BREAKING NEWS
Search

2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக!

நேபாளத்தின் துயரம், படங்களாக!

nepal-7

நேபாளத்தில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து நில நடுக்கம். இயற்கையின் இந்த பேரிடரால் 2200 பேர் பலியாகினர். இது தோராய கணக்குத்தான். இன்னமும் கூட பலியானோர் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. 6.6 மில்லியன் நேபாள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நில நடுக்கத்தின் தாக்கம் வட மாநிலங்களில் பெரிய அளவில் உள்ளது. பீகார்தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் வீடுகளை, சொத்துக்களை இழந்து நிற்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் வட இந்தியாவோடு நிற்கவில்லை. தெற்கே சென்னை வரை அதன் அதிர்வை உணர முடிந்தது.

இமயமலையின் மடியில் நீண்டு கிடக்கும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், இமயத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. விளைவு, உலகின் மிக உயர்ந்த பனிச் சிகரம் எவரெஸ்ட்டின் பனிப் பாளங்கள் சரிந்து பலரது உயரைக் குடித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடிய நிலநடுக்கத்தின் படப் பதிவுகள் இங்கே…

-என்வழி




One thought on “2200 பேர் பலி… 6.6 மில்லியன் பேர் நடுத் தெருவில்… நேபாளத்தின் துயரம், படங்களாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *