BREAKING NEWS
Search

ஒருவழியாக மீண்டும் மாநிலங்களவை எம்பி ஆனார் கனிமொழி!

ஒருவழியாக மீண்டும் மாநிலங்களவை எம்பி ஆனார் கனிமொழி!

Kanimozhinew2சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 31 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து புதிய 6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

தி.மு.க. சார்பில் கனிமொழி, தே.மு.தி.க. சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் களத்தில் இருந்தனர். 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் இன்று ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இதற்காக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் உள்ள சட்டசபைக்குழுக் கூட்ட அறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜூனன் ஆகியோருக்கு தலா 36 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு அ.தி.மு.க. வேட்பாளர் லட்சுமணனுக்கு 35 வாக்குகள் கிடைத்தன.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு 34 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு 31 வாக்குகளும் கிடைத்தன. இந்த 6 வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

22 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் தோல்வியடைந்தார்.

கனிமொழிக்கு ஒரு செல்லாத ஓட்டு

கனிமொழி இந்தத் தேர்தலில்  32 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 31 வாக்குகள்தான் பெற்றிருந்தார். அந்த ஒரு செல்லாத ஓட்டுப் போட்ட எம்எல்ஏ யார் என்பதை அறிய அரசியல் வட்டாரத்தில் ஏக ஆர்வத்துடன் உள்ளனர். காங்கிரஸ் தரப்பிலேயே இந்த செல்லாத ஓட்டு பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கனிமொழிக்கு திமுக வாக்குகள் 23, காங்கிரஸ் 5, புதிய தமிழகம் 2, மமக 2 ஆக மொத்தம் 32 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தத் தேர்தலில் பாமகவின் 3 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *