BREAKING NEWS
Search

சவுந்தர்யா, நீங்கள் பிறந்த இடம் பெரிது… அடைந்திருக்கும் உயரம் பெரிது.. சில்லறைகளுக்கு பதில் எதற்கு?

கருணாநிதியை கோச்சடையான் படம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்! – ரஜினி

rajini-karu

கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று காலைச் சந்தித்தார். காலை 10.50 மணி முதல் 11.10 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.

இதுகுறித்து ரஜினி கூறுகையில், “கலைஞர் பிறந்த நாளன்று நான் வெளியூரில் இருந்தேன். அதனால் வாழ்த்து கூற முடியவில்லை. அதனால் இன்று வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். மேலும் கோச்சடையான் படத்தைப் பார்க்க வருமாறு கேட்டுக்கொண்டேன்,” என்றார்.

சிம்பு, நீ பாடறதை நிறுத்திடேன்..! – சவுந்தர்யா

DSC_4609

கோச்சடையான் படம் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த நடிகர் சிம்பு, ‘படம் நல்லாருக்கு.. தலைவர் பவர்புல்லா திரும்பியிருக்கார். ஆனால் கிராபிக்ஸ் சரியில்லை,” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக விஜய் டிவி நிகழ்ச்சியில், சிம்புவிடம் நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என சவுந்தர்யாவிடம் கேட்டபோது, ‘சிம்பு, நீ (ங்க) பாடறதை நிறுத்திடேன்,” என்று பதில் கருத்து கூறியிருந்தார்.

இதற்கு சிம்பு ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட, அதற்கு சிம்பு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு, என்று கூறியிருந்தார்.

பின்னர் சவுந்தர்யா அளித்த விளக்கத்தில், ‘சிம்புவை எனக்கு சிறு வயதிலிருந்தே நன்கு தெரியும். நான் விளையாட்டாகத்தான் சொன்னேன்,’ என்று கூறியுள்ளார்.

சவுந்தர்யா, நீங்கள் பிறந்த இடம் பெரிது… அடைந்திருக்கும் உயரம் பெரிது.. சில்லறைகளுக்கு பதில் எதற்கு?

Shah-Rukh-Khan-Meet-Rajinik

ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்பு குறித்து சவுந்தர்யா பேசிய கருத்துகள்.. அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் என்ற பெயரில் சில அனாமதேயங்களின் ஆபாச மொழிகள், அதற்கு சிம்புவின் ரியாக்ஷன்… சவுந்தர்யாவின் விளக்கங்களையெல்லாம் பார்த்த பிறகு…  நாம் சொல்ல விரும்புவதெல்லாம்…

யார் இந்த சிம்பு? தமிழ் சினிமாவில் அவர் சாதித்தது என்ன? அவரது இடம் என்ன? இதையெல்லாம் யாரும் சொல்லிக் கூடத் தெரிய வேண்டியதில்லை. சினிமா ரசிகர்கள் அறிவார்கள், அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை.

சில்லறைகள் ஆயிரம் சொல்லிக் கொண்டிருக்கட்டுமே.. அதற்கு ஒரு போதும் மதிப்பில்லை, அதையும் ஒரு பொருட்டாக மதித்து, சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் பதில் தரும் வரை!

இன்று சவுந்தர்யா தெரிவித்த கருத்தை வைத்து சிம்பு தனக்கு பெரிய விளம்பரம் தேடப் பார்த்துள்ளார். பின்னர் அதற்கு சவுந்தர்யாவின் விளக்கம் வேறு.

சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் அவர்களே.. நீங்கள் பிறந்த இடம் பெரிது… இன்று அடைந்திருக்கும் உயரமோ யாருக்கும் எட்டாதது, வாய்க்காதது. சில்லறைகளுக்கு பதில் கூற முயன்று, சிகரத்திலிருந்து இறங்கலாமா? வேண்டாம்… அடுத்து நீங்கள் பயணப்பட வேண்டிய சிகரம் பெரிது. அதை நோக்கி செல்லுங்கள்.. நாலு பேருக்குக் கூட கேட்காத சில்லறைகளின் சத்தத்தை, ஆலயமணி ரேஞ்சுக்கு உயர்த்திவிடாதீர்கள்!

குறிப்பு: இருந்தாலும், தலைவர் மகளின் இந்த குறிப்பிட்ட பேட்டி அசத்தல். அவர் பதிலளித்த பாங்கும் அதிரடிதான். ‘யாரும் பதிலடி தரமாட்டாங்கன்னுதானே இஷ்டத்துக்கும் உளர்றீங்க… இனி ஒரு பய பேச முடியுமா? என்று மனம் குதூகலித்ததையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இந்த வேலையை ரியாஸ் மாதிரி தலைவரின் பிஆர்ஓ பார்த்துக் கொள்ளட்டும் இனி!

என்வழி
9 thoughts on “சவுந்தர்யா, நீங்கள் பிறந்த இடம் பெரிது… அடைந்திருக்கும் உயரம் பெரிது.. சில்லறைகளுக்கு பதில் எதற்கு?

 1. arulnithyaj

  எல்லாம் சரி வினோ அதற்காக சிம்பு ரசிகர்கள் என்கின்ற போர்வையில் சௌந்தர்யாவை ஆபாசமாக திட்டுவது எந்த விதத்தில் சரி.. அதை சிம்பு எப்படி கண்டிக்கவில்லை இதிலிருந்தே அவரின் நேர்மை தெரிகிறது ….

 2. Marthu

  யாரோட பொண்ணடா ஆபாசமா திட்டுரீங்க…செருப்பு பிஜ்சுரும்

 3. kumaran

  அப்பா வுக்கும் பையனுக்கும் (சிம்பு) பெரிய வித்தியாசம் இல்லை .

 4. Babu

  when u like some one don’t blindly support them also if u don’t like some one don’t blindly hate them. Every one has rights to share their comments, when you have ur rights.

 5. anbudan ravi

  உண்மைதான்…..எப்பொழுதுமே தலைவரின் ஆயுதமான அமைதியை கையில் எடுங்கள்…….எல்லாமே அடங்கிவிடும் அல்லது ஒடுக்கப்பட்டுவிடும்.

  அன்புடன் ரவி.

 6. saranya

  @பாபு. சரி இப்போ நீங்க என்ன சொல்ல வரீங்க.

 7. Manoharan

  சௌந்தர்யாவின் விஜய் டிவி நேர்கானல் அருமை….இந்த பெண்ணை மட்டும் சுதந்திரமாக பேசவிடுங்கள் …பிறகு பாருங்கள்…ரஜினியை பற்றி பேச எவனும் பயப்படுவான்…சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் பாடலின் இடையே வரும் தலைவா எழுத்துக்களும் ஒலிவடிவமும் சௌந்தர்யாவின் வேண்டுகோளின்படி வைக்கப்பட்டிருக்கிறது…இது …இதுதான் நாங்கள் எதிர்பார்த்தது…தலைவர்…சூப்பர் ஸ்டார் இரண்டுமே ரஜினி தான் ரஜினி மட்டும்தான்…வேறு எந்த தெருநாயும் இதை பயன்படுத்தக் கூடாது…

 8. srikanth1974

  நண்பர் திரு.மனோகரனின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

  நன்றி.நண்பா’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *