BREAKING NEWS
Search

மத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகல்

மத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகல்

karunanidhi-2

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

அமெரிக்கா ஐ.நா. சபையில் கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்காவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் நேற்று சென்னை வந்து அவரை சந்தித்து பேசினார்கள். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தனித்தனியாக அவசர கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்திலும் இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

மேலும், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

கூட்டணி முறிவு அறிவிப்பு

இன்று காலை 11 மணி வரை மத்திய அரசின் முடிவு குறித்து எந்த தகவலும் தி.மு.க.வுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தந்தை செல்வா அவர்களின் காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் குரலெழுப்பி வந்துள்ளது.

அறிஞர் அண்ணா காலத்திலேயே 1956-ம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

மங்காத தமிழுணர்வு

தந்தை செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல் பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட;

அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும். தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ – மொழி வாழ – நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப்போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து,

அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக – தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட – அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த – இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு – உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ- இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை – அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆழ்ந்து பார்த்து – அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் ‘தொப்புள் கொடி’ உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே ‘குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை’யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.

எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளியில் இருந்தும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்றும், இன்று அல்லது நாளை தி.மு.க. மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள்,” என்றும் தெரிவித்தார்.

-என்வழி செய்திகள்

 
15 thoughts on “மத்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகல்

 1. குமரன்

  இத்தாலியின் முசோலினி வம்சம் என்று சொல்லத் தக்க அளவில் சூழ்ச்சி செய்து சதிவலை பின்னிய சோனியாவை …

  வார்த்தைக்கு வார்த்தை “சொக்கத் தங்கம்” “தியாகத் திருவிளக்கு” “அன்னை” என்றெல்லாம் பட்டம் கொடுத்துப் பாராட்டி மகிழ்ந்த கருணாநிதி …

  இதே அறிவிப்பை ஜனவரி 2009 இல் செய்திருந்தார் என்றால் ….

  நிச்சயமாக வான் வழித்தாகுதலும், லட்சக் கணக்கான உயிர்ப்பலியும், இனப்படுகொலையும் நடந்தே இருக்காது.

  செத்துப் பத்து நாளுக்குள் மத்திய அரசில் பதவிகளை ஏற்றுக் கொண்ட அவலத்தால்தான் 2 G வழக்குகளில் சிக்கும் நிலை வந்தது. மக்களிடம் மரியாதையும் போனது.

  இப்போதாவது இதை திடமாகக் கடைப்பிடித்து காங்கிரஸோடு இனி எந்த ஓட்டும் உறவும் கொள்ளாமல் இருந்தால் போகிற வழிக்குக் கொஞ்சமாவது பாவம் குறையும்.

  இத்தாலிக்காரி சோனியாவும், ராஜபக்சேயும் இனப்படுகொலையில் கூட்டுக் கூலைகாரர்கள் என்பதை கருணாநிதி ஏற்று புரிந்துகொண்டு நடந்தால்தான் நல்லது. அவரை சொக்கத் தங்கம் என்றும் தியாகத் திருவிளக்கு என்றும் ஏற்றிப் பாடிய வாயைக் கழுவ வேண்டும்.

 2. chenthil UK

  தாமதமான முடிவு.. ஆனா வரவேற்க கூடிய முடிவு … திமுக துயில் கொண்டு எழுந்தால் தான் ஒரு பெரிய கட்சி போராட்டம் வீரியமுரும்.. மறுபடி காங்கிரஸ் கட்சி பக்கம் போனால் … ஒன்றும் செய்ய முடியாது…

 3. PRABU

  உண்மையான தமிழன் தி மு க வை எந்த தேர்தலிலும் ஆதரிக்க கூடாது. தமிழ் நாட்டைக்கூட விற்க (அழிக்க) தயங்க மாட்டார் கருணாநிதி.

 4. Krishna

  இனி முரசொலியில் “கொட்டரோச்சியை தப்ப விட்ட கோமான்” என்ற தலைப்பில் மன்மோகன் சிங்கை பற்றி கவிதை எதிர்பார்க்கலாம்.

 5. NAREN

  நல்ல முடிவு … ஆனால் நீங்க இந்த முடிவுல இருந்து மாறாம இருந்தீங்க அப்டின நல்லது…

  உங்களுக்கு இனிமேல் காங்கிரஸ் ஆல ஒரு நல்லது இல்லன்னு உறுதியா தெரிஞ்ச பிறகு முடிவேடுதிங்க பாருங்க … அங்க தான் உங்க சாணக்க்ய தனம் தெரியுது…

  நாடகம் அருமை தலைவரே.. காட்சிகள் மிகவும் பிரம்மாண்டம் … keep it up your acting.

 6. srikanth1974

  கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்க்காரம்.

 7. enkaruthu

  எனகென்னமோ தமிழ் இன தலைவர் பிரபாகரன் அவர்களின் புதல்வன் பாலச்சந்திரன் துப்பாக்கிக்கு கொஞ்சம் கூட அஞ்சாமல் உயிர் நீது மறைந்த விதம் தமிழ்நாட்டு மக்களை ரொம்பவே கொதித்தெழ செய்துவிட்டது.

  கேளிக்கையில் முனைப்பு காட்டிய இளைஞர்களே இப்படி எழுச்சி பெரும்பொழுது கலைஞர் கருணாநிதி அவர்கள் அந்த கொலையை பார்த்து தன தவறை எண்ணி எவ்வளவு வேதனை அடைத்திருப்பார்.நல்ல முடிவு குமரன் சொல்வதைபோல அன்றே முடிவு எடிதிருந்தார் என்றால் போர் என்றால் மக்கள் சாவது இயற்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா போன்றோர்கள் எல்லாம் இன்று தமிழின தலைவி ஆகிருக்க மாட்டார்கள் மேலும் சமஸ்கிரிததை தூக்கி பிடிப்பவர்கள் எல்லாம் இன்று தமிழ் இன துரோகி என்று கலைஞரை சொல்லிருக்கமாட்டார்கள்.

 8. குமரன்

  என்கருத்து அவர்களே

  சமஸ்கிருதத்தைத் தாங்கிப் பிடிப்பவர்கள் கிடக்கட்டும்.

  பழ.நெடுமாறனும், வைகோவும், தமிழருவி மணியனும், சீமானும், என்று பெரிய்ய்ய்ய்ய பட்டியல் இருக்கிறது – கருணாநிதி ஈழத்து அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் குண்டுகளால் வான் வழித் தாக்குதல் நடந்த அந்த நேரத்தில், வெறும் சில மத்திய மந்திரிப் பதவிகளுக்காக, அந்தப்பதவிகளால் வரும் சில ஆயிர/ பத்தாயிரக் கோடிகளுக்காக …
  ஐரோப்பிய சதிக்கலையில் தேர்ந்த இத்தாலிக் காரி சோனியாவை, சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை என்றெல்லாம் புகழ்ந்து அவர் காலடியில் கிடந்தார்.

  அதைப் பயன்படுத்தி சோனியா 2009 மே மாதம் 21 ஆம் தேதிக்குள் எல்லாரையும் கொன்றாவது பிரபாகரனை அளிக்கச் சொன்னார் என்பது நான் முன்னமே சொல்லி வந்தது. அது இப்போது ஆதாரபூர்வமாக கட்டுரைகளில் வந்துவிட்டது.

  நாம் இந்தியர்கள்தானா? தமிழர்களுக்கு இந்தியா என்ற தேசம் தரும் அக்கறை இதுதானா என்று ஒரு அன்பர் இங்கே வினா எழுப்பி இருக்கிறார். சரியான கேள்விதான்.

  இரண்டே இரண்டு புத்த பிக்குகள் தாக்கப் பட்டவுடன், இலங்கையில் இன்றைய நிலை என்ன தெரியுமா? அவர்கள் நமது மத்திய அரசிடம் தூதரக ரீதியாக எத்தனை கடுமையாக பேசுகிறார்கள் தெரியுமா?

  நம் தமிழ் நாட்டு மீனவர்கள் எண்ணூறுக்கும் அதிகமாகக் கொல்லப் பட்டு என்ன நடந்தது? கருணா நிதியும் ஜெயலலிதாவும் செய்தது என்ன?

  சோனியா இத்தாலிக் காரி. அவருக்கு அவர்கள் மீதுதான் பாசம் இருக்கும். இருக்கிறது. இரண்டு இத்தாலிக் காரர்கள் நம் மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்கு கேரள அரசு அவர்களைக் கைது செய்யும் அளவுக்கு கேரள மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இத்தாலிக் காரர்களோ உச்ச நீதி மன்றத்தையே ஏமாற்றி விட்டு அங்கே போய் உட்கார்ந்து கொண்டு வர மாட்டேன் என்கிறார்கள். இத்தாலிக் காரி சோனியாவோ மழுப்புகிறார். கொத்தரோச்சி என்ற போஃபோர்ஸ் குற்றவாளியைத் தப்பவிட்ட சோனியா இதுவும் செய்வார் , இன்னமும் செய்வார். அவருக்கு வால் பிடித்து ஈழப் படுகொலைகளில் பங்கு கொண்டவர் கருணா நிதி. அதை என்றும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.

  சோனியா இந்த நாட்டைப் பிடித்த சாபக் கேடு. இதை நம் மக்கள் உணரும் காலம் வந்துவிட்டது.

 9. குமரன்

  இப்போதும் கூட கருணா நிதியின் இந்த விலகல் உள்நோக்கமும் குடும்ப நலமும் கொண்டது என்பதான சந்தேகம் இருக்கிறது. விறுவிறுப்பு தளத்தின் இன்றைய கட்டுரையைப் படியுங்கள்.

  பேனிபிரசாத் வர்மா என்ற மத்திய அமைச்சர், முலாயம் சிங்க் யாதவ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொன்னதற்கு, பாராளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு எழுந்தது. சோனியா முலாயமின் இருக்கைக்கே சென்று கைகூப்பி வணங்கி மன்னிப்புக் கேட்டார் என்று செய்தி.

  எண்ணூறு மீனவர்கள் செத்ததற்கு சோனியா செய்தது என்ன?

  லட்சக் கணக்கில் ஈழ மக்கள் கொல்லப்பட அவர் கொடுத்த உத்தரவு/ ஆதரவுதானே காரணம், அதனால்தானே இன்னமும் ராஜபக்சேவுடன் இந்த கள்ள நட்பு?

  நான் இதை முன்னரே சொன்னபோது, இங்கேயே நமது தினகர் அவர்கள் சோனியா சொல்லி நடந்தது என்பதெல்லாம் தவறு என்றும், முலாயமின் ஆதரவு காத்திருப்பதால் கருணா நிதி மத்திய அரசுக்கு ஆதரவை விலக்காதது சரி என்றும் சொன்னார். அப்போதே விலக்கி இருந்தால் லட்சக் கணக்கான உயிர்கள் பிழைத்திருக்கும் இல்லையா? ஆனால் 2G ஊழல் பண்ணி பத்தாயிரக் கணக்கான கோடிகளைக் கருணா நிதி குடும்பம் சம்பாதித்த்ருக்காது, அவ்வளவுதானே?

  இந்த ஊழலில் ராபர்ட் வதேராவுக்கு உள்ள பங்கு குறித்த செய்திகள் வெளிவரத்தான் போகின்றன. இன்னமும் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும். ராடியா என்ற இடைத் தரகர் மீது எதனால் இன்னமும் எந்த ந்டவடிக்கையும் இல்லை? எஸ்ஸார், பார்த்தி போன்ற முதலாளிகளை எல்லாம் சம்மன் அனுப்பி வரவைக்கும் சி.பி.ஐ. ராடியாவை விட்டு வைத்தது எதனால்?

  ஊழல், அக்கிரமம், கொடுங்கோன்மை, இரக்கமற்ற இனப்படுகொலையை பின் நின்று நடத்தியமை என்று பல்வேறுபட்ட முகத்தை சோனியா கொண்டவர் என்பது வெளி வரத் துவங்கி விட்டது. அவரைத் தியாகத் திருவிளக்கு என்றும் சொக்கத் தங்கம் என்றும் அன்னை என்றும் கூறியதன் பாவம் சும்மா விடாது.

 10. குமரன்

  திகாரில் கனிமொளியைச் சந்தித்த கருணாநிதி கண்ணாடியைக் கழட்டிவிட்டு அழுத காட்சி பத்திரிகைகளில் வந்தது.

  பாலச் சந்திரன்போல எத்தனை குளந்தைகள் செத்தன?

  திகாரில் கனிமொழி இருந்தபோது கருணாநிதி சொன்னது என்ன? “அங்கே ஒரு பூவை வைத்தால் உடனே பொசுங்கும் வெய்யில்” என்றார். எவருக்குமே தத்தம் மக்கள் பூப் போலத்தான், ஒரு தகப்பனின் உணர்வுகள் அவருக்கு மட்டும்தானா?

  பாலச்சந்திரனைப் போலப் பல்லாயிரம் குழந்தைகள் பூப் போல இல்லையா? ஒரு குண்டா இரண்டு குண்டா? ஐந்து குண்டுகள் துளைத்தால் ? முதல் இரண்டு குண்டுக்குப் பின்னால் இருப்பது வெறும் பிணம்தானே? பிணத்தையும் சுட்ட கொலைவெறிக் கூட்டத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பாதுகாப்பாக இருந்தவர் தானே இந்தக் கருணாநிதி என்கின்ற ஆறு குழந்தைகளுக்குத் தந்தை? இப்போதுதான் இவருக்குத் தெரிந்ததா நடந்தது இனப்படுகொலை என்பது?

  ஆட்சியில் இருக்கும்போது இவருக்குத் தெரிவதெல்லாம் அதிகாரமும் பணமும்.

  ஆட்சி போனபின்னால் அதுவும் இரண்டு வருடம் களித்து, அடுத்த தேர்தல் கண்ணில் தென்பட்டபின் இவருக்குத் தெரிவதுதான் நியாயமும் தர்மமும், என்றால் இவரை எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்கள் என்றுதான் விழித்துக் கொள்வார்கள்?

 11. குமரன்

  கருணாநிதி குடும்பத்திலும் குழந்தைகள் இருக்கின்றன.
  சோனியா குடும்பத்திலும் குழந்தைகள் இருக்கின்றன.

  வினைப்பயன் சும்மா விடுவதில்லை.

 12. குமரன்

  மோகன் பாபு நேற்று ஒரு பேட்டியில் சொன்னது! அன்பர்கள் அவரவர் விருப்பப் பட்ட கணக்குகளைப் போட்டுக் கொள்ளலாம். தமிழ்நாடு என்பதைச் சென்னை என்றும் கூட மாற்றிப் போட்டுப் படிக்கலாம். ஒருவர் மட்டும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவே மாட்டார்.

  /// சென்னையில பேட்டி கொடுக்கிறதால சொல்லவில்லை. நிஜம்மாவே எனக்கு தாய்நாடு தமிழ் நாடுதான். ஒரு மஞ்சள் பையில் இரண்டு செட் டிரஸ்ஸோட திருப்பதியிலேருந்து திருட்டு ரெயிலேறி சென்னைக்கு வந்தவன் நான். பிளாட்பாரத்துல படுத்து, கார்பரேஷன் குழாய் தண்ணி குடிச்சு. வடபழனி முருகன் கோவில் பிரசாதம் சாப்பிட்டு வளர்ந்தவன். சிவாஜிதான் என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தினார். இன்னிக்கு கார், பங்களா, பல கோடிக்கு சொந்தக்காரன். மூணு குழந்தைக்கு அப்பன் இது அத்தனையும் கொடுத்தது தமிழ்நாடுதான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொல்லுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஏர்போட்டுல சென்னை மண்ணுல கால் வைக்கும்போது அம்மா மடியில படுக்குற மாதிரி உணர்வேன். இது மிகையாக சொல்லலீங்க உண்மை.////

 13. மிஸ்டர் பாவலன்

  ///மேலும் சமஸ்கிரிததை தூக்கி பிடிப்பவர்கள் எல்லாம்// (என் கருத்து)

  சமஸ்கிருதத்தை எதுக்கு இங்கே இழுக்கிறார்னு தெரியலையே?
  சமஸ்கிருதத்திற்கும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?

  -== மிஸ்டர் பாவலன் ==-

 14. Krishna

  சமஸ்கிருதத்தை தூக்கி பிடிக்கும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தான் கருணாநிதியை தமிழின துரோகி என்று கூறுகிறார்களோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *