BREAKING NEWS
Search

சாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்!

சாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்!

தர்மபுரியில் ஏழை மக்கள் மீது பாமக நடத்திய வெறியாட்டத்தின் ஒரு சாட்சி!

தர்மபுரியில் ஏழை மக்கள் மீது பாமக நடத்திய வெறியாட்டத்தின் ஒரு சாட்சி!

நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் பாமக 6 தொகுதிகளில் முன்னிலை என்பதைப் பார்த்தபோது பகீரென்றுதான் இருந்தது.

சாதி மோதலே இல்லாமல் வன்னியரும் ஆதி திராவிட மக்களும் அண்ணன் தம்பியாகப் பழகி வந்த தர்மபுரி – கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மிக மோசமான சாதீய நோயை ஏற்படுத்திய மருத்துவர்கள் ராமதாசும் அவர் மகனும்.

இவர்கள் பெறும் வெற்றி சாதி வெறிக்கு மக்கள் தரும் அங்கீகாரமாகிவிடுமே என்ற அங்கலாய்ப்புதான் அந்த ‘பகீரு’க்கு காரணம். நல்ல வேளை… ஒரு தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை. தன் பலம், தகுதி என்னவென்பதே தெரியாமல் ‘அன்புமணியாகிய நான்…’ முதல்வர் வேட்பாளர் என்று முண்டாசு தட்டியவர் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

இனி வரும் காலங்களிலும் இந்த சாதிக் கட்சி இப்படி தனித்தே விடப்பட வேண்டும். தமிழக அரசியலிலிருந்து காணாமல் போகவும் வேண்டும்.

இதுபோன்ற கட்சிகள் துளிர்த்தால், ஊர் தோறும் காதலர்கள், காதல் திருமணம் செய்தவர்கள் கொல்லப்படுவார்கள். அந்த கொலை பரபரப்பு அமைத்துத் தரும் அரசியல் களத்தில் எம்பி, எம்எல்ஏ ஆக முயற்சிப்பார்கள் இந்த சாதி வெறியர்கள்.

அதிமுக, திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் இப்போதிலிருந்தே தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் தங்கள் இருப்பை இன்னும் பலப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டும்.

யாரை வேண்டுமானாலும் வளர விடுங்கள். பாமக மாதிரி சாதித் துவேஷ கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழித்து விடுங்கள்!

இந்தத் தேர்தலில் பெரும் ஏமாற்றம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனின் தோல்வி. Thiruma

இந்தத் தோல்விக்காக பாமகவும், காங்கிரஸும் மிகத் தீவிரமாக உழைத்தார்களாம்.

திருமாவுக்கான தனிப்பட்ட தோல்வி இல்லை இது. அவரது குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க முடியாமல் போனது, அந்தத் தொகுதியில் வாழும், வாழ்க்கைக்காகப் போராடும் ஒட்டுமொத்த மக்களின் தோல்வி!

அதென்ன, திருமாவளவன் கட்சி மட்டும் சாதிக் கட்சி இல்லையா என்று சிலர் கேட்கக் கூடும்.

நிச்சயம் இல்லை!

வினோ
12 thoughts on “சாதிக் கட்சிகளை வேரில் அமிலம் ஊற்றி அழியுங்கள்!

 1. srikanth1974

  மரம் வளரலாம்
  மரம் வளர்க்கலாம் ஆனால் மரம்வெட்டி வளரக்கூடாது வளர்க்கவும் ,கூடாது.

 2. Mahesh

  Very good pathivu.. Thalaivar andrae sonnar , ” Saitha punniyam edhavathu micham irunthaal, adhu indha therthalodu mudinthuvidum ” endru. Adhuthaan nadakiradhu. Saidha punniyam andha therthalodu mudinthuvittathu. Adhil mattumae vendranar. Adhanpiragu – kazudhai theinthu katterumbanathu.

  Ilavarasan anma santhamagatum !

 3. sharvan

  vino onrai purithu kollungal thiruma valavan jathi veriyan athu mattum alla katta panchayat nadathum throgi… ivanai support pannatheerkal.. venum enral youtube parungal..

 4. Raj

  If PMK is communal then VCK also communal. Accept this. Communal riots happen at dharmapuri was due to thiruma violent speech only.

 5. பாஸ்கரசேதுதி

  பாமக சாதி கட்ச்சி என்றால் விசிக என்ன மக்கள் கட்ச்சியா மிருக கூட்டம் இவை தலித் இளைஞர்களை தவரான பாதையில் கோண்டு செல்லாதீர்

 6. sarvan

  VINO

  DNT SUPPORT VCK KATTAPANJAYAT GROUP>> i think neengalum avanoda group ah?? en vazhi dnt support any party…

 7. குமரன்

  தமிழ்நாட்டில் –

  வன்னியர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், (சென்னை – சில பகுதிகள் – இப்போது பல மாவட்ட மக்கள் குடிபெயர்வால் சற்றே மாறிவிட்டது), வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் (சில பகுதிகளில்), பெரம்பலூர் (சில பகுதிகளில்), அரியலூர் (சில பகுதிகளில்) ஆகிய மாவட்டங்களில் – (மற்றும் புதுச்சேரியிலும் கூட)

  கொங்கு வேளாளக் கவுண்டர்கள் …. சேலம் (சில பகுதிகளில்), நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் (சில பகுதிகளில்) –

  தேவர் (முக்குலத்தோர்) …. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் (சில பகுதிகளில்), மதுரை(சில பகுதிகளில்), விருதுநகர் (சில பகுதிகள்), சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் –

  நாடார் – மதுரை(சில பகுதிகளில்), விருதுநகர் (சில பகுதிகள்), தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்

  ஆதிக்க சாதியினர். இவர்கள் அனைவருமே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகை செய்யப்பட்டு, கிட்டத்தட்ட தலித் மக்களுக்கு எந்த விதத்திலும் குறையாத இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

  ஆனால், தலித் மக்களுக்கு முதல் நிலை விரோதிகளாகச் செயல்படுவோர் இவர்களாகவே இருந்து வருகின்றனர். இதை வெளிப்படையாகக் கண்டித்த எந்த திராவிடக் கழகத் தலைவராவது உண்டா? சமூக நீதிக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்ததாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் இத்தனை அவலத்துக்கும் வேறு எவரையாவது திட்டுவார்களே அல்லாது உண்மையை என்றும் வெளிப்படையாகப் பேசுவது இல்லை. சமூகநீதிக் காவலர் கருணாநிதியோ, அல்லது சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதாவோ இதைப் பற்றி மூச்சு விடமாட்டார்கள். ஆக, தி.க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் சாதிக் கட்சிகளே.

  ஒரே வித்தியாசம், பா.ம. க வன்னியருக்கு மட்டுமானது.

  தி.கவும், தி.மு.கவும்,அ.தி.மு.கவும் —- வன்னியர், தேவர், கொங்குவேளாளர், நாடார், ஆகிய ஆதிக்க சாதிகளுக்கும் முதலியார், நாயுடு, முத்தரையர் முதலிய ஓரளவு ஆதிக்க சாதிகளுக்கும் ஆனது. அவ்வளவுதான்.

  பெருந்தகை அம்பேத்கார் தவிர வேறெவரும் தலித் மக்கள் நலனை முன்னெடுத்துச் செல்ல வில்லை என்பதுதான் உண்மை. இதையும் எவரும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

  திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் தலைவர்கள் இந்த உண்மை தெரிந்தாலும், உணர்ந்தாலும் ஆதிக்க சாதியினரை எதிர்த்து வாழ முடியாது என்ற உண்மையையும் உணர்ந்ததால், இந்த தி.மு.க, அ.தி.மு.க, தி.க ஆகிய கட்சிகளின் முகமூடியைக் கிழிக்காமல் இருக்கிறார்கள்.

  தனிப்பட்ட முறையில் பேசும்போது இதை இந்தத் தலித் தலைவர்கள் சொல்கிறார்கள், வேண்டுமானால் பேசிப் பாருங்கள்.

  தலித் விரோதப் போக்கை மூடி மறைத்துப் பசப்பு நாடகத்தைத் தி.க., தி.மு.க, அ.தி.மு.க ஆகிய சாதிக் கட்சிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

  ஏழு நாயுடு மாவட்டச் செயலர்கள் இருக்கும் தி.மு.கவில் ஒரு தலித், ஒரு பழங்குடி மாவட்டச் செயலர் உண்டா?

  அ.தி.மு.கவில் ஒரே மதமாக ஆக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி, அதுதான் அம்மா அடிமை. இந்த மதத்தில் ஒரே கடவுள், அம்மா. மற்றபடி அவரவர் உட்பிரிவுக்கு ஏற்றபடி சாதி சொல்லிக் கொள்ளலாம், சாமி வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் ஒரு தலித், ஒரு பழங்குடி மாவட்டச் செயலர் உண்டா?

  தனியார் நிறுவனங்களில் சமூக நீதி பற்றி நீட்டி முழங்கும் திராவிடக் கழகத்தினர், தமிழக மந்திரி சபையில் எந்த நாளிலும் 25% தலித் மக்களுக்குத் தரப்படவில்லையே என்று ஒரு முறையாவது சிந்தித்ததுண்டா? மாட்டார்கள், ஏனெனில் தி.க மேற்கூறிய ஆதிக்க சாதியினர் கட்சி. இதை மறுப்போருடன் பொதுவிவாதத்துக்கு நான் தயார்.

 8. குமரன்

  நாளைக்கு நாளிதழ்களில் சாதிக்கணக்கு வந்துவிடும். அதிமுக. மந்திரிசபையில் யார் யார் என்னென்ன சாதி, மதம், எத்தனை நாயுடு, எத்தனை தேவர், எத்தனை வன்னியர், எத்தனை நாடார், எத்தனை கொங்குவேளாள கவுண்டர், எத்தனை கிறிஸ்தவர், எத்தனை முஸ்லிம் என்று.

  தி.மு.க மந்திரி சபை அமைத்திருந்தாலும் இதே கணக்கு உண்டு.

  இந்த இரண்டு கட்சிகளும் கூட சாதிக் கட்சிகளே,

  ஏனெனில், 33 பேரில், 15% தலித் மக்களுக்கு என்றால், ஐந்து மந்திரிகள் தலித் ஆக இருக்க வேண்டும், ஆனால் இல்லை. 7.5% பழங்குடியினராக இருக்க வேண்டும். ஒருவர் கூட இல்லை. 1952இல் இருந்து இன்று வரை தமிழக மந்திரி சபையில் ஒரு பழங்குடியினரும் அமைச்சர் ஆகவே இல்லை. சமூக நீதி பற்றி தொண்டை கிழியப் பேசியவர்களும், பேசுவோரும், இது பற்றி ஒரு முறை மூச்சு விட்டதுண்டா? நாயுடுக்களுக்கு எதனால் அவர்கள் மக்கள் தொகை சதவிகிதத்தை விடவும் அதிக அளவில் பிரதிநிதித்துவம் (வளராத பாரதிய ஜனதா மாவட்டத்தலைவர்களில் கூட 7 பேர் நாயுடுவாம்!) என்று யோசித்ததுண்டா?

  பெரியார். ஈ.வெ.ரா நாயக்கராமே?

  வைகோவையும், விஜயகாந்தையும் ஆட்டத்தில் சேர்க்க வேண்டாம், பாவம் படுதோல்வி சந்தித்து விட்டார்கள்!

 9. தில்லைகோவிந்தன்

  அந்த புகைப்படத்தை கொஞ்சம் அறிவோடு நோக்குங்க . எரிந்த வீட்டில் எரியாமல் மாடு எப்படி? என்னடா அனுதாபம் தேடறீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *