BREAKING NEWS
Search

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘எந்திரன்-2′ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

‘எந்திரன்’ முதல் பாகம்தான், இதுவரையிலும் அதிக வசூல் செய்த தமிழ்ச் சினிமா என்கிற சாதனையை கைவசம் வைத்திருக்கிறது. அதே படத்தின் 2-ம் பாகத்தை ஷங்கர் மீண்டும் கையில் எடுக்கிறார் என்றபோதே இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு பெரிதும் எகிறிவிட்டது.

ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்தில் நடித்து வந்த ரஜினி நேற்றைய தினம்தான் கோவாவில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். அடுத்த நாளே சென்னை ஈவிபி தீம் பார்க்கில் நடைபெற்ற ‘எந்திரன்-2’-வின் முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டார்.

இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். மேலும் முக்கியமான ஒரு வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறாராம்.

படத்திற்கு தொழில் நுட்பக் கலைஞர்களாக சாதனையாளர்கள் பலரை சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவை நீரவ் ஷா கையாள்கிறார். எடிட்டிங் – ஆண்ட்னி, ஒலி வடிமைப்பு – ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி. இசை – ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். கலை – முத்துராஜ், VFX – சீனிவாஸ் மோகன். இதன் கூடுதல் பணியில் ‘Life of Pi’ படத்தில் பணியாற்றிய fame John Huges-ம், Taufilms நிறுவனத்தைச் சேர்ந்த Walt-ம் பணியாற்றவுள்ளனர்.

இந்தப் படத்தில் முதல் முறையாக ஷங்கரின் கை கோர்க்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். படத்திற்கு வசனம் அவர்தானாம்.

படத்திற்கு உடைகள் வடிவமைப்பு செய்யவிருப்பவர் ஹாலிவுட் டிஸைனரான Mary.E.Vogt. இவர் பிரபலமான ஹாலிவுட் வெற்றி படங்களான ‘Tron’, ‘Watchman’ படங்களில் பணியாற்றியவர் .

இந்தப் படம் 3-டி எனப்படும் முப்பரிமாண தொழில் நுட்பத்திலும் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்காக ‘Jurassic Park’, ‘Iron Man’, ‘Avengers’ போன்ற படங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த புகழ் பெற்ற ‘Legacy Effects’ நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்தின் துவக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் விரும்பியிருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னையில் பெய்த மழை, வெள்ளப் பாதிப்பினால் சென்னைவாழ் மக்களின் துயர நிலையைப் பார்த்து துவக்க விழாவை ரத்து செய்துவிட்டார்களாம்.

இந்த ‘எந்திரன்-2’ திரைப்படம் 2017-ல் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுறது.
9 thoughts on “லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0

 1. Rajagopalan

  Boss Please tell me one thing…Manasatchi Padi…
  You scolded Vijay for selecting LYCA or Not….
  Dont mistake me for telling this….Adhe Thapai Thalaivar Panna Nalladha?

 2. மிஸ்டர் பாவலன்

  லைகா நிறுவனம் உலக நாயகனை டைரக்சன், கதை, வசனம் செய்து
  அவர் நடிப்பில் ஒரு பெரிய பட்ஜெட் படம் எடுத்து சோதனை முயற்சி செய்தால்
  தமிழில் ஒரு புதிய படம் வெளிவரலாம். த்ரிஷா நடித்தால் இன்னும் சூப்பர்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 3. srikanth1974

  திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு வணக்கம்’
  லைகா நிறுவனம் உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களின் மருதநாயகம் தயாரிக்க முன்வந்திருப்பதாக செய்திகளில் படித்தேன்.

 4. srikanth1974

  திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு வணக்கம்’
  லைகா நிறுவனம் உலக நாயகன் திரு.கமல் ஹாசன் அவர்களின் மருதநாயகம் படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக செய்திகளில் படித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *