்னும் நாற்காலி சினிமா இருக்கும் வரை தமிழ் சினிமாவில் காலியாகத்தான் இருக்கும். அதை நிரப்ப தலைவர் மறு அவதாரம் எடுக்க வேண்டும்.ஜெய் ரஜினி …………………

 14. jawahar

  தலை வணங்குகிறேன் வினோ…

  உண்மையான ரஜினி ரசிகர் யார் என்று இதைவிட யாராலும் சொல்ல முடியாது

  ரஜினி எந்த நடிகரோடும் ஒப்பிட முடியாத மகா நடிகர்.

  இந்த விளக்கக் கட்டுரை தேவை இல்லாத பதிவு என்று தான் நான்
  நினைக்கிறேன்.

 15. Manoharan

  இங்கே ரஜினி என்பவர் ஒரு உச்சம்.அதற்க்கு மேல் யாரும் இல்லை. அஜித் என்பவர் இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவர். ஒரு உச்சத்தில் இருக்கிற ரஜினியின் படங்களிலேயே லாஜிக் மீறல்கள் இருக்கும்போது அவரைவிட பல மடங்கு கீழே இருக்கும் அஜித் படங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பது சகஜம் என்பதுதான் என்னுடைய கருத்து. மற்றபடி ரஜினியுடன் அஜித்தை ஒப்பிடுவது என்னும் பேச்சுக்கே இடமில்லை…

 16. bahrainbaba

  அத்தனை தமிழ் சினிமாக்களை பார்க்க விருப்பம் இருந்தாலும்.. நல்ல சினிமாக்களை மறுபடியும் பார்க்கவோ.. ரசித்து நெருங்கியவர்களிடம் சிலாகிக்கவோ மனமிருந்தாலும்.. எனது கருத்தும்.. விமர்சனமும் என்றும் என் எண்ண ஓட்டங்களோடு ஒட்டியதாக.. நேர்மையாகவே இருக்கும்.. இது ரஜினி என்ற மனிதரின் ரசிகனாக இருப்பதால்தான் சாத்தியமாகும் என்று எண்ணுகிறேன்..

  உங்கள் விமர்சனத்தில் தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை.. அஜித் என்ற பண்பாலருக்காக இந்த படத்தை பார்த்தேன்..அதை பார்க்கும்போது எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான்.. அஜித் நடிப்பதற்கு எந்த சிரத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.. வரும் காலங்களில் அவர் ரசிகர்களுக்கு பெரிய தீனி என்று ஒன்றும் புதிதாக அவரின் வருங்காலப்படங்களில் இருந்து விடபோவதில்லை.. ஆரம்பம் படத்தை சரியாக விமர்சிக்காவிட்டால்.. அஜித்திடம் இதே அளவிலான பரிமாணத்தையோ.. இதற்கும் கீழான் நடிப்பின் அளவையோதான் வரும் காலத்தில் பார்க்க நேரிடும்..

  நடப்பது.. பார்ப்பது.. கண்ணாடியை கலட்டி மாட்டுவது.. இது அஜித் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பெரிய விருந்தாகலாம்.. பொதுப்படையான ரசிகர்களுக்கு இது ஒரு அலுப்பும் சலிப்பையுமே தரும்..

  என்றென்றும் ரஜினி ரசிகன்

  பஹ்ரைன் பாபா..

 17. raj

  ஒரு சிலரின் எதிர் கருத்துக்கு விளக்கம் தேவையில்லை . இந்த தளம் தலைவர் ரஜினியுடையது என்பதால் தலைவரோடு ஒப்பிட்டு பேசும் மதியற்றவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள் .

 18. குமரன்

  முந்தைய கட்டுரையில் அல்லது விமரிசனத்தில் தெரிந்த கோபத்துக்குக் காரணம் தெரிந்து விட்டது.

  இந்தக் கட்டுரயில் தெரியும் கோபத்துக்குக் காரணம் இந்தக் கட்டுரையிலேயே உள்ளது. சரி. மீண்டும் தலைவர் பட வசனம்தான்.

  கண்ணா, கோபம் இருக்கும்போது நியாயம் கண்ணுக்குத் தெரியாது.

  மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.

  அது போலவே ……

  விமரிசனமும் விமரிசனத்துக்கு உட்பட்டதே.
  விமரிசனர்களும் விமரிசனத்துக்கு உட்பட்டவர்களே.

  ஒவ்வொரு விமரிசனத்துக்கும் கோபம் கொண்டால் யாரும் எந்தப் படமும் எடுக்க முடியாது.

  ஒவ்வொரு விமரிசனரும் தனது விமரிசனம் குறித்து விமர்சிப்பவர்கள் மீது கோபம் கொண்டால் அந்த விமரிசகரின் விமரிசனம் எடுபடாது.

 19. Unamaiyai Uragakurru

  ரஜினி ரசிகர்களே… ரஜினிக்கு மட்டுமே ரசிகர்களாக இருங்கள். வேறு நடிகர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் படங்களுக்கு.. நல்ல படங்களுக்கு ரசிகர்களாக இருங்கள். ஆர்வக் கோளாறில் தோரணம் கட்டவும், முதல் நாள் முதல் காட்சி பார்க்கவும் கிளம்பிவிடாதீர்கள்.

 20. ajith fans

  வினோ நாங்களும் தலைவர் ரஜினி ரசிகர்கள்தான்..ஆனாலும் எந்த ஒரு நடிகரையும் அவர் ரசிகர்களாகிய எங்களால் நல்ல நடிகர் அல்ல.அவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று நீங்கள் விமர்சித்தது தவறுதான். உங்கள் கருது அது போன்றுத்தான் தெரிந்தது..

 21. Basha

  உங்கள் மீது கடுமையான விமர்சனம் வரக்காரணம், தனி மனித தாக்குதல் காரணம் என்றுதான் நினைக்கிறேன். அனைத்து பத்திரிகைகளிலும் அஜித்தின் செய்திகள் வந்துகொண்டிரிக்கிறது……வீட்டின் வேலை செய்பவருக்கு வீடும், அன்பாக பழகும் விதமும் என்று ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி….

  ஆனாலும் நீங்கள் கூறியது போல, அஜித் இனி நல்ல கதை அம்சம் உள்ள படத்திலும் அவரது நடிப்பு திறமை வெளியே கொண்டு வரும் கதைகளில் நடித்தால்தான் இனி அவரது படங்கள் ஓடும்……இல்லையேல் விரைவில் ஓரங்கட்டபடுவார்…..என்பது மட்டும் உண்மை.

  உண்மையான ரஜினி ரசிகர் யார் என்று இதைவிட யாராலும் சொல்ல முடியாது

  ரஜினி எந்த நடிகரோடும் ஒப்பிட முடியாத மகா நடிகர்.

  இந்த விளக்கக் கட்டுரை தேவை இல்லாத பதிவு என்று தான் நான்
  நினைக்கிறேன்.

 22. prakash

  Dear Vino,

  We Rajini fans proud of you. Keep going. We are here in all times. We always Rajini fans forever…

 23. srikanth1974

  அன்புள்ள வினோ சார் அவர்களுக்கு’வணக்கம்
  எனக்கு தங்களிடம் பிடித்ததே எதற்கும் வளைந்து கொடுக்காத
  துணிவும்,நேர்மையும் தான்.கவிஞர் கண்ணதாசன் கூறிய ஒரு பொன்மொழியை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

  யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக் கொள்ளாதே

  அப்படி மாற நினைத்தால்

  ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டியதிருக்கும்.

  -கவியரசர் கண்ணதாசன்-

 24. Sankar

  வினோ

  நீங்கள் சரியான விளக்கம் கொடுத்து இருக்கறீங்க. தலைவர் ரஜினி படங்கள் எல்லாமே அமைதியாக ஆரம்பித்து சரவெடியாக முடியும். எளிய உடையில் தான் வருவார். கதையோடு ஒன்றி அவரது ஸ்டைல் இருக்கும். சும்மா கருப்பு கண்ணாடி மாற்றினோம் என்று பண்ண மாட்டார். இது இன்றைய நடிகர்களுக்கு புரிய வில்லை. பாபா படத்துக்கு வராத விமர்சனமா? தலைவர் மீண்டும் ஜெயிபார்னு நம்பிய rasigarluku சந்திரமுகி தரலையா? அப்படி சொல்லி அடிக்க எந்த நடிகரால் முடியும்? தலைவர் படங்கள் தனி மற்ற நடிகர் படம் வேறு என்று தான் நான் பார்ப்பேன். அது கூட யாராவது வற்புறுத்தி கூப்பிட்டால் தான் போவேன்.
  தலைவர் அளவுக்கு ஒரு படம் முழுக்க ரசிகன் அன்றி எல்லோரையுமே தன் மீது கவனம் செலுத்த வைக்க யாராலும் முடியாது. காந்த மனிதரோடு யாரையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் முடியாது.

 25. P.SIVAKUMAR

  நல்லது வினோ

  ரஜினியை ரசித்தவர்களும், விஜயை பிடிக்காதவர்களும் தான் இன்று அஜித்தின் ரசிகர்கள். அஜித்துக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் மிக மிக குறைவு. மேலும் அஜித்தின் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதாவது அவர் நடித்த 52 படங்களில் வெற்றி படங்களின் எண்ணிக்கை -6. மற்ற படங்கள் அனைத்தும் தோல்வி படங்களே. இது மீடியக்கரர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் ஏன் அஜித்தை கொண்டாடுகிறார்கள் என்று இதுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கு,

 26. ajith fans

  வினோ ஆரம்பம் ஒரு அபத்தம் என்ற விமர்சனத்திற்கு நேர்மறை விமர்சனங்களைவிட எதிர்மறை விமர்சனமே அதிகம் எனவே உங்கள் விமர்சனம் தவறானது என்பது உண்மைதான்….அது உண்மைலேயே அபத்தமான விமர்சனம்தான்..

 27. Kams

  இல்ல ஒரு விஷயம் புரியல ரஜினி அவர்களுக்கு எத்தனை படம் ஹிட் சொல்லுங்க பாப்போம், ரசிகன் என்ற முறையில் வேண்டுமானால் நாம் அவருடைய படங்களை திரும்ப திரும்ப பார்ப்போம். ரஜினியின் லாஜிக் உள்ள படங்கள் 6 இருந்து 60 வரை போன்ற மிக குறைந்த படங்களே. ஆகவே சினிமாவில் லாஜிக் பார்க்காதீர்கள். சினிமா என்பது பொழுது போக்க கூடிய ஒரு விஷயம் ….

 28. sandy

  @rajeshkumar –
  yes rajini’s film is made by the best technicians but that is only for the last two movies (Sivaji & Robo). wat about his earlier movies where he worked with p.vasu, ravi kumar, suresh Krishna, udhaya kumar….
  all your so called current heroes have also worked with the above directors, still they couldn’t achieve anything ….
  Rajini did not get this status because of just sivaji or robo….he was continuously giving blockbusters for years which weren’t achievable even by amitabh & kamal & chirnjeevi or any one else.
  How can you imagine or compare this legend with ur current heros?? ….say even if they work with the best technicians for their next 10 films continuously, they won’t be able to touch the shadow of our Thalaivar because these heroes do not possess any talent as such.….. they are getting away with their foolish flop films at the mercy of their genuine fans.

 29. raja

  கேவலமான பதிவுக்கு ஓரு கேவலமான விளக்கம் பாஸ் இங்க எல்லாரும் 150 படம் நடித்த ரஜினியை 50 படமே நடித்த அஜித்தோடி ஒப்பிடுவது நியாயமா ரஜினி வந்த காலகட்டம் சினிமா உச்சத்தில் இருந்த நேரம் ஆனால அஜித்தின் காலகட்டம் வேறு இதில் இந்த அளவுக்கு வெறிதனமான ரசிகர்களை சம்பாதித்தது அதைவிட ரஜினி ரசிகர்களை வயிரெரிய வைத்தது பெரிய சாதனைதான்
  அப்பறம் இப்படியே நடித்தால் அஜித் காணாமல் போய் விடுவார் என்பதையெல்லாம் தீனா சிட்டிசன் காலத்திலிருந்து கேட்டு கேட்டு புளிச்சி போச்சி பாஸ் வேற ஏதாவது புதுசா கண்டுபிடிங்க
  ஆனால் ஒன்று சாகச அறுபது வயதிலும் பதினெட்டு வயசு குமரியுடன் அவர் கண்டிப்பாக நடித்து அசிங்கபட மாட்டார் (_அடுத்த தலைமுறையிடம்) கண்டிப்பாக அவராகவே விலகி விடுவார் அவர் ஜென்டில்மேன்

 30. bahrainbaba

  என்ன வினோ!!!

  எதுக்கு இந்த மொக்க படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி உங்க நேரத்த வீண் பண்றீங்க.. தயவு செய்து.. அவங்க என்ன படத்துலயும் நடிச்சிட்டு போறாங்க.. நமக்கு எதுக்கு.. தலைவர் பத்தி நிறைய எழுதுங்க.. அது போதும்.. ஒரு விசயத்துக்காக நன்றி உங்களுக்கு.. இனிமே மறந்தும் இந்த அஜித் என்ற நடிகரின் போஸ்டரை கூட பார்க்க மாட்டேன்.. எப்பா.. யாருக்கு யார் மேல வயித்தெரிச்சல் வரணும்.. கமல் மேலே எங்களுக்கு வயித்தெரிச்சல் கிடையாது… எல்லாம் நேரம்..

  எங்க மாவட்டத்துல பாதி தியேடார்ல படத்த தூக்கியாச்சு.. இவ்வள பார்த்து நாங்க பயப்படுரமா..
  அப்டியே நீங்க பயம் காட்டிட்டாலும்..

  என்றும் தலைவர் ரசிகன்

  பஹ்ரைன் பாபா

 31. மிஸ்டர் பாவலன்

  //கமல் மேலே எங்களுக்கு வயித்தெரிச்சல் கிடையாது…/// (bahrainbaba )

  Super!! Thank you!

  -==மிஸ்டர் பாவலன் ==-

 32. Sandy

  @ rajeshkumar
  Boss ur comments are babyish. DONOT attribute the success of rajini to a mere marketing strategy…rajini’s market is always is at the peak irrespective of time, your comments clearly shows your ignorance about rajini, if you have time go through articles about him in the net otherwise ask the elders or even young kids would know better, sure It will help you draft a well-informed comment next time…
  And about your marketing comment, I would recall a statement made by a editor- in-chief of a major national news channel at the time of robo release “rajni doesn’t require us (media) but we need rajini”…I cant give you a better reply…
  do u think these (rajini movie) kind of marketing can pull the same number of people and the money for other heros???? king khan couldn’t do ….shensha Big B couldn’t do…..many tired but failed……
  and my friend even kamal acted equally or more number of movies in other languages, as per your comment kamal should also posses same kind of market …. wat do u say for that?? And do you think rajini was desperate to act in other languages as he was already an unprecedented king of Tamil cinema?? he did most of the movies at the request of his friends from other industries and also most importantly he had that talent to act, impress & attract people all over India….unlike your young heros…
  Yes at the begin of his career he did movies in different language to survive, everyone does that, kamal acted nearly 40 films in malayalam before tamil & even your hero started his career in telugu .
  yes it’s unfair to compare 150 with 50 films but what about the no of years in the industry?? ajith has completed 20years and still confused to chose a right script, unable to give a two continues hits & rajini gave basha & muthu at his 20th year……

  still u wanna argue just like that, cos u love ajith,???? sorry boss I dnt have time…

 33. Sandy

  @ rajeshkumar
  “//even then he is able to pull such a big opening and mass crowd for his mediocre movies ( mostly) , is what making you guys wondering///”
  What a joke…..Pulling crowds (fans) for a week or 10days maximum is what ajith n vijay achieved being in the industry for 20years….and we (rajinifans) are wondering about this achievement?
  If you do not possess a basic knowledge to differentiate nityananda, tejpal , talwars from rajni then what can I say about you.. BOSS u r a true ajith fan I agree… am not in for any more arguments 🙂 nice talikng to u..:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *