BREAKING NEWS
Search

நஷ்டம் விஜயகாந்துக்கல்ல!

தேமுதிகவும் திமுகவின் சேட்டைகளும்!

memes-ss copy

சினிமா என்று பார்த்தால் நான் முதலில் எம்ஜிஆர்.. அடுத்து ரஜினி ரசிகன். எந்த இடத்திலும் இதை மறைத்ததில்லை. இனி இன்னும் கம்பீரமாக இதைச் சொல்லிக் கொள்ளலாம்!

அரசியலில் பெருந்தலைவரும் புரட்சித் தலைவரும்தான்.

விஜயகாந்தை எனக்குப் பிடிக்குமா.. பிடிக்காதா என்றால்… அது அவர் படங்களைப் பொறுத்தது. எனக்கு ரொம்பப் பிடித்த அவர் படம் நானே ராஜா நானே மந்திரி. நிஜத்தில் அவரது கேரக்டரின் ஒரு பகுதி அது.

தேமுதிகவுக்கு வருவோம். கட்சிப் பெயரே அபத்தம், நண்பன் ரவிஷங்கர் சொன்னது போல. எப்படியோ கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் அவரும் ஒரு ‘தாதா’வாக வந்துவிட்டார்.

அவர் தலைமையில் தட்டுத் தடுமாறி ஒரு கூட்டணியும் அமைந்துவிட்டது. ஆனால் இந்தக் கூட்டணியை உடைக்க இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளும் படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

தேமுதிகவைப் பொறுத்தவரை.. விஜயகாந்த் என்பவர்தான் முகம்.. முகவரி. மற்றவர்கள் அவரால் ஏற்றம் பெற்றவர்களே. விஜயகாந்த் என்ற ‘1’ ஐக் கழித்துவிட்டால், அந்தக் கட்சியில் பிரேமலதா உள்ளிட்ட அத்தனையும் வெறும் பூஜ்ஜியங்களே!

எம்ஜிஆர் காலத்து நாகரீக அரசியல் இன்றில்லை. இது பெரும் சூதாட்டம்… கொள்ளைக் கூட்டங்கள் மோதும் தேர்தல்.

இன்று தங்களுக்கு உதவாத விஜயகாந்த் கட்சியைத் துண்டாட திமுக & கோ செய்யும் அத்தனை வேலைகளும் அரசியல் நிபுணர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் புரிந்தே இருக்கிறது. முன்பு மதிமுகவைத் துண்டாடியவர்கள், இப்போது மதிமுக தலைவர் வைகோ ஒருங்கிணைக்கும் தேமுதிகவைத் துண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான பலன் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் மே 19-ம் தேதி தெரியும். முன்பு போல இல்லை அரசியல் களம். இன்று ஒவ்வொரு வாக்காளனும் ஒரு அரசியல் பார்வையாளனே. திமுகவின் பிளவு வேலைகள் விஜயகாந்த் கட்சிக்கு எதிர்மறை அல்ல!

முக ஸ்டாலின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்பிராயமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலோடு திமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் மூத்த அரசியல் பத்திரிகையாளர்கள்.

-வினோ

என்வழி
7 thoughts on “நஷ்டம் விஜயகாந்துக்கல்ல!

 1. anbudan ravi

  வெள்ளம் மற்றும் அடாவடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளும் கட்சி மீது உள்ள வெறுப்பினால் திமுகவே பரவாயில்லை என்கிற எண்ணம், இவர்கள் செய்யும் சேட்டையால் மாறி வருகிறது. விஜயகாந்த் கட்சியை உடைப்பதால் அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லை மாறாக திமுகவின் மீதான எண்ணம் அரசியல் சாராத பொது மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை. அரசியலுக்கு மன்னிக்கவும்.

  அன்புடன் ரவி.

 2. Raghul

  Do we need to get into this murkiest happenings ? We had ignored Vijayakanth long back and we may maintain that please..

 3. jegan N

  Aasiyal vendaam Anna……all party viewers are here …so plsss don’t post these kind of articles

 4. குமரன்

  பல நாளாக என்வழி பார்க்கவில்லை. இன்று தலைவர் பத்மவிபூஷன் பற்றிய பதிவு என்ன என்று பார்க்க வந்தேன்…. அடடா இது விட்டுப் போய் விட்டதே!!!

  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ……

  கட்சி என்றிருந்தால் பிளவு படும். ஆனானப்பட்ட காங்கிரசே பலமுறை பிளவு பட்டு விட்டது. தே.மு.தி.க சென்ற முறை அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது தவறு, கூட்டணி வைத்து வென்ற பின்னர், ஜெயாவை முறைத்துக் கொண்டது தவறு. அதன் பலன்தான் ஜெயா தேமு.தி.கவை உடைத்து எட்டு எம்.எல்.ஏக்களைத் தனக்கு ஆதரவாக வைத்திருந்தார். இத்தனை ஆண்டுகளும் எம்.எல்.ஏ பதவியைத் தக்கவைத்துக் கொள்ள மட்டும் தே.மு.தி.கவை விட்டு விலகாமல் இருந்த எட்டுப் பேரும், ஜெயாவுக்கு ஆதரவாக இருந்து விட்டு தேர்தல் சமயத்தில் மட்டும், அதை விட்டு விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தனர். அவர்களில் இருவருக்கு மட்டும் – பண்ருட்டி ராமச்சந்திரன், மாஃபா பாண்டியராஜன் – தேர்தலில் நிற்க ஜெயா வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இந்தக் கேவலமான வேலையைப் பார்த்த ஜெயா பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள்? கருணாநிதியும் ஸ்டாலினும் ஒன்றும் ஜெயா செய்யாத சில்மிஷத்தைச் செய்து விடவில்லையே?

  பெருந்தலைவர் கூறியது போல – எம்.ஜி.ஆரின் அ.தி.மு.கவும் சரி, கருணாநிதியின் தி.மு.கவும் சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டை. ஜெயாவின் அ.தி.மு.க அதே மட்டைதான், அதே மட்டைகள்தான் இப்போது இன்னமும் அதிக ஆண்டுகள் ஊறியது அவ்வளவுதான்.

  அரசியலைப் பொருத்த மட்டில் பெருந்தலைவரின் அரசியல் நிலைக்கு ஈடாக – எம்.ஜி.ஆர் உள்பட – எவரும் எட்ட முடியாது.

  கருணாநிதி மூடிய மதுக்கடைகளை எம்.ஜி.ஆர் திறந்த வரலாற்றை எல்லாரும் மறைக்கிறார்கள். ஃபிலிப் & கோ அர்புத்னாட் & கோ என்ற பிரிட்டிஷ் காலத்து இரண்டு கம்பெனிகள் மட்டுமே 1983 வரை வெளிநாட்டு மதுபானத்தைத் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய உரிமம் பெற்றிருந்தன. அந்தக் காலக் கட்டத்தில் இவர்கள் மட்டுமே மதுபான மொத்த வியாபார உரிமமும் பெற்றிருந்தன. இவர்களிடம் மட்டுமே நட்சத்திர ஓட்டல்கள் (எனக்கு நேரடியான அனுபவத்தால் கூறுகிறேன்) மதுபான வகைகளை வாங்க முடியும். அப்போதுதான், இந்த இரு மொத்த வியாபாரிகளும், என்.ஜி.ஆரின் (அல்லது அவரது அரசின்?) இழுத்த இழுப்புக்கு (உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன்) வராததால், மொத்த வியாபாரம் டாஸ்மாக் வழிக்கு வந்துவிட்டது. டாஸ்மாக் அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் சொல்வது இதுதான்:

  . “TASMAC is vested with the exclusive privilege of wholesale supply of IMFL for the whole State of Tamil Nadu as per Section 17 (C) (1-A) (a) of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937). It has taken over the wholesale distribution of Indian Made Foreign Liquor from the Private Sector in the whole of Tamil Nadu during May 1983.”

  அதன் பின்னால், கடந்த 32 ஆண்டுகளில், மொத்த விற்பனையிலிருந்து நேரடியாகக் குடிமகன்களிடம் விற்பது, பின்னர் பார் வைத்து நடத்துவது என்று 2016 இல் ஊரை அடித்து உலையிலிட்ட கதையாக டார்கெட் வைத்து வியாபாரம் செய்ய ஆகி விட்டது.

  இதில் ஜெயாவின் மிடாஸ் சாராயக் கம்பெனியின் பங்கு மகத்தானது. ஜெயா மக்கள் வயிற்றை சாராய்த்தைக் காய்ச்சி விற்று எரித்ததை விடவும் தே.மு.தி.க. உடைபட்டது பெருத்த நஷ்டம் இல்லை.

  “ஊத்திக் கொடுத்த உத்தமி” என்று கோவன் பாடிய பாடல் மக்களிடம் எடுபட்ட காரணம் ஜெயாவுக்குப் புரிந்ததால்தான், படிப்படியாக மது விலக்கைக் கொண்டுவருவேன் என்று இப்போது பல்டி அடிக்கிறார்.

 5. குமரன்

  ஜெயா எப்போது இந்த மது விற்பனையை ரீடெய்லில் பிகப் பெரிய அளவில் கொண்டுவந்தார் என்பதை அதே டாஸ்மாக்கின் வலைத்தளம் இவ்வாறு கூறுகிறது.:

  In order to completely eliminate the sale of contraband, spurious and non- duty paid liquor in some licensed premises under the system of retail vending by private persons, which can affect the public health of the liquor consuming public and wide spread violations of Maximum Retail Price (MRP) of liquor fixed by the Government, both of which also cause loss of revenue to the Government and in order to curb the organized groups and cartels, who act in groups to ensure that applications are not made for a substantially large number of shops so as to keep them vacant and thereby to corner the retail vending trade causing loss of revenue to the Government, it was considered necessary by the Government to grant the exclusive privilege of retail vending of Indian Made Foreign Spirits to the State owned public sector under taking, TASMAC. Accordingly, the exclusive privilege of Retail Vending of IMFS was granted to TASMAC under Sec.17 (C) (1-B) of the Tamil Nadu Prohibition Act, 1937. TASMAC is doing the retail business also successfully with effect from 29.11.2003.

  ஊத்திக் கொடுத்த உத்தமி பற்றியும் மக்கள் நிச்சயம் மனதில் வைத்திருப்பார்கள்.

 6. anbudan ravi

  டியர் ஷங்கர் சார்….’நஷ்டம் விஜயகாந்துக்கல்ல’ என்கிற இந்த கட்டுரையை மீண்டும் படித்தேன். தேர்தல் முடிவுக்கு பின் நீங்கள் எழுதியவை அப்படியே பொருந்தி இருக்கிறது. எப்படி கணித்தீர்கள் என்று வியக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *