BREAKING NEWS
Search

லிங்கா… பார்க்கிங் கட்டணமே பல கோடிகளைத் தாண்டியிருக்குமேடா பாவிகளா!

அம்பலமாகிறது விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களின் திருட்டுத்தனம்!

kovai

போகிற போக்கில் தமிழ் சினிமாவை இனி டிடிஎச்சிலோ டிவிடிகளிலோதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் அடிக்கும் பகல் கொள்ளை, காட்டும் திருட்டுக் கணக்கு ஒரேயடியாக அரங்குகளை மூட மட்டுமே வழி வகுக்கப் போகிறது.

சில தினங்களுக்கு முன் கலைக்கோட்டுதயம் எனும் தயாரிப்பாளர் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சிநேகாவின் காதலர்கள் படத்தைத் தயாரித்தவர் இந்த கலைக்கோட்டுதயம். அந்தப் படத்தை இயக்கிய முத்துராமலிங்கனின் அடுத்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சொன்ன ஒரு செய்தி, தமிழ்நாட்டில் தியேட்டர்காரர்கள் எத்தகை திருட்டுத்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டியது.

kalaikoottudhayam

தயாரிப்பாளர் கலைக்கோட்டுதயம்

அவர் கூறுகையில், “அஞ்சான், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுடன் என் படமும் வெளியானது. நல்ல விமர்சனங்கள் வந்தன. வசூலும் அவ்வளவு மோசமில்லை.

ஒரு முறை திருச்சி பகுதியில் தியேட்டர் விசிட்டுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் போன தியேட்டரில் இரவுக் காட்சிக்கு கிட்டத்தட்ட 180-200 பேர் வரை வந்திருந்தார்கள் எங்கள் படத்தைப் பார்ப்பதற்கு. அது போதுமான கூட்டம்தான். ஆனால் அடுத்த நாள் டிசிஆர் எனும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்டில், அந்தக் காட்சிக்கு 20 பேர்தான் வந்ததாகக் காட்டியிருந்தார்கள்.

இதை மிகப்பெரிய அயோக்கியத்தனம் இல்லையா.. தமிழ் நாட்டில் தியேட்டர்காரர்களின் திருட்டுத்தனம் ஒழிந்தால்தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும். என் படம் சின்னப் படம். அதற்கே இப்படி என்றால், பெரிய பட வசூலில்  இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்,’ என்றார்.

-தியேட்டர்காரர்கள் எந்த அளவு தகிடுதத்தங்கள் செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சோறு பதம்.

இப்போது லிங்கா நஷ்டம் என்று கூப்பாடு போடும் கைக்கூலிகள், இந்தக் கலையில் கைதேர்ந்தவர்கள். படத்தை வாங்கி பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு, கிடைத்த வரை லாபம்தானே என்ற நோக்கத்தோடு உண்ணாவிரத பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி – தஞ்சைப் பகுதியில் நஷ்டம் என்று கூறும் பேர்வழிகள், கிட்டத்தட்ட ரூ 15 கோடி வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் லிங்கா படத்தின் மூலம். ஒவ்வொரு தியேட்டர்களிடமிருந்தும் ரூ 20 முதல் 30 லட்சம் வரை வசூலித்துக் கொண்டுதான் படத்தை விற்றிருக்கிறார் அந்த அயோக்கிய ஆசாமி. எட்டு கோடியை முதலீடு செய்துவிட்டு, ரூ 15 கோடியை அடித்திருக்கும் இந்த ஆசாமி, இப்போது நஷ்டக் கணக்கு காட்டி, அதற்கு உடந்தையாக சில டுபாக்கூர் திரையரங்க உரிமையாளர்களை துணைக்கழைத்துள்ளார்.

எனக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுக்கு நான் பணம் வாங்கித் தருகிறேன் என்று கூறி மேலும் மூன்று விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டுள்ளார் இந்த நபர்.

இன்றைய பிரஸ் மீட்டில் இதையெல்லாம் சில நிருபர்கள் கேட்டபோது மூடி மறைத்து ஒரே பொய்யை திரும்பத் திரும்ப கூறினார்.

உங்கள் பிரச்சினைக்கும் ரஜினிக்கும் சம்பந்தமே இல்லையே.. அவர் பெயரை ஏன் இழுக்கிறாய் என்று கேட்டால், ‘அவர் பேரைச் சொன்னாதாங்க பணம் வரும்…’ என்கிறார் கொஞ்சமும் கூசாமல். இது விபச்சாரத்தை விட கேடுகெட்ட பிழைப்பல்லவா!

தியேட்டர்களில் கூட்டமில்லையாம்.. மூன்று பேர்தான் வந்தார்களாம்.. அடேய் அயோக்கியப் பதர்களே.. நாக்கு அழுகிவிடப் போகிறதடா உங்கள் பொய்களைத் தாங்காமல்.. முதல் வாரம் முழுக்க ரூ 250ம், 300 ம் கொடுத்து உங்கள் பகுதியில், அரங்குகளில் படம் பார்த்த ரசிகர்களின் சாபமடா இது!

கூட்டமே இல்லாத படம்தான் திருச்சி – தஞ்சையில் இன்னும் 21 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறதா… அவற்றில் வரும் பணமெல்லாம் உங்கள் இறுதிச் செலவுக்காகவா சேமிக்கப்படுகிறது?

லிங்கா பார்க்கிங் கட்டணமே பல கோடி வந்திருக்குமேடா பாவிகளா!

லிங்கா பார்க்கிங் கட்டணமே பல கோடி வந்திருக்குமேடா பாவிகளா!

இந்த அயோக்கியத்தனம் மட்டுமல்ல… இந்த லிங்கா பட விவகாரத்தை தமிழக – கர்நாடக பிரச்சினையாகக் கிளறி, இரு மாநில மக்களின் உணர்வுகளையும் தூண்டிவிடும்  முயற்சியிலும் இறங்கியுள்ளார் இந்த விஷமி.

தயாரிப்பாளரும் சரி, விநியோகஸ்தரான வேந்தர் மூவீசும் சரி.. இந்த ஆசாமிகளுக்கு ஒரு சல்லிக்காசு தரக் கூடாது. மேலும் படத்தையும் ரஜினியின் புகழையும் கெடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்த விஷமிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கோடிக்கணக்கான தொகையை இழப்பீடாகக் கோரவேண்டும் வேண்டும்.

அல்லது ரசிகர்கள் சார்பில் ஒரு பொது நல வழக்கே கூட இந்த மோசடிக் கும்பல் மீது தொடரலாம்.

படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே நஷ்டம் நஷ்டம் என தொடந்து கூவி வரும் இவர்கள் வீடுகள், அலுவலகங்கள், யார் யாரிடம் இவர்கள் பணம் வாங்கிக் கொண்டு கைக்கூலிகளாக ஆடுகிறார்கள் அந்த தொடர்புகள் அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இவர்களின் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். இதுதான் இவர்களை அடக்க முதன்மையான வழி.

என்வழி
21 thoughts on “லிங்கா… பார்க்கிங் கட்டணமே பல கோடிகளைத் தாண்டியிருக்குமேடா பாவிகளா!

 1. anbudan ravi

  கடைசி நான்கு வரிகளில் நீங்கள் கூறியதுபோல் நடந்தால்…..இறுதியாக சிக்கப்போவது அந்த பேராசை பிடித்த நடிகரும் அவனது அப்பனும் சிக்குவார்கள். பேடிப்பயல்கள், அந்த விநியோகஸ்தரை துவம்சம் செய்தால் உண்மை வெளிவரும். திருச்சி மற்றும் தஞ்சையில் நமது ரசிகர்கள் மிகவும் அதிகம். அவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்…..அனைத்தும் நலம்பெறும்.

  அன்புடன் ரவி.

 2. Satish

  It is heartening to note that at least you are the only media person who has written in support of our Thalaivar. Thank you sir!

 3. s venkatesan, nigeria

  //அவற்றில் வரும் பணமெல்லாம் உங்கள் இறுதிச் செலவுக்காகவா சேமிக்கப்படுகிறது?// – மானம் ரோஷம் இருந்தா உரைக்கும்

  //இவர்களின் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். இதுதான் இவர்களை அடக்க முதன்மையான வழி.// இந்த வழியை எப்படியாவது பயன் படுத்த முடியுமா. யாராவது நமது ரசிகர் இந்த தகவலை பெற முடிந்தால் நமது தலைவரின் பெருமை நிலை நிறுத்துவதோடு பண்டாரம் கும்பலின் தோலுரித்து வெளிபடுத்த நல்ல வாய்ப்பு.

 4. குமரன்

  இப்படிப் பொய் சொல்லும் வினியோகஸ்தர், தியேட்டர் எது எது என்று பகிர்ணக்கமாக செய்தி வெளியிடுங்கள், வினோ.

  இவர்களது தியேட்டரில் அடுத்த ரஜினி படம் கிடையாது என்று அறிவிப்புத் தந்தாள் போதும், எல்லாரும் வாயைப் பொத்திக் கொண்டு அடங்கி விடுவார்கள்.

 5. Murali

  why a police complaint is not given against this goon for criminal investigation? He must have been behind bars by now if the so called producer (Rockline,Eros) , distributor group (vendhan movies) of Lingaa had acted with prudence. They goofed it up big time allowing these goons to get the courage to talk any length. Blood suckers have eaten money in the brand name of rajini and let down Rajini to suffer disrepute.

 6. sk

  Thalaivar is still acting at this age just to entertain us. He is 64 and i cant imagine how much he would struggle. we all know how our parents struggle with health issues at these ages.
  these greedy fellows are further causing mental tension with an agenda in mind. they’ll reap what they sow today. however vendhar movies , eros & rockline should come out in open and talk. their silence will feed the opponents who will only target thalaivar…all these eagles are waiting around for thalaivar to slip and rejoice that…i didnt like the nadigar sangam letter because it hints as if there was a loss..BULLSHIT….
  May the truth come out soon and put a full stop to this effort of tranishing thalaivar.
  how do we fans unite against this crap ? any ideas

 7. nagendra

  வினோ சார் இன்றைய கன்னட vijaya karnataka news paperla லிங்கா flop என்று வந்துள்ளது .

 8. saravanan

  we are going to rajini movie for rajini only.. no one deny this…even family audience and haters of rajini.. i am hardcore fan of rajini.. i am getting pain about news of loss. but producer and distributor theater owners who earned profit.. they didn’t expose official collection report any thing .. due to tax fear this seems their greedy even rajini knows we are going all for him.. rajini has to take control indirectly..about distribution matter.. rajini is honest man.. no doubt.. he should not allow what ever producer and distributors doing wrong ..now most of public beliving on news..spreading by others.. whoever(actor and some politician).. rajini will be forced producer and distributor for issue statement about original collection report…each area..how much sold and got how much…. but one thing that actor will get reaction of what he is doing now.. he never reach super star post..

 9. c.chandrasekar

  இவர்களக்கு நிச்சயமாக படம் கற்பிக்க வேண்டும் ரஜினி ரசிகர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும்

 10. கணேசன் நா

  கடைசி பத்தி நீங்கள் சொன்னது நடக்கவேண்டும் சார். திருட்டு பசங்க 10 பேர் வந்த ஷோ ஒட்ட்ரோம்னு சொல்லி 11 வது டிக்கெட் முதல் வேற டிக்கெட் தரங்க.

  பொது ரசிகர்களும் படத்தை ரசிப்பதும், குடும்பத்தோடு அனைவரும் ரசிப்பது இந்த மாதிரி ஆளுங்களுக்கு பொறுக்க முடியல. அது தான் இப்படி உளறுகிறார்கள். எனக்கு மிகவும் தெரிந்த நண்பர். நிச்சயம் அவர் எந்த நடிகருக்கும் ரசிகர் அல்ல. தலைவர் அப்பளம் பொரிக்கும் காட்சியை பார்த்தவுடன் கண் கலங்கிட்டேன் என்றார். அது தான் சார் தலைவரின் வெற்றி. இது பொறுக்கல இங்களுக்கு.

  தலைவர் இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அந்த பய உட்கார முடியாதே, அதுக்கு தான் இப்படி அவதுறு கிளப்புன தலைவர் நடித்தது போதும்முன்னு நினைத்துவிடுவார் என்ற நினைப்பு இவர்களுக்கு.

  இந்த விஷமியின் டார்கெட் லிங்கா நஷ்டம் என்பது இல்லை. பணம், பொறாமை, பேராசை, அடுத்த சூப்பர் ஸ்டார் கனவு ஆகியவையே.

  நாளைக்கு உண்ணாவிரதம்னு ஒன்னு நடந்த நம்ம ரசிகர்களில் சிலர் சேர்ந்து அந்த விஷமியை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும். பதில் சொல்லமுடியாமல் திணறுவதை இவருக்கு ஜால்ரா அடிக்கும் மீடியா-க்களும் பதிவு செய்ய வேண்டும். இனி தலைவர் பெயர தவற உச்சரிக்க நினைத்தால் கூட ஷாக் அடிக்கணும் இந்த மாதிரி பதர்களுக்கு.

 11. s venkatesan, nigeria

  //nagendra says:
  January 9, 2015 at 10:10 am // நீங்க POSITIVE விஷயத்த மட்டும் பேசுங்கள்.

 12. pothujanam

  தலைவரின் ரசிகர்கள் அனைவரும் இனி அந்த பதவி வெறி பிடித்த நடிகன் மற்றும் அவன் அப்பன் இயக்கும் படம் ஒன்றையும் திரையரங்குகளில் பார்க்க கூடாதென சபதம் எடுக்க வேண்டும். நாம் மட்டுமின்றி நமது குடும்பத்தார் யாரையும் அழைத்து செல்ல கூடாது….

 13. Vazeer Kuwait

  என்னைக் கேட்டல் சூப்பர் ஸ்டார் அடுத்த படத்திலிருந்து அவரே தயாரித்து அவரே விநியோகம் செய்யணும் அல்லது டீவீடி மூலம் வெலியிடணும் சேரனின் சி2எச் போல். அப்போதுதான் இந்த கண்றாவிகள் அடங்கும்

 14. Deen_uk

  லிங்கா நஷ்டஈடு உண்ணாவிரதம் ,சீமான் தொடங்கி வைக்கிறாராம்!,பெயர்ல மட்டும் சீமானா இருந்தா போதாது,மனசுல இருக்கனும், ஏன் சீமான் உங்களுக்கு என் தலைவர் மேல இவ்ளோ கடுப்பு? மற்ற எல்லோர் மாதிரியும் உங்களுக்கும் என் தலைவன் பெயரை வம்புக்கு இழுத்தா தான் உங்க பேரு வெளில தெரியும் எனும் உண்மை தெரிஞ்சு போச்சா? ஒரு வருஷம் முன்னால வரை உங்க பேச்சு ரசிகன் நான்.உண்மையில் என் தமிழ் உணர்வை தூண்டி விட்டதில் உங்கள் பங்கு அதிகம்..உங்கள் தமிழ் உணர்வு பேச்சு கேட்டு புல்லரித்து போனவன் நான்..எப்போ நீங்க கத்தி லைகா விசயத்தில் ஒரு பல்டி அடிச்சீங்களோ அப்போவே உங்க மேல உள்ள மரியாதை பாதி போச்சு,எப்போ என் தலைவனை பற்றி மட்டமா பேட்டி கொடுத்தீங்களோ அப்போவே உன் மேல இருந்த கொஞ்ச மரியாதையும் போச்சு.நான் ஒரு ரஜினி ரசிகன் உன்னை விட்டு போய் விட்டேன்னு நினைக்க வேணாம்,அதாவது,நீ நிக்க போற தேர்தல்ல ஒரு ஓட்டு தான போச்சு நு நினைக்க வேணாம்,என்னை மாதிரி கோடி கணக்கான ரஜினி ரசிகர்கள் ஓட்டை நீ இழந்து விட்டாய் சீமான்,மோடி கு தெரியுது ரஜினி ரசிகன் முக்கியம்னு,உனக்கு தெரியலே. இப்போ,நீங்க என்ன பேசினாலும் கேட்கும் போது வாந்தி தான் வருது..நீங்களும் சராசரி அரசியல் வியாதி ஆகிடீங்களே சீமான்.இப்டி ஒரு விளம்பரம் உனக்கு தேவையா?

 15. Deen_uk

  தலைவா,இவனுங்க உண்ணா விரதத்தை பார்த்து மனது இளகி நஷ்ட ஈடு எதுவும் கொடுத்துடாதீங்க தலைவா..நீங்க கொடுப்பீங்க தெரியும் ஆனால் உண்மையில் படம் நஷ்டம் இல்ல.ரெண்டாவது,இப்படியே இந்த கள்ள பயலுங்க பழகிடுவாங்க.நாங்க உங்களை அரசியலுக்கு வர சொல்லல,எங்களுக்கு நீங்க எதாவது செய்ங்க நு சொல்லல,சில நாய்ங்க கேட்கிற மாதிரி கல்யாண சோறு போட சொல்லல..நீங்க வழக்கம்போல எவனுக்கும் பதில் சொல்லாமா அமைதியா இருங்க,அதுவே நீங்க எங்களுக்கு செய்ற மிக பெரிய உதவி.எந்த குரைக்கும் நாய்க்கும் பதில் சொல்லாதீங்க,அதுக்கு மேல அவனுங்க கோர்ட் போகட்டும்,,உண்மை நம்ம பக்கம் தலைவா..நாம ஜெயிப்போம்.

 16. Deen_uk

  தலைவா,உங்களை எப்படியாவது அரசியலுக்கு வர வைக்க என்ன என்ன வழி உண்டோ,அனைத்து வழிகளிலும் முயற்சி பண்ணுதுங்க இந்த நாய்ங்க..எப்போதும் போல ஸ்ட்ரோங் ஆக இருங்க..உங்க அரசியல் அறிக்கை கு காத்துகிட்டு இருக்குங்க ஓநாய்ங்க.இதற்கெல்லாம் நீங்க மசிய மாட்டீங்க என்பதை நாங்கள் அறிவோம்..இருந்தாலும்,ஏதாவது பேசினால் கொஞ்சம் கவனமா பேசுங்க தலைவா…எப்போ எப்போ குறை கண்டு பிடிக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் வியாதியும் காத்துட்டு இருக்கு.

 17. s venkatesan, nigeria

  தலைவரின் அடுத்த படத்தில் இருக்க வேண்டிய வசனம்:
  “என் கூட ஒருத்தன் மோதுகிறான் என்றால், விளம்பரம் தேடுகிறான் என்று அர்த்தம். நான் ஒருத்தன் கூட மோதுகிறேன் என்றால், அவனுக்கு இனி அட்ரஸ் இருக்காதுன்னு அர்த்தம் – நன்றி” ssrk admn in FB

 18. yaseenjahafar

  செருப்பால அடிக்கனும் இந்த பயல பத்தாதற்கு வேற சீமான் இவன் வேறு இவன் ஒரு கையாள காதவன் பந்து அடிக்க அடிக்க தான் எம்பும் அது போல் லிங்கா படமும் விமர்சனம் ஆகா ஆகா கூடி கொண்ட போகிறது போகட்டும் பொங்கலுகும் ஒடட்டும் லிங்கா தியேட்டர் காரங்கள் மாஹ திருடன்

 19. SIMBU

  பேசாமல் தலைவர் அவர்கள் நடிப்பதை நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்… அவருக்கு ஆன்மீகம்தான் இனி சரியான பாதை…
  அவர் உடல் ஆரோக்கியத்தை கவனித்துகொண்டு நூறு ஆண்டுகள் இருக்கும் பணத்தை வைத்துகொண்டு நிம்மதியாக வாழ இறைவன் அருள் புரியட்டும்

 20. M.MARIAPPAN

  யெல சிம்பு தேவ்—யா பயலே இங்கு உனக்கு என்ன வேலை , பேசாம உன் சு — யை பொத்திக்கிட்டு போல நாயே .

 21. Thalaivar Fan

  Kandavanlam superstar narkali yera vendumne ingey vantha pichai yedukkum oru sombu fan 🙂
  Oru hit kudhe kudukka mudiyathavan, market out anavan 10 paisaku uthavathan, thalaivar peyar solli pichai yedukkiravantan cinema vidhthu poganum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *