BREAKING NEWS
Search

விக்ரமின் தாண்டவம்… ஊனத்தையே சாதனையாக மாற்றிக் காட்டிய டேனியல் கிஷ்!

விக்ரமின் தாண்டவம்… ஊனத்தையே சாதனையாக மாற்றிக் காட்டிய டேனியல் கிஷ்!

தாண்டவம் பட பிரஸ் மீட்டுக்கு வந்திருந்தார் விக்ரம். தொகுப்பாளினி ரம்யா சொன்னதுபோல, அவரது கெட்டப்பை அடையாளம் காண அப்படியொன்றும் நமக்கு சிரமம் இல்லை என்றாலும், மனிதர் அநியாயத்துக்கு இளமைப் பொலிவுடன் அசரடித்தார்.

ராஜபாட்டையில் பார்த்த விக்ரமா இவர்… குட் நல்ல முன்னேற்றம்தான்!

தாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக வருகிறார் விக்ரம் என்று முந்தைய பிரஸ் மீட்டில் அறிவித்திருந்தனர்.

இந்த முறை அப்படி கண் தெரியாதவரைப் போல நடிக்க பயிற்சி கொடுத்த டேனியல் கிஷ் என்ற அமெரிக்கரை சென்னைக்கு வரவழைத்து ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை இன்று ரெஸிடென்ஸி டவர்ஸில் நடத்தினர்.

7 மாத குழந்தையாக இருந்தபோது தன் ஒரு கண்ணையும், 13 மாதத்தில் இன்னொரு கண்ணையும் ரெட்டினா ட்யூமர் நோயில் இழந்தவர் இந்த டேனியல் கிஷ்.

ஆனால் அவர் பெற்றோர்கள் அவரை கண்ணில்லாத குழந்தையாக ஒரு போதும் நினைத்ததில்லையாம். மற்ற சாதாரண குழந்தைகள் போலவே விளையாடவும், கல்வி கற்கவும் அனுப்பி உற்சாகப்படுத்தியுள்ளனர். அதன் விளைவு கண்கள் தெரியாவிட்டாலும், ஒலியுணர்வின் மூலம் எதிரில் இருப்பது அல்லது நிகழ்வதை துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ப எச்சரிக்கையுடன் இருப்பாராம் டேனியல்.

இதுதான் பின்னாளில் அவரை எகோ லொகேஷன் எக்ஸ்பர்ட்டாக மாற்றிதாம்.

அதென்ன எகோ லொகேஷன்…

வவ்வால்கள் எப்படி ஒலியின் துணைகொண்டு செயல்படுகின்றனவோ, அதுபோல பார்வையற்ற ஒருவரால் ஒலியின் எதிரொலிப்பை வைத்து பார்வைக் குறைபாடே தெரியாத அளவுக்கு வசிக்க முடியும் என்பதுதான் இந்த எகோ லொகேஷன்.

World Access for the Blind என்ற அமைப்பின் தலைவராக உள்ள டேனியல் கிஷ், இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். பல்வேறு ஆராய்ச்சிகளில் இவரது எகோ லொகேஷன் யுத்தியைப் பயன்படுத்தி வெற்றி கண்டு வருகிறார்களாம்.

இப்படி ஒருவரை சினிமாவுக்குப் பயன்படுத்தியிருப்பது இதுதான் முதல் முறையாம்!

சரி, இந்த எகோ லொகேஷனை வைத்து என்னதான் சாதித்திருக்கிறார் டேனியல் என்ற கேள்வி எழுகிறதல்லவா… உண்மையில் பார்வையுள்ளவர்கள் செய்வதைவிட பத்துமடங்கு பெரிய சாதனையை இவர் செய்திருக்கிறார். அதல பாதாளம்.. இம்மி பிசகினாலும் விழுந்து விவும் அபாயம் உள்ள மலைகளில் நடக்கிறார்…செங்குத்தான அருவிப் பாறைகளில் ஏறுகிறார். பைக் ஓட்டுகிறார்.. கூடைப் பந்தாடுகிறார்… இப்படி ஏகப்பட்ட சாகஸங்கள்!

இதையெல்லாம் விட முக்கியம், தன்னைப் போல பார்வைக் குறைவாடு உள்ள பல நூறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த யுத்தியைக் கற்றுக் கொடுத்து அவர்களின் பார்வைக் குறையைப் போக்கி வருகிறார். ஒரு நாள் இந்தியா,
ஒரு நாள் வியன்னா, அடுத்த நாள் பெர்லின், பாரிஸ், நியூயார்க்.. என பறந்து கொண்டே இருக்கிறார் டேனியல். இதன் மூலம் உலகெங்கும் பலருக்கு ‘பார்வை’ அளித்து வருகிறார்!

ஆரம்பத்தில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரிதாக இம்ப்ரஸ் ஆதாக விக்ரம், ஒரு மணி நேரத்துக்குப் பின் ‘என்னைப் பெரிதாகக் கவர்ந்த முன்னோடி,” என பாராட்ட ஆரம்பித்தவர்தான்… இன்னும் நிறுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

எல்லாம் சரி… இந்தப் படத்தின் கதையை யாரோ ஒரு உதவி இயக்குநரிடமிருந்து சு
ட்டுவிட்டதாக புகார் வந்து பெரிய பஞ்சாத்தே நடந்ததாமே… அதுபற்றி மூச்சுக் காட்டவில்லையே இயக்குநர் விஜய்யும் தனஞ்செயனும்!

-என்வழி சினிமா செய்திகள்

தாண்டவம் பிரஸ் மீட்டில் டேனியல் கிஷ் – படங்கள்

விகரம் -அனுஷ்கா – எமி ஜ்க்ஸன்… தாண்டவம் பட புதிய ஸ்டில்கள்
2 thoughts on “விக்ரமின் தாண்டவம்… ஊனத்தையே சாதனையாக மாற்றிக் காட்டிய டேனியல் கிஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *