இந்த இழிசெயலை அப்துல்கலாம் கூட ஆதரிக்கமாட்டார்!

அப்துல்கலாம் முகமூடியைப் போட்டுக் கொண்டு அம்பேத்கரை அவமதித்துவிடாதீர்!


யோசித்துப் பார்த்தால் சாதி வெறியின் உச்சம் இப்போதுதான்…

காந்திக்கு பிறகு யார் சிறந்த இந்தியர் என்ற தலைப்பில் History இணையதளத்தில் நடக்கும் வாக்கெடுப்பில், யாரும் நெருங்கமுடியாத அளவுக்கு பல லட்சம் வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார் பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர். அவருக்கு அடுத்து கன்ஷிராம் இருந்தார். அப்துல் கலாமுக்கு 6வது இடம். அவருக்கு விழுந்தது 10 ஆயிரத்துக்கும் குறைந்த வாக்குகள்.

இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர், ஒடுக்கப்பட்ட இன மக்களுக்காக தன் கடைசி மூச்சுவரை உழைத்த அண்ணல் அம்பேத்கருக்கு, காலம் கடந்த கிடைத்த சின்ன கவுரவம் என்று எல்லோரும் கொண்டாடி வந்த வேளையில், இப்போது அப்துல்கலாமுக்கு 23 லட்சம் வாக்குகள் விழுந்துள்ளதாக அந்த வாக்கெடுப்பு கூறுகிறது. அதாவது நாளையோ அதற்கடுத்த நாளோ, பாபாசாகேப் அம்பேத்கரை பின்னுக்குத் தள்ளி, அப்துல் கலாம் முதலிடத்தில் இருப்பதாக இவர்கள் செய்தியைப் பரப்பப் போகிறார்கள்.

அம்பேத்கர் என்ற மகத்தான தலைவனை நாட்டின் ஒப்புயர்வற்ற தலைவராகக் காட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஈனப் பிறவிகள், அப்துல் கலாம் முகமூடியை மாட்டிக் கொண்டு இந்த Fraud வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். போலியான பேஸ்புக் கணக்குகளில் வாக்களிப்பதை ஒரு இயக்கமாகவே செய்ய ஆரம்பித்துள்ளனவாம் சாதி வெறிபிடித்த கும்பல்கள் சில!

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்… அப்துல் கலாம் என்ன… மகாத்மா எனப்படும் காந்தியையே முன்னிறுத்தினாலும்… அம்பேத்கரின் அருகில் கூட அவர்களால் வர முடியாது. இதை எங்கே இந்த நாடு புரிந்து கொண்டுவிடுமோ என்ற பயத்தின் விளைவுதான் இந்த கேப்மாரித்தனங்கள்.. அரை நூற்றாண்டாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!

எப்பேர்ப்பட்ட தலைவர் அம்பேத்கர்..? ஒவ்வொரு முறையும் தனக்குக் கிடைத்த அதிகார வாய்ப்பை, தன் இனம் எந்த வகையிலாவது முன்னேறிவிடாதா… அவர்களின் வாழ்க்கைத் தரத்தை ஒரு அங்குலம் அளவுக்காவது நகர்த்திவிட முடியாதா… அறியாமை, சாதி அடிமைத்தனம் நீங்கி, அரசியல் உரிமையும், கல்வி சுதந்திரமும் பெற்று முன்னேறிவிட மாட்டார்களா என யோசித்து பயன்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.

சும்மா ‘வெத்து’ அறிவுரை சொல்வதில் அந்தத் தலைவனுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. ‘படித்து அதிகாரத்துக்கு வா… நீயும் நன்றாக இரு, உன் சமூகத்தையும் முன்னேற்று!’ என்பதே அவர் கற்றுக் கொடுத்தது.

‘எப்போதும், வருகிற நல்ல வாய்ப்பை கைக்கொள்…  உனக்குக் கிடைக்கிற அதிகாரத்தின் மூலம் சமூகத்தின் அடிமைச் சங்கிலியை உடை… நீதான் உத்தமமான மனிதன்’ என்பதுதான் அம்பேத்கர் காட்டிய வழி. அதை தன் அரசியல் வாழ்க்கையில் செய்து காட்டிய செயற்கரிய மனிதர் அவர்.


நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் வாய்ப்பும் அதிகாரமும் அவருக்கு வந்தபோது, அதன் பலனை தன் சமூக மக்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட அத்தனை இனங்களுக்கும் சமமாக கிடைக்கச் செய்த உத்தமத் தலைவன் அம்பேத்கர் ஒருவரே. அவருக்கு நிகராக இந்த மண்ணில் வேறு எவரையும் சும்மா ஒப்புக்குக் கூட காட்ட முடியாது!

வேட்டி கட்டிய பெண்களாய் வேடமிட்டு பெண்ணுரிமை பேசி காலத்தை ஓட்டும் விளம்பரத் தலைவர் அல்ல அவர். தன் கையில் பதவியும் அதிகாரமும் இருந்தபோது, அதை பெண் விடுதலைக்காகப் பயன்படுத்தியவர் அண்ணல் ஒருவர்தான்.

அரை நூற்றாண்டுக்கு முன், பெண்கள் முன்னேற வேண்டும், சம உரிமை பெற வேண்டும் என ஒரு பெண் தலைவர் கூட யோசித்துப் பார்க்காத தருணத்தில், பெண் விடுதலை, பெண்ணுக்கு சம உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி – வேலை வாய்ப்பில் சமத்துவம் என சட்டமாகவே எழுதி வைத்த மாமேதையை…. சிறுமைப்படுத்த எப்படியடா மனசு வருகிறது உங்களுக்கெல்லாம்!

இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு நன்றியுணர்வு என்ற ஒன்று மருந்துக்காகவாவது இருந்தால், அம்பேத்கரை அவமதிக்கும் ஈனத்தனத்துக்கு ஒருபோதும் துணை நிற்கக்கூடாது!

நீங்கள் இன்று இந்த அளவு கல்வியிலும், நாகரீகத்திலும் சிறந்து, கருத்தெழுதும் அளவுக்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தவரே அந்த மாமனிதன்தானே… அவரையா சிறுமைப்படுத்திப் பார்க்கிறீர்கள்?

கிடைத்த அரிய வாய்ப்புகள் அனைத்தையும் தனக்காக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாத தங்கத் தலைவர் அம்பேத்கர்தான் இந்த நாட்டின் நிஜமான தேசப் பிதா!

அம்பேத்கரை பின்னுக்குத் தள்ளும் இந்த இழி செயலை, நீங்கள் தூக்கிப் பிடிக்கும் அப்துல் கலாம் கூட ஆதரிக்கமாட்டார் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

அண்ணல் அம்பேத்கரை அவமதிக்க முயலும் எவனும் உருப்படவே மாட்டான்!!

-டாக்டர் எஸ் எஸ்
19 thoughts on “இந்த இழிசெயலை அப்துல்கலாம் கூட ஆதரிக்கமாட்டார்!

 1. venkat

  The article is too emotinally written. Do not compare Gandhi with Ambedkar.

  Gandhi is much way ahead.

  Regards,

  Venkat

 2. தினகர்

  “ஒரு பெண் தலைவர் கூட யோசித்துப் பார்க்காத தருணத்தில், பெண் விடுதலை, பெண்ணுக்கு சம உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி – வேலை வாய்ப்பில் சமத்துவம் என சட்டமாகவே எழுதி வைத்த மாமேதையை…. சிறுமைப்படுத்த எப்படியடா மனசு வருகிறது உங்களுக்கெல்லாம்”

  “நீங்கள் இன்று இந்த அளவு கல்வியிலும், நாகரீகத்திலும் சிறந்து, கருத்தெழுதும் அளவுக்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தவரே அந்த மாமனிதன்தானே… அவரையா சிறுமைப்படுத்திப் பார்க்கிறீர்கள்?
  கிடைத்த அரிய வாய்ப்புகள் அனைத்தையும் தனக்காக ஒருபோதும் பயன்படுத்திக் கொள்ளாத தங்கத் தலைவர் அம்பேத்கர்தான் இந்த நாட்டின் நிஜமான தேசப் பிதா!”

  “அம்பேத்கரை பின்னுக்குத் தள்ளும் இந்த இழி செயலை, நீங்கள் தூக்கிப் பிடிக்கும் அப்துல் கலாம் கூட ஆதரிக்கமாட்டார் என்பதை மனதில் கொள்ளுங்கள்!”

  நெஞ்சில் தைக்கும் கேள்விகள்.. கேட்குமா அந்த பரபரப்பு வியாபாரிகளுக்கு?

  —-சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்காக, பெண்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்காரை , இந்த ‘ஆன்லைன் வியாபாரிகள’ பெருமைப் படுத்தாவிட்டாலும் சிறுமைப்படுத்தாமலாவது இருக்கலாம் —–

 3. தினகர்

  அப்துல் கலாமை முன்னிறுத்தி, அரசியலில் அசிங்கப்பட்டு நிற்கும் மம்தா பானர்ஜியின் கைங்கர்யமும் சேர்ந்திருக்குமோ? பாருங்கள் மக்களின் ஆதரவை என்று கலாமை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அம்பேத்காரை சிறுமைப்படுத்துகிறார்களோ?

  அப்துல் கலாம் தான் இதற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும்…

 4. karthik

  அம்பேத்கர் மிக சிறந்த மனிதராக இருக்கலாம் அதுக்காக காந்தியை விட என்று மிக அதிகமாக அளக்க வேண்டாம். இன்த நிகழ்வே காந்திக்கு அடுத்த மிக சிறந்த இந்தியர் யார் என்பதுபெற்றி தான். சாதி சலுகை உள்ள வரை இந்தியா வளராது என்பதுதான் உண்மை.

  வாய்புகள் இனியாவது அனைவருக்கும் சமமாக அளிக்கப்படவேண்டும். சாதியும் இடஒதிக்கிடும் இனி அகலவேண்டும். வருமானத்தை வைத்து வேண்டுமானால் சில சலுகைகள் அளிக்கலாம். அதன் மூலம் அனைவரும் சமம் என்ற நிலை வரும். வாழ்க இந்தியா.

  கார்த்திக்

 5. குமரன்

  ///சும்மா ‘வெத்து’ அறிவுரை சொல்வதில் அந்தத் தலைவனுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. ‘படித்து அதிகாரத்துக்கு வா… நீயும் நன்றாக இரு, உன் சமூகத்தையும் முன்னேற்று!’ என்பதே அவர் கற்றுக் கொடுத்தது.
  ‘எப்போதும், வருகிற நல்ல வாய்ப்பை கைக்கொள்… உனக்குக் கிடைக்கிற அதிகாரத்தின் மூலம் சமூகத்தின் அடிமைச் சங்கிலியை உடை… நீதான் உத்தமமான மனிதன்’ என்பதுதான் அம்பேத்கர் காட்டிய வழி. அதை தன் அரசியல் வாழ்க்கையில் செய்து காட்டிய செயற்கரிய மனிதர் அவர்.///

  இதுதான் அவரது தனித்துவம். ஆக்கபூர்வமான வழியில் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றும் முயற்சியில் வெற்றிகண்டவர் அவர்.

  யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவரது இடம் உயரியது. கணினி முன் அமர்ந்து வலைத் தளங்களில் பதிவோரும், கருத்து சொல்வோரும் மிகுந்திருக்கும் இந்தக் காலத்தில் போலி கணக்குகளைத் துவக்கி கள்ள வாக்கு பதிவோரும் மலிந்துள்ளமை வருத்தம் தரும் கயமை.

  வெறும் கள்ள வாக்குகள் அம்பேத்காருடைய தனித்துவம் மிக்க உயரிய இடத்தைக் குறைத்துவிட முடியாது. இந்திய அரசியல் சட்டம் உள்ள வரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.

 6. palPalani

  ஒரு வேளை, காங்கிரஸ் இந்தியாவை கடந்த அறுபது ஆண்டுகளாக ஆளவில்லைஎன்றால், “சிறந்த இந்தியர்” யார்? என்றுதான் தலைப்பு இருந்திருக்கும்.

 7. S.ALAVUDEEN

  சாதாரண ஒரு மீடியா தன விளம்பரத்துக்காக நடத்துற ஒரு வாக்கெடுப்பு…..
  இப்போ சாதி சண்டையல வந்து நிக்குது……அண்ணல் அம்பேத்காரா….. அப்துல் கலாமா… என்று சீண்டி விட்டு நம்மள எடை போடுறாங்க….. இந்த உலகம் சிந்திக்றது வேற…நம்ம இந்தியர்களின் சிந்தனை வேறு….இன்னும் சாதி என்னும் செங்கோலை பிடிதுக்கொண்டுக் ‘கொடி பிடிக்கிற’ ஒரு இன வெறி பிடித்த மனோபாவத்தில் தான் ஒவ்வொரு இந்தியனும்…அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று…

 8. மு. செந்தில் குமார்

  நல்ல, அருமையான மேலும் உண்மையை ஓங்கி உரைக்கின்ற கட்டுரை. கட்டுரையாளர் டாக்டர் எஸ் எஸ் அவர்களுக்கு எனது நன்றிகள்.

  -என் உள் உணர்வுப்படி அப்படியெல்லாம் போலியாக ஒரு சுழலை உருவாக்கி உண்மையை மறைக்க முடியாது.

  -இன்னொன்று இந்த அளவு அம்பேத்கர் அவர்கள் வரவேற்பை பெற்றது கூட நிறைய தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து வாக்கு அளிக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்; அவர்கள் அவர் செய்த தொண்டின் பலனை பெற்றிருக்கிறார்கள் என்பதாகவே எனக்குபடுகிறது.

 9. manmathan

  பாஸ் உங்க கட்டுரையில உங்களோட சாதி வெறி அப்பட்டமா தெரியுது.
  அம்பேத்கர் அப்படி என்ன தான் இந்த நாட்டிற்கு செய்தார் என்று தெளிவாக ஒரு கட்டுரை அளிக்கவும். அவரே ஒரு சாதி வெறியர் அவ்வளவு தான். ஏழைகளுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் உதவாத பணக்காரர்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் ஆதரவான அவர்கள் தவறு செய்தாலும் தப்பித்துகொள்வதற்கு ஏதுவான ஒன்றுக்கும் உதவாத சட்டத்தை தான் படைத்தார். இந்த தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் அவர் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை. அம்பேத்கர் துதி பாடுவதை உங்கள் சாதி சங்கத்துக்குள் வைத்துக்கொள்வது சிறந்தது.
  ______

  அம்பேத்கரைப் புகழ்பவர்கள் எல்லாம் அவர் சாதிதான் என்று முடிவு கட்டினால், அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை. அம்பேத்கர் படைத்த அந்த ‘உதவாத சட்டம்’தான் உங்களைப் போன்றவர்களும் வாய்கிழியப் பேசும் அளவுக்கு மகத்தான சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. இம் என்றால் சிறைவாசம்.. ஏன் என்றால் வனவாசம் என சட்டம் போட்டிருந்தால் தெரிந்திருக்கும் உம்மைப் போன்றவர்களுக்கு. அம்பேத்கர் வெறும் மனிதரல்ல… ஒரு தலைவர்.. ஒரு இயக்கம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக போராடியவர். முதலில் அவரைப் படியுங்கள். அப்புறம்தான் மரம்வெட்டிகளுக்கும் மனிதம் வளர்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கெல்லாம் தெரியும்!

  -என்வழி

 10. குமரன்

  காந்தியின் இடம் காந்திக்கு என்றுமே நிலைத்திருக்கும். காந்திக்குப் பிறகு யார் சிறந்த இந்தியன் என்பதுதான் கேள்வி என்ற கூற்றிலும், காந்தியை விடவும் அம்பேத்கர் என்று சொல்லுவது உணர்ச்சி மேலீட்டால் என்பதிலும் ஐயமில்லை.

  ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு என்ற சமுதாய, பொருளாதார, அரசியல் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில் நேர்படுத்தலை (Balancing in social, economic and political power) அண்ணல் அம்பேத்கார் நமது அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்தது காலத்தின் கட்டாயம். எந்த அளவுக்கு காந்தியின் தலைமையில் அகிம்சா நெறியில் தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்ததோ, அதே அளவுக்கு இந்த சமுதாய, பொருளாதார, அரசியல் சுதந்திரம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டது என்பது இந்த தேசத்துக்கு செய்யப்பட்ட சேவையே ஆகும்.

  சுதந்திர இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இதுபோன்ற சலுகைகள் கல்வி வேலை வாய்ப்பில் வழங்கப்பட்டமை கூடத் தவறில்லைதான். ஆனால் அந்தச் சலுகையை அரசியல் காரணங்களுக்காகப் பல தரப்பையும் சேர்த்து, எவ்வித வரையறையும் இல்லாமல் நீட்டித்ததில்தான் சுயநல அரசியல் ஆங்காங்கே கலந்து விட்டது. இருப்பினும் கூட, அந்த இட ஒதுக்கீடும் கூட தேசத்துக்கு நன்மையே செய்திருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஜாதியும் தத்தமது ஒதுக்கீடு சதவீதம் அதிகமாக வேண்டும் என்ற நோக்கில் தத்தமது மக்கள்தொகையை அதிகமாகக் காட்டி மனுக் கொடுத்ததும் அனைத்தையும் கூட்டினால் இருநூறு முன்னூறு சதவிகிதத்துக்கும் மேல் மக்கள்தொகை வந்ததால் வெளிப்பட்ட கேலிக்கூத்து மக்கள் அறிந்ததே. சாதீய ரீதியில் அரசியல் செய்வதால், ஒவ்வொரு மந்திரி சபையிலும் இந்த சாதிக்கு இத்தனை அமைச்சர் என்றும் எம்.எல்.எ. எம்.பி. கவுன்சிலர் தேர்தல்களில் இந்தப் பகுதியில் இன்ன சாதிக்காரனைத்தான் நிறுத்துவது என்று அரசியல் கட்சிகள் எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிப்பதும்தான் இந்த தேசத்தின் சாபக் கேடு.

  தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு அம்பேத்கார் கொண்டுவந்த இட ஒதுக்கீடு …..
  இந்த தேசத்தைப் பிளவு படாமல் கட்டிக் காத்தது. ரத்தப் புரட்சி வராமல் தடுத்தது.
  நம் மக்களை நம் மக்களே சுரண்டித் தின்னாமல் தடுத்தது.
  இந்த தேசத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது.
  ஆக்கபூர்வமான அமைதி வழியில் மக்களை ஒன்று செலுத்தியது.
  மனிதம் தழைக்க மக்களில் ஒருபகுதியினர் சமுதாயச் சுரண்டலுக்கு ஆளாகாமலும், மனிதனை மனிதனாக நடத்தும் நல்ல சிந்தனையை பிற சாதியினருக்குப் படிப்பித்ததிலும், மனித உரிமைகள் உண்மையாகவே பாதுகாக்கப்படவும், சிறந்த வழி செய்தது.

  அறிவு பூர்வமாக ஆற அமரச் சிந்தித்தால் நிச்சயமாக இந்த உண்மை எவருக்கும் புரியும். பிற்கால அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கால் விளைந்த சாதி வேறுபாடுகளும் உருவாக்கப்பட்ட சாதி வெறியும் புலப்படும்.

  தேசத்துக்கு ஆற்றிய சேவைகளின் அடிப்படையில் பார்த்தால் நிச்சயமாக அம்பேத்கார்தான் காந்திக்குப் பின்னால் இருந்த இந்தியர்களுள் தலைமையானவர் –

 11. Rajkumar

  //அம்பேத்கர் வெறும் மனிதரல்ல… ஒரு தலைவர்.. ஒரு இயக்கம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக போராடியவர். முதலில் அவரைப் படியுங்கள். அப்புறம்தான் மரம்வெட்டிகளுக்கும் மனிதம் வளர்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கெல்லாம் தெரியும்! //

  -இவனுங்களுக்கு இந்த செருப்படி போதாது வினோ சார்…

 12. chozan

  //அம்பேத்கர் வெறும் மனிதரல்ல… ஒரு தலைவர்.. ஒரு இயக்கம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக போராடியவர். முதலில் அவரைப் படியுங்கள். அப்புறம்தான் மரம்வெட்டிகளுக்கும் மனிதம் வளர்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கெல்லாம் தெரியும்! //

  -இவனுங்களுக்கு இந்த செருப்படி போதாது வினோ சார்…

  வினோ மிகவும் நன்றி

 13. chozan

  //அம்பேத்கர் வெறும் மனிதரல்ல… ஒரு தலைவர்.. ஒரு இயக்கம். இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்காக போராடியவர். முதலில் அவரைப் படியுங்கள். அப்புறம்தான் மரம்வெட்டிகளுக்கும் மனிதம் வளர்த்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கெல்லாம் தெரியும்! //

  //-இவனுங்களுக்கு இந்த செருப்படி போதாது வினோ சார்…//

  வினோ மிகவும் நன்றி

 14. chenthil uk

  அம்பேத்கரும் மிக சிறந்த தலைவர்.. அப்துல் கலாம் கூட மிக சிறந்த மனிதர் … அவரவர் திறமையில் மனிதர்களுக்காக போராடியவர்கள்… யாரையும் வரிசை படுத்திவிட கூடியது கிடையாது இவர்களின் போராட்டங்கள்… மனிதர்களுக்காக போராடும் உயந்த குணம் உள்ளவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் தான் நிறுத்த பட வேண்டும்… தரம் பிரிப்பது தேவையட்ட்றது… அந்த வெப்சைட் அல்லது பத்திரிகை… இந்த வரிசை படுத்துவதை விட்டுவிட்டு… மக்களின் அடிமட்ட களையபடாத ப்ரிச்சனைகள் ஏராளம் உள்ளன … அதை உணர வேண்டிய இந்திய இன்றைய மங்குனி தலைவர்களுக்கு உணரவைத்தாலே உங்கள் வெப்சைட் கூட காந்தியின் இடத்தில வைத்து போற்றுவார்கள்… காந்தி , அம்பேத்கர் , அப்துல் கலாம் இவர்களை தயவு செய்து நாம் வரிசை படுத்த வேண்டாம்.. நமக்கு அவர்களை போற்ற மட்டுமே உரிமை உள்ளதாக என் தாழ்மையான கருத்து

 15. குமரன்

  மன்மதன்

  உங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை.

  அம்பேத்கர் இந்த தேசத்துக்கு ஆற்றிய சேவை அளப்பரியது. நமது அரசியல் நிர்ணயச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவின் தலைவர் என்பது அவர் ஆற்றிய பணிகளுள் தலையாயது. அதையும் தாண்டியே அவரது சேவை அமைந்துள்ளது என்பது அரசியல் நிர்ணயச் சட்டம் வடிவமைத்தது என்ற மிகச் சிறந்த பனிக்குள் மூழ்கிப் போனது என்பதே உண்மை.

  அம்பேத்கரின் சீரிய பனி நமது அரசியல் நிர்ணயச் சட்டம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக நடமாட வகை செய்யும் நமது சட்ட அமைப்பு உலகிலேயே மிகவும் அருமையாக வடிவமைக்கப் படாது என்பதை பல நாடுகளின் சட்ட அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் கருத்து.

  பல்வேறு சூழல்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்த சட்டம் நமது சட்டம்.

  நம்மோடு சுதந்திரம் பெற்ற தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, பர்மா, மாலத்தீவுகள் போன்ற நாடுகள் எல்லாம் அரசியல் ரீதியான சவால்களைச் சந்தித்தபோதும் அவை போன்ற சிக்கல்கள் எதுவும் வராத வண்ணம் அமைந்ததற்கு நமது சட்டமும், அகிம்சா நெறியும்தான் காரணம்.

  பல நூறு ஆண்டுகளாக அடிமை வாழ்வு வாழ்ந்த சில சமுதாயங்களை முழுமையாக விடுதலை அடையும் வண்ணம் ஒரு அரசியல் தீர்வை இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கும் முன்னரே சிந்தித்து அமைத்துக் கொடுத்த தொலைநோக்குப் பார்வையை வியந்து பாராட்டவேண்டும்.

  மகாத்மா காந்தி செய்த சேவையை விடவும் அம்பேத்கார் செய்த சேவை சிறிதும் குறைந்ததல்ல.

 16. குமரன்

  மன்மதன்

  அம்பேத்கரின் சேவை குறித்த எனது பார்வைகளை நானே ஒரு கட்டுரையாகத் தருகிறேன். ஆசிரியர் பரிசீலித்துப் பிரசுரிக்கலாம்.

 17. குமரன்

  இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக நடமாட வகை செய்யும் நமது சட்ட அமைப்பு உலகிலேயே மிகவும் அருமையாக வடிவமைக்கப் பட்டது என்பது பல நாடுகளின் சட்ட அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் கருத்து.
  — என்று படிக்கவும், தட்டெழுத்துப் பிழைகளைப் பொறுக்கவும்.

 18. S.ALAVUDEEN

  அம்பேத்கார் அவர்களின் சட்டம்….ஒரு சாதி பிரிவு மக்களுக்காக மட்டும்..ரொம்ப உதவ அமைக்க பட்டது…..

 19. Murugesan

  அம்பேத்கர் ஒரு அதிசய பிறவி. அவரை தெரிந்தவர்கள் ஞானி. தெரியாதவர்கள் இந்திய பிரஜையே அல்ல, அப்துல் கலாம் மட்டுமே அண்ணல் அம்பேத்கருக்கு இணையானவர். இந்திய சாரி உலகத்தில் அம்பேத்கருக்கு இணையானவர் அப்துல் கலாம் ஒருவரே என்பதே எனது தாழ்மையான கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *