BREAKING NEWS
Search

ரஜினி என்ற நேர்மையாளருக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!

ஜெ பதவி ஏற்பு விழாவில் ரஜினி பங்கேற்றதில் என்ன தவறு? 

rajini-jaya-6

ஜெ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது எனச் சொன்ன ரஜினி, எப்படி ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளலாம் என பலரும் கடந்த வாரம் முழுக்க சமூக இணையதளங்களில் கொதித்தார்கள்.. பொங்கினார்கள். நமது தளத்திலும் கூட பலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

படிக்கவே வேடிக்கையாக இருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றது ஒரு அரசு விழா. இந்த விழாவில் யார் யார் பங்கேற்க வேண்டும் என்பதை அரசுதான் தீர்மானிக்கிறது. அரசு என்றால் இங்கே முழுக்க முழுக்க ஜெயலலிதாதான். அவர் இந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்களையோ, பிரமுகர்களையோ, பக்கத்து மாநில முதல்வர்களையோ தன் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தபோது தனக்காக வருத்தப்பட்ட ரஜினியை மட்டுமே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். விழாவுக்கு வந்த மற்றவர்கள் அவரது கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணியைச் சேர்ந்த சிலர்தான்.

இந்த விழா முடிந்ததும் புறப்பட்ட ஜெயலலிதா, நேராக ரஜினி இருக்கும் இடத்துக்கு அருகில் வந்து அவரைப் பார்த்து கும்பிட்டு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார்.

விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையான முக்கியத்துவமும் கவனமும் ரஜினிக்கு மட்டுமே கிடைத்தது என்பதை விழாவைப் பார்த்த விமர்சகர்களுக்கும் தெரிந்ததுதானே!

rajini-jaya3

இத்தனை முக்கியத்துவம் தரப்பட்ட அந்த விழாவுக்கு ரஜினி போனதில் என்ன தவறு இருக்கிறது?

ரஜினி எங்கே போக வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், யாருடன் பேச வேண்டும், யார் இயக்கத்தில், தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் கூட நிர்பந்தப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது.

ரஜினி இப்போதைக்கு எந்தக் கட்சியையும் சாராதவர். ஒரு தேர்தலில் மோசமானவராக இருந்த ஜெயலலிதா, அடுத்த தேர்தலில் மக்களால் ஏற்கப்பட்ட முதல்வராகும்போதும், அவரை ரஜினி ஆதரிப்பதிலோ அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலோ தவறென்ன?

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ரஜினியை பொன்னர்- சங்கர் படம் பார்க்க கலைஞர் அழைத்தார். ரஜினியோ வாக்குப்பதிவு முடிந்ததும் வருகிறேன் எனச் சொல்லிவிட்டார்.

வாக்குப்பதிவு நாளில் காலையிலேயே மாற்றம் தேவை என டிவியில் பேட்டியளித்துவிட்டு, ரஜினி இரட்டலைக்கு வாக்களித்தது எல்லா டிவிக்களிலும் வீடியோவாகவும், செய்தியாகவும் வந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு, கலைஞர்தான் முதல்வராக இருந்தார்.

ஆனால் ரஜினி எதையும் பொருட்படுத்தவில்லை. அன்று மாலையே கலைஞரோடு பிரசாத் லேபில் அமர்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்தார்.

அவர்தான் ரஜினி..

அவரிடத்தில் பொய்யில்லை.. பயமும் இல்லை. நேர்மை மட்டுமே இருக்கிறது. அந்த நேர்மையாளர் நாம் விரும்புகிற ஒரு முடிவைத்தான் எடுக்கவேண்டும் என்று நினைப்பது எத்தனை பெரிய அபத்தம்.

Jayalalithaa arrives to take oath as the Chief Minister of Tamil Nadu in Chennai, India on May 23, 2015. She will be sworn in as the Chief Minister for the fifth time. (SOLARIS IMAGES)

இந்த நாட்டில் கொஞ்சம் நேர்மையோ அறமோ கொள்கையோ இல்லாத அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தேர்தல் ஒவ்வொரு முகமூடி மாட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. மக்கள் பணத்தில் பிழைப்பு நடத்தி வருகின்றன.

அவர்களிடம் கேள்வி கேட்கத் துப்பில்லாதவர்களே, நேர்மையின் இலக்கணமாகத் திகழும் ரஜினியை நோக்கி எதற்கெடுத்தாலும் கேள்வி எழுப்புகின்றனர், அல்லது அவரை இழுத்து விடுகின்றனர்.

ஜெயலலிதா மேடையோ, கருணாநிதி மேடையோ அல்லது மோடி மேடையோ.. எந்த மேடையாக இருந்தாலும், ரஜினி இருந்தால் அது அவருடைய மேடைதான். எந்த மேடையிலும் அவர் நிறம் மாறியதில்லை.. அவர் வாய்சும் மாறியதில்லை.

இதனை ஏற்கெனவே 2012-ல் ஒரு கட்டுரையாக என்வழியில் பதிவு செய்துள்ளேன். இன்று அந்தப் பதிவை யார் யாரோ எடுத்து அவர்களின் எழுத்தாகப் பதிவு செய்து வருகிறார்கள் சமூக வலைத் தளங்களில்.

எனவே எனது அந்தப் பதிவை இங்கே மீண்டும் தருகிறேன்.

 

ஜெ மேடையோ, கலைஞர் மேடையோ.. ரஜினி எனும் நேர்மையாளர் பேச்சு இப்படித்தான் இருக்கும்!

rajini-msv-jayatv-envazhispl10-Copy-580x385

ஜினியை ஏன் விமர்சனங்கள்.. எதிர்ப்புகள் ஒன்றும் செய்வதில்லை தெரியுமா? அது அவரது அதிகபட்ச நேர்மை.. ‘உன்னால் எனக்கொன்றும் ஆகவேண்டியதில்லை… என்னால் உனக்கு ஆகப்போவதும் ஒன்றுமில்லை. எனக்கு நான் நேர்மையாக இருந்தால் போதும்,’ என்ற நினைப்புதான் அவரை அவராகவே இருக்க வைக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் பேசிய பேச்சு!

வரிசையாகப் பேசிய எல்லோருமே – இளையராஜா தவிர – கொஞ்சமல்ல, ரொம்பவே செயற்கையாக, ஒருவித பயத்துடனே பேசிக் கொண்டிருக்கையில், ரஜினியின் பேச்சில் அப்படி ஒரு யதார்த்தம்.

‘ரஜினி – கமல் காம்பினேஷன்’ காலத்துக்குப் பின் வந்த ரஜினியின் சூப்பர் ஹிட் படங்கள் பில்லா, தீ, போக்கிரிராஜா, பொல்லாதவன் போன்றவற்றுக்கெல்லாம் எம்எஸ்விதான் இசை.

கடைசியாக இருவரும் இணைந்த படம் முக்தா சீனிவாசன் இயக்கிய சிவப்பு சூரியன்.
எம்எஸ்வி – ராமமூர்த்தி பற்றி அலங்காரமாக எதுவும் பேசவில்லை ரஜினி. ஆனால் சாகாவரம் பெற்ற பிறவிகள் வரிசையில் அவர்களை வைத்துவிட்டார்.
பொதுவாக அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் நிற்கும் மேடை அரசியலாகிவிடுகிறது.. அவர் பேச்சிலும் அரசியல் தலைவர்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால் நேற்றைய பேச்சு நிச்சயம் அரசியல் அல்ல!

இந்த மேடையில் இறப்புக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், கலைஞர்கள் பற்றிப் பேசும்போது, காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன் வரிசையில் எம்எஸ்வியையும் வைத்த ரஜினி, மேடைக்கு ஒரு பேச்சு என்பது தன் வழக்கமல்ல என்பதை உணர்த்த நினைத்தாரோ.. அல்லது அவருக்கே உரிய நேர்மையின் வெளிப்பாடோ… இந்த தலைவர்கள் வரிசையில் கருணாநிதியையும் அவர் வைத்தார். அதுவும் அரசியலில் கருணாநிதியை தனது ஜென்ம எதிரியாக நினைக்கும் ஜெயலலிதா முன்னிலையில்.

கருணாநிதியின் பெயரை ரஜினி அந்த மேடையில் உச்சரித்தபோது, அதுவரை எல்லாவற்றுக்கும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். காமிரா முதல்வர் முகத்தைக் காட்ட, அவர் ஆர்வத்துடன் ரஜினி பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

தான் அனைவருக்குமே பொதுவானவன்தான். யார் நல்லது செய்தாலும் சரி.. மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதை அவர் பகிரங்கமாகவே உணர்த்தியிருக்கிறார் இதன் மூலம்.

ஒரு தலைவரின் மேடையில், மாற்றுக் கட்சித் தலைவரைப் புகழ்வது.. பாராட்டுவது ரஜினிக்குப் புதிதல்ல. ஏன், ஜெயலலிதாவே நேருக்கு நேர் நின்று விரல் நீட்டி, ‘தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் அவர்களே’, என்றவர்தான் ரஜினி.
அதன் பிறகு, கருணாநிதி முதல்வராக வீற்றிருந்த ‘சிவாஜி வெள்ளி விழா மேடை’யில், மறக்காமல் ‘இந்தப் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கி என்னைப் பாராட்டிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றி’ என்று ரொம்ப கூலாக சொன்னார்!

அதே கருணாநிதி முதல்வராக இருக்கும்போதுதான், ‘உங்க பேரைச் சொல்லி மிரட்டிக் கூப்பிடறாங்க,” என்று அஜீத் முறையிட்டபோது, கருணாநிதியின் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்.

rajini-jaya-2

அந்த விழாவிலேயே, ஜெயலலிதா திரையுலகினருக்காக நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டு, அவருக்கு நன்றியும் சொன்னவர் ரஜினி.

சிவாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், அப்போதுதான் திமுகவை எதிர்த்து அரசியல் நடத்த ஆரம்பித்திருந்த விஜயகாந்தை வாழ்த்தவும் ரஜினி தவறியதில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. அது இளைஞன் விழா. சத்யம் அரங்கில் முதல்வர் கருணாநிதி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த நேரம். வெளியே பேய் மழை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. கிட்டத்தட்ட 1 வார கால மழை. மக்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தன் முறை வந்தபோது, “முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும். வெளிய மக்கள் படாத பாடுபட்டுக்கிட்டிருக்காங்க.. சாப்பாடு, கரண்ட், ரோடு வசதியில்லே.. நான் அதிக நேரம் பேச எடுத்துக்கல,” என்று மகா நாகரீகத்துடன் இடித்துக் காட்டியவர் இதே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்!

ரசிகர்கள் மட்டுமல்ல, ரஜினியை விமர்சிப்பவர்களும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் விஷயம் இது.

ஒரு முறை ரஜினி இப்படிக் குறிப்பிட்டார்…

“ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்னு கமிட் பண்ணிக்கிட்டா, அங்க போயி என்ன பேசறதுண்ணு நிறைய யோசிச்சு வைப்பேன். காலையிலே வரும்போதும், மேடையில் அமர்ந்திருக்கும் போதும்கூட  நினைவிருக்கும். ஆனா, மைக்கைக் கையிலெடுத்ததும், நான் நினைச்சிட்டிருந்த அத்தனையும் எனக்கு மறந்துடும். ப்ளாங்க்.. அப்போ என் மனசுல படறதை, உண்மையா நினைக்கிறதை டக்குனு பேசிடுவேன்!”

-நேர்மை, உண்மைக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!!

என்வழியில் இந்தக் கட்டுரை வெளியான லிங்க்: http://www.envazhi.com/rajini-the-name-of-honest/

வினோ
என்வழி ஸ்பெஷல்
25 thoughts on “ரஜினி என்ற நேர்மையாளருக்கு வேஷமோ நடிப்போ தெரியாது!

 1. Naresh

  உண்மைதான் நேர்மைக்கு நடிப்போ வேஷமோ போட தெரியாது
  நன்றி வினோ

 2. nagendra

  தலைவரின் நேர்மை யாருக்கு வரும் !

 3. Chandran

  தலைவர் நடிக்கிறார் அல்லது வேஷம் போடுகிறார் என்று சொல்லவில்லை.ஜெயா செய்த தப்புக்கு தஹ்ண்டனை பெற்றுவிட்டு வெளியே எப்படியோ வந்துவிட்டார்.அவருக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததுக்கு எல்லாம் வாழ்த்து சொல்ல வேண்டுமா?சோ பேச்சை தலைவர் கேட்ககூடாது.

 4. arulnithyaj

  இந்த காலத்தில் நேர்மை நியாயம் பேசுபவர்கள் தான் அதிகமாக கிண்டல் பண்ண படுகிறார்கள் தலைவரும் அதுக்கு விதிவிலக்கல்ல ..மனசாத்சியுடைய மிக சிறந்த ஆத்மா அவர் ..அவர் என்றும் வாழ்வார் ..நன்றி வினோ அண்ணா

 5. Kumar

  அதெல்லாம் சரிதான் வினோ! இப்போதும் ஜெ தப்பானவர்தான். அன்று இருந்த தைரியம், இன்று தலைவருக்கு இல்லாமல் போனது ஏன்? ஜெவின் விடுதலை நியாயமானது இல்லை என்பது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும்! தான் கலந்துகொண்டதன் மூலம், ஜெ விடுதலையை தலைவர் நியாயப்படுத்துவது போல் ஆகிவிட்டதே! அவர் ஜெவை எதிர்த்து பேசவேண்டாம். ஆனால் இப்படி மறைமுகமாக ஆதரிக்காமல் இருக்கலாமே! அரசியல்வாதிகளை பகைத்துக்கொள்ள தலைவர் விரும்பவில்லை. அழைத்தும் போகாவிட்டால் ஜெ கோபப்படுவார். அது அவருடைய அடுத்த பட வெளியீட்டை பாதிக்கும் என பயப்படுகிறார் தலைவர். அதுதான் உண்மை! விஸ்வரூபம், தலைவா படங்களுக்கு அதுதான் நடந்தது. நீங்கள் சொல்வதெல்லாம் சப்பைக்கட்டு!

 6. SwaminathN

  Mr. Kumar

  Thanks… You have exactly echoed my thoughts.

  As a fan, we all have the same feeling… however due to over love and affection, few of us try to convince ourselves with justification to “Superstar’s” stand today… that’s all… overall, none of the fans are happy about “Superstar’s” stand today. Few of us tell it openly like “Superstar” and few of us not able to accept the fact and give justification.

 7. மிஸ்டர் பாவலன்

  உலக நாயகனுக்கு எதுவும் அழைப்பு வரவில்லை என தகவல் வந்தது..

  சூப்பர் ஸ்டார் ரஜினி மீது அம்மா அதிகம் மதிப்பு வைத்திருப்பது உண்மை!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. ராதா ரவி

  உண்மை உண்மை உண்மை. நான் கடந்த 35 வருடங்களாக தலைவர் ரஜினி அவர்களின் ரசிகனாக உள்ளேன். அதில் கடந்த 25 வருடங்களாக நான் ரஜினி அவர்களை கடவுளாக தான் கருதுகிறேன். வணங்குகிறேன். நான் பார்த்த வரையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை போன்று ஒரு நேர்மையான தன்னலம் கருதாத தலைவரை இதுவரையில் நான் பார்த்ததுமில்லை. பார்க்கபோவதுமில்லை. நான் அறிந்த வரையில் ரஜினி அவர்களுக்கு பயம் என்பதே கிடையாது. தன் மனதில் பட்டதை / உண்மையை நேருக்கு நேராக பேசுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள். ஒரு அரசு சிறப்பு அழைப்பாளர்களாக தலைவர் ரஜினி அவர்களை அழைத்தது. அந்த வகையில் தலைவர் ரஜினி அந்த விழாவில் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
  (குறிப்பு: எனக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றும் தான். நான் எந்த கட்சியையும் சாராதவன். எனது கட்சி அன்றும் இன்றும் என்றும் என் உடம்பில் உயிர் உள்ளவரை ரஜினி ரஜினி ரஜினி தான்).

 9. Arul

  தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்றது குறித்த சிலரின் கேலி கிண்டல்களுக்கு பதில்:-
  1)ஜெயலலிதா ‘மீண்டும்’முதல்வரானால் தமிழக ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று சொன்னவர் ஆயிற்றே என்பது சிலரின் கேள்வி-அவர் கூறியது அந்த தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்-ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தரும் தண்டனை என்பது ஒரு தேர்தல் தோல்வி மட்டுமே,அவர் எவ்வளவு ஊழல் செய்திருந்தாலும் அதற்கு அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை அவர்களுக்கே மாற்றி மாற்றி தருவது என்பது கண் கூடு 1989முதல் 2011 வரையிலான தமிழக தேர்தல்களை பார்த்தாலே இது தெளிவாக தெரியும்.அப்படி இருக்க ரஜினி மட்டும் கடைசி வரை எதிர்த்துக் கொண்டேயிருக்க அவர் ஒன்றும் ஜெயலலிதாவிற்கு ஜென்ம விரோதியில்லையே.
  2) தைரியலட்சுமி என்று ஜெயலலிதாவை பாராட்டி விட்டாரே என்பது சிலரின் கேள்வி.வி.சி.டி ஒழிப்பு,வீரப்பனை ஒழித்தார் என்று சில விஷயங்களுக்காக திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் பாராட்டப்பட வேண்டிய சில விஷயங்களை நடுநிலையோடு பாராட்டினார்,திரையுலகில் வந்து 40 ஆண்டுகள் ஆன நிலையில் தன்னை எதிர்த்தவர்களை கூட அவர் வசை பாடியதில்லை,இது தான் அவர் பண்பு,நாகரிகம்.மேலும் கலைஞர் முதல்வராக இருந்த போது அவர் முன்னிலையில் ஜெயலலிதாவையும்-ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அவர் முன்னிலையில் கலைஞரையும் பாராட்டி பேசிய ஆண்மை மிக்கவர் ரஜினியை தவிர வேறு எவருமில்லை.
  3. தன் படம் வெளியாவதற்காகவோ அல்லது தன் சுயநலத்திற்காகவோ இதுவரை சூப்பர் ஸ்டார், கலைஞர்-ஜெயலலிதா மட்டுமல்ல வேறு எந்த அரசியல்வாதியிடமும் கையேந்தியதில்லை.
  இதையெல்லாம் உணர்ந்திருந்தாலும் சிலர் மீண்டும் மீண்டும் திரித்து கூறுவதால் சூப்பர் ஸ்டாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்க முடியாது.தமிழ்நாட்டில் இந்தியாவில் மட்டுமல்ல-உலகிலேயே ஒரு துறையில் 38 ஆண்டுகள் “உச்சத்திலேயே”இருப்பவர் தலைவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே.வாழ்க ரஜினி.
  நன்றி N.ரஜினிராமச்சந்திரன்
  http://www.twitlonger.com/show/n_1smb8fk

 10. கிரி

  வினோ புரிந்து கொள்பவர்கள் விளக்கம் கொடுக்காமலே புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ளாதவர்கள் என்ன கூறியும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

  நாம் நினைக்கும் படியே தலைவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. தலைவருக்கு என்று தனிப்பட்ட கருத்துகள் இருக்கும் அதில் நம் எண்ணங்களை திணிப்பது என்பது எந்த விதத்திலும் சரியில்லை.

  இதை தலைவர் ரசிகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 11. முகில்வண்ணன்

  தலைவா தலைவா தலைவா
  வெற்றி என்றுமே உங்களுக்கு சொந்தம்.
  நாங்கள் இருப்போம் என்றும் உங்கள் பின்னோடு.

 12. சேகர்

  தலைவா வாருங்கள். ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
  வெற்றிக்கு ஒருவன் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க.

 13. குமரன்

  ஜெயலலிதா மேடையோ, கருணாநிதி மேடையோ அல்லது மோடி மேடையோ.. எந்த மேடையாக இருந்தாலும், ரஜினி இருந்தால் அது அவருடைய மேடைதான்………….

  மிகச் சரி

 14. srikanth1974

  திரு.ராதா ரவி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

 15. srikanth1974

  என் மனதில் தோன்றிய பல விஷயங்களை உங்கள் கருத்துக்கள் மூலம்
  அப்படியே வெளிப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி அருள் .

 16. jay jay

  ரஜினி சொந்தமாக ஒரு கட்சி தொடங்கி, அந்த மேடையில் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஏன் எதிர்த்து பேசவில்லை.அதற்க்கு தைரியம் இல்லை என்று தமிழக மக்களுக்கு தெரியும்.அடுத்த தேர்தலில் ரஜினி போட்டியிட தயாரா? அப்படிஎன்றால் அவரது நேர்மையையும் துணிச்சலையும் தமிழகம் ஏற்றுக்கொண்டு வெற்றிபெற செய்வார்கள்………

 17. மிஸ்டர் பாவலன்

  //அடுத்த தேர்தலில் ரஜினி போட்டியிட தயாரா? // (Jay . Jay .)

  சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் அரசியலில் போட்டியிடனும் என்று
  இல்லை. கேப்டன் அரசியலில் இறங்கினாலும் பல பிரச்சினைகளில்
  அவர் நிலைப்பாடு என புரிந்து கொள்வது கடினமாக உள்ளது!
  எதிர்க் கட்சித் தலைவர் என்றாலும் அவர் சட்டசபை விவாதங்களில்
  அதிகம் கலந்து கொள்ளவில்லை. அதனால் தான் மேற்கண்ட கருத்து!
  ரஜினி திரைப்படங்களிலேயே தொடர்ந்து நடிப்பது ரசிகர்களுக்கு நல்லது!

  நன்றி வணக்கம்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 18. Rajini jagan

  Mr.Arul Reply is really very nice & good. Really Rajini is the man & He is the only one super star.

 19. S.V.RAMASUBRAMANIAN

  எஸ், ஹி இஸ் ரியல் சூப்பர் ஹீரோ ……

 20. Hari

  Rajini arasiyalukku vantha admk DMK ellam kaanama poiduvinga,. Nenachi paarunga oru payalukkum deposit irukkathu

 21. M.Kamatchi Nathan

  Leader (Thalaivar) should lead everybody
  Shouldn’t hear anybody
  Thalaivar the mass nobody can change the attitude even god

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *