BREAKING NEWS
Search

மும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா!

மும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா.. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

மும்பை: மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக ஆடியது. 413 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அந்த அணியின் பீட்டர்சன், குக் ஆகியோர் சதமடித்தனர்.

அதன் பின்னர் நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தது. மேலும் 25 ரன்கள் எடுப்பதற்குள் மீதி விக்கெட்டுகளையும் இழந்து, 142 ரன்களில் சுருண்டது இந்தியா.

இந்திய அணியின் கவுதம் காம்பீர் மட்டும் 65 ரன்கள் எடுத்திருந்தார். சொந்த மைதானம் என்ற போதும் சச்சின் டெண்டுல்கர் சொதப்பினார். இங்கிலாந்தின் பனேசர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற 57 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது. ஆரம்ப ஓவர்களிலேயே அதிரடியாக இந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அந்த அணி எட்டியது.

இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துவிட்டது. 2 இன்னிங்ஸிலும் இங்கிலாந்தின் பனேசர் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இங்கிலாந்து அணி, இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது.

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா 327 மற்றும் 142

இங்கிலாந்து 413 மற்றும் 58

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி




One thought on “மும்பை டெஸ்ட்: படுதோல்வியைத் தழுவியது இந்தியா!

  1. மிஸ்டர் பாவலன்

    //சொந்த மைதானம் என்ற போதும் சச்சின் டெண்டுல்கர் சொதப்பினார்//

    மனோகரன் எங்க இருக்காரு?! அவரைக் கொஞ்சம் கூப்பிடுங்க!

    மனோகரன் என்ன பதில் சொல்றார்னு பார்ப்போம் 🙂

    -== மிஸ்டர் பாவலன் ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *