BREAKING NEWS
Search

முக ஸ்டாலின், முரசொலியின் அரைவேக்காட்டுத்தனம்!

ஜினி அரசியல் களத்தில் வாள்வீச்சை துவங்குவதற்கு முன்பே வலிய வந்து திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி ரஜினியை விமர்சித்திருக்கிறது. அதுவும் ரஜினி மன்றத்தின் உள் நடவடிக்கைகள் பற்றிய தங்கள் அபிலாசைகளை ரஜினி ரசிகன் பேசுவதாக சித்தரித்தவாறு.

ரஜினிக்கும் ரசிகனுக்குமான பந்தம் ஒரு கட்சிக்கும் தொண்டனுக்குமான பந்தத்தைவிட உணர்வுபூர்வமானது என்னும் அடிப்படை அறிவு கூட இத்தனை பாரம்பரியம் மிக்க நாளேடான முரசொலிக்கு இல்லாமல் போனது ஆச்சர்யம்.

ரஜினி எனும் நடிகனுக்கு தான் ரசிகன் அரசியலுக்கு இல்லை என்று ஒரு குரூப் இருக்கிறதே என உங்களுக்கு ஐயம் எழலாம்..? ரஜினி ரசிகன் ரஜினி ரசிகன்தான்.. சினிமா அரசியல் என்றெல்லாம் வேறுபாடு இல்லை. இப்படி சொல்பவர்களின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

ஒன்று அவன் இத்துப்போன உபியா இருக்கணும்… அல்லது வேற ஏதேனும் ஒரு கட்சி அடிமையா இருக்கணும். இந்த மாதிரி எவனோ ஒரு ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட உபி யாரோ ஸ்டாலினிடம் போய் சொல்ல, அவர் கொஞ்சம் கூட யோசிக்காம இந்த கட்டுரைய பப்ளிஷ் பண்ணுங்கனு சொல்லிருப்பார். இப்போ ஊரே காறி துப்புது.

அரசியலுக்கு வராதப்போவே அவரை எதிர்த்து முக்கால் பக்கம் அறிக்கைவிட்டு அலறும் திமுக, அவர் வந்தா என்னவெல்லாம் பண்ணும்னு உபிகளில் சிலருக்கே யோசனைகள் வந்துவிட்டது. இத லேட்டாக உணர்ந்து கொண்ட ஸ்டாலின் இன்றைக்கு இது பற்றி நடந்த எந்த தொலைகாட்சி விவாதங்கள்ளயும் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டாம்னு சொல்லிட்டார்.

சிறிய விசயத்திலேயே இவ்ளோ பெரிய தடுமாற்றம்.. இந்த லட்சணத்தில் சி.எம் பதவிக்கு ஆச வேற!

– ஜெயசீலன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *