BREAKING NEWS
Search

திமுகவிலிருந்து முக அழகிரி திடீர் நீக்கம் – கூட்டணியைக் கெடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு!

திமுகவிலிருந்து முக அழகிரி திடீர் நீக்கம்!

klaignar - azhakiri

சென்னை: திமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி தற்காலிகமாக அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக கட்சித் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றது.

இந்த நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும், திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும், அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை,கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமை யோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியுடன் அழகிரி சந்திப்பு

முன்னதாக, திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று காலை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே மிகக் கடுமையான விவாதம் நடைபெற்றதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் தொடர்ச்சியாகவே, மு.க.அழகிரியைத் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக அறிவிப்பு வெளியிட்டது.

சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அழகிரி, திமுக கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்து அதிருப்தியைப் பதிவு செய்தார்.

இதனிடையே, மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்களை தொடர்ச்சியாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து திமுக நீக்கி வந்தது.

மதுரைக்குச் சென்றார் அழகிரி

கட்சியிலிருந்து தான் நீக்கப்படுவோம் என்பது காலையிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டதால், தனது ஆதரவாளர்களைச் சந்திக்க அழகிரி மதுரைக்குச் சென்றுவிட்டார்.

-என்வழி செய்திகள்
11 thoughts on “திமுகவிலிருந்து முக அழகிரி திடீர் நீக்கம் – கூட்டணியைக் கெடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு!

 1. srikanth1974

  துரோகம் என்று தெரிந்தால் நிரந்தரமாகவே கட்சியில் இருந்து நீக்கி விட
  வேண்டியதுதானே? அது என்ன தற்காலிக இடை நீக்கம்?
  [half day ] உண்ணாவிரதம் மாதிரி

 2. anbudan ravi

  என்னை கொல்லப்பார்த்தார் என்று கட்சியை விட்டே நீக்கி இருக்கலாமே? ஒ மன்னிக்கவும்….இதுவும் ெயா சசியை நீக்கியது போலத்தான்…..சும்மா உளுளுவாயி……நல்ல அரசியல்ரா சாமி.

  அன்புடன் ரவி.

 3. chozhan

  60 வருடம் 70 வருடம் அரசியல் என்பது எப்படி தடுமாறுகிறது என்பதும் எந்த விலை கொடுத்ததும் (ராஜ்ய சபை MP, காலில் விழுவது உட்பட ) விசயகாந்தை வளைக்க வேண்டும் என்பதும் தெள்ள தெளிவாக தெரிகிறது. பாவம் கருணாநிதி. பதவிக்காக மகன் மகள் மனைவி எதையும் விட்டுகொடுக்கவும் இழக்க தயார். இலங்கை தமிழரை பலி கொடுத்து பதவியில் ஒட்டிகொள்ளவில்லையா?. இதை கருணாவை தவிர யாராலும் செய்யமுடியாது. இவரை பற்றி பேசுவதும் எழுதுவதும் ரத்த கொதிப்பை கூட்ட உதவும்….

  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது என்றவர் தானே இல்லாமல் போய்விட்டார். இதுதான் ஜெ ராசி

 4. Krishna

  125 ஆண்டுகள் சரித்திரம் உள்ள கட்சி (காங்கிரஸ்), 60 ஆண்டு கால கட்சியிடம் (திமுக) மண்டியிடுகிறது. ஆனால் அந்த 60 ஆண்டு கட்சியோ வெறும் 6 ஆண்டு கட்சிக்கு (தேமுதிக) வால் பிடிக்க தயாராக இருக்கிறது. இன்று திமுக இருக்கும் ரேஞ்சுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கத்துடன் கூட்டணி வைத்து கொள்ளவும் கருணாநிதி தயார்.

 5. மிஸ்டர் பாவலன்

  கேப்டன் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது பெரிய
  suspense ஆக உள்ளது!

  -== மிஸ்டர் பாவலன் ==-

 6. மிஸ்டர் பாவலன்

  கலைஞர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன் என
  நாம் அறிந்தாலும், அவரிடம் இருந்து வரும் அறிக்கைகள்,
  மு.க. அழகிரி திடீர் நீக்கம், அதற்கான காரணங்களில் உள்ள
  முரண்பாடுகள், ஸ்டாலின்-அழகிரி பேட்டி ஏதோ ஒரு
  குழப்ப நிலையைக் காட்டுகின்றன. இது பற்றி சில
  நடுநிலையாளர்களைக் கேட்டபோது இந்த குழப்ப நிலை,
  அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு சாதகாமாக அமையலாம் எனத்
  தெரிவித்தனர். தேர்தல் கமிஷன் லோக் சபா தேர்தல் நாட்களை
  அறிவித்த பின், தமிழக முதல்வர் JJ அம்மா அவர்கள் சூறாவளி
  பிரச்சாரம் மேற்கொள்ளலாம் எனவும் நடுநிலையாளர்கள்
  என்னிடம் தெரிவித்தனர். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 7. குமரன்

  வைகோவை வெளியே அனுப்பியபோது அவர் மீது கொலை செய்யத் திட்டமிட்டார் என்று கருணாநிதி பலி சுமத்தினார்.

  அதுபோலவே இப்போது ஸ்டாலின் இன்னும் மூன்று மாதம்தான் உயிர் வாழ்வார் என்று தம்மிடம் அழகிரி கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார்.

  ஆகக் காலம் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் வசனத்தை மட்டும் கருணாநிதி மாறுவதில்லை.

  பதிலுக்கு அழகிரியும் உருக்கமாக இதை எனது பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்கிறேன் என்று சொல்லி தான் அரசியலில் கூடக் கருணாநிதியின் பிள்ளைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிறுவி இருக்கிறார்.

  “சகோதரச் சண்டை” என்று ஈழப் போராளிகள் குறித்துக் கருணாநிதி பேசிய ஏகடியத்தின் வினைப்பயன் இப்போது சிரிக்கிறது.

  அழகிரியும் தன்பங்குக்குத் தான் கருணாநிதிக்கு முன்னரே செத்துத் தனது உடலில் கருணாநிதியின் கண்ணீர் விழவேண்டும் என்று சொல்கிறார்.

  ஈழத்துக் கண்ணீர் எத்தனை லட்சம் பேர் கண்களில் இருந்து? வினைப்பயன் விடுவதில்லை.

 8. Krishna

  திமுகவின் குடும்ப சண்டை, பல திமுக தொண்டர்களை விரக்தி அடைய வைத்திருக்கிறது. இதன் விளைவு பாஜக அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. திமுக தொண்டர்களுக்கு எப்படியும் அதிமுகவை பிடிக்காது என்பதால் அவர்கள் பாஜக கூட்டணிக்கு தங்கள் வாக்குகளை போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஜூனியர் விகடனின் கருத்து கணிப்பு பாஜக கூட்டணி மோடி அலையால் அபாரமாக வளர்ந்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆகவே இந்த தேர்தல் அதிமுக அணிக்கும் பாஜக அணிக்கும் நடக்கும் ோட்டி என்று தெளிவாக தெரிகிறது. தமிழக மக்களுக்கு சட்டமன்ற தேர்தலுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். ஆகவே பாஜக கூட்டணி கணிசமான இடங்களை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் பதவிக்கு ஜெயலலிதாவை விட மோடி ஆயிரம் மடங்கு தகுதியானவர் என்பது எனது கணிப்பு.

 9. மிஸ்டர் பாவலன்

  கேப்டன் கூட்டணி பற்றி நாளைக்கு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் முடிவு லோக் சபா
  தேர்தலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தலாம் என
  நடுநிலையாளர்களால் கணிக்கப்படுகிறது. பார்ப்போம்!

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *