BREAKING NEWS
Search

சகிப்புத்தன்மையற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

amarthiya-1

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது… விரும்பவுமில்லை என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.

நரேந்திர மோடிதான் வரும் தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ளார். அவரே பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதையும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டது பாஜக.

மோடியை முன் நிறுத்துவதை பாஜவுக்குள்ளேயே ஒரு பிரிவினர் எதிர்த்து வரும் நிலையில், நாட்டின் சமூக ஆர்வலர்கள், மத நல்லிணக்கவாதிகள், பொருளாதார அறிஞர்கள் என பல மட்டங்களிலும் மோடிக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதரா அறிஞரான அமர்த்தியா சென் கடுமையாக எதிர்த்துள்ளார் மோடியை.

அவர் இன்று அளித்த பேட்டியில், “மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை எப்படி நாட்டின் பிரதமராக ஏற்க முடியும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் அவர் பிரதமராவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் அவர் எதையுமே செல்லவில்லை.

சிறுபான்மையினருக்கு மட்டும் என்றல்ல… நான் சிறுபான்மையில் ஒருவன் இல்லை… பெரும்பான்மை மக்களுக்கும்கூட அவர் என்ன செய்துவிட்டார்? 2002-ல் அவர் செய்தது திட்டமிட்ட வன்முறை. மோடியை அங்கீகரிப்பதன் மூலம் அந்த வன்முறைக்கு சட்ட அங்கீகாரம் தரப்போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

இந்திய பிரதமராக விரும்பும் எந்த இந்திய குடிமகனுக்கும் இல்லாத பயங்கரமான வன்முறை பின்னணி மோடிக்கு உள்ளது. அவரை ஏற்கக் கூடாது.

குஜராத்தில் சில உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கலாம். ஆனால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் அந்த மாநிலம் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய.

சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும்பான்மை மக்கள் எண்ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை. முதலில் அவருக்கு வாக்களித்த குஜராத் மக்களின் வாழ்க்கைத் தரம், சகிப்புத்தன்மையை மேம்படுத்தும் வேலையைப் பார்க்கட்டும்,” என்றார்.

சில தினங்களுக்கு முன் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியில், 2002 கலவரங்களில் பலியானவர்களை காரில் பயணிக்கும்போது சக்கரத்தில் மாட்டிக் கொள்ளும் நாய்க்குட்டிக்கு ஒப்பிட்டு மோடி சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது நினைவிருக்கலாம்.

-என்வழி செய்திகள்
34 thoughts on “சகிப்புத்தன்மையற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

 1. Krishna

  “சில தினங்களுக்கு முன் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியில், 2002 கலவரங்களில் பலியானவர்களை காரில் பயணிக்கும்போது சக்கரத்தில் மாட்டிக் கொள்ளும் நாய்க்குட்டிக்கு ஒப்பிட்டு மோடி சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது நினைவிருக்கலாம்.”

  மோடி கலவரத்தில் பலியானவர்களை நாய்க்குட்டியுடன் ஒப்பிடவில்லை. காரில் செல்லும் போது ஒரு நாய்க்குட்டி அடிபடுவதை கூட தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது, அப்படியிருக்கும் போது பொது மக்கள் பலியாவதை எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும் என்று தான் சொன்னார். ஆனால் காங்கிரசும் காங்கிரசுக்கு வால் பிடிக்கும் Times Now, Hindustan Times, NDTV போன்ற ஊடகங்கள் தான் மோடியின் அறிக்கைக்கு ஒரு அபத்தமான விளக்கம் அளித்தன.

 2. தமிழன்

  உதாரணத்திற்கு கூட ’மனிதனை’ குறிப்பிட மறந்த மமதையாளர் . காரில் நாய்க்குட்டி மட்டும் தான் அடிபடுகிறதா என்ன?. மனிதர்கள் காரில் அடிபட்டு ப்லியாவது கண்களுக்கு தெரியவில்லையா?. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே!. சிறுபான்மையினரை நாயைப் போல் கேவலமாக நினைப்பதால் தான் நாய்க்குட்டி உதாரணம் வந்திருக்கும் போலும்.

  பதினைந்து வருடத்திற்கு முன்பிருந்த குஜராத்திற்கும் , இப்போதிருக்கும் குஜராத்திற்கும் 6 வித்தியாசம் கூட இல்லை.

  ஒரிடத்தில் நடந்த படுகொலையில் விழுந்த பிணங்களை, மாநிலம் முழுவதும் ஊர் ஊராக ஊர்வலம் அனுப்பி, வன்முறையை தூண்டிய ஒரே முதல்வர் மோடி மட்டுமே.

  இதையெல்லாம் தெரிந்து தான் அமெரிக்காக்காரன் விசா கொடுக்க மாட்டேன் என்கிறான். கொடுத்தா ஒபாமாவுக்கே அங்கே ஆப்பு ரெடியாடுமே.

 3. Raj

  என்வழிக்கு இது வேண்டாத வேலை. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை 7 ஆண்டுகளில் BJP செய்து இருக்கிறது. ஆகவே, ஒரு இந்திய குடிமகன் என்கிற முறையில் மோடி அவர்கள் பிரதமராக முழு தகுதி உடையவர் தான். யாருக்கு விருப்பம் இல்லையோ அவர்கள் BJP-க்கு ஓட்டு போடவேண்டாம். காங்கிரஸ் என்ன மத சார்பு அற்ற கட்சியா? இந்த அமர்த்தியா சென் காங்கிரசின் அடி வருடி.

 4. குமரன்

  ///சகிப்புத் தன்மையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நிலை உள்ளது என பெரும்பான்மை மக்கள் எண்ணுமளவுக்கு மோடி நடந்து கொள்ளவில்லை.///

  இது உண்மைதான். ஆட்சி அதிகாரத்தின் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர் தனது ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் அளவுக்கு நடந்து கொள்ளவேண்டும்.

  “பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண்” என்பது மனிதம் சார்ந்தது அல்ல என்பதை அவர் நிலா நிறுத்தத் தவறி விட்டார்.

  ///முதலில் அவருக்கு வாக்களித்த குஜராத் மக்களின் வாழ்க்கைத் தரம், சகிப்புத்தன்மையை மேம்படுத்தும் வேலையைப் பார்க்கட்டும்///

  இங்கே பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. குஜராத் மக்களின் சகிப்புத் தன்மையை எப்படி மேம்படுத்துவது என்பதை அமர்த்தியா சென் சொல்வாரா? கோத்ராவில் ஒரு டிரெயினையே உள்ளே இருக்கும் ஆண் பெண் குழந்தைகள் உள்படக் கொளுத்தும்போது சகிப்புத் தன்மை என்கே இருந்தது என்பதைப் பற்றிப் பேச மறக்கும் அமர்த்தியா சென் மனிதம் பற்றிப் பேசும் தகுதியை இழக்கிறார். ஒருவேளை அவரும் அமேரிக்கா சொல்லிக் கொடுத்ததைச் சொல்கிறாரோ, நோபல் பரிசைக் கொடுத்து அவரை விலைக்கு வாங்கி விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  ஒருவேளை, கீழவெண்மணியில் கொளுத்திய பின்னரும் தமிழகத் தலித்துகள் நாயுடுக்களை எதிர்க் கொளுத்துதல் செய்யாமல் இருந்தார்களே… அதுபோல இருக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லுவாரா அமர்த்தியா சென்? அப்படிச் சொன்னால் அவர் அமெரிக்காவின் கிளிப்பிள்ளை இல்லை என்று ஏற்கலாம். ஆனால், மதசார்பின்மை பேசும் எல்லா அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் ஒருதலைப் பட்சமாகவே பேசுவதுதான் மதச் சார்பின்மை என்று நினைக்கிறார்கள், நடக்கிறார்கள்.

  காங்கிரஸ் தலைவர் ஒருவர் சென்ற வாரம் சொல்கிறார், குஜராத் கலவரத்தால்தான் இந்திய முஜாஹுதீன் தோன்றியது என்று, சொன்ன மறுநாளே காங்கிரஸ் கட்சி அதற்கு மறுப்பு வெளியிடுகிறது. இது பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் போக்கு. 1984 இல் சீக்கியர்களைக் குறிவைத்து தில்லியில் இருந்து கோவை வரை தாக்கியதும், 1991 இல் தமிழகம் முழுவதும் திமுகவினரைச் சூறையாடியதும் இதே இந்தியாவில்தானே நிகழ்ந்தன? அவற்றைக் கண்டிக்க ஏன் அமர்த்தியா சென்கள் வரவில்லை? ஒரு கொடும் செயல் நடந்தால் எதிர்வினைகள் வருவது சரித்திரம் சொல்லும் உண்மை. அதற்கு சரியான தீர்வு, அதற்கான பரிகாரங்களை செய்வதும் அது போன்ற நிகழ்வுகள் திரும்ப நடக்காமல் பார்த்துக் கொள்வதுமே ஆகும். அவை செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் இல்லா விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டும், இதுதான் அமர்த்தியா சென் போன்ற நோபல் பரிசு பெற்ற அறிஞ்சர்களின் கடமை. அதை செய்திருக்கிறாரா அமர்த்தியா சென்? குஜராத் முதல்வர் தமது மாநில முஸ்லீம்கள் பயமில்லாமல் அமைதியாக வாழ என்னென்ன செய்ய வேண்டும் என்று இது வரை ஏன் சொல்ல வில்லை? அப்படிச் சொல்லாமல் அவர் பிரதமர் ஆகக் கூடாது என்று சொல்கிறார் என்றால் அது வெட்டி அரசியல்தானே? ஒரு அறிஞராக தனது கடமையை செய்ய அமர்த்தியா சென் தவறிவிட்டார் என்பதை எப்போது அவர் உணர்வார்? ஒரு அறிஞரே இப்படி அரசியல் செய்தால் அரசியல்வாதி மோடியை எப்படித் திருத்துவது?

 5. குமரன்

  அமர்த்தியா சென் இந்தியாவில் வந்து வசித்து இந்தியாவுக்கு என் சேவை செய்ய வில்லை?

  இந்தியர்கள் யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் இவர் நலந்தா பல்கலைக் கலகத்தை மீண்டும் நிறுவும் பொறுப்பை இவரிடம் இந்திய அரசு 2007 இல் கொடுத்திருக்கிறதே, ஆறு ஆண்டுகள் முடிந்து ஏளாவதுஆண்டு துவங்கிய நிலையிலும் அந்தப் பல்கலைக் கழகம் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறதே என்று சொஞ்சமாவது கவலைப் பட்ட மாதிரி இல்லை.

  http://www.nalandauniv.edu.in/campus.html

  இந்தப் பக்கத்துக்குப் போய்ப் பாருங்கள், இப்போதுதான் காம்பவுண்ட் சுவர் கட்டி இருக்கிறார்கள் !

  வாய்ச் சொல் வீரர் அமர்த்தியா சென் !
  இந்தியா வந்து செயல் படட்டும், இந்தியர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சொல்லட்டும்.

 6. குமரன்

  இதை எல்லாம் நான் சொன்னதால் உடனே நான் மோடியை ஆதரிக்கிறேன் என்று முடிவு கட்ட வேண்டாம், மோடி ஜெயாவின் நண்பர். உன் நண்பன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு. எனவே அவர் பற்றி எனக்கு அவ்வளவு மன நிறைவு இல்லை.

  ஆனால் இந்தியாவுக்குத் தனது அறிவை அர்ப்பணிக்காத, உழைப்பை அர்ப்பணிக்காத அமர்த்தியா சென் போன்றவர்கள், இந்தியர்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மறை முகமாகக் கூட சொல்ல அருகதை இல்லை.

  நோபல் பரிசு பெறும் முன்னர் அமர்த்தியா சென் இந்தியா பற்றி நினைத்தது உண்டா, பேசியது உண்டா? பெற்ற பின்னால்தான் இந்திய அரசும் மக்களும் அவருக்கு அவர் பூர்வ இந்தியர் என்ற ஒரே காரணத்துக்காக அளித்த ஆதரவை அவர் இந்த மாதிரிப் பேச்சுக்கள் மூலம் துஷ்பிரயோகம் (misuse ) செய்கிறார்.

 7. குமரன்

  அமர்த்யா சென் சகிப்புத் தன்மையின் உச்சம் என்பது உலகெங்கும் தெரியும். அவர் 2006 இல் சொன்னது,

  “கிறிஸ்தவ மத நம்பிக்கையுடைய பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மத நம்பிக்கை உடைய பள்ளிகள் எல்லாவற்றையும் அறவே நீக்கி விட வேண்டும் ”

  அதுவும் கூட ‘தடை செய்ய வேண்டும்’ என்று சொல்லாமல் ‘அறவே நீக்க வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்கு அமர்த்திய சென் ஒரு மதத் தீவிரவாதி.

  சாத்தான் ஓதும் வேதம் எது என்றால் அது அமர்த்தியா சென் ஓதுவதுதான்.

  Only Christian faith schools are acceptable: Amartya Sen
  PTI Jul 27, 2006, 07.02pm IST

  LONDON: Nobel Laureate Amartya Sen has attacked the Tony Blair government for encouraging a society in which ethnic minorities were defined almost exclusively by their religion and for allegedly endorsing establishment of faith schools. He also said that faith schools, barring those run by Christians, should be scrapped.

  Christian schools “are perfectly acceptable” but other faith schools “are a big mistake and should be scrapped if the Government wants to encourage a unifying British identity,” Sen said in an interview to Daily Telegraph.

 8. shanmugam

  //சில தினங்களுக்கு முன் நரேந்திர மோடி அளித்த ஒரு பேட்டியில், 2002 கலவரங்களில் பலியானவர்களை காரில் பயணிக்கும்போது சக்கரத்தில் மாட்டிக் கொள்ளும் நாய்க்குட்டிக்கு ஒப்பிட்டு மோடி சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்தது நினைவிருக்கலாம். //

  நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கினால் கூட வருத்த படுவேன் என்று தான் கூறினார்.
  ஆனாலும் உங்களின் நடுநிலை புல்லரிக்க வைக்கிறது. நோபெல் பரிசு பெற்றதால் அவரின் கருத்துக்கள் கவனிக்க படுகின்றன. ஆனால் கோடிகணக்கான இந்தியர்களின் விருப்பம் மோடியே.
  65 எம்.பி கள் அமெரிக்காவுக்கு கடிதம் அனுப்பியதாக வந்த செய்தியும் போலி என எம்,பி களே சொல்லிவிட்டார்கள். அதை பற்றி எல்லாம் மூச்சு விட மாட்டீர்களே. காங்கிரஸின் திருட்டு தனம் என்வழிக்கு தெரியாது. அல்லது மறைக்கப்பட வேண்டிய ஒன்று.

 9. குமரன்

  சண்முகம் அவர்களே

  நான் கொடுத்துள்ள 2006 ஆம் ஆண்டின் செய்தியைப் படித்தால் அமர்த்தியா சென் எப்படிப்பட்ட மத அடிப்படை வாதி/ தீவிர வாதி என்பது புரியும்.

  அதிலும் கூட அவர் “British Identity ” குறித்து எந்த அளவுக்குக் கவலை கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

  இப்படிப்பட்டவருக்கு இந்தியாவிலும் கூட அதே “British Identity” இன்னமும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பது இப்போது பட்ட வர்த்தனமாகப் புரிகிறது.

  பிரிட்டனில் முஸ்லிம் மதரசாக்களே கூடாது என்று முழங்குபவர், இங்கே குஜராத் கலவரத்துக்குக் குரல் கொடுப்பது முஸ்லிம்கள் மீதுள்ள பரிவினால் அல்லவே அல்ல. அவருடைய எண்ணம், இங்கே ஹிந்துக்களும் முஸ்லிம்களும் அடித்துக் கொண்டு செத்தால் மகிழ்ச்சி அடைவார். ஏனெனில் அவர் கவலைப்படும் “British Identity ” இங்கே மீண்டும் நிறுவலாம், ஒருவேளை கிறிஸ்தவ மத நம்பிக்கை உடைய பள்ளிகளைத் தவிர வேறு அனைத்தையும் இந்தியாவிலும் “scrap ” செய்து விடலாம். அவருக்கு அதுதான் ஆசை. அதனால்தான் இப்படி இப்போது அமைதியாக இருக்கும் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்.

  அமர்த்தியா சென் “ஒரு பொருளாதாரப் பேராசிரியர்” என்பது அவர் போர்த்தி இருக்கும் போர்வை. உள்ளுக்குள்ளே வெறி பிடித்த வேறு ஒன்று உள்ளது.

 10. குமரன்

  ஜவஹர்லால் நேரு சொன்னதை இங்கே நினைவு கூறுகிறேன்.

  We can only co -exist .

  உலகில் அனைவரும் ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். ஒருவரைக் கொன்றுவிட்டு இன்னொருவர் வாழ்ந்துவிட முடியாது.

 11. Sanjev

  வினோ ஜி , என்வழி தரம் இக்கு இது நல்லது இல்லை.

 12. தமிழன்

  நாய்க்குட்டி காரில் விழுந்தால் வருத்தப்படமுடியுமா என்பது தான் மோடியின் வார்த்தைகள். காவிக்காரர்கள் என்னென்ன்மோ சொல்லி சமாளிக்கவேண்டியதுள்ளது. பிணங்களை ஏன் ஊர் ஊராக ஊர்வலம் அனுப்பினார் என்றி இந்த காவிக்காரரிடம் பதில் இருக்கிறதா?

  விபத்து நடந்த இடத்தில் , தற்காலிக பிரேத பரிசோதனைக்கூடம் அமைத்து, சீக்கிரமாக முடித்து அங்கேயே உறவினர்களிடம் ஒப்படைப்பது தான் எந்த நிர்வாகமும் செய்யக்கூடிய வேலை. வில்லாதி வீரர் மோடி மட்டும் தான், நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கும் மேல் பிணங்களை, அதுவும் வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பி சவ ஊர்வலம் நடத்தி வன்முறையை தூண்டி விட்ட உலக சாதனையாளர். காவிக்காரங்க காதுக்கு இந்த செய்தி மட்டும் கேட்கவே கேக்காது..

 13. தமிழன்

  ஏம்பா என்வழி அறிஞர் அமர்த்தியா சென் மேலே இப்படி பாயுறாரு. மோடி நல்லவர்ன்னு சொல்றதுக்கு பதிலா, அவரை எதிர்ப்பவர்கள் கெட்டவர்கள்ன்னு நிருபிக்க இம்புட்டு பாடு படுறாரு..மோடியின் பிரேத ஊர்வலம் இந்த அறிஞருக்கும் தெரியாதாக்கும்.. அடப்போங்கப்பா.. கருத்து கந்தசாமிலேருந்து கட்சித் தலைவர் வரைக்கும் எல்லாருமே திருடங்க்ய்யதான்.

 14. Krishna

  “ஏம்பா என்வழி அறிஞர் அமர்த்தியா சென் மேலே இப்படி பாயுறாரு. மோடி நல்லவர்ன்னு சொல்றதுக்கு பதிலா, அவரை எதிர்ப்பவர்கள் கெட்டவர்கள்ன்னு நிருபிக்க இம்புட்டு பாடு படுறாரு..”

  தமிழன் அவர்களே, மோடி குஜராத் முதல்வர் ஆவதற்கு முன்பு ஒரு சாதா அமைச்சராக கூட இருந்ததில்லை. அவர் முதல்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டது நவம்பர் 2001. குஜராத் கலவரங்கள் நடந்தது பிப்ரவரி 2002. 2-3 மாதங்களில் எந்த ஒரு முதல்வராலும், அதுவும் முதல் முறையாக முதல்வராக இருக்கும் ஒருவர்க்கு நிர்வாகம் அவ்வளவு எளிதாக பிடிபடாது. முந்தைய கேசுபாய் படேல் ஆட்சியில் போலீஸ் துறை மிகவும் சீர்கெட்டு விட்ட நிலையில் அதுவும் போலீஸ் பற்றாக்குறை இருந்த நிலையில் கலவரங்கள் ஆரம்பித்துவிட்டன என்று தெரிந்தவுடன் மோடி அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை அனுப்புமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த மூன்று மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் முதல்வர்களான திக்விஜய் சிங்க், அசோக் கெலாட் மற்றும் விலாஸ் ராவ் தேஷ்முக் தங்கள் மாநிலங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவம் பற்றாக்குறை இருப்பதால் அனுப்ப முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். மத்திய ரிசர்வ் மற்றும் ராணுவ படை முழுவதுமாக குஜராத் வந்து சேருவதற்கு 3 நாட்கள் பிடித்தது. அவர்கள் வந்தவுடன் கலவரம் உடனடியாக அடக்கப்பட்டது.

  இது போக மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒபாமாவுக்கு எழுதப்பட்டதாக கூறும் கடிதம் மிகவும் மோசமான செயல். இது கணவன் மனைவி சண்டையை அண்டை வீட்டுக்காரனிடம் எடுத்து செல்வது போலாகும்.நம் நாட்டின் மானம் உலக அளவில் கப்பல் ஏறினாலும் பரவாயில்லை – ஆனால் மோடி மட்டும் வரக்கூடாது என்பது தான் இன்று காங்கிரசின் கொள்கை.

 15. தமிழன்

  ஏம்பா குஜராத் முழுவதும் வன்முறையை ஏவிவிட்டுட்டு போலீஸ் பத்தாதுன்னு கூப்பாடு போட்டா என்ன அர்த்தம். பிணங்களை கோத்ராவில் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதை விட்டு விட்டு , ஊர் ஊராக ஒரு முதல்வர் ஏன் பிண ஊர்வலம் நடத்தினார். அதுக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு வீண் வியாக்கியானம் எதுக்கு?. ஊர் ஊரா பிண ஊர்வலம் அனுப்பி வன்முறையை தூண்டிவிட்டது மாநில முதல்வர் மோடி. என்ன புண்ணியம் செய்தாலும் ஏழேழு ஜென்மத்துக்கும் துடைக்க முடியாத பாவம்.

 16. Krishna

  மோடி ஆணையிட்டு தான் பிண ஊர்வலம் நடத்தப்பட்டது என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துவிட்டது. அதனால் தான் மோடி எதிர்ப்பாளர்கள் நீதிமன்றங்களை நாடாமல் ஊடகங்களை நாடி இது போன்று வதந்திகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

 17. தமிழன்

  அட பயபுள்ளைகளா?. மா நிலத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நடந்து நெறைய பேர் இறந்துள்ளார்கள். நிர்வாகம் என்ன செய்யனும். முதல்வர் என்ன செய்யவேண்டும். இறந்தவர்களை உடனடியாக பரிசோதித்து சொந்தக்காரங்கிட்டே ஒப்படைக்க வேண்டாமா?. அங்கே இருந்து பிணங்களை யாரோ திருடிக்கொண்டு குஜராத் முழுதும் ஊர்வலமாக கொண்டு போறாங்களாம். நம்ம சூப்பர் முதல்வருக்குஒன்னுமே தெரியாதாம்.பெரிய யப்பா இவரை நம்பி நாட்டைக் கொடுக்கனுமாமே. வெள்ங்கிடும்.

 18. Krishna

  ” அங்கே இருந்து பிணங்களை யாரோ திருடிக்கொண்டு குஜராத் முழுதும் ஊர்வலமாக கொண்டு போறாங்களாம். நம்ம சூப்பர் முதல்வருக்குஒன்னுமே தெரியாதாம்.பெரிய யப்பா இவரை நம்பி நாட்டைக் கொடுக்கனுமாமே. வெள்ங்கிடும்”

  இவரை நம்பி நாட்டை கொடுக்க வேண்டுமா கூடாதா என்பதை நீங்களோ நானோ மட்டும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இல்லை. இவரை நம்பி குஜராத் மக்கள் 3 முறை ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகமேற்று சில வாரங்களில் கலவரங்கள் நடந்தது. எந்த ஒரு முதல்வருக்கும் – அதுவும் முதல் முறை பெரிய பதவி வகிக்கும் முதல்வருக்கும் நிர்வாகம் ஒரு சில வாரங்களில் பிடி படாது. அதனால் தான் மக்கள் சந்தேகத்தின் பலனை மோடிக்கு அளித்து 2002 தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள். அதற்கு பிறகு ஜாதி மத துவேஷத்தை அவிழ்த்து விடாமல் தன்னுடைய அரசின் சீரிய செயல்பாடுகளை வைத்தே மோடி 2007, 2012 தேர்தலில் வெற்றி பெற்றார். அதுவும் கிட்டதட்ட அதே அளவு சீட்டுகளை பெற்றார். தேர்தல் சமயத்தில் மக்களுக்கு இலவசங்கள் என்று எதுவும் அறிவிக்க வில்லை. மக்களிடம் இலவசமாக ஆடு மாடுகள் கொடுத்து மேய்க்க சொல்லவில்லை, கலர் டிவி கொடுத்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சொம்பெரிகலாக்கவில்லை. காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தேர்தல்பிரச்சாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசியபோது, இவர் மின் கட்டணம் செலுத்தாத விவசாயிகளின் மின் இணைப்பு தயவு தாட்சண்யமின்றி துண்டிக்கப்படும் என்று தைரியமாக அறிவித்தார். இது தெரிந்தும் விவசாயிகள் மோடிக்கு தான் வாக்களித்தார்களே தவிர காங்கிரசை சீண்டவே இல்லை. மோடிக்கு தான் பிரதமராக ஆக முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, காங்கிரசுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் நிச்சயம் இருக்கிறது. அதனால் தான் மோடி ஜுரம் கொண்டு பிதற்றுகிறார்கள்.

 19. Ganesh Shankar

  இங்கே நண்பர் குமரன் அவர்களின் கருத்துக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.ஏன் என்றால், இந்த கலவரம் போன்றவற்றில் யதார்த்த நிலையை எடுத்து உரைத்து இருகின்றார்.இவரிடம் இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.உண்மையில் இங்கே நான் தோற்று விட்டேன்.

  இவ்வளவு பெரிய ரயில் எரிப்பு சம்பவம் நடை பெற்று இருகின்றது.அதை பற்றியும் பேச வேண்டாமா?? .அதனை சரி என்று ஒத்து கொள்வது போல் ஊடங்களும்,காங்கிரஸ் மற்றும் அதனுடன் துணையாக நிற்கும் அமர்த்திய சென் போன்றவர்கள் கண்டிக்க மறந்ததனால் தான் ஒரு பகுதி மக்களுக்கு கோவம் வந்து விட்டது.

  கலவரத்தை யாரும்,மோடி உட்பட ஞாயம் என்று சொல்ல வில்லை.ஆனால் அதற்கு மோடி தான் கரணம் என்று சொல்லுவது ஏற்புடையது அல்ல.மேலும்,காங்கிரஸ் கட்சி இதை விட பெரிய வன்முறையை சீக்கியர்களிடம் ஏவிய போது,அதற்க்கு காரணம் சொல்லி செய்தது சரி தான் என்று கூறியது எல்லாம் எங்கே போனது??

 20. தமிழன்

  குஜராத்தில் இந்து – முஸ்லீம்களுகிடையே ஜென்மத்துக்கும் விரோதத்தை வளர்த்த ஒரே சாதனை தான் மோடியின் சாதனை. மஹாராஷ்ட்ராவிலிருந்து பிரிந்த நாளிலிருந்தே குஜராத் முதல் மாநிலமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அது எந்த முதல்வரின் தனிப்பட்ட சாதனை இல்லை. குஜராத்திகளின் கடின உழைப்பு, சேமிப்பு, முதலீடுகள் போன்றவைதானே அன்றி எந்த மோ(ச)டிக்கொம்பனும் அதற்கு உரிமை கொண்டாடுவது முட்டாள்தனம். இந்தியா முழுவதும் இந்து – முஸ்லீம்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் மோடி இந்த தேர்தலுடன், காணாமல் போவது உறுதி. இந்த மதவெறியருக்கு பதில், அமுல் பாப்பா ராகுல் எவ்வளவோ பரவாயில்லை. ஊழல்கள் பெருகினாலும் நாடு துண்டாடப்படாமலாவது காக்கப்படும்.

 21. தமிழன்

  சில் அறிவாளிங்க, மோடி ஆட்சியை புடிச்சவுடன் கலவரம் வந்துட்டு. அதான் அவருக்கு வெவரம் தெரியல்லைன்னு சப்பைகட்டுராங்க. திடிர்னு வானத்திலேருந்து குதிச்சு சிஎம் ஆகிட்டாரா என்ன.?. அவனுங்க சவுக்கியிலேயே படு ப்யங்கரமான விஷயம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறானுங்க..அந்த காக்கிச் சட்டை போட்டு முப்பது நாப்பது வருஷம் கழிச்சி ஆட்சியை புடிச்சவுடனே , முதல்வர் ஆகிவிட்டோம் என்பது கூட மறந்து முஸ்லீம்களை அடிச்சு கொல்லுடாங்கிற வீர வசனம் வந்துட்டு போல், முட்டாள் தனமா, பேசுற அறிவாளிங்களை அந்த கலவரத்திலே போட்டு வாங்கியிருந்தாங்கன்னா, மோடி யாருன்னு நல்லா புரிஞ்சிருக்கும்..

 22. Krishna

  “குஜராத்தில் இந்து – முஸ்லீம்களுகிடையே ஜென்மத்துக்கும் விரோதத்தை வளர்த்த ஒரே சாதனை தான் மோடியின் சாதனை. மஹாராஷ்ட்ராவிலிருந்து பிரிந்த நாளிலிருந்தே குஜராத் முதல் மாநிலமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அது எந்த முதல்வரின் தனிப்பட்ட சாதனை இல்லை. குஜராத்திகளின் கடின உழைப்பு, சேமிப்பு, முதலீடுகள் போன்றவைதானே அன்றி எந்த மோ(ச)டிக்கொம்பனும் அதற்கு உரிமை கொண்டாடுவது முட்டாள்தனம். இந்தியா முழுவதும் இந்து – முஸ்லீம்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் மோடி இந்த தேர்தலுடன், காணாமல் போவது உறுதி. இந்த மதவெறியருக்கு பதில், அமுல் பாப்பா ராகுல் எவ்வளவோ பரவாயில்லை. ஊழல்கள் பெருகினாலும் நாடு துண்டாடப்படாமலாவது காக்கப்படும்”

  இந்து முஸ்லிம் இடையே பகையை வளர்க்கும் எண்ணம் உள்ள ஒருவர் எப்படி முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் 18 தொகுதிகளில் 12-ல் வெற்றி பெற முடிந்தது?
  குஜராத் மாநிலத்தின் முன்னேற்றம் அம்மாநில மக்களின் உழைப்பால் தான் ஏற்பட்டது, அதற்கு மாநில அரசின் பங்கு இல்லை என்றால் தமிழக மக்களும் ஏன் அதே வழியை பின் பற்றி குஜராத் மக்கள் போல் உழைத்து மின்வெட்டை சரி செய்யக்கூடாது? ஏன் மின் வெட்டிற்கு மட்டும் ஜெயலலிதா அரசு மீது பழி போட வேண்டும்?

  சகட்டு மேனிக்கு பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்த காங்கிரசுக்கு 115 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது என்று பாஜகவின் எதிரி ஊடகங்களே தெரிவிக்கும் போது மோடி காணாமல் போவார் என்று சொல்வது நல்ல ஜோக்.

  அமர்த்யா சென் போல் “கிருஸ்துவ பள்ளிகள் மட்டும் தான் இருக்க வேண்டும், மற்ற மத பள்ளிகள் இருக்ககூடாது” என்பது போன்ற கருத்துக்களை சொல்லாமால் இருப்பதால் தான் மோடியை மத வெறியர் என்று சொல்கிறீர்களா என்று புரியவில்லை.

 23. தமிழன்

  மோடி மதவெறியர் என்பதால், அமெர்தியா சென் மத சார்பற்றவர் என்று பொருள் இல்லை. அவர் எப்படி பட்டவராக இருந்தாலும் அதிகாரத்திற்கு வரப்போவதில்லை.

  ஆனால் ஒரு மத வெறியர் நாட்டுக்கு தலைமை ஏற்பது இந்தியாவிற்கு பேராபத்து. குஜராத்தை மதத்தின் பெயரால் துண்டாடிக்கொண்டிருப்பவருக்கு, மத்தியில் வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறிதான்.. ஆனால் இந்திய ஜனநாயகம் அதற்கு இடம் கொடுக்காது என்பத்வும் நிச்சயம்.

  கடந்த பத்தாண்டு காங்கிர்ஸ் ஆட்சியின் ஊழல்களையும், விலைவாசியையும் பார்த்தால், எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி என்ற கருத்துக்கணிப்பு வரவேண்டும். பாஜகவுக்கு காங்கிரஸை விட கொஞ்சம் கூடுதல் இடம், ஆனால் பெரும்பானமை இல்லை என்ற செய்தி எதிர்க்கட்சிகளின் லட்சணத்தை தோலுரித்து காட்டுகிறது. மோடியை முன்னிருத்துவ்தால் இது இன்னும் குறைந்து ,காங்கிரசை விட குறைவாக இடங்களே பாஜகவுக்கு கிடைக்கும். அத்தோடு குஜராத்தை விட்டும் மோடி விரட்டப்படுவார்.

  தெலுங்கான பாலிடிக்ஸ் மூலம் ஆந்திராவில் மீண்டும் துளிர் விட்டுருக்கும் காங்கிரஸ் கடந்த தேர்தல் போல்வே ஆட்சியை பிடித்தால் பெரிய ஆச்சரியமில்லை.

 24. Krishna

  நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை. குஜராத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளில் முஸ்லிம்கள் பெருவாரியாக மோடிக்கு ஒட்டு போட்டிருகிரார்களே. அப்படியென்றால் குஜராத் முஸ்லிம்கள் ஹிந்து வெறியர்களா என்று பதில் சொல்லுங்கள். மோடியை வெறுக்கும் ஹிந்து பத்திரிகையும் CNN-IBN நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரசுக்கு பாஜகவை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளதே – அதற்கும் பதில் சொல்லுங்கள்.

  தெலுங்கான என்ற பூதத்தை காங்கிரஸ் ஜாடியிலிருந்து திறந்தவுடன் காங்கிரசின் எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து அங்கு ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறதே? இது தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பின் லட்சணமா?

 25. தமிழன்

  கள்ள ஓட்டு, வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் தடுப்பது போன்ற ஜன நாயக் அராஜகங்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன?. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று மோடி செய்த தில்லுமுல்லுகளை கூஜாக்கள் எப்படி சொல்லுவார்காள்

 26. Krishna

  கள்ள ஓட்டு, வாக்கு சாவடியை கைப்பற்றுதல் போன்ற தில்லுமுல்லுகளை செய்திருந்தால் காங்கிரசும் அத்தனை ஆங்கில மீடியாக்களும் சும்மா இருந்திருக்குமா? அவ்வளவு ஏன், காங்கிரசின் ஏவல் துறையான தேர்தல் ஆணையம் தான் சும்மா இருந்திருக்குமா? தேர்தல் முடிவுகளை பற்றி அலசாமல் இது போன்ற தில்லு முல்லுகளை அல்லவா அலசியிருப்பார்கள்? மோடியை கிழி கிழி என்று கிழித்திருப்பார்கள். தேர்தல் மோசடி என்று அம்மாநில காங்கிரசே கூறாத போது நீங்கள் புதுசாக சொல்வது உச்ச பட்ச காமெடி.

 27. தமிழன்

  அது சரி,, காமாலை கண்ணுக்காரனுக்கு எல்லாம் மஞ்சள் தான். பாஜகா கூஜாக்களுக்கு எல்லாமும் மோடி தான்.. தேர்தல் ஆணையம் தமிழக தேர்தலில் ஆளும் திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் எத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றியது என்பது யாரும் மறந்து விடவில்லை. என்ன தான் ஆணையம் என்றாலும் அதிகாரத்தில் இருக்கும் சிலர் தான் ஒட்டு மொத்த ஆணையத்தையே ஆட்டி வைக்கிறார்கள் என்பது அரசியல் அரிச்சுவடி தெரியாவதர்களுக்கே புரியும்.

 28. குமரன்

  தமிழன் அவர்களே

  இந்தியாவே சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி 2009 தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையைத் தான் பின்பற்றுகிறது என்று சொல்ல வருகிறீர்கள் என்று நினைக்கிறேன் !

  சிதம்பரம் “வென்ற வழியை” அவர் அழகிரியின் உதவியோடு வென்ற நெறியை இந்த நாடே அறியும்! பாவம் ராஜ கண்ணப்பன், வென்றும் தோற்றார்!

  ஆனால், இத்தனை காலம் இல்லாதபடிக்கு சிதம்பரமே இப்போது இந்த ஆட்சியில் மன நிறைவோடு இல்லை என்பதும் ராகுல் காந்தி சிதம்பரத்தையும் ஏனைய தமிழக காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் (சிலரை) கட்சிக் கூட்டத்தில் அதே 2009 தேர்தல் விஷயத்திலும், குறிப்பாக சிவகங்கை சட்டமன்றத் தேர்தல் முடிவு விஷயத்திலும் எடுத்தெறிந்து பேசிய விஷயமும் வெளிவந்துவிட்டன. காலத்தின் முடிவுகள் யார் கையிலும் இல்லை, தவறான பாதையில் பெற்ற வெற்றி நிச்சயம் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பது கண்கூடு.

  அதே தேர்தல் கமிஷன்தான், அதே அதிகாரிகள்தான், நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேதலிலும், அதே திமுக ஆட்சிதான், அதே அழகிரியின் மதுரை மண்டலம்தான் !!! எல்லாம் அதே அதே!!!

 29. குமரன்

  அமர்த்தியா சென் மதவெறி கொண்டு லண்டனில் ஒருமாதிரிப் பேசுவதிலும் பின்னர் இந்தியா விஷயத்தில் வேறு மாதிரிப் பேசுவதிலும் இருந்து இந்தியர்களை ஏமாளிகள் என்று நினைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

  சிலர் வேண்டுமானால் உணமை புரிந்த பின்னரும் புரியாத மாதிரி நடிக்கலாம் எல்லாரும் அப்படி அல்ல.

  ஒருவேளை பிரிட்டனில் ஒருமாதம் சார்ந்த வெறி என்பது ஏற்கப்பட்ட மதச் சார்பின்மையோ, சவூதி அராபியாவில் உள்ள மதவெறி ஏற்கப் பட்ட ஒன்றைப் போல? மதச் சார்பின்மை என்பது இந்த உலகம் முழுமைக்கும் பொதுவாக நிலவ வேண்டும் என்பதுதான் சரியான நடைமுறை ஆக இருக்க முடியும்.

  அப்படி இல்லாத காரணத்தால்தான் உலக அமைதி சீர்குலைந்து இருக்கிறது.
  ஆழ்ந்து நோக்கினால், மத்திய ஆசிய/ ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் அமெரிக்கா உள்புகுந்து விதவிதமான உள்நாட்டுப் போர்களை செய்து வருவது புரியும்.

  லிபியா, பாலஸ்தீனம், சிரியா, ஏமன், குவைத், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஜோர்டன், எகிப்து, துருக்கி, சாட், என்று பட்டியல் எடுத்தால் அது நீண்டதாக இருக்கிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ அமைப்பு நாடுகள் வெளியில் மத சார்பற்றவை என்று சொல்லிக் கொண்டாலும் ஏதாவது ஒரு கிறிஸ்தவ மதப் பிரிவைச் சார்ந்ததாக இருப்பது புரிபடும். இவை செய்யும் சில்மிஷங்களுக்கு, வஹாபிய மதவெறி கொண்ட சவூதி அரேபிய மன்னர் குடும்பம், தனது சொந்தக் காரணங்களுக்காக, அமெரிக்க சார்பு நிலை எடுத்த காரணத்தால், அதை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்கள். மற்ற எல்லா நாடுகளையும் “கவனித்து விட்டு” கடைசியாக சவுதியையும் அந்த மன்னர் குடும்பத்தையும் அமெரிக்கா “கவனிக்கும்” என்பது திண்ணம்.

  பின்னணியில் இருப்பது கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் உள்ள மதப் போர் என்பது நிச்சயம் ஒரு நாள் கடை வீதிக்கு வந்துதான் ஆக வேண்டும். அப்போதுதான் நான் சொன்னதன் அர்த்தம் பலருக்குப் புரியும். (உதாரணமாக, இதே ‘என்வழி’யில் பாமக ராமதாஸ் சாதிவெறி பேச்சுக்கள் பேசுகிறார் என்பதை மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாதங்கள் முன்னரே நான் சுட்டிக் காட்டினேன்.)

  இஸ்லாமிய நாடுகளைக் “கவனித்து” முடித்த பின்னர் அமெரிக்கா சீனாவையும் இந்தியாவையும் “கவனிக்கும்” என்பதுதான் எனது பயம்! அது நடக்காமல் இருக்க இப்போதே மக்கள் இந்த அமர்த்தியா சென் போன்ற கைக் கூலிகள் பேச்சுக்களை ஒதுக்க வேண்டும். இப்போது அவர் போன்றோர் மோடி பற்றிப் பேசுவர். மோடி முடிந்த பின்னால் வேறு ஒருவர்.

  பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வருகை தர மோடியை தொழிலாளர் கட்சியினர் அழைப்பு விடுத்திருப்பது பற்றி யோசியுங்கள். எல்லாம் நாடகம்.
  (பிரிட்டிஷ் பாராளுமன்றம் போய் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அப்படி ஒன்றும் கடினம் அல்ல. நானே என் குடும்பத்துடன் சென்று பார்வையாளர் பகுதியில் அமர்ந்து பதினைந்து நிமிடம் அவை நடவடிக்கைகளைக் கண்டேன்.) இதெல்லாம் விளம்பரம் அவ்வளவுதான் என்றாலும் இந்த விளம்பரத்தில் அந்த நாட்டின் முக்கியக் கட்சியின் பங்கை உற்று நோக்கவும்.

 30. Krishna

  “தேர்தல் ஆணையம் தமிழக தேர்தலில் ஆளும் திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் எத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றியது என்பது யாரும் மறந்து விடவில்லை. என்ன தான் ஆணையம் என்றாலும் அதிகாரத்தில் இருக்கும் சிலர் தான் ஒட்டு மொத்த ஆணையத்தையே ஆட்டி வைக்கிறார்கள் என்பது அரசியல் அரிச்சுவடி தெரியாவதர்களுக்கே புரியும்”

  காங்கிரஸ் அரசு நியமித்த தேர்தல் ஆணையம் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்கிறது என்று திமுக கூஜாக்களை தவிர யாரும் சொல்லவில்லை. ஒரு வேளை திமுகவினரின் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தி தேர்தலை நேர்மையாக நடத்தியதால் தான் திமுக கூஜாக்கள் இப்படி சொல்கிறார்களா என்று தெரியவில்லை. மோடியை விட்டால் நாட்டை ஆளும் தகுதி யாருக்கும் இல்லை என்று மோடி பக்தர்கள் சொல்லவில்லை. இன்றைய சூழ்நிலையில் மத்திய காங்கிரஸ் ஆட்சி போய் தொலைந்தால் போதும். காங்கிரசின் எதிர்ப்பு அரசியலை வழி நடத்த மோடி தான் சிறந்தவர் என்று தான் மக்கள் பார்க்கிறார்கள். குஜராத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக மோடியை பற்றி நாராசமாக பேசும் திக்விஜய் சிங் கூட சொல்லவில்லை. குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூட சொல்லவில்லை. நீங்கள் மட்டும் தான் சொல்கிறீர்கள்.

 31. தமிழன்

  தமிழ் நாட்டைத்தான் திமுக- அதிமுகவிடமிருந்து காப்பாத்த முடியல்லே. ரெண்டு கட்சிகளுக்கும் ஒரு முடிவு வருமான்னு தெரியல்லே. அதிசயமா திமுககாரரை காரில் கூட்டிகிட்டு போறாரு அதிமுககாரர். என்ன கூட்டோ , கண்றாவியோ தெரிய்ல்லே.

  இப்போ இந்தியாவும் ஒரு மோசடிக் கூட்டத்தின் கையில் சிக்கும் அபாயம் தெரிகிறது இவ்வளவு நாளும் ஊழல் மட்டும் தான் பிரச்சனையா இருந்தது. இவர் வ்ந்தா புதுப்புது பிரச்சனை வரும் என்பது உறுதி

  உங்க தலைவர் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பது குஜராத்தில் வசிப்பவர்களுக்கும், வசித்தவர்களுக்கும் தான் தெரியும். நீங்க நடத்துங்க கூஜாக்களா… நல்லா நடந்துங்க. உங்க மோ(ச்)டியை தூக்கி தலையில் வச்சு நல்லா ஆடுங்க.. இந்தியாவுக்கு அது தான் விதி என்றால் யாரால் மாற்ற முடியும். நல்லா இருங்கப்பா நல்லா இருங்க..

 32. Krishna

  மோடி ஒன்றும் “எங்க தலைவர்” இல்லை. அவர் இவ்வளவு மோசடிக்காரர் என்று குஜராத் மக்களுக்கு தெரியும் என்று சொல்கிறீர்கள். அதனால் தான் அவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்களா என்று தெரியவில்லை. இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது உள்ளதை விட மோசமாக இருக்க முடியாது என்பதை பொருளாதார சூரப்புலிகள் என்று வர்ணிக்கப்படும் பிரதமரும் சிதம்பரமும் ஆட்சியில் இருக்கும்போதே நிரூபித்து விட்டார்கள். இப்போது ஊழல் மட்டும் தான் பிரச்சினை – ராக்கெட் போல் ஏறும் விலைவாசியும், தீவிரவாதமும் குண்டு வெடிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், என்று வேண்டுமானாலும் பாகிஸ்தான், சீனா மீண்டும் ஒரு கார்கிலை அரங்கேற்றும் சூழ்நிலை உள்ளதெல்லாம் பிரச்சினையே இல்லை.

 33. கடலூர் சித்தன்.ஆர்

  “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்”
  திரு மோடி அவர்களின் கழிவறை குறித்த கருத்து- நாட்டின் / மக்களின் மிகவும் அத்தியாவசியத் தேவை பற்றியது தானே??? இதில் நல்லவர்கள் யாரும் குற்றம் காண மாட்டார்கள்.
  http://dinamani.com/latest_news/2013/10/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1816687.ece

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *