BREAKING NEWS
Search

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

rajini-time-1

ரு ஊரில் இரண்டு பேர் தவம் இருந்தார்கள்.

அவர்கள் கனவில் கடவுள் தோன்றி, “நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே ஒரு குரு இருப்பார். நீங்கள் கேட்டதை கொடுப்பார்” என்றார்.

அதன்படி அவர்கள் இரண்டு பேரும் அந்த குருவை சந்திச்சாங்க. “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று குரு கேட்டார். ஒருத்தன் சொன்னான், ‘எனக்கு பணம், பெயர், புகழ், பட்டம், பதவி வேண்டும்’னு. ‘எடுத்துக்கொள்” என்று குரு சொன்னார்.
இன்னொருத்தன், ‘எனக்கு நிம்மதி மட்டும் போதும்’ என்றான். ‘எடுத்துக்கொள்’ என்றார் குரு.

5 வருடங்கள் கழித்து அந்த குரு, பணம் கேட்ட சிஷ்யனைச் சந்திச்சார். ‘எனக்கு பணம் வந்தது. ஆனால் நிம்மதி இல்லை’ன்னு சொன்னான்.

நிம்மதி வேணும்னு கேட்டவன்கிட்ட போனார் குரு. அவனோ, ‘எனக்கு நிம்மதி இருக்கு. சந்தோஷம் இல்லை’ன்னு சொன்னான்.

பணம் கேட்டவனைப் பார்த்து, ‘நீ சம்பாதிச்ச பணத்தை நீயே வச்சிக்கிட்டே. அதனால்தான் நிம்மதி இல்லை”ன்னு குரு சொன்னார்.

அடுத்த 5 வருடங்கள் கழித்து அந்த குரு அவனை சந்தித்தபோது, “நீங்க சொன்னபடி நிறையபேருக்கு உதவிகள் செய்தேன். ஆனால் உதவி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வந்து உதவி கேட்கிறார்களே”ன்னான்.

“ஒருவனுக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே. புதுசு புதுசாக வருகிறவர்களுக்கு உதவி செய். அல்லது பணத்தை கொண்டு போய் ஆற்றில் போடு,” ன்னு குரு சொன்னார்.

“பணம் நிறைய வந்தாலும், இஷ்டப்பட்ட தொழிலை செய்தால்தான் நிம்மதி கிடைக்கும். அதைச் செய்…”, என்று குரு அறிவுரை சொன்னார்.

-பொய் இசை வெளியீட்டு விழாவில் தலைவர் (பிப் 2006)

-என்வழி




2 thoughts on “ஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *