BREAKING NEWS
Search

‘பணத்தையல்ல, நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!’

நல்ல நண்பர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்!

thalaivar-smile
“ஒரு பணக்கார நண்பனுக்கு அதிசயமாக ஒரு ஏழை நண்பனும் இருந்தான். பணக்கார நண்பன் எப்போதும் பணம் பற்றியே பேசிக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் அந்த நண்பனுக்கு திடீர் என்று பண நெருக்கடி ஏற்பட்டது. அது தெரியாமல், வழக்கம்போல வருகிற மாதிரி, ஏழை நண்பன் அங்கு வந்தான். உரிமையுடன் பணக்கார நண்பனைப் பார்த்து, “எப்படிடா இருக்கே?” என்று கேட்டான்.

பணக்கார நண்பனோ அப்போது இருந்த பண நெருக்கடியில் எரிச்சலாகி, “எனக்கு இப்போது அவசரமாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டான். உடனே, “அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?” என்று ஏழை நண்பன் கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு அதிர்ச்சி. நம்ப முடியாமல் ஏழை நண்பனைப் பார்த்தபோது, அவனோ, அப்போதே யாரிடமோ போனில் பேசினான். சரியாக அரை மணி நேரத்தில் ஒருவர் வந்து ஏழை நண்பனிடம் 20 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டுப்போனார்.

பார்த்துக் கொண்டிருந்த நண்பனுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. அவனிடம் பணத்தைக் கொடுத்த ஏழை நண்பன், “நண்பா! நீ எப்போதுமே பணத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டிருந்தாய். நான் எப்போதும் நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொண்டிருந்தேன்.

அதனால்தான் நான் கேட்டதும் பணம் வருகிறது” என்று சொன்னான்.

என்னைப் பொறுத்தவரை ஒருத்தருக்கு அமைகிற நல்ல நண்பர்கள்தான் அவரோட உண்மையான பலம்!

-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (யார் பட நூறாவது நாள் விழாவில், 1985)

என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “‘பணத்தையல்ல, நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!’

  1. RAVI

    உண்மையான நல்ல நண்பர்களை பற்றி தலைவரின் கருத்து மிக சரி. 1985-ம் ஆண்டிலேயே தலைவர் எவ்வளவு தீர்க்கதரிசியாக கூறியுள்ளார்.

  2. Jey

    தலைவர் சொல்ற குட்டிக்கதைகளை தனி தொடர் பதிவாகா எழுதலாமே வினோ சார்…

  3. jawahar

    டியர் வினோ சார் …. தலைவர் மாதம் (டிசம்பர் ) ஏதும் விசேச கட்டுரை கிடையாதா…

    _______________

    நிச்சயம் உண்டு ஜவஹர்!

    -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *