BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி… ஜனவரியில் படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி… ஜனவரியில் ஷூட்டிங்! 

Endhiran-Bus

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட வேலைகள் கனஜோராக ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் என்று மீடியா பெரும் அக்கப்போரே நடத்தி வருகிறது.

எந்திரனில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார். அதனால் அவர்தான் இரண்டாம் பாகத்திலும் தொடர்வார் என்று ஒரு தரப்பு எழுதிக் கொண்டிருக்க, இல்லையில்லை கத்ரீனா கைஃப்தான் ரஜினியின் புதிய ஜோடி என்று இன்னொரு பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எந்திரன் 2 படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

‘எதற்கு வம்பு.. இந்தப் படத்தில் தீபிகா, கத்ரீனா இருவருமே நடிக்கிறார்கள்’ என்று இப்போது புதிதாக சிலர் கிளம்பியுள்ளனர்.

இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை ஷங்கருடன் இணைந்து எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

எந்திரன் 2 திரைக்கதை வேலைகள் முழுமையடைந்துவிட்டதாக சமீபத்தில் ஜெயமோகன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போகும் நடிகர், நாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்களை டிசம்பரில் வெளியிடவிருக்கிறார்களாம்.

அதே போல இப்போதைக்கு எந்திரன் 2 என்று அழைக்கப்பட்டாலும் படத்துக்கு வேறு தலைப்பை பதிவு செய்துள்ளாராம் ஷங்கர்.

-என்வழி




4 thoughts on “சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி… ஜனவரியில் படப்பிடிப்பு!

  1. rajagopalan

    News coming about enthiran 2 producer is not good…
    i don’t want anymore problems to thalaivar movie…
    everybody knows what happened to kathi…
    till date i had not seen kathi…;
    if lyca is producer, i wont see enthiran 2 also 🙁

  2. மு.முத்துக்குமார்

    தயவு செய்து லைக்கா தயாரிப்பு என்றால் தலைவரிடம் எடுத்து கூறவும். லைக்கா என்றால் கண்டிப்பாக பிரச்சினை வரும். கத்தி படத்தை லைக்கா காக தான் புறக்கணித்தோம். தலைவர் படம் புறக்கணிக்க முடியாது. ஆரம்பத்துலையே உங்களால் எடுத்து சொல்ல முடியும் சங்கர் சார். படம் ஆரம்பித்த பின்னால் கஷ்டம்.

    நன்றி.

  3. Rajesh

    Thalaivar knows the issues if they use Lyca as producer. But notably few weeks before got to see Lyca advt in CM’s banner. Also my guess is Oscar ravichandran might do as he has earlier done movies with Shankar and also thalaivar needs a person who take release all areas by himself without selling to avoid lingaa issues. Oscar Ravi is famous in releasing by himself and with promotions. Let’s see what our thalaivar thinks. Once he decides then he will announce clearly. First we need official confirmation on ehndiran 2. Let’s wait and see in meantime lets Enjoy Kabali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *