BREAKING NEWS
Search

ரஜினி படத்துடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம்! – கேயார்

ரஜினி படத்துடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம்! – கேயார்

Lingaa2
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுடன் போட்டி போடுவது தற்கொலைக்குச் சமமானது என்றார் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

மகாபலிபுரம் (மாமல்லபுரம் என்பதே சரியான பதம்) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேயார், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஆர்.வி.உதயகுமார், துரை, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிபிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடல்களை கேயார் முன்னிலையில் பிரபு சாலமன் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

பின்னர் கேயார் பேசும்போது, “படத்தை எடுப்பது கஷ்டம் என்ற காலம் போய் இப்போது, அதை ரிலீஸ் செய்வதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 போன்ற நிறுவனங்கள்தான் நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட்டு அந்த படங்களுக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கிறது.

அதேபோல் படங்களை வெளியிடுவதிலும் ஒரு திட்டமிடல் வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் வெளியாகும் போது சிறு பட்ஜெட் படங்களை அது கூட மோத விட வேண்டாம். அது சரியான முடிவும் கிடையாது. அது தற்கொலைக்கு சமமானது.

இப்ப ரஜினி படம் வருதுன்னா மக்கள் அதைத்தான் பார்க்க விரும்புவாங்க. அதனால், சிறு பட்ஜெட் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் வசூல் கிடைக்காது.

இந்த வருடம் வெளியான படங்களிலேயே ‘வீரம்’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.

சமீபத்தில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான்,” என்றார்.
8 thoughts on “ரஜினி படத்துடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம்! – கேயார்

 1. kabilan.k

  இந்தாளு சும்மா நடிகிறாரு,கோச்சடையன் பாடல் வெளியிட்டு விழாவுக்கு கூபுடலன்னு,படம் வியாபாரம் ஆகலன்னு சொன்னாரு,இவரு பேசுன பதிவு நம்ம தளத்துல போடுற அளவுக்கு அவருக்கு தகுதி இல்ல

 2. Elango

  \\சிறு பட்ஜெட் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் வசூல் கிடைக்காது.

  கேயார் அவர்களே …சமிபத்தில் “மஞ்ச பை” என்ற படம் கோச்சடையான் படம் ஓடி கொண்டிருந்த நேரத்தில் வெளி யாகி மாபெரும் வெற்றி பெற்றதை மறந்து விட்டீர்களா? படம் லாபம் இல்லையா????

  ஒரு கிராமத்து மனிதன் ..எவ்வளவு நாகரிகமானவன் ….ஒழுக்கமானவன் ..படிக்காத மேதை …சமூக அக்கரை கொண்டவன் …என்பதை மிக அழகாக சித்தரித்து …இன்று எல்லா நகர வாசிகளையும் …கிராமத்து வாசிகளை மதிக்க செய்த ..”மஞ்ச பை” திரை படம் …கூட வந்த எல்லா படங்களையும் தன்னுள் சுருட்ட வில்லையா?

  அந்த காலம் எல்லாம் மலை ஏறி போச்சு …நல்ல கதையும்… திரை கதையும் இருந்தால் மக்களின் பேராதரவு சிறிய budget படங்களுக்கும் இருக்கும் என்பதை தமிழ் ரசிகர்கள் நிருபிதிருகிறார்கள் .. என்றுமே கொண்டாடுவார்கள்!

  சமீபத்தில் பெரிய ஹீரோ களின் படங்கள் தோல்வியை தழுவுதம் வெறும் ஹீரோக்களை மட்டுமே நம்பி பப்டம் எடுப்பது தான்!

 3. Elango

  இனிமேல் “மஞ்ச பை” போன்ற சமூக அக்கறை ..நல்ல கதை…திரை கதை போன்ற …படங்களுடன் மோதுவது தான் தற்கொலைக்கு சமம்!

  ரஜினி இந்த அம்சங்களை எல்லாம் தன் திரை படங்களில் கவனமாக கையாளுவதால் தான் அவரின் பல படங்கள் வெற்றி பெற்றன என்பதை தெளிவாக சொல்லுங்கள் ஐயா!

 4. kabilan.k

  இளங்கோ சாரே,அருமையா காமெடி பண்றீங்க.விமல் நடிகிரதுக்கு பதிலா,இனிமே உங்கள நடிக்க வைக்கலாம்

 5. s venkatesan, nigeria

  மிஸ்டர் பாவலன் அவர்களை அன்போடு மேடைக்கு அழைக்கிறோம்.

 6. sakthi

  இளங்கோ…. ஹிஹிஹிஹி
  விஜய் அவார்ட்
  குமுதம் பட்டமும் உங்களுக்குத்தான்

 7. மிஸ்டர் பாவலன்

  //மிஸ்டர் பாவலன் அவர்களை அன்போடு மேடைக்கு அழைக்கிறோம்.//

  உலக நாயகன் பத்தி நான் எழுதணுமா சொல்லுங்க!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 8. s venkatesan, nigeria

  ///மிஸ்டர் பாவலன் says:
  September 9, 2014 at 4:15 am
  //மிஸ்டர் பாவலன் அவர்களை அன்போடு மேடைக்கு அழைக்கிறோம்.//
  உலக நாயகன் பத்தி நான் எழுதணுமா சொல்லுங்க!………..///

  நீங்கள் திறமையாக எழுதுவீர்கள். நான் மறுக்க வில்லை. ஆனால் உண்மையை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.

  ராஜதந்திரம் என்று சொன்னீர்களே, பொதுவான ஒருவர் ரஜினி படத்துடன் மோதுவது தற்கொலைக்கு சமம் என்று சொல்கிறார். அவர் என்ன ரஜினி ரசிகரா? அவருக்கு பதில் சொல்வது போல எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *