BREAKING NEWS
Search

தமிழகத்தில் 73 சதவீத வாக்குப் பதிவு: அமைதியாக நடந்தது பொதுத் தேர்தல்!

தமிழகத்தில் 73 சதவீத வாக்குப் பதிவு: அமைதியாக நடந்தது பொதுத் தேர்தல்!

24TH_POLL3_1860700g
சென்னை: நாட்டின் 16 வது மக்களவைக்கான தேர்தலின் 6வது கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடந்தது.

இதில் 12 மாநிலங்களில் 117 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது.

இதில், சாதனை அளவாக 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக தர்மபுரியிலும், குறைந்தபட்சமாக தென்சென்னையிலும் வாக்குகள் பதிவாகின.

புதுவையில் அதிகபட்சம்க 82 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

பிற மாநிலங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் (6 தொகுதிகள்) 82 சதவீத வாக்குகள் பதிவாகின. மத்திய பிரதேசத்தில் (10 தொகுதிகள்) 64.04 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் (ஒரு தொகுதி) 28 சதவீதமும், மகாராஷ்டிராவில் (19 தொகுதிகள்) 55 சதவீதமும், ஜார்க்கண்டில் (4 தொகுதி) 63 சதவீதமும், ராஜஸ்தானில் (5 தொகுதி) 59.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இன்னும் 3 கட்ட வாக்குப் பதிவு பாக்கியுள்ளது. அவையும் முடிந்தபிறகு வரும் மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, பிற்பகலுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

-என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *