BREAKING NEWS
Search

ரஜினியை வரவேற்கிறேன்… கமல் பத்தி கேட்காதீங்க! – இயக்குநர் விசு

சென்னை: அரசியலுக்கு ரஜினியை வரவேற்கிறேன். ஆனால் கமல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கூறியுள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். இதற்கான பணிகளில் இருவரும் அவரவர் வழிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடிகர்களான ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இருவரின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் விசு, ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாகக் கூறினார்.

இதைத்தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லத் தயாராக உள்ளேன் என்ற அவர், “தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள்,” என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றார்.

ஏற்கெனவே கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேஸ்புக்கில்

“கான மயிலாட, கண்டிருந்த

வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால் … etc etc .. காட்டுல மயில் அழகா தோகைய விரிச்சு சூப்பரா dance ஆடுமாம் .. உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம் பொறாமை புடுங்ககித் தின்னுமாம்.. அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம் .. ரஜினி நீ மயில்.. மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி .. நீ ஆடு ராஜா ஆடு… உன் இறகால் நொந்து போன தமிழ் நாட்டு மக்களின் இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய் .. நன்றி ரஜினி நன்றி,” என்று பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

-என்வழி




2 thoughts on “ரஜினியை வரவேற்கிறேன்… கமல் பத்தி கேட்காதீங்க! – இயக்குநர் விசு

  1. ஸ்ரீகாந்த்.1974

    திரு.விசு ஐயா ‘அவர்களுக்கு,
    தலைவரின் காவலர்கள் சார்பில் எனது நன்றியைத்
    தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *